என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.
    ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

    திங்கள்-அருகம்புல்

    ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

    அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

    செவ்வாய்-சீரகம்

    இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

    இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும். ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

    புதன்-செம்பருத்தி

    இரண்டு செம்பருத்தி பூ (மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

    இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். ரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

    வியாழன்-கொத்துமல்லி

    ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

    அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

    வெள்ளி-கேரட்

    ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

    இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக கேரட் ஜூஸ் நல்ல மருந்து.

    சனி-கரும்பு சாறு

    கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

    உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

    ஞாயிறு-இளநீர்

    ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.

    உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

    குறிப்பு:- நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

    ரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை

    அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் சேர்த்து வெள்ளை நிறத்தில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ,
    பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
    (பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, கருப்பு ஏலக்காய் - 1, சீரகம் - 1½ டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, பிரியாணி இலை - 2) (ஒரு துணியில் கட்டி வைத்துக்கொள்ளவும்)
    மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்,
    சோம்பு - 1/4 டீஸ்பூன்,
    மிளகு - 1/4 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 5,
    பெரிய வெங்காயம் - 2,
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
    தயிர் - 1/2 கப்,
    எலுமிச்சம்பழம் - 1,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய், நெய் - 1/2 கப்.



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும்.

    பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், சோம்பு, மிளகு போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் வேக வைத்த சிக்கன் மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும்.

    பின் சிக்கனை வெங்காயத்துடன் சேர்த்து அதனுடன் அரிசி, தனியா தூள், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து தம் போட வேண்டும்.

    இப்பொழுது சுவையான கமகமக்கும் வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.

    இதனுடன் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் கிரேவி வைத்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    எளிதாக கிடைக்கக்கூடிய கிளிசரின் கொண்டே உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
    உதடுகளை பொலிவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க இரசாயணம் நிறைந்த கிரீம்களை உதட்டிற்கு பயன்படுத்த வேண்டாம். எளிதாக கிடைக்கக்கூடிய கிளிசரின் கொண்டே உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

    வறண்ட உதட்டிற்கு

    உங்கள் உதடு வறண்டு போய் இருந்தால், ஒரு காட்டனில் கிளிசரின் தொட்டு தூங்க போகும் முன் உதட்டில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவி விடலாம். இதனால் உதட்டில் இருக்கும் கருமை நிறம் மாறிவிடும். உதடு ஈரப்பதத்துடன் இருக்கும்.
     
    மென்மையான உதட்டிற்கு

    பெரும்பான்மையானவர்களுக்கு சுற்றுச்சூழல் காரணமாகவும் புகைப்பழக்கம் காரணமாகவும் உதட்டின் நிறம் மாறிவிடும். தினமும் உதட்டிற்கு கிளிசரின் தடவி வருவது நல்லது. இது உதட்டை மென்மையாக்கி பிங்க் நிறத்தை கொடுக்கும்.

    ஈரப்பதத்தை தக்கவைக்க

    உதடு வறண்டு போயிருந்தால் அரிப்பு, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க லிப் பாம் பயன்படுத்தலாம் அல்லது கிளிசரின் பயன்படுத்தலாம். இது உடலை ஹைட்ரேட் செய்யும்.

    உதடுகளில் வெடிப்பை தடுக்க

    உதடுகள் வறண்டு போனால் வெடிப்பு ஏற்பட்டு, இரத்த கசிவு ஏற்படும். உதடுகளின் மீது எப்போதுமே தனி அக்கறை செலுத்த வேண்டும். கிளிசரினை உதடுகளில் தடவி வர உதடுகளில் பிளவு ஏற்படாது.

    இறந்த செல்களை அகற்ற

    உதடுகளுக்கு தொடர்ச்சியாக கிளிசரின் பயன்படுத்தி வர உதடுகள் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு பொலிவாக இருக்கும்.
    பெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்ளும் மாத்திரைகளே ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
    பெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்ளும் மாத்திரைகளே ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இரும்புச்சத்து குறைபாட்டுக்கு கொடுக்கப்படும் மாத்திரை ஆபத்தை தருகிறது என்கிறது ஆய்வு. இந்தியாவில் 33 சதவீத கர்ப்பிணிகள் அனிமீயா என்னும் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

    பெண்களுக்கு ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகும். இதனால் அடிக்கடி சோர்வுறுதல்,
    மயக்கம், இடுப்பு மற்றும் கை, கால் வலி ஏற்படும். உடலில் ஏற்படும் சிறு வலியைக் கூட தாங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். இதைத் தடுப்பதற்காக
    இரும்புச்சத்து மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 9 மில்லி கிராம் இரும்புச்சத்து சாதாரண பெண்களுக்குத் தேவைப்படும்.

    இதுவே கர்ப்பிணியாக இருந்தால் நாளொன்றுக்கு 27 மில்லிகிராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இதனால் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது அது உடலில் நச்சுத் தன்மையாக மாறி உடலில் உள்ள வாயுவை அலர்ஜியுறச் செய்து பல தீங்குகளை உண்டாக்குவதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. இதனால் மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகி கருவில் உள்ள குழந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து மாத்திரையை தவிர்க்க வேண்டும் என்று
    தெரிவித்துள்ளனர்.

    வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.
    குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்கு அடித்தளம் அமைத்துத்தருவது பெற்றோர்களின் கடமை என்பதில் நிச்சயம் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது, தண்டனைகள் தருவது, அதனால் மனதளவில் தானும் காயமடைந்து, பிள்ளைகளையும் காயப்படுத்தி, பின் வருத்தப்படுவது என பழைய பாரம்பரியமான ஒழுக்கமுறையே கடைபிடிக்கிறார்கள். இவர்களெல்லாம் எதிர்மறை ஒழுக்கமுறைக்கு உதாரணம் என்று சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

    Positive Discipline கொள்கைகள் நம் நாட்டு குழந்தைகளிடம் எப்படி நடைமுறைப்படுத்துவது?


    பாசிட்டிவ் டிசிப்ளின் என்பது நல்ல விஷயம்தான். நம் நாட்டிற்கு ஒத்துவருமா என்று பார்க்க வேண்டும். அவர்களது கலாச்சாரத்தில் குறிப்பிட்ட வயதுக்குமேல் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்து வாழ்வதில்லை. குழந்தையிலிருந்தே தற்சார்புடன் வாழக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு சில குழந்தைகளிடம் இந்த அணுகுமுறை செல்லுபடியாகும். எல்லா குழந்தைகளிடமும் செல்லாது. இன்னிக்கு பார்த்தால், நிறைய குழந்தைகள் சுயநலமாக இருக்கிறார்கள்.

    நாம் சுயநலமாக இருக்கிறோம் என்பதை உணர்வதும் இல்லை. ‘என்னைத் தாண்டிதான் மற்றவை எல்லாம்’ என்று நினைக்கிறார்கள். அதற்கு தனிக்குடித்தன முறையா அல்லது சமூக மாற்றமா என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளிடம் எப்போதுமே கனிவாக நடந்து கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. கண்டிப்பு ஒன்றுதான் மருந்தாக இருக்கிறது. இருந்தாலும் அதன் அடிப்படையில் சில விஷயங்களை கடைபிடிக்கலாம்…

    நீண்ட நாள் கடைபிடிக்க வேண்டிய ஒரு பழக்கத்தை குழந்தையிடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம் என்றால், அதை நாம் பக்கத்திலிருந்து மெதுவாக புரியும்படி சொல்லித் தரவேண்டும். அந்த ஒழுக்கத்தை கடைபிடிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் நன்மை, அதனால் மற்றவர்களுக்கு என்ன நன்மை, அதை செய்யாமலிருந்தால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதைச் சரியாக செய்துவிட்டால், சின்னதாக பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.

    ஒரு பொருளை கேட்கும்போது எடுத்தவுடன் ‘நோ’ சொன்னால் கண்டிப்பாக அப்செட் ஆகிவிடுவார்கள். ஒரு 10 வயது பையன் லேப்டாப் கேட்கிறான் என்றால், அது அவனுக்குத் தேவையா? தேவையில்லையா என உணர வைக்க முயற்சி செய்யலாம். எடுத்தவுடன் வாங்கிக் கொடுத்துவிட்டாலும், அதன் மதிப்பை அவன் உணரமாட்டான்.

    பெற்றோரைத்தான் குழந்தைகள் உதாரணமாகப் பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயம் உங்கள் குழந்தை செய்யக்கூடாது என்று நினைத்தால், அதை நீங்கள் செய்யக்கூடாது. நல்ல நடத்தைகளை வளர்க்க, குழந்தை செய்யும் நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்த தொடங்குங்கள்.

    வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும். 
    கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கவுனி அரிசியில் சத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி மாவு - அரை கப்
    பொட்டுக்கடலை மாவு - அரை கப்
    பாதாம் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
    நெய் - கால் கப்
    துருவிய வெல்லம் - முக்கால் கப்
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு



    செய்முறை:

    வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், முந்திரியைச் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் கவுனி அரிசி மாவைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.

    மாவு ஆறியதும் மீதமுள்ளவற்றில் நெய், முந்திரி தவிர்த்து பொட்டுக்கடலை மாவு, பாதாம் பவுடர், துருவிய வெல்லம், ஏலக்காய்த்தூள், போட்டு இதில் உருக்கிய நெய்யை ஊற்றி கைப்பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும்.

    லட்டின் மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

    சத்தான கவுனி அரிசி லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தோள்பட்டைத் தசையை வலுவாக்கும் இந்த பயிற்சிக்கு ஒன் ஆர்ம் டம்பெல் ரோ (One arm dumbbell row) என்று பெயர். இப்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தோள்பட்டைத் தசையை வலுவாக்கும் இந்த பயிற்சிக்கு ஒன் ஆர்ம் டம்பெல் ரோ (One arm dumbbell row) என்று பெயர். இப்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    சற்று உயரமான சமதளப் படுக்கையின் இரண்டு பக்கங்களிலும் டம்பெல்களை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையைச் சமதளப் படுக்கையில் நேராக வைக்க வேண்டும். இடது காலை மடித்த நிலையில் படுக்கையில் வைக்க வேண்டும்.

    இப்போது வலது கையால் டம்பெல்லைத் தூக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி வலது கைமுட்டியை மடித்து டம்பெல்லை மேலே உயர்த்த வேண்டும்.

    சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று இடது பக்கத்தில் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் நடுமுதுகுத் தசை, பைசெப்ஸ், தோள்பட்டைத் தசைகள் வலுப்பெறும்.

    முதுகு வலி உள்ளவர்கள், முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த பயிற்சியை செய்யக்கூடாது.
    வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ள சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.
    வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ள சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.

    1. குடியிருப்புகளில் செய்யப்படும் மின் வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்வதே நல்லது.

    2. பேஸ் கம்பியில் சுவிட்ச் கண்ட்ரோல் வைக்க வேண்டும். மேலும், ஐ.எஸ்.ஐ முத்திரை மற்றும் நட்சத்திர குறியிட்ட மின் சாதனங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

    3. மின் பிளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், எடுப்பதற்கு முன்பும் அதற்குரிய சுவிட்சை ‘ஆப்’ செய்யவேண்டும்.

    4. பிரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றிற்கு ‘எர்த்’ இணைப்புடன் கூடிய மூன்று பின் கொண்ட பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    5. குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை அமைக்கக் கூடாது.

    6. உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதான வயர்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை கால தாமதமின்றி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

    7. பிளக் பாயிண்ட்டுகளில் குளவிக்கூடு கட்டாமல் இருக்க துளை அடைப்பான் கொண்டவற்றை பொருத்த வேண்டும்.



    8. மின் மோட்டர், அயர்ன் பாக்ஸ், வாளியில் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை மின் இணைப்பை துண்டித்த பின்னரே கையால் தொட வேண்டும்.

    9. சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். குழந்தைகளை ‘சுவிட்ச்’ போடச்சொல்லி விளையாட்டு காட்டுவது கூடாது.

    10. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் வயரிங் அமைப்புகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    11. சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிக்கக் கூடாது.

    12. மின் இணைப்பிற்கு ‘எக்ஸ்டென்ஷன்’ கார்டுகள் உபயோகிக்கும்போது, அவற்றில் பழுதுகள் இருக்கக் கூடாது.

    13. வீடுகளில் ஈ.எல்.சி.பி. (E.L.C.B.) அமைப்பை மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.

    14. வீடுகளில் கச்சிதமாக ‘எர்த் பைப்’ போடுவதுடன், அதை குழந்தைகள், விட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகள் தொடாத வகையில் பராமரிப்பது நல்லது.

    15. இடி, மின்னல் காலங்களில் டி.வி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

    16. புதிய வீடு கட்டுபவர்கள், சுவருக்குத் தண்ணீர் விடும்போது, பக்கத்தில் உள்ள மின் கம்பிகளில் படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
    குறைவான செலவில் ஏழைகள் நலம் பேணும் மருத்துவமாக திகழும் ஓமியோபதி மருத்துவத்தால் ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, குடற்புண், மூட்டுவலி, மார்பக கட்டிகளை குணமாக்கலாம்.
    நாளை(ஏப்ரல் 10-ந்தேதி) உலக ஓமியோபதி தினம்.

    ஓமியோபதி மருத்துவத்தை கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹனிமன் பிறந்த தினத்தை உலக ஓமியோபதி மருத்துவ தினமாக மருத்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஓமியோபதி மருத்துவத்தில் குணப்படுத்தபட்டு வரும் நோய்கள், ஆராய்ச்சி கட்டுரைகளை கருத்தரங்குகளில் சமர்பிக்கின்றனர். நமது தமிழகம் சார்பில் வெண்புள்ளி, சேபிரியாஸில், முகவாதம் குறித்த மருத்துவ ஆராய்ச்சி கருத்துக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

    குறைவான செலவில் ஏழைகள் நலம் பேணும் மருத்துவமாக திகழும் ஓமியோபதி மருத்துவத்தால் ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, குடற்புண், மூட்டுவலி, மார்பக கட்டிகளை குணமாக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோயும் மிக விரைவாக குணமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது. அதே சமயத்தில் பக்கவிளைவுகள் பற்றிய கவலையும் மக்களிடையே இருக்கிறது. அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாக வேண்டும் என்ற ஆதங்கமும் உள்ளது.

    இந்த சிந்தனைதான் ஓமியோபதி மருத்துவத்தை கண்டுபிடிக்க டாக்டர் சாமுவேல் ஹனிமனை தூண்டியது. டாக்டர் சாமுவேல் ஹனிமன் ஜெர்மனி நாட்டு ஆங்கில மருத்துவர், முதுகலை பட்டம் பெற்றவர். அந்தக்காலத்தில் நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. நச்சுதன்மை அதிகம் இருப்பதாக கருதினார். அப்போது மலேரியா காய்ச்சல் பல இடங்களில் அதிகமாக இருந்தது.

    மலேரியாவை குணப்படுத்த சின்கோனா மரத்திலிருந்து மருந்து தயாரித்து உபயோகப்படுத்தி வந்தனர். சின்கோனா பட்டைடைய உட்கொண்டால் மலேரியா காய்ச்சல் போல குளிர் காய்ச்சல் வரும் என்று கருத்தை புத்தகங்கள் மூலம் அறிந்தார். இக்கருத்தை அவரால் ஒத்து கொள்ள முடியவில்லை. இதனை எப்படி சோதிப்பது என்று தவித்தார். பிறகு தனக்கு தானே சின்கோனா பட்டையின் சாறை குடித்தார்! குளிர்காய்ச்சல் வந்தது. மருந்தை நிறுத்தியவுடன் நின்றுவிட்டது!

    ஒரு நோயை எதிர்மறை மருத்துவ குறிகள் மட்டுமே குணப்படுத்தும் என்று நிலவி வந்த கருத்துக்கு முற்றுபுள்ளி வைத்தார்.டாக்டர் சாமுவேல் ஹனிமன். ஒத்த மருத்துவ குறிகளும் குணப்படுத்தும் என்ற உண்மையை உலகத்திற்கு எடுத்துரைத்தார். அதுவே ஓமியோபதி மருத்துவமாக மலர்ந்தது.அக்காலங்களில் தட்டமை, காலரா, தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டார்கள். ஓமியோபதி மருத்துவ சிகிச்சையால் பலனடைந்தனர். இதனால் ஓமியோபதி மருத்துவம் புகழடைந்தது.

    ஒத்த மருத்துவ குறிகளே நோய்களை நிரந்தரமாக குணமாக்கும் என்ற கருத்தை வெளியிட்டார். பக்கவிளைவுகள் இல்லாத மூல பொருட்களை குறைத்து வீரியப்படுத்தி மருந்துகள் தயாரித்தார். ஓமியோபதி புகழ் இங்கிலாந்து, ஐரோப்பியா நாடுகள், அமெரிக்கா, ஜப்பான் என்று பரவி புகழின் உச்சியை அடைந்தது. பல ஆங்கில மருத்துவர்கள் டாக்டர் சாமுவேல் ஹனிமனின் சீடர்கள் ஆவர்.

    அமெரிக்காவில் கை கால்களில் ஏற்படும் சரும நோய்களுக்கு ‘வார்ட்ஸ்’ எனப்படும் மருந்து பலருக்கு குணம் கொடுத்தது. மக்கள் ஓமியோபதி மருத்துவர்களை “தூ டாக்டர்” என்று அழைத்து வந்தனர். இந்த மருத்துவ பலனே ஓமியோபதி மருத்துவம் சரும நோய்களுக்கு சிறந்தது என்று பெருமை தேடி தந்தது. அதோடு மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சையில்லாமல் கட்டிகளை குணப்படுத்தலாம் என்ற மருத்துவ கருத்தையும் மருத்துவர்களுக்கே புரிய வைத்தது.

    இதனை மையமான கருத்துகளுள் உடலில் ஏற்படும் பல்வேறு கட்டிகளுக்கு தீர்வு காண அடிகோலியது. தற்போது தைராய்டு கட்டிகள், கருமுட்டைப்பை கட்டிகள், கருப்பை கட்டிகள், மார்பக கட்டிகள் என குணமாவதை ஆதார பூர்வமாக மருத்துவர்கள் வெளியிட விதை விதைத்து எனலாம். இந்திய அரசும், மாநில அரசுகளும் சட்டரீதியான அந்தஸ்து, படிப்பு என அங்கீகாரம் அளித்தன.

    ஓமியோபதி மருத்துவத்தின் தனி சிறப்பே ஒரு நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதுதான். பக்கவிளைவும் இருக்க ஒரு நோயால் பாதிக்கப்பட்ட மருந்து குறிகள் ஒத்த மருந்து குறிகள் கொண்ட மருந்துகளை அளித்து குணப்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் எதிர்மறை மருத்துவ குறிகள் கொண்ட மருந்துகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    தற்காலிக நிவாரணம் விரைவாக உடனடியாக கிடைக்கும். மூலப்பொருள்களின் அளவை கட்டியும் குறித்தும் “டோஸ்களாக ஏண்டிபயாடிக்ஸ் மற்றும் வேதியியல் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. நோய் கிருமிகளை அழிக்கின்றன. உடல் இயக்கங்களையும் வலி போன்ற நிவாரணங்களும் உடனுக்குடன் கிடைக்கிறது. நோய்களுக்கு தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கிறது. தொடர்ந்து எடுக்கும் போது நஞ்சு தன்மையும் உடலில் விளைகிறது. சுயமான நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது.

    ஒரு நோய் நிரந்தரமாக குணம் பெற ஒத்த நோய் குறிகள் கொண்ட மருந்துகளை வீரியப்படுத்தி அளிக்க வேண்டும். இம்முறை தான் ஓமியோபதி மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘முள்ளை முள்ளால் எடுப்பது, வைரத்தை வைரத்தால் எடுப்பது’ என்ற தத்துவ பொன்மொழிகள் ஹோமியோபதி மருந்தின் செயலாக்கத்திற்கு மிகவும் பொருந்தும்.

    அதுவும் மூலப்பொருள்களாக கொடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படுத்தும், வீரியப்படுத்தும் முறையில் மருந்துகளின் மூலப்பொருளை படிப்படியாக குறைத்து அளிக்க வேண்டும். மருந்தின் சக்தி நுண்ணிய அளவில் பலம் கொண்டதாக இருக்கும். இவை நரம்புகளில் ஊடுருவி நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கும். ஒவ்வொரு மருத்துவத்திற்கும் ஒரு தனிசிறப்பு உண்டு. நோய்களை பகுத்தறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். அப்போதுதான் பல நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்தை பெற முடியும்.

    டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம், தலைவர், தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில்.
    மில்க் அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் மில்க் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்,
    சர்க்கரை - 200 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்,
    பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
    குங்குமப்பூ - 1 சிட்டிகை,
    மைதா மாவு - 30 கிராம்,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்.


     
    செய்முறை :

    பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்கு கொதித்த வைத்து இறக்கவும்.

    அதிலிருந்து 750 மி.லி. பாலைத் தனியே எடுத்து எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து பாலைத் திரிய வைத்து, ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் திரிந்த பாலை ஊற்றி நன்றாக வடிக்கவும். தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்பு, லேசாகத் தண்ணீர் சேர்த்து பன்னீரை வீணாக்காமல் துணியிலே எலுமிச்சை வாடை போகும் வரை அலசவும். பின்பு இறுக்கப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் மீதியுள்ள பால், மைதா சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.

    இத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும் அதில் நெய், பன்னீரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

    கலவைத் திரண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தாவை சேர்த்து கலந்து இறக்கவும்.

    அகலமானத் தட்டில் நெய்யைத் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி விட்டு, சூடு ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான மில்க் அல்வா ரெடி.

    குறிப்பு: 1 டேபிள்ஸ்பூன் சூடானப் பாலில் குங்குமப்பூவைச் சேர்த்து கரைத்து பயன்படுத்தலாம்.

     இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
    உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது. காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் உள்ளன.

    தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பாதிப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது. அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்கும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது.

    அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். இளமையை பாதுகாக்கும். கோடை காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருக வேண்டும். சூரிய கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும்.

    ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். மூட்டு வலிக்கும் நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.
    பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.
    சருமம் பிரகாசமாக இருக்க நாம் தொடர்ச்சியாக சரும பராமரிப்பில் ஈடுப்படுவது அவசியம். குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் சருமத்தை பளிச்சென்று வைத்து கொள்ள பெரிதளவு மெனக்கெட வேண்டும். ஆயில் ஸ்கின் உள்ளவர்களை தான் பருக்கள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் மற்றும் கரும்புள்ளிகள் அதிகம் தாக்கும். இந்த பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். மேலும் சருமத்தை சொரசொரப்பாக மாற்றிவிடும்.  மூக்கு, தாடை, கன்னம் போன்ற இடங்களில் தான் இந்த பிளாக் ஹெட்ஸ் அதிகம் உருவாகும். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 1
    ஓட்ஸ் - 2 மேஜைக்கரண்டி
    தேன் - 1 மேஜைக்கரண்டி

    செய்முறை

    வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்து கொள்ளவும். அதேபோல ஓட்ஸை பொடித்து கொள்ளவும். ஒரு பௌலில் பொடித்து வைத்த ஓட்ஸ் சேர்த்து அத்துடன் தேன் மற்றும் மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். தொடர்ந்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை இந்த கலவையை கொண்டு ஸ்க்ரப் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சுரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும். வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள பிளாக் ஹெட்ஸ் மறைந்து முகம் பிரகாசிக்கும்.

    ஓட்ஸ், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சுத்தம் செய்யும். மேலும் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றிவிடும். தேனில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். வாழைப்பழமும் சருமத்தை மாய்சுரைஸ் செய்து முகத்திலுள்ள அழுக்குகளை அகற்றி மென்மையாக வைத்திருக்கும்.  ஆயிலி ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த ஸ்க்ரப் மிகவும் நல்லது. 
    ×