என் மலர்
மகாராஷ்டிரா
- அட்லஸ் காப்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் 23 வயதான பியூஷ் அசோக் காவ்டே.
- தற்கொலை செய்வதற்கு முன்பு, பியூஷ் தனது குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் ஹிஞ்சேவாடி ஐடி ஹப்பில் உள்ள அட்லஸ் காப்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் 23 வயதான பியூஷ் அசோக் காவ்டே.
இவர் நேற்று காலை 9:30 மணியளவில் ஆபீஸ் மீட்டிங் கூட்டத்தின் நடுவே வெளியேறி, தான் வேலை செய்யும் கட்டிடத்தின் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு, பியூஷ் தனது குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். தற்கொலைக் கடிதத்தில் அவர் என்ன எழுதியுள்ளார் என்பது முழுமையாக விசாரிக்கப்படும் என்று புனே காவல்துறையின் உதவி ஆணையர் சுனில் குராடே தெரிவித்தார்.
அவர் மீது பணி அழுத்தம் இருந்ததா என்று கேட்டபோது, "முதல் பார்வையில் அப்படி எதுவும் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது" என்று சுனில் தெரிவித்தார்.
இது குறித்து தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது.
- இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.
மும்பை:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளை ஒரே குழுவில் இடம்பெறும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுடனான எந்தவொரு போட்டியையும் நீங்கள் எந்த நாட்டிற்கு மாற்றினாலும், இந்தியர்களான நாங்கள் அனைவரும் அதனை எதிர்ப்போம் என்பதை பிசிசிஐ நினைவில் கொள்ள வேண்டும்.
இந்திய மக்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களின் ரத்தத்திலிருந்து உங்களின் லாபத்தை நிறுத்துங்கள்.
ஒருபக்கம், நம் பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி அனில் சவுகான் ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருக்கிறது என கூறுகிறார். மறுபக்கம், ரத்தத்தில் லாபம் பார்க்க நினைக்கிறீர்கள் நீங்கள் என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
- கார் நகர்ந்து கொண்டிருக்கும் போதே தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார்.
- காலை சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள லோனாவாலாவில் 23 வயது பெண் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, அவர் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கார் அருகில் நின்றது என்றும் அதில் இருந்த ஒரு நபர் தன்னை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, கார் நகர்ந்து கொண்டிருக்கும் போதே தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார்.
துங்கார்லி பகுதியில் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்கு பிறகு, சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து, லோனாவாலா நகர காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். முதலில், மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருந்தார்.
ஆனால், காவல்துறையின் விசாரணையில், காருக்குள் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்ததும், அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் துங்கார்லியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்குகிறது.
- நான்கு சக்கர வாகனம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1.62 லட்சம் பெண்களும் பலன் பெற்றுள்ளனர்.
மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காக தொடங்கப்பட்ட "லட்கி பஹின் யோஜனா" திட்டத்தில் பெரும் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைநடத்திய தணிக்கையில், 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, 21.44 கோடி ரூபாய் நிதி பலன்களைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்குகிறது.
இந்நிலையில் 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, ரூ.21.44 கோடி பெற்றுள்ளனர். இந்தத் தொகை அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில், தகுதியற்றவர்கள் அதிகம் சேர்ந்ததால், ரூ.1,640 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண்களுக்கு மட்டுமே பலன் என்ற விதி இருந்தும், 7.97 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மூன்றாவது உறுப்பினர்களாகப் பதிவு செய்து, ரூ.1,196 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
65 வயதுக்கு மேற்பட்ட 2.87 லட்சம் பெண்கள் பலன் பெற்றுள்ளனர். இதனால் ரூ.431.7 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகனம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 1.62 லட்சம் பெண்களும் பலன் பெற்றுள்ளனர்.
இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூன் 2025 முதல், சுமார் 26.34 லட்சம் தகுதியற்ற பயனாளிகளுக்கு திட்டப் பலன்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 2.25 கோடி தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஜூன் மாதத்திற்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அதிதி தட்கரே தெரிவித்துள்ளார்.
- 5, 8, 10 வயது மகள்களுக்கு பூச்சிக்கொல்லி கலந்த உணவை வழங்கியுள்ளார்.
- குழந்தைகளின் உடலில் விஷம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து, தனது மூன்று சிறு குழந்தைகளுக்கும் விஷம் வைத்துக் கொன்ற 27 வயது தாய் கைது செய்யப்பட்டார்.
தானேவை சேர்ந்த சந்தியா சந்தீப் என்ற அந்தப் பெண், ஜூலை 20 அன்று, தனது 5, 8, 10 வயது மகள்களுக்கு பூச்சிக்கொல்லி கலந்த உணவை வழங்கியுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் இருவர் ஜூலை 24 மற்றும் 25 ஆம் தேதிகளிலும், மற்றொரு குழந்தை ஜூலை 24 ஆம் தேதியன்றும் உயிரிழந்தனர்.
முதலில் விபத்து மரணமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சனிக்கிழமை இரவு வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைகளின் உடலில் விஷம் இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. தாய் சந்தியா இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
கணவரின் குடிப்பழக்கம் மற்றும் குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாகவே இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- BMW மற்றும் Mercedes போன்ற சொகுசு கார்கள் உட்பட பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
- விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கோபோலி அருகே மும்பை-புனே விரைவுச் சாலையில் இன்று (ஜூலை 26) ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.
மும்பை நோக்கிச் செல்லும் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் சுமார் 20 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன.
முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு கன்டெய்னர் லாரி சரிவில் இறங்கும்போது பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த லாரி, அதன் முன்னால் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியது, இதனால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.
பத்தில் BMW மற்றும் Mercedes போன்ற சொகுசு கார்கள் உட்பட பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் இதுவரை 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், விபத்து நடந்த நேரத்தில் அவர் மது அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
- சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தாரா ஷிவ் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக லந்தூர் மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் விடுதி ஊழியர் ஒருவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் மற்றும் கண்காணிப்பாளர், ஊழியர் ஒருவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து சிறுமி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். சிறுமி எழுதிய கடிதங்களை விடுதி நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.
சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
சிறுமி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி உரிமையாளர் ரவி பாபட்லா, கண்காணிப்பாளர் ரச்சனா பாபட்லா, ஊழியர்கள் அமித் மகாமுனி மற்றும் பூஜா வாக்மாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
- இவரை யூ-டியூபில் 10 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 8.5 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.
- ஏராளமான பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இதுபோன்று விபரீத சாகசங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதிவிட்டனர்.
நவி மும்பையில் ஓடும் சொகுசு காரின் பானட் மீது ஏறி இளம்பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நஸ்மீன் சுல்தே என்ற அந்த பெண் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவரை யூ-டியூபில் 10 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 8.5 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் நஸ்மீன் சுல்தே நவி மும்பையில் காரில் சென்ற போது பானட்டில் ஏறி பிரபல இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளார். காரை அவரது காதலன் ஷேக் ஓட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
சில பயனர்கள், இந்த வீடியோ சமீபத்தில் படகில் நடனமாடி வைரலான இந்தோனேஷியாவை சேர்ந்த 11 வயது சிறுவனின் நடனம் போல் இருப்பதாக பதிவிட்டனர். அதே நேரம் ஏராளமான பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இதுபோன்று விபரீத சாகசங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நஸ்மீன் சுல்தே மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியை பின்தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
- உள்ளூர்வாசிகளின் சமயோஜித நடவடிக்கையால் சிறுமி அசம்பாவிதத்தில் இருந்து தப்பினார்.
மகாராஷ்டிராவின் சதாராவில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயது இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
சிறிது காலமாக, இந்த இளைஞர் சிறுமியை பின்தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
சிறுமி காதலை நிராகரித்ததால், பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது இளைஞர் அவரை தடுத்து நிறுத்தி கத்தியை வைத்து மிரட்டியுள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் சாதுர்யமாக செயல்பட்டு, அந்த இளைஞரிடமிருந்து சிறுமியை மீட்டனர்.
பின்னர், அந்த இளைஞரை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். உள்ளூர்வாசிகளின் சமயோஜித நடவடிக்கையால் சிறுமி அசம்பாவிதத்தில் இருந்து தப்பினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2006-ல் மின்சார ரெயில்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.
- குற்றவாளிகள் 12 பேரையும் சிறப்பு கோர்ட் சமீபத்தில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மும்பை:
மும்பை ரெயில் தொடர் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் என அனைவரையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது:
12 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும் முன் தீர்ப்பை மாநில அரசு ஆய்வு செய்யும்.
அதற்கு முன் தீர்ப்பின் தன்மை, விடுதலைக்கான காரணம் குறித்து நாங்கள் ஆலோசிப்போம்.
முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் இந்த விவகாரத்தை ஆய்வு செய்வார். ஆய்வுக்கு பிறகுதான் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும். மாநில அரசிடம் கூடுதல் தகவல்கள் இருந்தால் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அதை விரிவாகக் கூறுவார் என தெரிவித்தார்.
இந்நிலையில், மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு வரும் 24-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
- மகாராஷ்டிராவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
- உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் ) பிரிவு ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவார் அணியானது எதிர்க்கட்சி வரிசையிலும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அஜித் பவார் அணி ஆளுங்கட்சியிலும் அங்கம் வகிக்கின்றன. இதில் அஜித் பவார் துணை மந்திரியாக ஆக பதவி வகித்து வருகிறார். அஜித் பவார் அணியைச் சேர்ந்த மாணிக் ராவ் கோகடே வேளாண்துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கிறார்.
இதற்கிடையே, சட்டசபை நடந்துகொண்டிருக்கும்போது மாணிக் ராவ் கோகடே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது ரம்மி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே மாணிக்ராவ் கோகடே பதவி விலகவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மாணிக்ராவ் கோகடே சின்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு ஆன்லைன் ரம்மி விளையாடத் தெரியாது. கேம் விளையாட ஒருவருக்கு OTP தேவை. மேலும் ஒரு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
எனது மொபைல் போன் அத்தகைய விளையாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒருவர் சரிபார்க்கலாம்.
எனது திரையில் 10 முதல் 15 வினாடிகள் தோன்றிய ஒரு விளையாட்டைத் தவிர்க்க முயற்சித்தேன்.
ராஜினாமா கோரப்பட்டதற்கு என்ன நடந்தது என சொல்லுங்கள். நான் யாரையாவது துன்புறுத்தியிருக்கிறேனா? நான் ஏதாவது திருடிவிட்டேனா அல்லது விவசாயிகளுக்கு எதிராக முடிவு செய்துள்ளேனா? எனக்கு குற்றப் பின்னணி உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
- ஒருகட்டத்தில் அலறி துடித்து ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து சிறுவன் ஓட்டம் பிடிக்க அந்த நாயும் விடாமல் துரத்தியது.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோகைல் ஹுசைன். வெளிநாட்டு வகையை சேர்ந்த 'பிட்புல்' வகை நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். மன்கர்த் அருகே காரில் தனது நாயுடன் சென்றபோது திடீரென பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதனால் காரை நிறுத்திவிட்டு அருகே போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் தனது நாயுடன் ஏறி பயணம் செய்ய முடிவு செய்தார். அந்த ஆட்டோவில் பயணித்த சிறுவர்-சிறுமிகள் அனைவரும் ஆட்டோவில் நாய் ஏறுவதை பார்த்து உடனடியாக அதில் இருந்து வெளியேறினர். ஆனால் 11 வயது ஹம்சா என்ற சிறுவன் மட்டும் அந்த ஆட்டோவில் சிக்கி கொண்டான்.
இதனை தொடா்ந்து சோகைல் ஹுசைனின் நாய், ஆட்டோவில் ஏறி அந்த சிறுவனை நெருங்கியது. மேலும் கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனை கடித்து குதற தொடங்கியது. தனது நாயை தடுக்காமல் சோகைல் கைகொட்டி சிரித்தார். ஒருகட்டத்தில் அலறி துடித்து ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து சிறுவன் ஓட்டம் பிடிக்க அந்த நாயும் விடாமல் துரத்தியது.
இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, தொழிலதிபர் சோகைல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சோகைலை கைது செய்தனர். கைதான சில மணி நேரங்களில் சோகைல் ஜாமினில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடித்ததில் சிறுவனின் கை, தாடை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.






