என் மலர்
இந்தியா

கோடை வெப்பம் எதிரொலி: ஒடிசாவில் அரசு அலுவலக வேலை நேரம் மாற்றம்
- சம்பல்பூரில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 104 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.
- நேற்று முன்தினம் அங்கு அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெப்பம் பதிவானது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 104 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. நேற்று முன்தினம் அங்கு அதிகபட்சமாக 107 டிகிரி வரை பதிவானது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
எனவே சம்பல்பூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை (வழக்கமான அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) உணவு இடைவேளையின்றி செயல்படும் என அந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Next Story






