என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • அகமத்நகர் மற்றும் நாராயண்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தீ பிடித்தது.
    • ரெயிலின் 5 பெட்டிகள் தீயில் எரிந்து சேதம்.

    மகாராஷ்டிரா மாநிலம் வாலுஞ்ச் அருகே ஓடும் ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    நியூ அஸ்தி பகுதியில் இருந்து அகமத் நகர் சென்ற சிறப்பு ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    அகமத்நகர் மற்றும் நாராயண்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தீ பிடித்தது.

    இதனால், ரெயிலின் 5 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • கண்டெய்னர் வாகனத்தை நிறுத்துமாறு போக்குவரத்து காவலர்கள் சைகை காட்டினர்
    • தனது இதயம் வலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வலைதளத்தில் தெரிவித்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது சத்ரபதி சம்பாஜி நகர் (Chhatrapati Sambhaji Nagar). இந்நகரை உள்ளடக்கிய சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ளது சம்ருத்தி விரைவுச்சாலை (Samruddhi Expressway).

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தின் பதர்டி மற்றும் இந்திராநகர் பகுதியை சேர்ந்த 35 பேர், புல்தானாவில் உள்ள சைலானி பாபா தர்காவிற்கு ஒரு தனியார் மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். சம்ருத்தி விரைவுச்சாலையில் வைஜாபூர் பகுதியில் உள்ள சுங்க சாவடி அருகே இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது, அந்த பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் டிரக் வாகனத்தை சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நிறுத்துமாறு சைகை செய்தனர். இதனையடுத்து, அந்த கண்டெய்னர் ஓட்டுனர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்காக திருப்பினார்.

    அப்போது அதன் பின்னே வந்த அந்த மினி பேருந்து, கண்டெய்னர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த மினி பேருந்து உருக்குலைந்து போனது.

    இதனையடுத்து, அங்கிருந்தவர்களும் போக்குவரத்து அதிகாரிகளும் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தனர். விரைந்து வந்த அவசர உதவி சேவை ஊர்தியில், காயமடைந்த 17 பேர் சம்பாஜி நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் மேலும் 6 பேர் வைஜாபூர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இவ்விபத்தில் அந்த பேருந்தில் பயணித்தவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு 4-மாத குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த விபத்து செய்தி கேட்டு என் இதயம் வலிக்கிறது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் தெரிவித்தார்.

    விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்ட் செய்வது என ஐ.ஓ.சி. செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    • தடையால் ரஷிய வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிப்பட்ட போட்டியாளராக தான் பங்கேற்க முடியும்.

    மும்பை:

    சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் மும்பையில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஐ.ஓ.சி.யின் 2 நாள் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்ட் செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக் சாசன விதிமுறையை மீறிய இந்தச் செயலில் ஈடுபட்டதால் ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடைக்கு ஆளாகி இருக்கிறது.

    கிழக்கு உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களில் உள்ள விளையாட்டு அமைப்புகளை ரஷியா தங்களுடன் இணைத்தது நாடுகளின் ஒருமைப்பாடு குறித்த ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல் என ஐ.ஓ.சி. செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

    தடை காரணமாக ரஷிய வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் ரஷிய நாட்டு பெயரில் பங்கேற்க முடியாது. அவர்கள் தனிப்பட்ட போட்டியாளராக தான் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேலை சேர்ந்த பெரும்பாலானோர் அவர்கள் குடும்பத்தினர் முன் வைத்தே கொலை
    • ஹமாஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி சீறிப்பாய்ந்து தாக்கின. மேலும், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர்.

    ஒவ்வொரு வீட்டையும் குறிவைத்து தாக்கினர். இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீட்டிற்குள் நுழைந்து ஒரு குடும்பத்தில் உள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கும் முன், அந்த குடும்பத்தின் சிலரை அவர்கள் கண்முன்னே சுட்டுக்கொலை செய்தனர். இப்படி பலரை ஈவிரக்கம் இன்றி கொலை செய்துள்ளனர்.

    அந்த வகையில் நாகின் டி.வி. தொடரில் நடித்துள்ள நடிகை மதுரா நாயக்கின் சகோதரி (உறவினர்) மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவர்களது குழந்தைகள் கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த வேதனையான செய்தியை மதுரா நாய்க் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ''நான் மதுரா நாயக். இந்தியவாழ் யூதர் (Jew). இந்தியாவில் நாங்கள் மொத்தம் 3 ஆயிரம் பேர் உள்ளோம். அக்டோபர் 7-ந்தேதி, நாங்கள் மகள் மற்றும் மகனை எங்களது குடும்பத்தில் இருந்து இழந்துள்ளோம். என்னுடைய உறவினர் (சகோதரி) ஒடாயா மற்றும் அவரது கணவர் ஆகியோர், அவர்களின் இரண்டு குழந்தைகள் முன் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.


    துக்கம் மற்றும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தற்போது இஸ்ரேல் வலியில் உள்ளது. ஹமாஸின் தாக்குதலில் எங்களது குழந்தைகள், பெண்கள், தெருக்கள் எரிகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்களை இலக்காக வைத்து தாக்கியுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஆண்டு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு 2 புதிய கோடீஸ்வரா்கள் இந்தியாவில் உருவாகி வந்தனா்.
    • இந்தியாவில் 51 பணக்காரர்களின் சொத்துக்கள் நடப்பாண்டில் இரட்டிப்பாகி உள்ளது.

    மும்பை:

    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவா் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளாா். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.8.08 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அதானி நிறுவனங்களின் தலைவா் கவுதம் அதானியின் சொத்துக்கள் 57 சதவீதம் சரிந்து ரூ.4.47 லட்சம் கோடியுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை காரணமாக அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது.

    'ஹுருன் இந்தியா' வெளியிட்டுள்ள இந்திய செல்வந்தா்களின் பட்டியலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

    2019-ம் ஆண்டு 6-வது இடத்தில் இருந்த அதானியின் சொத்துக்கள் நடப்பாண்டு 5 மடங்கு அதிகரித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 2.1 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அவர் இந்திய பணக்காரர்களில் மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளார்.

    மூன்றாம் இடத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவா் அதாா் பூனாவாலாவின் சொத்து மதிப்பு (ரூ.2.78 லட்சம் கோடி) மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

    எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவா் சிவ நாடாரின் சொத்து மதிப்பு 23 சதவீதம் அதிகரித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.2.28 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் வரிசையில் சிவ நாடார் 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியாவில் மொத்தம் 1,319 பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு 2 புதிய கோடீஸ்வரா்கள் இந்தியாவில் உருவாகி வந்தனா். தற்போது இந்த எண்ணிக்கை 259-ஆக உள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகமாகும்.

    இந்தியாவில் 51 பணக்காரர்களின் சொத்துக்கள் நடப்பாண்டில் இரட்டிப்பாகி உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 24-ஆக இருந்தது.

    மும்பையை சோ்ந்த 328 பேரும், டெல்லியில் 199 பேரும், பெங்களூரில் 100 பேரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

    கோடீஸ்வர பணக்காரர்களை உருவாக்கும் முதல் 20 நகரங்களில் முதல் முறையாக திருப்பூரும் இடம் பெற்றுள்ளது.

    • கடந்த சில ஆண்டுகளில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வந்துவிட்டன.
    • சுங்கசாவடிகள் ஒருபோதும் மூடப்படப்போவதில்லை.

    மும்பை:

    நவநிர்மாண் சேனா கட்சி சுங்க கட்டண வசூலிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று முல்லுண்டு, தானே உள்ளிட்ட இடங்களில் கார், ஆட்டோ போன்ற சிறிய ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என நவநிர்மாண் சேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த சிறிய ரக வாகனங்களை சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல வைத்தனர்.

    இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அடுத்த 2 நாளில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை சந்திக்க அனுமதி கேட்டு உள்ளேன். அந்த கூட்டத்தில் என்ன முடிவு கிடைக்கிறது என்று பார்ப்போம். அல்லது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதை மனதில் வைத்து, நவநிர்மாண் சேனாவினர் சுங்க சாவடி பகுதிகளில் திரள்வார்கள். அவர்கள் கார், ஆட்டோ போன்ற சிறிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்வார்கள். நாங்கள் தடுக்கப்பட்டால், சுங்கசாவடிகள் கொளுத்தப்படும்.

    கடந்த சில ஆண்டுகளில் எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வந்துவிட்டன. ஆனாலும் யாரும் வாக்குறுதி அளித்தது போல மராட்டியத்தை சுங்கசாவடி இல்லாத மாநிலமாக மாற்றவில்லை. சுங்கசாவடிகள் பல அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தும் இடமாகிவிட்டது. தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் சுங்கசாவடிகளில் வசூலாகும் பணத்தில் அவர்களுக்கு பங்கு செல்கிறது. எனவே சுங்கசாவடிகள் ஒருபோதும் மூடப்படப்போவதில்லை. உங்களுக்கு நல்ல ரோடும் கிடைக்கப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மும்பை:

    இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சில ஆட்டங்கள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மும்பை போலீசாருக்கு இ-மெயிலில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஸ்னோயிக்கு ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையெனில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிரபல தாதாவான லாரன்ஸ் பிஸ்னோய் தற்போது டெல்லி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது ஆட்கள் இந்த மிரட்டலை இ-மெயிலில் அனுப்பி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தண்டவாளத்தில் பாறாங் கற்கள் வைக்கப்பட்டிருந்த விவரம் குறித்து அந்த ரெயில் என்ஜின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது.
    • சமீப காலமாக ரெயில்களை கவிழ்க்க நடந்து வரும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

    மும்பை:

    மராட்டிய மாநிலம் மும்பை- புனே ரெயில்வே வழித்தடத்தில் உள்ள அகுர்டி மற்றும் சின்ச்வாட் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை சந்தீப் பரோவ் என்ற ஊழியர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.

    அப்போது சின்ச்வாடி அருகே ரெயில்வே தண்ட வாளத்தில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதே போல அருகருகே 5 இடங்களில் பாறாங்கற்கள் இருந்ததையும் அவர் கவனித்தார். இது பற்றி உடனடியாக அவர் சின்ச்வாட் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் உஷார் அடைந்தனர்.

    அந்த சமயம் நாகர்கோவிலில் இருந்து மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தை நோக்கி மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் பாறாங் கற்கள் வைக்கப்பட்டிருந்த விவரம் குறித்து அந்த ரெயில் என்ஜின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் நடுவழியில் ரெயிலை நிறுத்தினார்.

    சம்பவ இடத்துக்கு ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்களை அகற்றினார்கள். அதன் பிறகு நாகர்கோவில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    ரெயில்வே ஊழியர் தக்க சமயத்தில் கற்கள் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததால் பெரும் விபத்து நடக்க இருந்தது தவிர்க்கபட்டது.

    இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. மும்பை- புனே வழித் தடத்தில் தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும். இதை கருத்தில் கொண்டு ரெயில்களை கவிழ்த்து நாச வேலையில் ஈடுபட சமூக விரோத கும்பல் சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    சமீப காலமாக ரெயில்களை கவிழ்க்க நடந்து வரும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உதய்பூர்- ஜெய்ப்பூர் இடையே தண்டவாளத்தில் கற்கள் வைத்து அந்த வழியாக வந்த வந்தேபாரத் ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜூலை 2023ல் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறினார்
    • சின்னத்தை மட்டுமே நம்பி மக்கள் வாக்களிப்பதில்லை என சரத் பவார் கூறினார்

    1999 ஜூன் மாதம், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் (82) தொடங்கியது, தேசிய காங்கிரஸ் கட்சி (NCP).

    கடந்த ஜூலை 2023ல் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரும், சரத் பவாரின் உறவினருமான அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் மகராஷ்டிர மாநிலத்தின் ஆளும் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து, அம்மாநில துணை முதல்வரானார்.

    இதன் காரணமாக என்.சி.பி. இரண்டாக உடைந்தது. கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் உரிமை கொண்டாடிய அஜித் பவார், இது தொடர்பாக தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் பிற பிரமுகர்களின் ஆதரவு கடிதத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

    சரத் பவாரின் மகளும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே, "கட்சியில் பிளவு ஏதும் இல்லை" என கூறி வந்தார்.

    தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்த முடிவையும் தான் ஏற்பதாக அஜித் பவார் கூறி வந்தார்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்க, தேர்தல் ஆணையத்தின் டெல்லி அலுவலகத்திற்கு வர இரு பிரிவு தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

    இதையடுத்து, டெல்லி அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவத் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் சரத் பவார், இன்று வருகை தந்தார். "வாக்காளர்கள் கட்சி சின்னத்தை மட்டுமே நம்பி வாக்களிப்பதில்லை" என முன்னரே சரத் பவார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அஜித் பவார் தரப்பில் பிரபல வழக்கறிஞர்கள் மகேஷ் ஜெத்மலானி மற்றும் மனிந்தர் சிங் ஆஜராகின்றனர். சரத் பவார் தரப்பில் காங்கிரஸ் முக்கிய தலைவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார்.

    இரண்டு ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

    • கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் எருமை மாட்டை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் வாசிம் மாவட்டத்தில் சார்சி கிராமத்தில் வசித்து வருபவர் ராம் ஹரி. இவரின் மனைவி கீதாபாய். வீட்டில் வளர்க்கும் எருமை மாட்டுக்கு இவர் தான் உணவு அளிப்பார்.

    வழக்கம் போல் கீதாபாய் எருமை மாட்டுக்கு உணவு அளிக்கும்போது, தாலி செயின் கழன்று உணவுடன் விழுந்துள்ளது. அப்போது உணவோடு உணவாக தாலி செயினை விழுங்கியது எருமை மாடு.

    சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் செயின் காணாமல் போனதை உணர்ந்த அவர், செயினை எருமை மாடு உட்கொண்டதை அறிந்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    பின்னர் இது தொடர்பாக உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த மருத்துவ குழுவினர், எருமை மாட்டின் வயிற்றை மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதித்த போது, உள்ளே தங்க நகை இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் தங்க நகையை எருமை மாட்டின் வயிற்றிலிருந்து மருத்துவ குழுவினர் மீட்டனர். தொடர்ந்து எருமை மாட்டுக்கு 63 தையல்கள் போடப்பட்டது.

    எருமை மாடு, தங்கச் சங்கிலியை விழுங்கி அது மீண்டும் மீட்கப்பட்ட தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எருமை மாட்டை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

    • சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.
    • ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    மும்பை:

    மும்பையில் உள்ள பவாய் ஐ.ஐ.டி. விடுதியில் சமீபத்தில் சைவ மாணவர்கள் மட்டும் உட்கார வேண்டும் என ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சையை அடுத்து அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 3 விடுதிகளில் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.

    இதை கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. இதுகுறித்து அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் எக்சில் வெளியிட்ட தகவலில்:- ஐ.ஐ.டி. பாம்பே அதன் உணவு பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது என கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
    • நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளதாக மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24 நோயாளிகள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் புதிதாக பிறந்த 12 பச்சிளம் குழந்தைகளும் அடங்கும். ஆஸ்பத்திரியில் நிலவும் மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியில் நேற்று இரவு மேலும் 7 நோயாளிகள் இறந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள். இதனால் 2 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறுகையில், "மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை. நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளனர்" என்றார்.

    இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ×