என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கன்னடத்தை விட தமிழ்தான் முதல் மொழி என்று கூறியுள்ளார்.
    • மூக நலன் சார்ந்து இருமாநில அரசுகள் முடிவெடுத்து வன்முறை நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க. வடமாவட்டங்களில் உழைக்கும் வர்க்கங்களான வன்னியர், ஆதி திராவிடர் மக்களை இணைத்து களமாடியிருந்தால் வீழ்ச்சிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்காது. ராமதாசின் பணிகள் தமிழுக்கு மிகப்பெரிய சான்றாக இருந்துள்ளது. அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் ராமதாஸ் கண் கலங்கியிருப்பது வருத்தத்திற்குரியது.

    பா.ம.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், ராமதாஸ் வைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் அன்புமணிதான் விளக்கம் தர வேண்டும்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கன்னடத்தை விட தமிழ்தான் முதல் மொழி என்று கூறியுள்ளார். ஒரு தமிழனாக தமிழ் மொழியை தூக்கி பிடிப்பதில் தவறில்லை. தமிழ் மீதுள்ள ஆழ்ந்த புரிதலை அவர் வெளிகாட்டியுள்ளார்.

    கன்னடத்தில் கமல் நடித்த தமிழ் படத்தை திரையிடமாட்டோம் என கன்னடர்கள் கூறுவது சரியில்லை. இது மொழி வெறியை குறிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கன்னட படம் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்படும். ஒரு நல்லிணக்கனம் இப்போதுதான் உருவாகியுள்ளது. இது இரு மாநில பிரச்சனையாகி அசாதாரணமான சூழல் உருவாகக்கூடாது. சமூக நலன் சார்ந்து இருமாநில அரசுகள் முடிவெடுத்து வன்முறை நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்காதது கவலையளிக்கிறது. வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    மக்கள் நீதி மையத்துக்கு சட்டமன்ற தேர்தலின்போது போட்ட ஒப்பந்தப்படி எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. நடவடிக்கையில் நாங்கள் குறை காணவில்லை. எங்கள் தலைவருக்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம் உள்ளது. தனிப்பட்ட முறையில் வருத்தம் இருந்தாலும் கட்சி நலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடந்த அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் வியட்நாம் விடுதலை 50-ம் ஆண்டு விழாவில ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    • 750 மி.லி. கொண்ட முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது.
    • இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.

    புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. 750 மி.லி. கொண்ட முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது.

    பீருக்கான விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு பிராண்டிற்கு தகுந்தபடி கணக்கிடப்படும்.

    • புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகள் உள்பட நகரின் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
    • விளம்பர பேனர்களில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ,ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் ஆகும். இதையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் மத்திய ஆயுஷ் அமைச்சக மெரார்ஜி தேசாய் தேசிய யோகா இன்ஸ்டிடியூட் சார்பில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ் கலந்துகொண்டு யோகாவை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.

    இதற்காக புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகள் உள்பட நகரின் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் யோகா குறித்து இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. எந்த இடத்திலும் இல்லாத வகையில் முழுவதுமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து புதுச்சேரி மக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடி நடவடிக்கையாக நேற்று இரவோடு இரவாக கடற்கரை சாலை உள்பட நகரில் பல்வேறு இடங்களில் யோகா விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த இந்தி விளம்பர பேனர்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக அரசு சார்பில் தமிழில் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன.

    • ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (செவ்வாய்கிழமை) சர்வதேச யோகா மஹோற்சவ விழா நடக்கிறது.

    புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் திருவிழாவில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.

    சாலைகளின் முக்கிய சந்திப்புகளான அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திராகாந்தி சிலை, ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழில் எங்கும் விளம்பர பேனர் இல்லை.

    புதுவையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ஆயூஷ் பின்பற்றவில்லை. ஆனால் யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.

    இந்த நிலையில் யோகா நாள் விழாவிற்காக சிவாஜி சிலை அருகே அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்தி விளம்பர பலகைகளில் இந்தி மொழியை புதுவை மாநில தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு மை பூசி அழித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

    • மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை சர்வதேச யோகா மஹோத்சவ் திருவிழா நடக்கிறது.
    • யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) சர்வதேச யோகா மஹோத்சவ் திருவிழா நடக்கிறது.

    புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் திருவிழாவில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.

    சாலைகளின் முக்கிய சந்திப்புகளுக்கான அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழில் எங்கும் விளம்பர பேனர் இல்லை.

    புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்

    இந்த உத்தரவை ஆயூஷ் பின்பற்றவில்லை. ஆனால் யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.

    • நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
    • முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். அவர் நிதி பொறுப்பையும் வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.

    இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்கும்போதெல்லாம், அப்புறம் சொல்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே கூறி வந்தார்.

    ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை.

    அவர் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் எதுவும் முன்பதிவு செய்யப்படவில்லை. நேற்று அவர் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது பா.ஜ.க. கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • துணைநிலை ஆளுநர் மாளிக்கைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
    • கடந்த 2 மாதங்களில் 6ஆவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

    மிரட்டலை தொடர்ந்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு கடந்த 2 மாதங்களில் 6ஆவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறியுள்ளன.
    • காரைக்காலில் 476 மாணவர்கள், 540 மாணவிகள் என மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்வு எழுதினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.

    புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறியுள்ளன. இதனால் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படி 10-ம் வகுப்பு தேர்வை நடத்தினர்.

    இந்த தேர்வில் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 4 ஆயிரத்து 290 மாணவர்கள், 3 ஆயிரத்து 977 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 267 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    இதில் தனியார் பள்ளிகளில் படித்த 4 ஆயிரத்து 109 மாணவர்கள், 3 ஆயிரத்து 902 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 11 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் தேர்ச்சி சதவீதம் 96.90 சதவீதமாகும்.

    புதுச்சேரியில் மட்டும் 3 ஆயிரத்து 814 மாணவர்கள், 3 ஆயிரத்து 437 மாணவிகள் என 7ஆயிரத்து 251 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 674 மாணவர்கள், 3 ஆயிரத்து 386 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 97.37 ஆகும்.

    காரைக்கால் மாவட்டத்தில் 476 மாணவர்கள், 540 மாணவிகள் என மொத்தம் ஆயிரத்து 16 பேர் தேர்வு எழுதினர். இதில் 435 மாணவர்கள், 516 மாணவிகள் என 951 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.60 ஆகும்.

    • ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிகாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 'ஆபரேஷன் திரிசூலம்' என்ற திட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து 60-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு தினந்தோறும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்கள் புதுச்சேரி கடற்கரை அழகை ரசிப்பது வழக்கம்.

    இதற்கிடையே புதுச்சேரி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை வாலிபர்கள் கேலி கிண்டல் செய்து ரகளையில் ஈடுபடுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு புகார் வந்தது.

    போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள டூயூப்ளக்ஸ் சிலை அருகே மதுபோதையில் 3 வாலிபர்கள் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.

    இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 27), ராமநாதபுரம் அடுதாகுடியை சேர்ந்த முகேஷ் (26), புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த பிரசாத் (30), புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரை சேர்ந்த கருப்பையா (29) ஆகியோரை கைது செய்தனர்.

    • ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
    • பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில வாரங்களாக கவர்னர் மாளிகை, முதலமைச்சர் ரங்கசாமி வீடு, பிரெஞ்சு தூதரகம், ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் விடுதிகளுக்கு தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.

    இமெயில் மூலம் மிரட்டல் விடுபவர் யார்? என்பதை கண்டறிவது சவாலாக உருவெடுத்துள்ளது. புதுவை சைபர் கிரைம் போலீசார் மத்திய சைபர் கிரமை் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.

    மிரட்டல் புரளி என்றாலும், தொடர்ந்து போலீசார் மிரட்டல் வரும் இடங்களுக்கு சென்று வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் டி.ஜி.பி. அலுவலக மெயிலுக்கு முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.

    இதையடுத்து கோரிமேடு போலீசார் திலாசுப்பேட்டை மற்றும் கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவில் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீடுகளில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடந்தது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    இதனிடையே ஜிப்மர் மருத்துவமனைக்கும் இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தது. போலீசார் ஜிப்மரில் சோதனை நடத்தினர்.

    இதேபோல பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இங்கும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த தொடர் வெடிகுண்டு மிரட்டலை விடுக்கும் நபரை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    • புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
    • நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அதிகரிக்கும் கடும் கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாமில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    முன்னதாக, தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு கடந்த 24ம் தேதி முடிந்த நிலையில், கடந்த 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பு ஜூன் 2ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×