என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணும், கர்ப்பமாகி இருக்கும் பெண்ணும், தாயான பெண்ணும் அறிந்து இருப்பது அவசியம்.
    கருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணும், கர்ப்பமாகி இருக்கும் பெண்ணும், தாயான பெண்ணும் அறிந்து இருப்பது அவசியம்.

    முதல் ஏழு வாரத்திற்கு கரு அமைதியாக இருக்கும். ஆனால், இருதயத் துடிப்பு மட்டும் நான்காவது வாரத்திலிருந்து ஆரம்பமாகிவிடும். கருவின் முதல் வாரத்தில் செல்களின் பிரிவுகள் வேகமாக நடந்து செல்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும். எட்டு வார அளவில்தான் அது ஒரு மனிதப் பிண்டம் போலக் காட்சியளிக்கும்.

    எட்டு வார வயதில் கரு தோராயமாக ஒரு கிராம் எடையும். 2.5 செ.மீ. நீளமும் இருக்கும். முதல்கட்ட கர்ப்ப முடிவில் கருவின் வெளிப்புற தோற்றத்தை வைத்து அதன் பாலினத்தைக் கண்டுபிடிக்கமுடியும். இன்றும் விளக்கமாகச் சொல்லப்போனால் கர்ப்பத்தின் பன்னிரண்டாவது வார இறுதியில் கர்ப்பத்தில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என்று சொல்ல முடியும்.

    இரண்டாம் கட்டத்து கர்ப்பத்தில், அதாவது இருபத்தியெட்டு வாரங்கள் முடிவதற்குள் கரு வேகமாய் வளரும். இரண்டாம் கட்டத்து முடிவில் கரு வளர்ந்து ஆயிரம் கிராம் எடை உடையதாகவும், முப்பத்தைந்து செ.மீ. நீளமுடையதாயும் இருக்கும்.

    மூன்றாம் கட்ட கர்ப்பத்தில், கரு இன்னும் அதிகமாய வளர்ந்து கருப்பைக்குள்ளேயே நகர ஆரம்பிக்கும். இரத்த ஓட்ட மண்டலம் எட்டிலிருந்து பன்னிரண்டு வாரங்களுக்குள்ளாக இறுதிக் கட்ட வளர்ச்சியை அடைந்துவிடும்.

    பதினெட்டாவது வாரத்தில் கரு சுவாச அசைவுகளை மேற்கொள்ளும். இருந்தாலும் இருபத்தியேழு அல்லது இருபத்தியெட்டு வாரத்தில்தான் நுரையீரல் குழந்தை உயிருடன் இருக்குமளவு வளர்ச்சியடையும்.

    பதினான்காவது வாரத்தில் கரு விழுங்குகின்ற செய்கையைச் செய்யும். வாயிருக்கும் பகுதியினைத் தூண்டினால் பதினேழு வார அளவில் மேலுதடை நீட்டும். இருபதாவது வாரத்தில் தூண்டினால் இரண்டு உதடுகளையும் நீட்டும்.

    இருபத்தி இரண்டாம் வாரத்தில் கரு வாயிருக்கும் பகுதி தூண்டப்பட்டால் உதடுகளை மூடிக்கொள்ளும். இருபத்தியெட்டு, இருபத்தி ஒன்பதாவது வாரங்களில் கரு நன்கு பால்குடிக்க உறிஞ்சுமாறு செய்யும். ‘காட்டுப் பீ’ எனும் கருவின் குடலில் இருக்கும் பொருள், பதினாறாவது வாரத்தில் இருக்கும்.

    எட்டுவார கருவாய் இருக்கும்போதே கருவிற்கு நரம்பின் செயல்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். ஒன்பதாவது வாரத்தில் உள்ளங்ககைளும், பாதங்களும் உணர்வுடன் இருக்கும். ஒரு பொருளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் செய்கை பதினேழாம் வாரத்தில் ஆரம்பிக்கும். அது இருபத்தி ஏழாம் வாரத்தில் நன்கு இருக்கும்.



    கருவுக்குக் கரு அதன் செய்கைகளின் அளவு வேறுபடும். அது தாயின் மனநிலையைப் பொறுத்தும் மாறுபடும். கரு, சில உணர்ச்சித் தூண்டுதலுக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும். உதாரணத்திற்கு, ஓர் ஒலியை தாயின் வயிற்றுப் பகுதியில் செலுத்தினால் கருவின் நாடித்துடிப்பில் மாறுதல்கள் இருக்கும். ஆனால், அதே ஒலியை திரும்பத் திரும்ப செலுத்தினால் அந்த நாடித்துடிப்பின் மாறுதல் அவ்வளவாக இருக்காது.

    பதினெட்டு வாரத்தில் பிரசவமாகிய கருவுக்கு சுவாச அசைவுகள் இருக்கும். இருபத்தி இரண்டு வாரத்தில் பிரசவமாகிய கருவுக்கு சுவாச அசைவுகளோடு மெல்லிய குரலும் இருக்கும்.படிப்படியாக ஒவ்வொரு நான்கு வாரங்களில் கருவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

    நான்கு வாரத்தில் மூளைத் தண்டு மற்றும் மூளை வளர ஆரம்பிக்கும். கை கால்களும் முகமும் தோன்றும். இருதயம் துடிக்கத் தோன்றும். எட்டு வாரத்தில் எல்லா பெரிய உறுப்புகளும் வளர ஆரம்பிக்கம் ‘நஞ்சுக்கொடி’ எனச் சொல்லப்படும் ‘பிளசண்டா’ தெரிய ஆரம்பிக்கும். காதுகள், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் வளரும்.

    பன்னிரண்டு வாரத்தில் கை, கால் விரல்களில் மிருதுவான நகங்கள் இருக்கும். இக்காலகட்டத்திலேயே குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிந்துகொள்ள முடியும். குழந்தையின் இருதயத் துடிப்பை முதன்முதலாகக் கேட்கலாம். பதினாறு வாரத்தில் கருப்பை சிசுவிற்கு நுகரும் உணர்வு தோன்றும். தாடை, பற்கள், முகத் தசைகள் மற்றும் வெளிக்காதுகள் வளரும். குழந்தை கருப்பைக்குள்ளேயே நகரும், உதைக்கும், விழுங்கும். மேலும் உங்கள் குரலைக்கூடக் கேட்கலாம்.

    இருபது வாரத்தில் ஒவ்வொரு பக்கங்களிலும் திரும்பும். மேலும், சில நேரங்களில் தலையைக் குதிகாலுக்கு மேல் வைத்திருக்கும். கண்ணின் புருவமும், கண்ணிமை முடி வளரும். தோல் தொட்டால் உணர்ச்சி உடையதாக இருக்கும். இருபத்து நான்கு வாரத்தில் கருவின் தோல் சிவந்தும், சுருக்கமுடையதாகவும் இருக்கும். மேலும், மென்மையான மிருதுவான மயிர் முளைத்திருக்கும். கை மற்றும் கால் விரல்களில் ரேகைகளைக் காணலாம்.

    இருபத்தெட்டு வாரத்தில் குழந்தை கண்களைத் திறந்து மூடும். பெருவிரலை சூப்பும், மேலும் ஆழும். குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே உதைக்கும். தனது உடலை நீட்டி உடற்பயிற்சி செய்யும். ஒலி மற்றும் ஒளிக்கு தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும். முப்பத்திரண்டு வாரத்தில் கரு வளரும். எடை கூடும். உயரமாய் வளரும். குழந்தையின் முழங்கை அல்லது குதிகாலின் வடிவத்தை, தாயின் வயற்றின்மீது கை வைத்துப் பார்த்தே நீங்கள் உணர முடியும்.

    முப்பத்தாறிலிருந்து நாற்பது வாரத்தில் குழந்தை நோயினை எதிர்க்கக்கூடிய நோய் எதிர்ப்புப் பொருட்களைத் தாயிடமிருந்து பெறும். கர்ப்பப் பையிலேயே குழந்தை நகர்ந்து இறுதி நிலையினை வந்தடையும்.
    ஆம்ஸ் வொர்க்கவுட் நிறைய செய்து இருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை பைசெப் டம்பெல் கர்ல் தான். இந்த பயிற்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ஆம்ஸ் வொர்க்கவுட் நிறைய செய்து இருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை பைசெப் டம்பெல் கர்ல் தான். அதை நன்றாக செய்து தொள தொள சதையை கொஞ்சம் இறுக்கி வைத்திருப்பீர்கள். இப்போது பைசப் வொர்க்கவுட்டை மாற்றப்போகின்றோம். இவ்வளவு நாளாக செய்தது ஆம்ஸ் டைட்டுக்கு இப்போ தான் கிரோ-அப் செய்யப்போகின்றோம்.

    பார்பெல்லில் உங்களுக்கு தேவையான வெயிட்டை இருபக்கமும் எடுத்துக்கொள்க. இப்போது பார்பெல்லை இருகைகளையும் இடைவெளியில்லாமல் உள்ளங்கைகள் உங்களைப்பார்த்தவாறு பிடித்து தூக்குங்கள் அப்படியே கீழே உட்கார்ந்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் உங்கள் கைகள் சென்றுவரும். உட்கார்ந்தவுடன் கைகளை கொண்டு பார்பெல்லை உயர்த்தி பைசெப்பை அப்படியே அழுத்தவும் நரம்பு புடைத்துக்கொண்டு வந்து பார்க்கும். 5 செகன்ட் வெயிட் பண்ணவும். பின் விடவும் மெதுவாக.

    இதே போல் மூன்று செட்கள் தொடர்ந்து செய்துவரவும் வாரத்திற்கு இரண்டு நாட்கள். முந்தைய ஆம்ஸ் பயிற்சிகளை செய்தபின் கடைசியாக இதை செய்யுங்கள். தொடர்ந்து 12 வாரங்கள் செய்து வந்தால் பர்மனன்டாக பைசெப் கர்ல் உருவாகிவிடும். போட்டிக்கு போகுமுன்பு அதிக ஆம்ஸ் உள்ளவாறு காட்டுவதற்காக இந்த வொர்க்கவுட்.. அதன் பெயர் Barbell Cruch Bicep Curl. இந்த வொர்க்கவுட்டில் போர் ஆம்ஸ்க்கும் பலன் கிடைத்துவிடும்.

    குறிப்பு : நின்று கொண்டு செய்யாதீர்கள் பலன் கிடைக்காது அது வேறு வொர்க்கவுட் (Standing Barbell curl), உட்கார்ந்து கொண்டு தான் செய்யவேண்டும் கைகளை நெருக்கமாகத்தான் வைக்கவேண்டும் அகட்டி வைக்கக்கூடாது. பார்பெல்லில் தான் செய்யவேண்டும். தினமும் செய்யக்கூடாது தசை இறுகி வளராமல் செய்து விடும். கண்டிப்பாக 3 செட்கள் செய்யவேண்டும். ஒவ்வொரு செட்டிலும் முடியும் எடைகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
    உடலில் உள்ள எலும்பு சத்துக்களை ஒன்றிணைக்க கூடிய வைட்டமின் ‘டி’ இந்த கோடைக்காலத்தில் தான் சூரிய ஒளியின் மூலம் அதிகமாக கிடைக்கிறது.
    மனித ஆரோக்கியத்துக்கு கோடைக்காலம் உகந்தது. ஏனென்றால் உடலில் உள்ள எலும்பு சத்துக்களை ஒன்றிணைக்க கூடிய வைட்டமின் ‘டி’ இந்த கோடைக்காலத்தில் தான் சூரிய ஒளியின் மூலம் அதிகமாக கிடைக்கிறது. இதனால் எலும்பு தேய்மானம், எலும்பு அரிப்பு, மூட்டுவாதம், முடக்குவாதம், குதிக்கால் வலி, மூட்டு வலி, கழுத்துவலி இந்த மாதிரியான பாதிப்புகள் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டியால் தடுக்கப்படுகிறது.

    இந்த கோடைக்காலத்தில் தான் எலும்புகள் முழுமையாக வளர்ச்சியடைகிறது. மேலும் பலம் பெறுகிறது. ஆகவே வெயிலை கண்டு பயந்து, குளிர்சாதன அறைக்குள்ளே தங்குவதோ அல்லது வீட்டினுள்ளே முடங்கிப்போய் கிடப்பதோ தவறு. இயற்கையாக கோடைக்காலத்தை பக்குவமாக அனுபவித்து காலை நேரத்தில் சுமார் 10 மணி வரையிலும், மாலை வேளையில் சுமார் 3 மணிக்கு மேலும் நன்றாக வியர்வை சிந்த, விளையாடி அல்லது உடற்பயிற்சி செய்வதின் மூலம் உடல் பலமடைந்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

    வெயிலுக்காக ஏ.சி அறையில் அதிக நேரம் தங்குவது, செயற்கை குளிர்பானங்கள் அருந்துவது, தொடர்ந்து ஐஸ் தண்ணீர் அருந்துவது, ரசாயன சுவையூட்டி மற்றும் ரசாயன கலர்கள் கலந்து உணவுகள் உட்கொள்வது எலும்பின் முனைப்பகுதியில் உள்ள குறுத்தெலும்புகளில் நீர் கட்டுகள் ஏற்பட்டு எலும்பை சிதைக்கும். இதற்கு மாறாக பதநீர், இளநீர், பழச்சாறு, புளிக்காத மோர், சிறுதானிய கூழ்வகைகள், வெள்ளரிக்காய், தர்பூசணிக்காய் போன்ற நீர் சத்துக்கள் நிறைந்த இயற்கையான காய்கறிகள், உணவு வகைகளை உட்கொள்வது மிகவும் நல்லது.

    மேலும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல், தினமும் தொப்புள், காலபெருவிரல்களில் விளக்கெண்ணை வைத்துக்கொள்வதும் மிகவும் நல்லது மற்றும் உடலுக்கு ஏற்றது. உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், முடிந்த வரை வெயிலை தவிர்ப்பது நல்லது. எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளுக்கு எலும்பு மூட்டுக்களின் அதாவது முழங்கை மூட்டு, தோள்பட்டை பந்து கிண்ண மூட்டு, கால் தொடைக்கு மேல், இடுப்புக்கு இடையில் உள்ள பந்து கிண்ண மூட்டின் முனைப்பகுதியில் கோடை வெயிலின் உஷ்ணத்தால் கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்த கட்டிகளை சுளுக்கு என்றோ, சாதரண வீக்கம் என்றோ, தடவி விடக்கூடாது. இந்த கட்டிகள் வராமல் தவிர்க்க கீழாநெல்லிசாறு அருந்துவது நல்லது. மேலே குறிப்பிட்டபடி இளநீர், பதநீர், பழச்சாறு, பழங்கள், வெள்ளரிக்காய், தர்பூசணிக்காய், சிறுதானிய கூழ்வகைகள் உட்கொள்வதின் மூலம் தவிர்க்கலாம். தோல் அலர்ஜி உள்ளவர்களுக்கு தோலின் மேல் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்வது பாதுகாப்பாக அமையும். “என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்” என்ற வள்ளுவன் கூற்றிற்கு இணங்க எலும்பு இல்லாத புழுக்களைத்தான் வெயில் சுட்டெரிக்குமே தவிர, எலும்பு கூடுகளால் வடிவமைக்கப்பட்ட நமக்கு வெயில் காலம் நல்லதே!

    ஆர்.எஸ்.வேலுமணி, பாரம்பரிய வைத்தியர், சென்னை
    நாண், தோசை, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இறால் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    தக்காளி - 25 கிராம்,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    தனியா தூள் - 2 டீஸ்பூன்,
    கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    எண்ணெய் - 100 மி.லி.,
    பச்சைமிளகாய் - 5,
    சோம்பு தூள் - 2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் இறால், உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான இறால் சுக்கா ரெடி. 
    உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும்.
    உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும்.

    * வயிற்று பிடிப்பு, உப்பிசம், காற்று, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏதோ தவறான உணவினை நீங்கள் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதைக் காட்டுகின்றன.

    * வயிற்றுப் பிரட்டல், வாந்தி இவை இருக்கும்.

    * 1-8 மணி நேரம், 12-72 மணி நேரம் சென்றும் கூட அறிகுறிகள் வெளிப்படலாம்.

    * ஜூரம் இருக்கலாம்.

    * எதிலும் கவனம் செலுத்த முடியாது.

    * உடலில் நீர் வற்றுதல்

    போன்ற அறிகுறிகள் ஏற்படும் பொழுதே உடனடி கவனம் செலுத்தினால் பாதிப்பிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.

    * கைகளை சாப்பிடும் முன்பும், பின்பும் சுத்தமாகக் கழுவுங்கள்.

    * வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள்.

    * வீடு, குறிப்பாக சமையலறையை மிகவும் சுத்தமாக வைத்திருங்கள்.

    * முறையாக சமைக்காத அசைவ உணவு குடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கவனம் தேவை.

    * மீந்து போன அசைவ உணவுகளில் அதிக கிருமிகள் பாதிப்பு ஏற்படலாம்.

    * காய்ச்சாத பச்சை பாலினை பயன்படுத்த வேண்டாம்.

    * பச்சை முட்டை, பச்சை மீன் இவை குடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    * நன்கு கழுவப்படாத பழங்கள், காய்கறிகள் ஆபத்தானதே.

    * முளை கட்டிய பயிரினை கூட ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

    வாழைப்பழம் என்றவுடன் பல வகை வாழைப்பழங்கள் வகையினைப் பற்றி நாம் நினைப்போம். உண்ணும் பழக்கம் உள்ளது. செவ்வாழைப் பற்றி அரிந்து கொண்டால் நாம் செவ்வாழையினையும் அடிக்கடி உண்ண ஆரம்பிப்போம்.

    * செவ்வாழை நிறைந்த நார் சத்து கொண்டது. மலக்சிக்கல் செரிமான கோளாறு, வயிற்றில் காற்று இவற்றினை நீக்கும் தன்மை கொண்டது. இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பு இவைகளை தவிர்க்கும் தன்மை கொண்டது.

    * சிறு நீரக கற்கள் உருவாவதைத் தவிர்க்கும்.

    * எலும்பு ஆரோக்கியத்தினைக் கூட்டும்.

    * வைட்டமின் சி சத்து அதிகம் கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    * அதிக கலோரி சத்து இல்லாததால் எடை குறைப்பிற்கு உதவும்.

    * வைட்டமின்கள் அதிகம் கொண்டதால் ரத்த விருத்தி, சிகப்பு அணுக்கள், ஹீமோ குளோபின் இவற்றுக்கு பெரிதும் உதவும்.

    * உடனடி சக்தி அளிக்க வல்லது.

    * சிகரெட் பழக்கத்தினை நிறுத்தும் பொழுது செவ்வாழை எடுத்துக் கொள்வது உடல், மன நலத்தினை பாதுகாக்கும்.

    * நெஞ்சு எரிச்சல் உடையவர்கள் செவ்வாழையினை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

    * மூல நோய்க்கும் சிறந்தது.

    * ஸ்ட்ரெஸ் பாதிப்பு உடையவர்கள் செவ்வாழை எடுத்துக்கொள்ள நல்ல நிவர்த்தி கிடைக்கும்.

    * வயிற்றுப் புண் நீக்கும்.

    * கண் பார்வைக்கு நல்லது.
    முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், வரதட்சணை குறித்து எந்த மாறுபாடும் ஏற்படவில்லை.
    முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை. சட்டங்களும், திட்டங்களும் கண் துடைப்பாகத்தான் இருக்கின்றனவே ஒழிய, பெண்களுக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

    பண்டைய காலத்தில் ‘கொடை’ என்ற பெயரால் பண பலத்தை காட்டி பெருமையை நிலைநாட்டினர். இவை நாளடைவில் சமுதாயத்தில் தானமாகவும், சீதனமாகவும், வரதட்சணையாகவும் உருவெடுத்தன. மேலும் பெண் வீட்டாரின் பெருமையை காட்ட சீதனங்கள் வழங்கப்பட்டன.

    இன்று முதல்வர், கலெக்டர், விமானி, விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் இருந்தாலும் கூட பெண்ணிற்கு இழைக்கப்படும் தீமைகள் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் தட்டிக் கேட்கப்படுகின்றன. பெண்ணே, பெண்ணிற்கு எதிரியாகவும் உள்ளனர். மாமியார் கொடுமை இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றது. மணமான பெண் பிறந்த வீடே கதியாக திருப்பி அனுப்பப்படுவதற்கும் புகுந்த வீட்டில் பெண்களுக்கு இன்னல்கள் இழைக்கப்படுவதற்கும் அரசு கடுமையான தண்டனைகள் வழங்கி வருகின்றன. இருந்த போதிலும் ஆங்காங்கே கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.

    கொடுமையின் உச்சக்கட்டம்

    பெண்களின் நலன்களுக்கும், பாதுகாப்பிற்கும் பெண்கள் நல உரிமை கழகம், மகளிர் முன்னேற்றக் கழகம் முதலியன அமைந்துள்ளன. இத்தகைய அமைப்புகள் இந்த சிக்கலுக்கு ஓரளவு தீர்வு காண்கிறது. வரதட்சணைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால் பெண்களுக்கு கல்விக்கென பெற்றோர் பணம் செலவழித்திட தயங்குகின்றனர். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், வரதட்சணை குறித்து எந்த மாறுபாடும் ஏற்படவில்லை.

    ஒவ்வொரு ஆண்மகனும் தன்னளவில் சமுதாய பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, வரதட்சணை கொடுமையை எதிர்க்கலாம். மேலை நாடுகள் சிலவற்றில் ஆடவர்கள், பெண்ணை பெற்றவருக்கு பணம் கொடுத்து பெண்ணை மணப்பதுண்டு. வறுமையின் நிலையில் வாழும் குடும்பங்களில் ‘வரதட்சணை கொடுமை‘ கோரமாக தாண்டவமாடுகிறது. பெண்ணை பெற்றவர் கடன் வாங்கியாவது திருமணம் நடத்தி வைத்து, திருமணம் முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே மணமகன் கேட்டது கிடைக்காததால் மணமகளை வீட்டிற்கு விரட்டியடிப்பதும், அதனால் அங்கு தந்தை மாரடைப்பால் இறப்பதும் சில குடும்பங்களில் நிகழாமல் இல்லை. அதை போல் வல்லமை பெற்ற மாமியார்களால் எரிவாயு அடுப்பில் எரிந்து பெண் சாம்பல் ஆவாள். வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டம் இதுவே ஆகும்.

    புதிய உலகை படைப்போம்

    சமுதாயத்தில் வரதட்சணை என்னும் வளர்ந்து வரும் தீயை அணைக்க முன்வர வேண்டும். வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இளைஞர்கள் நினைத்தால் சாதித்துக் காட்ட முடியும். எனவே இளைஞர்களே, இதோ நீங்கள் விழித்திட வேண்டிய காலம். வருங்கால இந்தியாவை காப்போம், முயற்சி எடுத்து முன்னேற்றம் அடைவோம், வரதட்சணை கொடுமையில் இருந்து விடுபட்டு புதிய உலகை படைப்போம். 
    சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வாழைத்தண்டு மோர் கூட்டு. இன்று இந்த கூட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நறுக்கிய வாழைத்தண்டு - 2 கப்,
    வெந்த துவரம்பருப்பு - 1/2 கப்,
    கடைந்த தயிர் - 200 மி.லி.

    அரைக்க...

    பச்சைமிளகாய் - 6,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும்.

    கடாயில் வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வேகவிடவும்.

    வாழைத்தண்டு வெந்ததும் அதனுடன் வெந்த துவரம்பருப்பு, அரைத்த கலவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.  

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கலந்து பரிமாறவும்.

    சூப்பரான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும்.
    காபி உங்களை எப்படி உற்சாகமாக வைத்து கொள்கிறதோ அதேபோல காபியை கொண்டு உங்கள் அழகையும் அதிகரிக்க முடியும். காபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும். மேலும் சருமத்தை இறுக செய்யும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கம், சூரிய கதிரால் ஏற்பட்ட கருமை நிறம் ஆகியவை அகன்று முகம் பிரகாசிக்கும்.

    காபி பட்டை ஸ்க்ரப்

    காபி தூள் மற்றும் பட்டை பொடி இரண்டையும் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்து வந்தால் இறந்த செல்கள் அகன்று முகம் பிரகாசமாகும். காபி முகத்தில் அதிகபடியாக சுரக்கும் எண்ணெய் பிசுக்கை குறைக்கும். பட்டை தூள் சருமத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
     
    தேவையானவை

    காபி தூள் - ஒரு கப்
    பட்டை பொடி - 2 தேக்கரண்டி
    தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
    சர்க்கரை - ஒரு கப்

    செய்முறை

    ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். அதில் காபி தூள், பட்டை தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்த கொண்டு வாரத்தில் மூன்று முறை உடலுக்கு ஸ்க்ரப் செய்து கொள்ளலாம்.

    காபி ரோஸ் வாட்டர் ஃபேஸ் ஸ்க்ரப்

    ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் உண்டு. சருமத்தில் பிரச்சனைகளுக்கான தீர்வாக இருக்கும் இந்த ரோஸ் வாட்டர். இது சருமத்திற்கு சிறந்த க்ளென்ஸராக செயல்படும். சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்யும்.
     
    தேவையானவை

    காபி தூள் - ஒரு கப்
    ரோஸ் வாட்டர் - 2 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு பௌலில் காபி தூள் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டியும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் உடல் முழுவதும் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

    காபி கற்றாலை ஸ்க்ரப்

    எல்லாவகை சருமத்திற்கும் சிறந்தது கற்றாலை. இதில் வைட்டமின் சி, ஈ, பீட்டா கெரோட்டின் போன்றவை நிறைந்திருக்கிறது. இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். மேலும் இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.
     
    தேவையானவை

    காபி தூள் - ஒரு கப்
    கற்றாலை ஜெல் - 5 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு பௌலில் காபி தூள் மற்றும் கற்றாலை ஜெல் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் மசாஜ் செய்ததும் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.
    அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
    அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். முக்கியமாக கூடுதல் எடையுடன் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து காப்பாற்ற வேண்டிய நிலை உண்டாகும். பல்வேறு நோய் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியில்லாத குழந்தையாக வளர அதிக வாய்ப்பு உள்ளது. கூடிய விரைவில் இதயம் சார்ந்த பிரச்னைகளை தாய் மட்டுமல்லாது குழந்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கர்ப்பக்காலத்தின் போதே ஆரோக்கியமான உணவுகளை உண்டு, உடல் எடையை சராசரியாக பராமரித்து வந்தால் குழந்தைப் பேறு எளிது என்கின்றனர்.

    முதல் முதலாக கருவுற்றிருக்கும் பெண்களில் பலருக்கு ஏற்படும் பயம், பிரசவத்தின்போது சிசரியன் செய்ய நேரிடுமோ என்பதுதான். அதிலும் பருமனான பெண்களுக்கு சிசரியன் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த பயம் கண்டிப்பாக இருக்கும். சிசரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதிக ரத்தப்போக்கால் உடலில் ரத்த அளவு குறைந்து போவது, அறுவைச் சிகிச்சை செய்யப்படும் வயிற்றுப் பகுதியில் புண் நாளடைவில் ஆறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் சுகப்பிரசவம் எளிது என்கின்றனர்.

    எடை அதிகரிக்காமலும் ஆரோக்கியமாகவும் இருக்க 3 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானது பசி வரும்போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு டாக்டர்கள் கூறும் அறிவுரைப்படி டயட் உணவு சாப்பிட வேண்டும். இரண்டாவது விஷயம் அடிக்கடி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அதாவது இரண்டரை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.

    மூன்றாவது விஷயம் நிறைய நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஓய்வெடு என்றுதான் கூறுவார்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடை பயிற்சி மற்றும் சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த ஆலோசனையின் பேரில் செய்வது முக்கியமானது. உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் இது உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறது. இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும் என்பதும் மருத்துவர்களின் கருத்து.
    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்,
    பாசிப்பருப்பு - ¼ கப்,
    தண்ணீர் - 2½ கப்,
    உப்பு - தேவைக்கு,
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சைமிளகாய் - 3,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகு - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். இரண்டும் வெந்ததும் உப்பு சேர்க்கவும். நன்கு வெந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான சத்தான குதிரைவாலி காரப்பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்க ஜசோமெட்ரிக் பயிற்சிகள் உதவுகிறது.
    பெரும்பாலும் பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகுவலிக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் பிரசவ காலத்தில் அவர்கள் நிற்கின்ற போதும் நடக்கின்ற போதும் வயிற்றை முன் தள்ளி நிற்க பழகிவிடுகின்றனர். பிரசவத்திற்கு பின்பும் அதே நிலை ( posture) நீடிப்பதால் முதுகு எலும்பு மற்றும் எலும்பின் நடுவில் இருக்கும் மிருதுவான பகுதி பாதிப்பிற்குள்ளாகின்றது அதே போல் இப்போது வலியற்ற பிரசவத்திற்காகவும் மற்றும் சிசேரியன் செக்‌ஷன்காகவும் முதுகுத்தண்டில் ஏற்றப்படும் ஊசிகளால் முதுகெலும்பு பல பின் விளைவுகளை சந்திக்கின்றது.

    பெரும்பாலும் முதுகெலும்பினை நேராக வைத்து அமர்வதற்கும் நடப்பதற்கும் பழகிக்கொண்டாலே பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது.

    1. டேபிள் டாப் எனப்படும் நிலைக்கு முதலில் நேராக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி 90 டிகிரி அளவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் முதுகெலும்பை சற்று கவனத்தில் கொண்டு வந்து பாருங்கள். அதில் லேசான வளைவு கண்டிப்பாக இருக்கும். இப்போது வளைவுடன் இருக்கும் முதுகெலும்பை முடிந்த அளவு நேராக்கி சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்

    இரண்டாவது நிலை ..பெல்விக் ப்ரிட்ஜிங் …கால்களை மடக்கி வைத்துக்கொண்டு இடுப்பு பகுதியினை மட்டும் முடிந்த அளவு உயர்த்தி அதே நிலையில் 30 வினாடிகள் இருத்தல் வேண்டும். இது போல் 3 செட்கள் அவசியம்.

    3. பைலேட்ஸ் கிரன்ச் ….கால்களை 90 டிகிரியளவில் மடக்கி வைத்துக்கொண்டு உடலை மேல் நோக்கி முடிந்த அளவு கொண்டு வந்து 30 செகண்ட்கள் இருத்தல் வேண்டும்.

    4. குப்பறபடுத்துக்கொண்டு இருகால்களையும் ஒன்றாக்கி முட்டியை மடக்காமல் எவ்வளவு தூரம் மேல் நோக்கி தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் மேல் தூக்கி நிறுத்த வேண்டும்.

    5. பிரண்ட் ப்ரிட்ஜிங்…. குப்பற படுத்த நிலையில் கைகளை ஊன்றி உடலை மட்டும் மேல் நோக்கி கொண்டு செல்ல வேண்டும். குறைந்த பட்சமாக 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். இப்பயிற்சியின் போது முதுகெலும்பு நேராக இருத்தல் அவசியம்.

    ஏர் பிளானிங்…. வலது காலையும் இடது கையையும் தரையில் ஊன்றிக்கொண்டு முதுகெலும்பை வளைக்காது உடலை நேராக்குங்கள். இந்த நிலையை சூப்பர்மேன் போஸ் என்றும் ஏர் பிளானிங் என்றும் கூறுவர்.

    மேற்கண்ட பயிற்சிகள் அனைத்தையும் ஒரு நல்ல பிசியோதெரபிஸ்டின் மேற்பார்வையில் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் முதுகுவலிக்கு குட் பை கண்டிப்பாக சொல்லலாம்….

    எந்த பயிற்சியும் தொடர்ந்து செய்து வருவதன் மூலமே பலன் கிடைக்கும். செய்ய ஆரம்பிக்கும் போது சற்று வலி அதிகமாக இருக்கும். அதனால் பயிற்சியை பாதியில் விட்டுவிட கூடாது. தொடர்ந்து செய்து வந்தால் வலி படிப்படியாக குறையும்.
    இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும்.
    இளைஞர்கள் நிறைந்த இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஐ.எஸ்.ஏ. என்ற அமைப்பு உலக அளவில் பள்ளிக்கல்வியைப் பற்றிய ஓர் ஆய்வு நடத்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்கள்.

    73 நாடுகள் பங்கேற்ற அந்த ஆய்வில் நம் நாட்டின் தரவரிசை 72 ஆக இருந்தது. ஆகவே, பள்ளிக்கல்வியிலே நாம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண வேண்டும். தரத்தையும் உயர்த்த வேண்டும். மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் சுமார் 15 லட்சம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

    உலகிலேயே பள்ளிகளின் அதிக எண்ணிக்கை இது தான். இதிலே சுமார் 75 சதவீதம் அரசுப்பள்ளிகள், மற்றவை தனியார் பள்ளிகள். அரசுப்பள்ளிகளின் வெற்றிதான் நம் நாட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை முடிவு செய்யும். இதில் 3-ல் ஒரு பகுதி பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாகவே படிக்கிறார்கள். அங்கே சராசரியாக இருக்க வேண்டிய எண்ணிக்கையைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். மற்ற பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை அமர்த்துவது இல்லை.

    பள்ளிக்கல்வியின் தர வரிசையில் உலகின் முதல் இடத்தில் இருப்பது தென்கொரியா. அந்த நாட்டில் ஆசிரியர்களுடைய தகுதியே மிக உயர்வானது. ஆசிரியர்களின் ஊதியம், அவர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு அனைத்துமே வியக்கத்தக்கவை. ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்களாக விண்ணப்பித்த எண்ணிக்கையில் சுமார் 5 சதவீதம் பேர்தான் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 4 ஆண்டுகள் கடுமையான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சிக்கு பின்னர்தான் அவர்கள் ஆசிரியர்களாக அமர்த்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை. இரண்டு தரப்புக்குமே அரசாங்க நிதியுதவி கிடைக்கிறது. சில பெற்றோர்களுக்கு அரசு நேரடியாக நிதியுதவியும் செய்கிறது. அவர்களுடைய வேலை நாட்களும், வேலை நேரமும் நம் நாட்டைவிட மிக அதிகம்.

    ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குழந்தைகள் பள்ளியிலேயே இருப்பார்கள். பாதி நேரம் பொதுவான வகுப்புகளும் மீதி நேரம் தனி பயிற்சியும் நடக்கிறது. நம் நாட்டில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படுவது இல்லை. அதிலே ஒரு பகுதியினர்; பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே சான்றிதழ் பெறக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

    இது அரசுகளுக்கு தெரிந்தே நடக்கிறது. ஆசிரியர்களை அரசு வேலைக்கு அமர்த்துவது எல்லா நேரங்களிலும் தகுதியை மட்டுமே வைத்து அமர்த்துவது இல்லை. ஆசிரியர் ஆவதற்கு பணச்செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிபட்டவர்கள் பள்ளியில் சேர்ந்த பின்னால் வேறு ஏதாவது தொழில் செய்து பணத்தை ஈட்ட முனைகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

    அரசுப் பள்ளிகளைப் பற்றிய ஓர் ஆய்வில், ஆசிரியர்கள் சுமார் பாதிபேர் வேலைக்கு வருவது இல்லை என்று தெரியவருகிறது. மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனாலும் அரசின் கொள்கை முடிவுப்படி 8-ம் வகுப்பு வரை எல்லா மாணவர்களும் மேல் வகுப்பிற்கு தகுதி பெற்றுவிடுகிறார்கள். இந்த முடிவு கல்வித்தரத்தையே கேள்வி குறியாக்கிவிட்டது. அமெரிக்க நாட்டில் அரசுப்பள்ளிகளை உள்ளாட்சிகள் நடத்துகின்றன. எந்தப் பள்ளி சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த பகுதிக்கு மக்கள் அதிகமாக குடியேறுகிறார்கள். அவர்கள் மூலம் அந்த உள்ளாட்சிக்கு வரித்தொகை அதிகமாக கிடைக்கிறது. இதன்விளைவாக உள்ளாட்சிகள் தங்களுக்குள் போட்டிபோட்டு பள்ளிகளை திறமையாக நடத்தி தரத்தை உயர்த்துகின்றனர்.

    இன்னொருபுறம் ஒரு புதுமையாக சார்ட்டர் பள்ளிகள் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களின் மாத ஊதியத்தை மாநில அரசுகள் கொடுக்கும். ஆனால் நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற சார்ட்டர் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக வளர்ந்து வருகின்றன. நம் நாட்டிலும் அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் தருணம் வந்துவிட்டது. அரசு அலுவலர்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவது என்று முடிவு எடுத்தால் அரசின் கவனம் அரசு பள்ளிகளின் பக்கம் திரும்பும்.

    ஆசிரியர்களின் பயிற்சி முறையை இன்னும் பலப்படுத்த வேண்டும், கடுமையாக்க வேண்டும். அரசில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதியை மட்டுமே அடிப்படையாக வைத்து தேர்வு செய்ய வேண்டும். பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு இந்த மூன்றிலேயும் ஊழல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறையில்லாமல் செய்து தர வேண்டும். திறமையான நிர்வாகத்திற்கு புதிதாக வழிவகை செய்ய வேண்டும்.

    தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு எந்த உதவியும் செய்வது இல்லை. 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி என்று சட்டம் இயற்றி இருந்தாலும் தனியார் பள்ளிக்கு இது பொருந்தாது. 14-லிருந்து 18 வயது வரை உயர்த்தப்பட வேண்டும். தனியார் பள்ளிக்கும், அங்கு படிக்கும் குழந்தைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். தற்போது நம் நாட்டில் பல்வேறு அனுமதிகள் பெறுவதற்காக பள்ளிகள் நிறைய பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

    இதன் மூலம் கல்விச் செலவைக் குறைக்கலாம். தனியார் பள்ளிகளில் தகுதி உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவது இல்லை. இதை மாற்றுவதற்கு மாநில அரசுகள் தனியார் நிர்வாகங்களுடன் கலந்து பேசி ஆவன செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் உலக அளவில் சிறந்து விளங்கும் தென்கொரியா மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு நம்முடைய குழுக்களை அனுப்பி அவர்களுடைய அனுபவத்தை கண்டறிந்து நாம் கடைபிடிக்க வேண்டும்.

    பின்லாந்து நாட்டைப்போல் கல்விக் கொள்கையை போல் நிரந்தர நிலை ஏற்படுத்துவதற்காக அரசும், எதிர்க்கட்சியும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். மக்களாட்சி மாண்புற வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் காண வேண்டுமானால் கல்விக்கு அதிகமான தொகையை செலவழித்து வளர்ந்த நாடுகளுடன் நாமும் போட்டிபோட வேண்டும். அப்போது நமது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    ஜி.விஸ்வநாதன் வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்
    ×