மோட்டார் சைக்கிளில் மூட்டையில் பட்டாசு கொண்டு செல்லும்போது விபத்து: ஒருவர் பலி

பைக்கில் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்தது. வெடியின் தீப்பொறி மற்ற வெடிகளுக்கு பரவியதால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது.
மோட்டார் சைக்கிளில் மூட்டையில் பட்டாசு கொண்டு செல்லும்போது விபத்து: ஒருவர் பலி
Published on

ஆந்திர மாநிலம், ஏலூரை சேர்ந்தவர் சுதாகர். தீபாவளி பண்டிகையொட்டி தனது நண்பர் ஒருவரை பைக்கில் அழைத்துக் கொண்டு மார்க்கெட்டிற்கு சென்றார். அங்குள்ள கடையில் வெங்காய வெடி உட்பட பட்டாசுகளை வாங்கினார்.

பின்னர் தனது நண்பருடன் பட்டாசு மூட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அங்குள்ள சாலையில் இருந்த பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியது.

பைக்கில் இருந்த பட்டாசு மூட்டை கீழே விழுந்தது. அதில் இருந்த வெங்காய வெடிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்து சிதறியது. வெங்காய வெடியின் தீப்பொறி மற்ற வெடிகளுக்கு பரவியதால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

இந்த விபத்தில் சுதாகர் உடல் சிதறி இறந்தார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக ஆங்காங்கே சிதறியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் பேசிக்கொண்டு இருந்த தபேலு சாய், சிவாரா ஷஷி, சீனிவாச ராவ், காதர், சுரேஷ், சதீஷ் என 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் இருக்க ஏலூர் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சுதாகர் பைக் ஓட்டி செல்வதும், விபத்தில் சிக்கி வெடித்து சிதறும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com