என் மலர்
பொது மருத்துவம்
- புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம்.
- கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பழக்கம்.

உலகின் பல்வேறு பழங்குடிகளிடமும் புகையிலை பயன்பாடு வெவ்வேறு வடிவங்களில் இருந்திருக்கிறது. இதனை போதையாக அவர்கள் கருதவில்லை. மாறாக மூலிகையாக கருதினர்.
அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமான புகையிலை அங்கு மூச்சிரைப்பு, மலேரியா, உணவுக்குழாய் அழற்சி, மூலநோய், மன அழுத்தம் ஆகிய பாதிப்புகளுக்கு உள் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. சருமத்தில் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சிரங்கு, தோல் நோய்களில் மேற்பூச்சாக பயன்பட்டது.
18-ம் நூற்றாண்டு வாக்கில் புகையிலையானது சுருட்டாகவும், சிகரெட்டாகவும் உருவெடுத்தது.
புகையிலையை புகைக்கும்போது, அதில் உள்ள நிகோடின், பைரிடின், கார்பன் மோனாக்சைடு போன்றவை உடலுக்குள் செல்லும். அப்போது கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
புகையிலையை பதப்படுத்தி சிகரெட்டாக மாற்ற ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக, பல்வேறு உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது. ஒரு ஆண்டில் 8 லட்சம் மக்களை புகையிலையால் வரும் பாதிப்பு மரணிக்க வைக்கிறது. இதில் ஒரு துயரம் என்னவென்றால் சிகரெட் புகைக்கும் நபரின் அருகில் இருக்கும் பெண்கள், குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான்.
மூளையில் இருக்கும் டோபோமைன் என்ற சுரப்பு உற்சாகத்தை தூண்டக்கூடியது. அந்த சுரப்பை அதிகரித்து சற்று நேரம் உற்சாகமாக வைப்பது புகையிலையின் குணம். இந்த ஒரு சில நிமிடங்கள் அளிக்கும் உற்சாகம், சிகரெட் புகைக்கும் நபரை காலங்காலமாக அதற்கு அடிமைப்படுத்தி விடுகிறது என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.
- குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், ஆபத்து அதிகரிக்கலாம்.
- கொழுப்புச்சத்து மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
மார்பகப் புற்றுநோய் குறித்த தகவல்கள் இல்லாததாலும், இணையத்தில் தவறான தகவல்கள் கிடைப்பதாலும், அது தாமதமாகக் கண்டறியப்படுகிறது. இந்த நோயை சரியாகக் கண்டறிவதன் மூலம், அதிலிருந்து விரைவாக மீட்க முடியும். ஹார்மோன் மாற்றங்கள், உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மரபணு காரணங்கள் போன்ற பல காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
* குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், ஆபத்து அதிகரிக்கலாம்.
* BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணு மாற்றங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
* ஹார்மோன் மாற்று சிகிச்சையின் (HRT) பயன்பாடும் ஆபத்தை அதிகரிக்கலாம்.
* மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
உணவில் அதிகப்படியான கொழுப்புச்சத்து மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
தடுப்பு நடவடிக்கைகள்
மார்பக புற்றுநோயை தடுக்க, உணவு, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள்
* பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் சாப்பிடுங்கள்.
* கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்கவும்.
* உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்
* தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான-தீவிர ஏரோபிக் செயல்பாட்டைப் பெறுங்கள்.
* எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமன் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
மது அருந்துதல் மற்றும் புகைத்தல்
மது அருந்துவதை கட்டுப்படுத்துங்கள். மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்துவது நல்லது.
புகை பிடிக்காதீர்கள். புகைபிடித்தல் மார்பக புற்றுநோயை மட்டுமல்ல, பல கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும்.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்க, 40 வயதிற்குப் பிறகு வழக்கமான மேமோகிராபி செய்ய வேண்டும். மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய மேமோகிராபி உதவுகிறது.
இது தவிர, உங்கள் மார்பகத்தை நீங்களே சரிபார்த்து, மடிப்புகளில் ஏதேனும் மாற்றத்தைக் காணலாம். மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை அணுகி, பரிசோதனைக்குப் பிறகு, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
- மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர வகை புற்றுநோயாகும்.
- லட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.
மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர வகை புற்றுநோயாகும். பொதுவாக இந்த பிரச்சனை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், சில சூழ்நிலைகளில் ஆண்களும் இந்த பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். சிகிச்சையில் தாமதம் மற்றும் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாததால் மார்பக புற்றுநோய் தீவிரமடைகிறது.
மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதிக உயரம் உண்மையில் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறதா? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மார்பகப் புற்றுநோய்க்கு பல காரணங்கள் உள்ளன. உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை தவிர, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள், உடல் அமைப்பு மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
NCBI -ல் வெளியிடப்பட்ட சில ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் உயரமான உயரம் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
மார்பக புற்றுநோயைத் தூண்டும் காரணிகளில் உயரமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், உயரம் மட்டுமே மார்பக புற்றுநோயை ஏற்படுத்தாது. மார்பகப் புற்றுநோய்க்கு உயரத்தைத் தவிர, வேறு பல காரணங்களும் காரணமாக இருக்கலாம்.
உடல் உயரம் அதிகரிக்கும் போது, ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படுகின்றன. இது மார்பக திசுக்களை பாதிக்கிறது. இது தவிர, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி (IGF-1) ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக, செல்கள் வளரும் அபாயமும் அதிகரிக்கிறது.
- 3 வகையான நிற உணர் நிறமிகள் உள்ளன.
- வெள்ளை நிறமும் இரவில் குறைந்த ஒளியில் கூட துல்லியமாக புலப்படும்.
மனித கண்களுக்கு பகலில் நிறங்கள் புலப்படுவது போல் இரவில் அவ்வளவு தெளிவாக தெரிவதில்லை. மனித கண்களின் அமைப்பு அப்படித்தான் உள்ளது.
பொதுவாக, நிறங்கள் அலைகளின் ஊடாக பயணிக்கின்றன. நிறத்தை பொறுத்து அந்த அலைகள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட அலைநீளம் கொண்டவையாக இருக்கின்றன. இதில், ஓரளவு அதிக அலைநீளம் கொண்ட நிறங்களை மனித கண்களால் குறைந்த ஒளி வெளிச்சத்தில் பார்க்க முடியும்.
அந்த வகையில், பச்சை நிறம் மிகத்தொலைவில் இருந்து கூட பார்க்கும் வகையில் அலைநீளம் கொண்டதாக உள்ளது.
பொதுவாக, நமது கண்களில் போட்டோரிசப்டர் செல்கள் என்று கூறப்படும் 3 வகையான நிற உணர் நிறமிகள் உள்ளன. இந்த நிறமிகள்தான் நிறங்களின் அலைநீளத்தை உணர்ந்து மூளைக்கு அதனை தெரிவிக்கின்றன.
பகல் நேரத்தில் இந்த நிற உணர் நிறமிகள் பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிறங்களின் அலை நீளங்களை எளிதில் உணர்ந்து கொள்கின்றன. இதன் காரணமாகத்தான் போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் வாகனங்கள் கடந்து செல்ல அனுமதியை குறிக்கும் வகையில் பச்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கு மாறாக போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் சிவப்பு நிறம் வாகனங்கள் நிறுத்த கட்டளையை அறிவிக்க பொருத்தப்பட்டுள்ளன. சிவப்பு வண்ண அலைநீளம் மிகக்குறைவு என்றாலும் வாகனங்கள் குறைந்த தொலைவில் கூட சிவப்பு விளக்கு எரிந்தால் உடனே அடையாளம் கண்டு வாகனத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக சிவப்பு பயன்படுத்தப்படுகின்றன.
குறைந்த வெளிச்சத்தில் கூட தெளிவாக கண்களின் நிற உணர் நிறமிகளால் கண்டுகொள்ளக்கூடிய நிறமாக இருப்பது மஞ்சள் நிறம். பெரும்பாலும் இரவு நேரங்களில் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள், அவசர கால வாகனங்கள் மஞ்சள் நிறம் கொண்டவையாக இருப்பது இரவிலும் அவை தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். இதே போல வெள்ளை நிறமும் இரவில் குறைந்த ஒளியில் கூட துல்லியமாக புலப்படும்.
- தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
- ஆரோக்கியமாக வாழ சுத்தமான உணவு, தூய குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் அவசியம்.
தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம்.
இன்றைய உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது தொற்றுநோய்களாகும். நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ சுத்தமான உணவு, தூய குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் அவசியம். நாம் சுத்தமாக இல்லாவிடில் நோயாளியாகி விடுவோம். நல்ல ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கு காரணமாக அமையும். ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோஷமான மனிதனின் வெற்றியின் ரகசியம் ஆகும்.
சுத்தமான காற்று, உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஒழுங்கான ஓய்வு போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதால் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். சுத்தமில்லா வாழ்க்கை நோய்களை உண்டாக்கி வாழ்வை இருளாக்கிவிடும்.
நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கிற குடும்பம் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் உளரீதியாக மகிழ்ச்சி ஏற்படும். சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும். வாழும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும் நலமாக வாழலாம்.
சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியம் தொடர்பானதாகும். ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்ணவேண்டும். சாப்பிடும்போதும் உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகும், சுகாதார வளாகத்தை பயன்படுத்திய பின்னரும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
குழந்தைகளிடம் கைகளில் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி திரவத்தை பயன்படுத்தி கழுவுவதற்கு கற்று கொடுக்க வேண்டும். நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை வெட்டி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
நம் உடல்நலத்தில் நாம் உடுத்தும் ஆடைகளுக்கு பங்குண்டு. வெளியில் செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் நன்றாக துவைத்த ஆடைகளை அணியவேண்டும். உடல் சுத்தத்தில் கவனம் செலுத்துவதுபோல நாம் உண்ணும் உணவிலும் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும். தூய்மையான காய்கறிகள், சமையல் பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்க வேண்டும்.
உணவு தயாரிப்பதற்கு முன்பும், உணவுப்பொருட்களை தொடுவதற்கு முன்பும் கைகளை நன்றாக கழுவவேண்டும். கடைகளில் சாப்பிட நேரும்போது தரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும். சாப்பாடு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் நபர் தூய்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் அவசியத்தை குழந்தைகளுக்கு விளக்கி கூறவேண்டும். ஆரோக்கியமான வாழ்வை வாழ அனைவரும் கற்று கொள்வோம்.
- சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்.
- இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.
சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையை உள்ளிழுத்த பிறகு, இதய அமைப்பு உடனடியாக சில மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதய துடிப்பில் வேறுபாடு, ரத்த அழுத்தம் சீரற்றத்தன்மை, தமனி சுருக்கம் என இதய செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் அத்தகைய மாற்றங்கள் குறித்து பார்ப்போம்.

இதயத் துடிப்பு
புகையிலையில் இருக்கும் முதன்மையான போதைப்பொருளான நிகோடின், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோனான அட்ரினலின் செயல்பாட்டை தூண்டுவிடும். அதனால் புகைபிடித்த சில நொடிகளுக்குள் இதயத்துடிப்பு உடனடியாக அதிகரிக்க தொடங்கிவிடும்.
ரத்த அழுத்தம்
நிகோடின் ரத்த நாளங்களை சுருங்கச் செய்யக்கூடியது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். இதனால் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
ஆக்சிஜன் குறையும்
சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இது ரத்த ஓட்டத்தில் குறுக்கிட்டு அதில் கடத்தப்படும் ஆக்சிஜன் அளவை குறைக்கும். இதய தசை உள்பட செல்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை குறைப்பதற்கும் வழிவகுத்துவிடும்.
ரத்த உறைவு
புகைபிடிக்கும் பழக்கத்தை தொடரும்போது தமனிகளில் அடைப்பு உருவாவதை ஊக்குவிக்கும். இதனால் ரத்த உறைவு பிரச்சினை ஏற்படும். இதயம் அல்லது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். அதன் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும்.
இதய செயலிழப்பு
புகைப்பழக்கத்தை இடைவிடாமல் தொடர்ந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் தேவையை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். ரத்த விநியோகத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கும் வழிவகுக்கலாம். இந்த ஏற்றத்தாழ்வுகள் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.
- மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம்.
- ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும்.
இன்றைய வாழ்க்கைச்சூழலில் மன அழுத்தம் தவிர்க்கமுடியாத விஷயமாக இருக்கிறது. அதனை திறம்பட நிர்வகிப்பது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்தும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைத்து மனதுக்கு மறுமலர்ச்சியை பெற்றுத்தரும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இவை..

* மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம். இது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். முடியாதபட்சத்தில் சுவாசத்தில் கவனம் செலுத்தி ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியிட சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும்.
* மன அழுத்தத்தை நிர்வகிக்க அன்பானவர்களின் ஆதரவு முக்கியமானது. வலுவான சமூக தொடர்பு கொண்டவர்களுக்கு மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறைவாக இருக்கும். நேரில் சந்திப்பது, செல்போனில் பேசுவது, வீடியோவில் அரட்டை அடிப்பது என ஏதாவதொரு வகையில் உங்களுக்கு உண்மையாக இருப்பவர்களுடன் சில நிமிடங்களை செலவிடுவதும், உங்கள் மனதில் இருக்கும் பாரங்களை இறக்கி வைப்பதும் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும். மனதுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொடுக்கும். எனவே நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.

* லாவெண்டர், சாமந்தி, சந்தனம் போன்ற வாசனைகள் அமைதியுடன் தொடர்புடையவை. இந்த எண்ணெய்களை சருமத்தில் தடவலாம். குளிக்கும் நீரில் சில துளிகள் சேர்க்கலாம்.
* ஓவியம் தீட்டுவது, இசைக்கருவியை வாசிப்பது போன்ற செயல்பாடுகள் மன அழுத்தத்தை குறைக்கும். தினமும் இதற்கு முடியாத பட்சத்தில் வாரந்தோறும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
* ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும். இதயத் துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். 4-7-8 சுவாச பயிற்சியை முயற்சிக்கவும். அதாவது 4 விநாடிகள் மூச்சை உள்ளிழுக்கவும், 7 விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும், பின்பு 8 விநாடிகள் சுவாசத்தை வெளியேற்றவும்.

* சிரிப்பு யோகா செய்வதும் பலன் தரும். ஆக்சிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கச்செய்து எண்டோர்பின்களை வெளியிடும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
* செல்லப்பிராணிகளை வளர்ப்பது, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது, அதனுடன் நேரம் செலவிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். தனிமை உணர்வையும் குறைக்கும். மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.
* டிஜிட்டல் திரைகள் மற்றும் சமூக ஊடகங்களை தொடர்ந்து பார்வையிடுவது மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு வித்திடும். அதனை ஒதுக்கிவைத்துவிட்டு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். அது மனதை இதமாக்கும். மறுமலர்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கும்.
* தோட்டக்கலையில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தை குறைக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செடிகளை நடுவது, வளர்ப்பது, அறுவடை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவது, தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மையை பெற்றுத்தரும். தினசரி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் இணைய வைக்கும்.
- ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவோர் பலர் உண்டு.
- காகித ஸ்ட்ராவில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளது.
குளிர்பானங்கள் போன்ற திரவ வகை உணவுகளை அருந்தும்போது, ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவோர் பலர் உண்டு. அவை பிளாஸ்டிக்கால் தயாரானவையாகவே இருந்தன. உலகளவில் ஆண்டுதோறும் 460 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஏற்படுத்தும் மாசுவும் அடங்கும். இதை கருத்தில் கொண்டு இந்தியா உட்பட பல நாடுகள், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு தீர்வாக, காகித ஸ்ட்ராவுக்கு மாறியுள்ளன.
இந்த காகித ஸ்ட்ராக்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை, மக்கும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்கை ஒப்பிடும்போது, மண்ணில் சிதைவதற்கு மூன்று முதல் ஆறு வாரங்கள் மட்டுமே ஆகும்.

தாவரம் மற்றும் மூங்கில் போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் காகித ஸ்ட்ராக்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் சமீபத்திய ஒரு ஆய்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
காகித ஸ்ட்ராவில் நச்சு மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக பெல்ஜிய விஞ்ஞானிகள் நாடு முழுவதும் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் காகிதம், மூங்கில், பிளாஸ்டிக் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட 39 வகையான ஸ்ட்ராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் பரிசோதிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து ஸ்ட்ராக்களிலும் பாலி புளூரோ அல்கைல் பொருட்களின் (பி.எப்.ஏ.எஸ்) கலவைகள் இருந்தன. அதிலும் காகித ஸ்ட்ராக்களில் பிளாஸ்டிக்கை விட அதிகமான ரசாயனங்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பாலி புளூரோ அல்கைல் நீரில் அதிகமாக கரையக்கூடியது என்பதும், இதனால் ஸ்ட்ராக்களில் கலந்திருக்கும் அது பருகும் பானத்துடன் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
முதன்முதலில் 1888-ம் ஆண்டில், அமெரிக்கரான மார்வின் செஸ்டர் ஸ்டோன் என்பவர்தான் காகிதத்தை பயன்படுத்தி ஸ்ட்ராவை உருவாக்கினார். அந்த காலத்தில் அது பிரபலமாக இருந்தது.
ஆனால் எதிர்மறையான விளைவுகளை தந்தது. அதாவது காகித ஸ்ட்ரா, பானத்தின் சுவையை மாற்றி வித்தியாசமான ஒரு சுவையை கொடுத்தது. அதன் பின்னர்தான், காகித ஸ்ட்ராக்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களால் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படவே மீண்டும் காகித ஸ்ட்ராக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இந்தநிலையில் அதில் கலந்திருக்கும் பாலி புளூரோ அல்கைல் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.
கருவுறுதல் குறைவதற்கும், கர்ப்பிணிப் பெண்களிடத்தில் உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாடுகள், விரைவாக பருவமடைதல், எலும்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கும்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவும், உடல் பருமன் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட பெரும்பாலான ஸ்ட்ராக்களில் ரசாயனங்கள் கண்டறியப்பட்டாலும், அவை மனிதர்களுக்கு உடனடி ஆபத்தை விளைவிப்பதில்லை.
காலப்போக்கில் பாதிப்பை அதிகப்படுத்தும். எனவே ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
- வைட்டமின்-டி உடலின் பொது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இன்றியமையாதது.
- இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதில் வைட்டமின்-டி முக்கியப் பங்கு வகிக்கிறது.
சூரியஒளி உயிர்சத்து என்று அழைக்கப்படும் வைட்டமின்-டி உடலின் பொது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இன்றியமையாதது.
வைட்டமின்-டி எலும்புகளை வலிமையாக பராமரிக்க உதவுவதோடு இதய நோய், நீரிழிவு, மூட்டு தேய்மானம் வராமல் தடுப்பதுடன் உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.
உடலில் வைட்டமின்-டி குறைபாடு ஏற்பட்டால் இடுப்பு வலி, மூட்டு வலி, தசை பலவீனம் அல்லது தசைப்பிடிப்பு, எலும்பு வளர்ச்சி அல்லது பற்கள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படும்.
நீண்ட கால வைட்டமின்-டி குறைபாட்டால் எளிதில் எலும்பு முறிவு, மூட்டு விலகல் ஏற்படும். மிக நாள்பட்ட நிலையில் மூட்டு தேய்மானம் ஏற்பட்டு நடக்க இயலாத நிலையை உருவாக்கும். பொதுவாக, எலும்புகளில் வலி காணப்படும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின்-டி முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் போதுமான வைட்டமின்-டி இருந்தால் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
வைட்டமின்-டி இதய செயல்திறனை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு வைட்டமின்-டி உடலில் இருக்கும் போது டைப்-2 வகை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. இன்சுலின் உணர்திறன் வைட்டமின்-டி மூலம் கட்டுக்குள் வருகிறது. இது ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
சூரிய ஒளியில் இருந்து உடலின் தோலானது இயற்கையாகவே வைட்டமின்-டி சத்ைத உற்பத்தி செய்யும். உடலில் வைட்டமின்-டி குறைவாக இருக்கும்போது அதனை சரிசெய்ய மூலிகைகள் உதவுகின்றன.
அஸ்வகந்தா, சதாவரி மற்றும் சீந்தில் ஆகிய மூலிகைகள் குறிப்பிடத்தக்கவை. இந்த மூலிகைகளை டாக்டர்கள் பரிந்துரைப்படி உண்ணலாம். ஆரஞ்சுப்பழம், காளான், மீன் மற்றும் முட்டையில் வைட்டமின்-டி சத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- தனிநபரின் நோயெதிர்ப்புத் திறனை மதிப்பிடுவதற்கு ஒரு நோய்த்தடுப்பு சோதனை நடத்தப்படுகிறது.
- தலைவலி, காய்ச்சல், திசைதிருப்பல், மோசமான சமநிலை, அல்லது, சில சந்தர்ப்பங்களில், பக்கவாதம் கூட ஏற்படுகிறது.
தனிநபரின் நோயெதிர்ப்புத் திறனை மதிப்பிடுவதற்கு ஒரு நோய்த்தடுப்பு சோதனை நடத்தப்படுகிறது.இன்றைய உலகில், மனிதகுலம் தொடர்ந்து புதிய மற்றும் அரிதான நோய்களை எதிர்கொள்கிறது, ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்களைக் கொண்டுவருகின்றன. அத்தகைய ஒரு அரிய நிலை பெஹ்செட் நோய். இந்த நோய்க்கான துல்லியமான காரணம் தெரியவில்லை என்றாலும், இது மரபணு, நோய் எதிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களுக்கிடையில் ஒரு சிக்கலான தொடர்பு காரணமாக நம்பப்படுகிறது. Behcet நோய்க்குறியை வேறுபடுத்துவது கண்கள் உட்பட உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கும் திறன் ஆகும்.
கண்கள், மிகவும் மென்மையான உறுப்புகளில் ஒன்றாக இருப்பதால், இந்த நிலைக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது குருட்டுத்தன்மையை கூட விளைவிக்கும். எனவே, சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் நோயறிதல் முற்றிலும் முக்கியமானது. ஆரம்பகால தலையீடு உண்மையில் கடுமையான விளைவுகளைத் தடுப்பதில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். விழிப்புணர்வு மற்றும் நுண்ணறிவுகளை வழங்குவதற்காக, இந்த வலைப்பதிவு விவாதிக்கப்படும் பெஹ்செட் நோய் அறிகுறிகள், கண்களில் பெஹ்செட் நோய்க்குறியைக் கண்டறிய உதவும் சோதனைகள் மற்றும் சிகிச்சை.
பெஹ்செட் சிண்ட்ரோம்: ஒரு கண்ணோட்டம்
பெஹ்செட் சிண்ட்ரோம், ஒரு அரிய மருத்துவ நிலை, உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களில் நாள்பட்ட அழற்சி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கண் அமைப்பு உட்பட பல்வேறு உடல் பகுதிகளை பாதிக்கும் திறன் கொண்டது. Behcet இன் நோயை துல்லியமாக கண்டறிவது அதன் பரந்த அளவிலான அறிகுறிகளால் சவாலாக இருக்கலாம், இது மற்ற மருத்துவ நிலைமைகளுடன் ஒன்றுடன் ஒன்று இருக்கலாம்.
Behcet இன் நோய் அறிகுறிகள்
Behcet இன் நோய் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன மற்றும் காலப்போக்கில் வந்து போகலாம் அல்லது குறைவான தீவிரமடையலாம். அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் பாதிக்கப்படும் உடலின் குறிப்பிட்ட பகுதிகளைப் பொறுத்தது. கண்களைத் தவிர பெஹ்செட் நோய் அறிகுறிகளால் பொதுவாகப் பாதிக்கப்படும் பகுதிகள்:

கண்கள்:
நோயாளிக்கு ஏற்படும் பெஹ்செட் நோய் அறிகுறிகளில் கண்ணில் ஏற்படும் அழற்சியும் அடங்கும் (யுவைடிஸ்). இது பொதுவாக இரு கண்களிலும் சிவத்தல், வலி மற்றும் மங்கலான பார்வையை ஏற்படுத்துகிறது.
வாய்:
வாயில் பெஹ்செட் நோயின் அறிகுறிகள் பொதுவாக புற்று புண்களைப் போலவே தோற்றமளிக்கும் வலியுடைய வாய்ப் புண்களிலிருந்து தொடங்குகின்றன. காலப்போக்கில், இந்த புண்கள் வாயில் உயர்ந்த, வட்டமான புண்களாக மாறும், அவை விரைவாக வலிமிகுந்த புண்களாக மாறும். பெஹ்செட் நோயால் ஏற்படும் புண்கள் பொதுவாக ஒன்று முதல் மூன்று வாரங்களில் குணமாகும், இருப்பினும் அவை மீண்டும் மீண்டும் வரலாம்.
மூட்டுகள்:
மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி பெரும்பாலும் பெஹ்செட் நோய்க்குறியுடன் தொடர்புடையது. அறிகுறிகளும் அறிகுறிகளும் ஒன்று முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் மற்றும் அவை தானாகவே போய்விடும்.
செரிமான அமைப்பு:
பெஹ்செட் நோய்க்குறி ஒரு நபரின் செரிமான அமைப்பைப் பாதித்தவுடன், அதன் விளைவாக எழக்கூடிய பல்வேறு அறிகுறிகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் பெஹ்செட் நோய் அறிகுறிகளில் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை அடங்கும்.
தண்டுவடம்:
பெஹ்செட் நோய்க்குறி முதுகுத் தண்டு வடத்தையும் பாதிக்கலாம், இறுதியில் மூளையை பாதிக்கும். இந்த வழக்கில் பொதுவாக ஏற்படும் பெஹ்செட் நோய் அறிகுறிகள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் வீக்கம் அடங்கும். இது தலைவலி, காய்ச்சல், திசைதிருப்பல், மோசமான சமநிலை, அல்லது, சில சந்தர்ப்பங்களில், பக்கவாதம் கூட ஏற்படுகிறது.

பெஹ்செட் நோய்க்குறியைக் கண்டறிவதற்கான சோதனைகள்
கண்களைப் பாதிக்கும் பெஹ்செட் நோய்க்குறியில் நாம் தெளிவாக கவனம் செலுத்தி வருவதால், கண்களைப் பாதிக்கும் இந்த நோயைக் கண்டறிய உதவும் சோதனைகளை இப்போது பார்ப்போம்.
பொது கண் பரிசோதனை:
கண் பரிசோதனையின் போது, ஒரு திறமையான பரிசோதகர் நோயாளியின் கண்களை கவனமாக மதிப்பீடு செய்து அவர்களின் உகந்த ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் உறுதிப்படுத்துகிறார். இந்த முழுமையான மதிப்பீடு கண் ஆரோக்கியம் மற்றும் பார்வையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. சிவப்பு அல்லது மங்கலான பார்வை போன்ற குறிப்பிடத்தக்க அறிகுறிகளை அடையாளம் காண்பது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.
நேர்மறை பேதர்ஜி சோதனை:
தனிநபரின் நோயெதிர்ப்புத் திறனை மதிப்பிடுவதற்கு ஒரு நோய்த்தடுப்பு சோதனை நடத்தப்படுகிறது. செயல்முறை தோலில் துளையிடுவதை உள்ளடக்கியது. அதைத் தொடர்ந்து, சோதனைக்குப் பிறகு சில நாட்களுக்குள் சிவப்புப் புடைப்பு (எரித்மட்டஸ் பாப்புல்) உருவாகிறதா இல்லையா என்பதைக் கண்காணிக்கிறது.
Behcet நோய் சிகிச்சை
தற்போது, பெஹ்செட் நோய்க்கு உறுதியான சிகிச்சை எதுவும் இல்லை. இதன் விளைவாக, சுகாதார வல்லுநர்கள் நிவாரணம் வழங்க அதன் அறிகுறிகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். Behcet இன் நோய் சிகிச்சைக்கு வரும்போது, மருத்துவர்கள் பெரும்பாலும் அழற்சி எதிர்ப்பு கண் சொட்டுகளுக்கு திரும்புகிறார்கள். இந்த சிறப்பு கண் சொட்டுகளில் கார்டிகோஸ்டீராய்டுகள் அல்லது பிற அழற்சி எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. இந்த Behcet நோய் சிகிச்சையானது கண்களில் ஏற்படும் அசௌகரியத்தையும் சிவப்பையும் திறம்பட குறைக்கிறது.
Behcet நோய்க்குறி யாரையும் பாதிக்கலாம், ஆனால் சரியான நேரத்தில் அங்கீகாரம் ஒரு விளையாட்டை மாற்றும். இந்த நிலையின் ஆரம்பகால நோயறிதல், மருத்துவர்களை இலக்கு வைக்கப்பட்ட Behcet நோய் சிகிச்சையை உடனடியாகத் தொடங்க அனுமதிக்கிறது, இது திறம்பட நிர்வகிப்பதில் முக்கியமானது.
உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கோ கண்களில் பெஹ்செட் நோய்க்குறியின் அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக அதைச் சரிசெய்து மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
- உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.
- அசைவ உணவு அதிகமாக எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், யூரிக் ஆசிட் அதிகமாகும்.
சிறுநீரகங்கள் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரகத்தின் செயலிழப்பு கடுமையான நோய் அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் ரத்தத்தில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்:
* தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், யூரிக் ஆசிட் பிரச்சனைகளுக்கு உணவில் உப்பை குறைப்பது அவசியம்.
* அதிக அளவில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவு அதிகமாக எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், யூரிக் ஆசிட் அதிகமாகும். சிறுநீரகம் சரியாக வேலை செய்யாதவர்களுக்கும் அசைவ உணவு கொடுக்க கூடாது.
* சிறுநீரகம் தொடர்பாக வரும் நோயை தடுப்பது கடினம். சிறுநீரக பிரச்சனை இந்த ஒரு காரணத்தால் தான் வருகிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. மரபு காரணமாகவும், வயது காரணமாகவும் சிறுநீரக பிரச்சனை வருகிறது.
* சிறுநீரகம் தொடர்பாக உண்டாகும் நோய்களை தவிர்க்க உடல் பரிசோதனை, 50 வயதிற்கு மேல் ரத்த பரிசோதனை, பிஎஸ்ஏ சோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதால் ஆரம்ப காலத்திலேயே புராஸ்டேட் வீக்கத்தை கண்டுபிடிக்கலாம். புராஸ்டேட் வீக்கத்தால் வரும் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
- கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
- ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது பல வகையான பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை. நோய் தாக்கும் அபாயம் இல்லை. செடியை வீட்டுக்குள்ளும், வெளியிலும் வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன.
கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தோல் பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கற்றாழை காற்றை சுத்திகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இதனை வீட்டில் வளர்த்தால் மாசுக்களை உறிஞ்சி சுத்தமான சூழலை உருவாக்குகிறது. மேலும் காற்றின் தரம் மேம்படுவதால், சுவாச நோய்களின் ஆபத்து குறைகிறது.
கற்றாழை ஜெல் பல நோய்களுக்கு மருந்தாகவும், சிகிச்சையாகவும் பயன்படுகிறது. கற்றாழை இலைகளை வெட்டி, தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை உண்ணலாம். இதை ஜூஸ் செய்து குடிக்கலாம். இந்த ஜெல்லை சருமத்தில் தடவலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல் முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு வகையான சரும பிரச்சனைகளை நீக்குகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை குறையும். இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
கற்றாழை செடி மன அழுத்தத்தை போக்குகிறது. மன அழுத்தத்திலிருந்து விரைவாக மீள உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
கற்றாழை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன. ஆன்மிக ரீதியாகவும் மனதை தூய்மைப்படுத்தும் சக்தி இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் அவை பாசிட்டிவ் ஆற்றலுடன் அமைதியை ஊக்குவிக்கின்றன. அதனால் எதிர்மறையான விஷயங்களில் மனம் செல்லாது.






