என் மலர்
நீங்கள் தேடியது "world no tobacco day"
- ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
புவனேஸ்வர்:
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து அரசு மட்டுமின்றி சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
சிகரெட்டின் தீமையை விளக்கும் வகையில் எலும்புக்கூட்டை வடிவமைத்த அவர், குடும்பத்தில் இருந்து உங்களை விலக்கும் முன்னர் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, இந்தியாவின் பிரபலமான மணல் சிறப்க் கலைஞர் பத்மஸ்ரீ விருதுபெற்ற சுதர்ஷன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
ஒடிசா கடற்கரையில் பல பெரிய சிகரெட் துண்டுகளின் மேல் பெரிய எலும்புக்கூடு படுத்திருப்பது போன்ற சிற்பம் உருவாக்கியுள்ளார். புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்து பிரதிபலிக்கும் விதமாக இந்த சிற்பம் அமைந்திருந்தது. இதனை, பொது மக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.
மேலும், இந்த மணல் சிற்ப புகைப்படத்தை சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில், #உலக புகையிலை தினத்தை முன்னிட்டு. இந்தியாவில் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் எனது மணல் கலை, புகையிலை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு 35000க்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் 4000க்கும் மேற்பட்ட முறை ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. முழு மணல் சிற்பத்தின் வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றுவருகிறது.
இதையும் படியுங்கள்.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு இடமில்லை என மக்கள் கூற விரும்புகின்றனர் - மம்தா பானர்ஜி






