என் மலர்
ஒடிசா
- ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
புவனேஸ்வர்:
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து அரசு மட்டுமின்றி சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
சிகரெட்டின் தீமையை விளக்கும் வகையில் எலும்புக்கூட்டை வடிவமைத்த அவர், குடும்பத்தில் இருந்து உங்களை விலக்கும் முன்னர் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
- தேசிய பூங்காவின் சல்பாரி மலைத்தொடரில் நடந்த இந்த சம்பவம் நடந்தது.
- காண்டாமிருகம் பல முறை வாகனத்தைக் கவிழ்க்க முயன்றது.
அசாமின் மனாஸ் தேசிய பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரு காண்டாமிருகம் சுற்றுலாப் பயணிகள் சென்ற சஃபாரி ஜீப்பை முட்டி மோதிய சம்பவம் நிகழ்ந்தது.
தேசிய பூங்காவின் சல்பாரி மலைத்தொடரில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஜீப்பை நோக்கி காண்டாமிருகம் நடந்து செல்வதைக் காட்டுகிறது.
காண்டாமிருகம் பல முறை வாகனத்தைக் கவிழ்க்க முயன்றது. பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்றது.
தகவல்களின்படி, ஜீப்பில் இருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
கடந்த காலங்களில் காண்டாமிருக தாக்குதல் சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரியில், அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் வேகமாக வந்த ஜீப்பில் இருந்து ஒரு பெண் மற்றும் அவரது மகள் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் முன் விழுந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, காண்டாமிருகங்களில் சஃபாரி ஜீப்புகளில் ஒன்றை நோக்கி ஓடி நகர்ந்ததால் இருவரும் காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
- சிறுவனை ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்து சென்று தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு.
- சிறுவனின் பெற்றொர் புகார் அளிக்க, ஏராளமான சிறுவர்களுக்கு எதிராக தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பல சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை (sexually assault) கொடுத்த நபருக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி 25 வருடம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் 21ஆம் தேதி சிறுவனை குற்றவாளி ஒதுக்குபுறமான இடத்திற்கு தூக்கிச் சென்று அவனுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். அந்த சிறுவன், தகாத உறவுக்கு மறுப்பு தெரிவிக்க, அடித்து உதைத்ததுடன் இது தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்வதாக மிரட்டியுள்ளான். ஆனால், அந்த சிறுவன் நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் வெளியில தெரியவர, அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான சிறுவனை குற்றவாளி தனியாக அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அத்துடன் கற்பழிப்பு வழக்கில் ஜெயிலில் இருந்துள்ளார்.
போலீசார் குற்றவாளியை மார்ச் 27ஆம் தேதி கைது செய்தனர். அவர் மீது ஏப்ரல் 8ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நீதிபதி 25 வருட சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கியதில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோராபுட், கட்டாக், கோர்த்தா, நயாகட், ஜாஜ்பூர், பாலேசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டாக வரும் சிறிய ரக ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வான்பாதுகாப்பு அமைப்பு பார்கவஸ்த்ரா.
- ஒடிசா மாநிலம் கோபால்பூரில் அடுத்தடுத்து 2 ராக்கெட்டுகளை ஏவி சோதனை வெற்றி.
மைக்ரோ ராக்கெட்டுகளை பயன்படுத்தும், ட்ரோன் தடுப்பு வான்பாதுகாப்பு அமைப்பான பார்கவஸ்த்ரா சோதனை வெற்றிப் பெற்றுள்ளது.
கூட்டாக வரும் சிறிய ரக ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வான்பாதுகாப்பு அமைப்பு பார்கவஸ்த்ரா.
பார்கவஸ்த்ரா வான்பாதுகாப்பு அமைப்பின் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கோபால்பூரில் அடுத்தடுத்து 2 ராக்கெட்டுகளை ஏவி நடைபெற்ற சோதனை வெற்றியடைந்துள்ளது.
- பிஜு ஜனதா தள தலைவரான நவீன் பட்நாயக் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார்.
- காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் கதஜோடி ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், பாலத்திற்கு தேவையான பெரிய கான்கீரீட்டால் ஆன ஸ்லாப் ஒன்றை கிரேன் உதவியுடன் தூக்கினர். அப்போது அது சரிந்து தொழிலாளர்கள் மற்றும் என்ஜினீயர் ஒருவர்மீது விழுந்தது.
இதில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி மோகன் சரண் மஜ்ஜி உத்தரவிட்டார்.
இந்த விபத்து பற்றி தலைமை என்ஜினீயர் தலைமையிலான தொழில்நுட்ப குழுவினர் விசாரணை செய்து, 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- கணினி அறிவியலில் பி.டெக் படித்து வந்தவர்.
- நேபாள அரசு மற்றும் ஒடிசா அரசின் தலையீட்டின் பின் சமரசம் ஏற்பட்டது.
ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT)-ல் படிக்கும் நேபாள மாணவி (18) நேற்று தனது விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அந்த மாணவி கணினி அறிவியலில் பி.டெக் படித்து வந்தவர். மாணவியின் மரணம் குறித்து ஒடிசா காவல்துறை நேபாள தூதரகத்திற்குத் தகவல் அளித்துள்ளது.
இன்று உடல் எய்ம்ஸ் புவனேஸ்வரில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஒடிசா காவல்துறை தெரிவித்தது.
முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு KIIT இல் பயின்று வந்த மற்றொரு நேபாள மாணவி பிரகிருதி லாம்சலின் தற்கொலை அங்கு அதிக எண்ணிக்கையில் பயிலும் நேபாள மாணவர்களின் போராட்டத்தைத் தூண்டியது.
நேபாள மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். நேபாள அரசு மற்றும் ஒடிசா அரசின் தலையீட்டின் பின் சமரசம் ஏற்பட்ட நிலையில் தற்போது மற்றொரு நேபாள மாணவி இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 9ஆவது முறையாக கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- பாஜகவின் பொய் கதைகளால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டோம். இதை எதிர்கொள்ள வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தல்.
ஒடிசா மாநில பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக நவீன் பட்நாயக் 9ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மாநில கவுன்சில் கூட்டத்தில் நவீன் பட்நாயக் மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அக்கட்சியின் தேர்தல் அதிகாரி பி.கே. டெப் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நவீன் பட்நாயக் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பேசியதாவது:-
முடிவடைந்த சட்டசபை தேர்தலில் நம்முடைய கட்சி அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும், குறைந்த வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தோம். இதற்கு காரணம் பாஜக-வின் பொய் கதைகளை நாம் திறமையான முறையில் எதிர்கொள்ள முடியாததுதான்.
பிஜு ஜனதா தளம் கட்சிக்கு எதிராக பொய் கதைகளை உருவாக்கியது முக்கிய வியூகமாக இருந்தது. இதை நாம் ஆக்ரோசமாக வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை 'ஒரு கும்பல்' உயிருடன் எரித்து கொலை செய்தது.
- முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மற்றும் அவரது மகன்களை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள மனோகர்பூர் கிராமத்தில் கடந்த 1999 ஜனவரி 21, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை ஒரு கும்பல் உயிருடன் எரித்து கொலை செய்தது.
சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மகேந்திர ஹெம்பிராம், தாரா சிங் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மற்றொரு குற்றவாளி மகேந்திர ஹெம்பிராம் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நன்னடத்தை அடிப்படையில் மகேந்திர ஹெம்பிராம் தற்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 50 வயதாகும் மகேந்திர ஹெம்பிராம், சிறையில் இருந்து வெளிவந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதமாற்றம் தொடர்பான ஒரு சம்பவத்தில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறையில் கழித்தேன்" என்று தெரிவித்தார்.
விடுதலை பெற்ற மகேந்திர ஹெம்பிராம்- ஐ வலதுசாரி இந்து முன்னணி அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் மாலை மரியாதையுடன் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றது.

- தீயை அணைத்து, சிலையை பாலித்தீன் கவரால் மூடி வைத்துள்ளனர்.
- சமீபத்தில் மகாங்கா பகுதியில் இருந்த பிஜு பட்நாயக் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது
ஒடிசாவில் முன்னாள் முதல்வர் பிஜு பட்னாயாக் உடைய சிலைக்கு தீவைக்கப்பட்டதால் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மறைந்த பிஜு பட்டநாயக், நவீன் பட்நாயக்கின் தந்தை ஆவார். 1961–1963 மற்றும் 1990–1995 காலகட்டங்களில் ஒடிசா முதல்வராக இருந்துள்ளார்.
நாளை (ஏப்ரல் 17) ஆம் தேதி பிஜு பட்நாயக் நினைவு தினம் வர உள்ள நிலையில் ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டத்தில் பாட்நகராவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மர்ம நபர்களால் நேற்று தீ வைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை மற்றும் போலீசார் தீயை அணைத்து, சிலையை பாலித்தீன் கவரால் மூடி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள தொண்டர்களிடேயே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பிஜு ஜனதா தளம், ஆளும் பாஜக அரசை விமர்சித்து இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளது.
அக்கட்சியின் தொண்டர்கள், புவனேஷ்வர் விமானம் நிலையில் அருகே இன்று தர்ணாவில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் மகாங்கா பகுதியில் இருந்த பிஜு பட்நாயக் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- சம்பல்பூரில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 104 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.
- நேற்று முன்தினம் அங்கு அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெப்பம் பதிவானது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 104 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. நேற்று முன்தினம் அங்கு அதிகபட்சமாக 107 டிகிரி வரை பதிவானது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
எனவே சம்பல்பூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை (வழக்கமான அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) உணவு இடைவேளையின்றி செயல்படும் என அந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
- ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
- யாருக்கும் உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் இருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 11:45 மணியளவில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் நெர்குந்தி ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது ஏசி பெட்டிகளை மட்டுமே கொண்ட இந்த ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒடிசா தீயணைப்பு துறை இயக்குநர் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.






