என் மலர்
உள்ளூர் செய்திகள்
- செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதல் முறை தங்கம் வென்று அசத்தல்.
- விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது!"
"சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது முதல் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2024 இல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வெல்வது வரை, என்ன ஒரு பயணம்! நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துகள்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபராகன ரவுடி சீசிங் ராஜா கைதாகியுள்ளார்.
தலைமறைவாக இருந்த ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
அண்மையில் சீரிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை நேற்று டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்பு மீது குற்றச்சாட்டு எழுந்தது.
- இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராக சற்குணம் இருந்தார்.
- இசிஐ பேராயர் எஸ்றா சற்குணம் பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக திகழ்ந்தார்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 85 ஆகும்.
இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் முக ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர்.
தேர்தல் சமயங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தூதுவராகவும் இவர் செயல்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர். இது ஒருபுறம் இருக்க தனது கருத்துகளுக்காக எஸ்றா சற்குணம் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
- ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
- இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது. செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "ஹங்கேரியில் இருந்து நம்பமுடியாத செய்தி! 45வது ஃபைடு செஸ் ஒலிம்பியாட் 2024-இல் தங்கம் வென்று இந்திய அணி தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வரலாற்று வெற்றியை உறுதி செய்த தமிழகத்தின் பெருமையான குகேஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு."
"ஆர் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பெண்டலா ஹரிகிருஷ்ணா, மற்றும் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணன் ஆகிய ஒட்டுமொத்த அணியையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த சிறப்பான சாதனைக்காக இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை காவல் ஆணையர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு.
சென்னை காவல் ஆணையர் அருண் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் டிபி-ல் சென்னை காவல் ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்படம் ஆதாரத்துடன் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை காவல்துறை, சென்னை காவல் ஆணையர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
- எத்தோஸ் 6.0 என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
- மருத்துவ நெறிமுறைகளும், அதைக் கொண்டு செல்லும் விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் எத்தோஸ் 6.0 என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இதில், மருத்துவ நெறிமுறைகளும், அதைக் கொண்டு செல்லும் விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிறகு, நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
அவர் பேசியதாவது:-
நாட்டின் கொரோனா தொற்றுக்கு பின் அடுத்தடுத்து பல்வேறு நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க வேண்டிய கடமை மருத்துவத்துறையை சார்ந்தவர்களுக்கு இருக்கிறது.

தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் மூத்த மருத்துவர்களின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு இளம் மருத்துவர்கள் அடுத்தடுத்து மருத்துவத் துறையில் புதிய கண்டுப்பிடிப்புகளைக் கொண்டு வரவேண்டும்.
மருத்துவ நெறிமுறைகளை கொண்டு செல்லும் விதம் குறித்தும் தற்போது உள்ள நிலைமையில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் வரவேற்க வேண்டும்.
மாணவர்களின் ஆராய்ச்சிகள் வருங்கால மருத்துவத்தில் வரவேற்றகதக்க ஒன்று. பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவதாக எழும் புகார் முற்றிலும் தவறு. இதுப்போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மீண்டும் தவறுகள் நடக்காதபடி கவனித்து கொள்வதாக மருத்துவர்கள் உறுதி அளித்தார்கள்.
- லால்குடி சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுற்றுப்பயணம் செல்லும் பகுதிகளில் முன் அறிவிப்பு இல்லாமல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பார்ப்பது வழக்கம்.
தற்போது திருச்சி பகுதியில் இருக்கும் அவர் இன்று அதிகாலையில் நடைபயிற்சியை முடித்து விட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென்று சென்றார்.
அப்போது காலில் அடிபட்டிருந்த முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் தவழ்ந்து வந்ததை பார்த்தார். அவரை சக்கர நாற்காலியில் அழைத்து செல்ல ஆஸ்பத்திரி ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை. அந்த நோயாளியிடம் அமைச்சர் விசாரித்து விட்டு சக்கர நாற்காலி எடுத்து வரும்படி கூறினார்.

அமைச்சர் வந்திருப்பதை அறிந்ததும் ஓடி வந்தார்கள் ஊழியர்கள். பின்னர் அவரை சக்கர நாற்காலியில் ஏற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார். அவருக்கு செலவுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி மற்றும் நோயாளிகள் சிலரது உறவினர்களிடம் ஆஸ்பத்திரியில் நன்றாக கவனிக்கிறார்களா? ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டார்.
அதன் பிறகு ஆஸ்பத்திரிக்குள் சென்றவர் மருத்துவர்களிடம் நடக்க இயலாதவர் தவழ்ந்து வந்ததை சுட்டிக்காட்டி இதை =யெல்லாம் கவனிக்க வேண்டாமா? என்று கடிந்து கொண்டார்.
மீண்டும் தவறுகள் நடக்காதபடி கவனித்து கொள்வதாக மருத்துவர்கள் உறுதி அளித்தார்கள். பின்னர் லால்குடி சென்ற அமைச்சர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
- சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
- பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி பகுதியில் எப்போதும் தண்ணீர் விழும். இதில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள்.
இந்நிலையில் இங்கு சூழல் சுற்றுலா வரும் பொதுமக்கள் வசதிக்காக அருவிப்பகுதியில் பெண்கள் உடைமாற்றும் அறை, பொது கழிப்பறைகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கியது.
இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அருவிப்பகுதி யில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நேற்றுடன் முடி வடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று முதல் சூழல் சுற்றுலாவிற்காக பொதுமக்கள் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல வழக்கமான நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும் என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்ககம் இளையராஜா அறிவித்தார்.
அதன்படி மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் திரண்ட வண்ணம் இருந்தனர்.
இன்று விடுமுறை நாளாகவும் அமைந்ததால் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
- விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் வீட்டில் தூக்கில் தொங்கினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர், சலவன்பேட்டை, சேஷாலம் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவரது மனைவி மாலா (60). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகேசன், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ. 11 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். கடனை பெற்ற நபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். முருகேசன் அவரது மனைவி இருவரும் கடன் பெற்றவர் வீட்டிற்கு சென்று அவரது மகன்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். அவர்கள் பணத்தை தருவதாக காலம் கடத்தி வந்தனர்.
பின்னர் நீங்கள் எனது தந்தையிடம் பணம் கொடுத்தது எங்களுக்கு தெரியாது. இதனால் நீங்கள் யாரிடம் பணம் கொடுத்தீர்களோ அவர்களிடமே சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த முருகேசன் அவரது மனைவி மாலா ஆகியோர் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கினர்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் முருகேசன் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் முருகேசனின் வீட்டில் சோதனை செய்த போது அவர்கள் எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.
அதில் சலவன்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் எங்களிடம் ரூ.11 லட்சம் கடனாக வாங்கினார். அவர் இறந்து விட்டதால் அவரது மகன்களிடம் பணத்தைக் கேட்டபோது இறந்தவர்களிடமே பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த நானும் எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதி இருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாத விரக்தியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.
- தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாகும். இந்த வழித்தடத்தில் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதைத்தொடர்ந்து 2022 ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த தடை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை வரை பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
காலை 6 மணிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பண்ணாரி சோதனை சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து செல்கின்றது. புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.
இதனால் தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இதனால் துக்க நிகழ்ச்சி, அவசர தேவை, மருத்துவம், கல்லூரி, அரசு உழியர்கள், பணிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எரிபொருள் தேவையும் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதேபோல் திம்பம் மலைப்பாதை என்பது குறைந்த அளவே எடையை தாங்க கூடிய நிலையில் கடந்த காலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வாகனங்கள் இடைவிடாமல் மலைப்பாதையில் நிற்பதால் அதிக பாரம் தாங்காமல் மலைப்பாதையில் விரைவில் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டால் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
- பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
இங்கு நாள் தோறும் பொது மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
- கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும் இடையூறு ஏற்பட்டது.
- போலீசார் விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி:
திருவானைக்காவல் கொள்ளிடம் அழகிரிபுரம் செக் போஸ்ட் பகுதியில் ஒரு பிரியாணி கடை உள்ளது. இதை அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது30) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இவரது கடையில் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் வந்தது. வாகனத்தில் வந்தவர்கள் அதை விக்னேசின் கடை முன்பாக நிறுத்திவிட்டு மற்றொரு கடைக்கு சென்றனர். நேரம் ஆகியும் வேனை எடுக்கவில்லையாம். இதனால் விக்னேஷின் கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவது பாதித்தது.
மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் கடைக்காரர் விக்னேஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் குடிபோதையில் வந்த அவர் அங்கிருந்த காவல்துறை வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து வாகனத்தை அடித்து நொறுக்கிய விக்னேசை பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






