என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • தெருவில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமி காணாததால் அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
    • மகளை கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. இவருடைய தாய்மாமன் நாகராஜு (24). நாகராஜு சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று சிறுமியுடன் விளையாடுவது வழக்கம்.

    நேற்று முன்தினம் மாலை சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜு சிறுமியை கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்களை வாங்கி கொடுத்தார்.

    ஏ.ஆர்.புரத்தில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி உயிருடன் இருந்தால் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி விடுவார் என நினைத்தார்.

    பின்னர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். கொலை செய்யப்பட்ட சிறுமியின் பிணத்தை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.

    தெருவில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமி காணாததால் அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

    மகளை கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடைசியாக சிறுமி நாகராஜுடன் சென்றது தெரிய வந்தது.

    போலீசார் நாகராஜுவை பிடித்து விசாரணை செய்ததில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்று என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
    • சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் நரசிம்ம வாராஹி படை' புதிய அணியை தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய பவன் கல்யாண், "இந்து கோயில்களுக்குச் செல்லும்போதும், சனாதன தர்மத்தைப் பின்பற்றும்போதும் சில விஷயங்களை நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டும் விளக்காக விளங்கும் சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்று என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கும் அதே சமயம், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் உறுதி செய்வோம்.

    இந்து மதத்தையோ, சனாதன தர்மத்தையோ கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது. சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    நரசிம்ம வாராஹி படையில் ஜன சேனானி என்று அழைக்கப்படும் ஜனசேனா உறுப்பினர்கள் சனாதன தர்மத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இந்த புதிய பிரிவு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்து மத விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கலாச்சார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.

    • ரூ.300 டிக்கெட் பக்தர்களுக்கு 4 மணிநேரம் ஆனது.
    • நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

    தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வந்ததால், திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 4 கிலோ மீட்டர் தூரமுள்ள புரோகிதர் சங்க கட்டிடத்தைத் தாண்டி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணிநேரம் ஆனது. ரூ.300 டிக்கெட் பக்தர்களுக்கு 4 மணிநேரம் ஆனது. தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் காலை சிற்றுண்டி, மதியம் அன்னப்பிரசாதம், பால், குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். இதுதவிர திருமலையில் உள்ள கல்யாண கட்டா, தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள், லட்டு பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 785 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 38 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
    • நீதிபதி அளித்த நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியை சேர்ந்தவர் அங்கய்யா (வயது 28) கடந்த 13-ந்தேதி அங்குள்ள கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது கோவிலுக்குள் நுழைந்த அங்கய்யா அங்கிருந்து பித்தளை அண்டா உள்ளிட்ட 3 பாத்திரங்களை நைசாக திருடி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருட்டு நடந்த சில மணி நேரத்தில் அங்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கோவில் அண்டா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரை கனிகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அங்கய்யா தான் தற்போது தான் முதன் முதலில் திருட்டில் ஈடுபட்டேன். என்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரத் சந்திரா இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் அங்கய்யாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

    அதில் நவம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கனிகிரி முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை அங்கய்யா சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

    கோர்ட்டு அளித்த இந்த சமூக சேவை நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள கஜுலுரு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் சின்னி, பேரன் ராஜு. இவர்கள் 3 பேரும் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களுடைய கைகளில் அரிவாள்கள் இருந்தன.

    இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ரமேஷ் குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரும் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    • இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
    • பல பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம்.

    பாராளுமன்ற தேர்தலோடு ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்று தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்தது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார்.

    ஆந்திராவில் ஆட்சியை பிடித்தால் ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு தீபம் என பெயரிட்டார்.

    அதன்படி தீபாவளி பண்டிகை முதல் பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

    இந்நிலையில், இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் தீபம் திட்டத்தை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பயனாளியின் வீட்டிற்கே சென்ற சந்திரபாபு நாயுடு கியாஸ் சிலிண்டரை இணைத்து அவரே தேநீர் செய்து அருந்தினார்.

    இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "தேர்தலின் போது அளித்த சூப்பர் 6 வாக்குறுதிகளில் ஒன்றான ஆண்டுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை ஸ்ரீகாகுளம் மாவட்டம் இடுபுரத்தில் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் பெற்ற பெண்களின் கண்களில் இருந்த மகிழ்ச்சி எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.

    இடுபுரத்தில் இதுபோன்ற இலவச கியாஸ் சிலிண்டர் பெற்ற சாந்தம்மா நான் இதற்கு முன்பு அறிமுகப்படுத்திய தீபம் 1 திட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்ற பெண் என்பதை அறிந்து மேலும் மகிழ்ச்சி அடைந்தேன். நானே பயனாளியின் சமையலறைக்கு சென்று கேஸ் பற்றவைத்து தேநீர் தயாரித்து என் தோழர்களுக்குக் கொடுத்தேன்.

    இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமையலறையில் புகை இல்லை, பொருளாதாரச் சுமை இல்லை. பல பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உதவுவதில் நான் எப்போதும் முன்னணியில் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும். சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    • மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம்.
    • திருப்பதியில் நேற்று 63,987 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு, குழு உறுப்பினர்கள் 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு கூறியதாவது:-

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்ட தற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல் மந்திரி பவன் கல்யாண், மந்திரி லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறங்காவலர் குழு தலைவராக வேலை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்.

    கடந்த ஆட்சி காலத்தை போல் அல்லாமல் வெளிப்படை தன்மையாகவும் உண்மையாகவும் பாடுபடுவேன்.

    தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.

    தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு அரசு பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்புவதா என்பது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

    மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். இருப்பினும் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 63,987 பேர் தரிசனம் செய்தனர். 20,902 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • பைக்கில் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்தது.
    • வெடியின் தீப்பொறி மற்ற வெடிகளுக்கு பரவியதால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது.

    ஆந்திர மாநிலம், ஏலூரை சேர்ந்தவர் சுதாகர். தீபாவளி பண்டிகையொட்டி தனது நண்பர் ஒருவரை பைக்கில் அழைத்துக் கொண்டு மார்க்கெட்டிற்கு சென்றார். அங்குள்ள கடையில் வெங்காய வெடி உட்பட பட்டாசுகளை வாங்கினார்.

    பின்னர் தனது நண்பருடன் பட்டாசு மூட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அங்குள்ள சாலையில் இருந்த பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியது.

    பைக்கில் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்தது. அதில் இருந்த வெங்காய வெடிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறியது. வெங்காய வெடியின் தீப்பொறி மற்ற வெடிகளுக்கு பரவியதால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    இந்த விபத்தில் சுதாகர் உடல் சிதறி இறந்தார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக ஆங்காங்கே சிதறியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் பேசிக்கொண்டு இருந்த தபேலு சாய், சிவாரா ஷஷி, சீனிவாச ராவ், காதர், சுரேஷ், சதீஷ் என 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் இருக்க ஏலூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சுதாகர் பைக் ஓட்டி செல்வதும், விபத்தில் சிக்கி வெடித்து சிதறும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துவ்வாடாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • விசாகப்பட்டினத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.

    திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா வரையிலான ரெயில் பயணத்தின் போது 55 வயது நபரும் அவரது குடும்பத்தினரும் கடும் சிரமத்திற்கு ஆளானதால் அவருக்கு இழப்பீடாக 30,000 ரூபாய் வழங்குமாறு இந்திய ரெயில்வேக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருமலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் மூர்த்தி என்பவர் 4 ஏ.சி. டிக்கெட்டுகளை பதிவு செய்து பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது அவர்களின் பெட்டியில் ஏர் கண்டிஷன் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் கழிப்பறை அசுத்தமாகவும், தண்ணீரும் வரவில்லை. பயணம் முழுவதும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் சிரமங்களை எதிர்கொண்டு பயணம் மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து துவ்வாடாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மூர்த்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, குற்றச்சாட்டை மறுத்த ரெயில்வேதுறை, பொய்யான குற்றச்சாட்டை மூர்த்தி கூறியுள்ளதாகவும், ரெயில்வே வழங்கிய சேவைகளைப் பயன்படுத்தி மூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டதாகவும் கூறியது.

    இருப்பினும், நுகர்வோர் நீதிமன்றம், புகாரைப் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அதைப் பார்வையிடவில்லை என்றும் கழிப்பறைகளுக்கு நீர் தடைபட்டதைக் கண்டறிந்ததாகவும் தெரியவந்தது. இதனால் குறைந்தபட்ச வசதிகளைக் கூட சரிபார்க்காமல் பிளாட்பாரத்தில் ரெயில் நிறுத்தப்பட்டதை நிரூபித்த நீதிமன்றம், திருப்பதியில் இருந்து துவ்வாடா (வைசாக் மாவட்டம்) செல்லும் போது ஏற்பட்ட சிரமத்திற்காக மூர்த்திக்கு 25,000 இழப்பீடு வழங்க ரெயில்வேக்கு உத்தரவிட்டது. வழக்கிற்கு ஏற்பட்ட செலவுகளுக்காக ஈடுகட்ட கூடுதலாக 5,000 என மொத்தம் ரூ.30,000 வழங்க உத்தரவிட்டது.

    • தாயின் மருத்துவ சிகிச்சைக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை.
    • காக்கிநாடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மாவட்டம், ஓய்.கோட்டப்பள்ளியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவருடைய மகள்கள் புஜ்ஜி, சுவாதி (28). சரஸ்வதியின் கணவர் நரசிம்ம ராவ் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

    இதனால் சரஸ்வதி கூலி வேலை செய்து தனது 2 மகள்களையும் நன்றாக படிக்க வைத்தார். சரஸ்வதியின் 2 மகள்களும் தாய் மீது அதிக பாசம் காட்டி வந்தனர்.

    இந்த நிலையில் மூத்த மகள் புஜ்ஜுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். சரஸ்வதிக்கு திடீரென உடல் நலக்குறைவு மற்றும் மனநல பாதிப்பு ஏற்பட்டது.

    தாயின் மருத்துவ சிகிச்சைக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை. தாய் உடல் நல குறைவால் அவதி அடைவதை கண்ட சுவாதி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மின்விசிறியில் சேலையை கட்டி தாயை தூக்கில் தொங்கவிட்டார்.

    தாய் இறந்ததை உறுதி செய்த பிறகு சுவாதியும் தாயை தூக்கில் தொங்கவிட்ட புடவையில் மற்றொரு முந்தானையில் தூக்கிட்டு இறந்தார். 3 நாட்களுக்கு பிறகு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. காக்கிநாடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலவச கியாஸ் சிலிண்டர் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
    • சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும்.

    ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தலின்போது பெண்களுக்கு ஆண்டிற்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளை அறிவித்தார்.

    அதன்படி பெண்களுக்கு ஆண்டுதோறும் 3 இலவச சிலிண்டர்கள் தீபாவளி முதல் வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக ஆந்திரா அரசு தெரிவித்துள்ளார்.

    கியாஸ் சிலிண்டர்களுக்கான தொகையை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் கார்பரேசன், இந்தியன் ஆயில் கார்பரேசன் ஆகிவற்றிற்கு நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கு தீபம்-2 என பெயரிடப்பட்டுள்ளது.

    சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும். சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

    • 28 இடங்களில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதியில் உள்ள வரதராஜ சாமி கோவில், இஸ்கான் கோவில் மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது . இதனால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.

    வெடிகுண்டு மிரட்டல் குறித்து பக்தர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் திருப்பதி மலை முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி சிறப்பு பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரி தலைமையிலான கமாண்டோ பாதுகாப்பு படையினர் இரவு நேரத்தில் திருப்பதி மலை முழுவதும் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருமலை முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆக்டோபஸ் கமாண்டோ படையினருடன் மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருமலையில் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக 28 இடங்களில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ×