உடல்நிலை தேறியதால் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தர்மேந்திராவின் மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி விளக்கம் அளித்தார்.
உடல்நிலை தேறியதால் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
Published on

சில நாட்களுக்கு முன்னதாக 89 வயதான பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com