என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்றா சற்குணம்"

    • இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராக சற்குணம் இருந்தார்.
    • இசிஐ பேராயர் எஸ்றா சற்குணம் பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக திகழ்ந்தார்.

    இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 85 ஆகும்.

    இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் முக ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர்.

    தேர்தல் சமயங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தூதுவராகவும் இவர் செயல்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர். இது ஒருபுறம் இருக்க தனது கருத்துகளுக்காக எஸ்றா சற்குணம் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

    • வயது மூப்பின் காரணமாக கடந்த 22-ந்தேதி காலமானார்.
    • பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

    சென்னை:

    இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனரும் இ.சி.ஐ. திருச்சபைகளின் தந்தையுமான பேராயர் எஸ்றா சற்குணம் வயது மூப்பின் காரணமாக கடந்த 22-ந்தேதி காலமானார்.

    அவரது மூத்த மகள் அமெரிக்காவில் இருந்து வரவேண்டி இருந்ததால் அஞ்சலி செலுத்துதல், அடக்க ஆராதனை தள்ளி வைக்கப்பட்டது.

    பேராயர் எஸ்றா சற்குணத்தின் உறவினர்கள், மத போதகர்கள் வெளிநாடுகளில் இருந்து வர வேண்டும் என்பதால் அவரது அஞ்சலி செலுத்தும நிகழ்வு மற்றும் அடக்க ஆராதனை 3 நாட்களுக்கு பிறகு இன்று நடந்தது.

    சென்னை வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் இன்று காலை 6 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இ.சி.ஐ. திருச்சபைகளின் பேராயர்கள், ஆயர்கள், குடும்பத்தினர் மற்றும் பாடல் குழுவினர் ஜெபத்துடன் பாடல் இசைக்க மக்கள் வரிசையில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜி.முத்துசெல்வன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் உத்தரவிட்டார்.
    • சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

    மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் உத்தரவிட்டதை தொடர்ந்து, காவல்துறை மரியாதை செலுத்தியது.

    கடந்த 22ம் தேதி மறைந்த எஸ்றா சற்குணத்தின் உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

    எஸ்றா சற்குணம் தமிழ் சமூகத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தனது இறுதி நாள் வரை தொடர்ந்து தேவை ஆற்றி வந்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    ×