என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கீன்வா என்பது ஒருவகை வெளிநாட்டு தானியம். நம் நாடு சிறுதானியங்கள் போலவே இதுவும் சிறந்த சத்துணவு. இன்று கீன்வா வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கீன்வா - அரை கப்
    கேரட் - 1
    சோளம் - சிறிதளவு
    1/2 கப் சிவப்பு குடை மிளகாய்
    பார்ஸ்லே இலை - சிறிதளவு
    வெங்காயத் தாள் - 3
    எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
    மிளகு தூள் - சிறிதளவு
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை  :


    குக்கரில் கீன்வாவைப் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து, நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.

    சோளத்தை வேக வைத்து கொள்ளவும்.

    கேரட், சிவப்பு குடைமிளகாய், பார்ஸ்லே இலை, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கீன்வாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கி கேரட், சிவப்பு குடைமிளகாய், பார்ஸ்லே இலை, வெங்காயத்தாள், சோளம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக எலுமிச்சைசாறு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த கீன்வா வெஜிடபிள் சாலட் ரெடி.

    இந்த கீன்வா தென் அமெரிக்காவின் முக்கிய உணவாகும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான் என்று அதற்கு தீர்வும் கீதை தருகிறது.
    ஒரு முனிவரைப் பார்க்க ஒரு பெண் அழுதுகொண்டே வந்தார். முனிவர் அந்த பெண்ணின் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த பெண் “சுவாமி! எனது வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள், அதிக துன்பங்கள். அதனால் வாழ்க்கை கஷ்டமாக உள்ளது. எனவே நான் மகிழ்ச்சியாக வாழ வழி கூறுங்கள்” என்றார். அதற்கு முனிவர், ஆகட்டும்! அதற்கு ஒரே ஒரு நிபந்தனை என்றார் முனிவர். பெண்ணும் சரி என்று தலையசைத்து என்ன நிபந்தனை? என்றார். ஒரு காகிதத்தில் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் எழுதி, அதை இந்த பானைக்குள் போடுங்கள்.

    பிறகு, இந்தப் பானைக்குள் இருக்கிற ஏதாவது ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களைப்போன்றவர்கள் எழுதியிருக்கும் பிரச்சினைகள் இருக்கும். அதை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். அந்த பிரச்சினைகளை எளிதில் தீர்த்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்றார். உடனே, அந்த பெண் தனது பிரச்சினைகளை எழுதி அந்த பானைக்குள் போட்டுவிட்டு உள்ளே இருந்து மற்றொரு காகிதத்தை எடுத்தார். அதில் பிரச்சினைகள் மிக அதிகமாக இருந்தன. இது வேண்டாமென்று மற்றொரு காகிதத்தை எடுத்தார்.

    அதிலிருந்து பிரச்சினைகள் இவரால் தீர்க்க முடியாததாக இருந்தது. இப்படி தொடர்ந்து அவர் எடுத்துக்கொண்டே வந்தார். ஒவ்வொரு காகிதத்தில் இருந்த பிரச்சினைகளெல்லாம், இவரது பிரச்சினைகளை விட பெரியதாகவும் சிக்கலாகவும் இருந்தது. கடைசியில் மற்றவர்களின் பிரச்சினைகளைவிட தனது பிரச்சினைகளைத் தீர்ப்பதே மேல் என்று நம்பினார். முனிவரிடம் சுவாமி! நான் எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்கிறேன் என்று சொல்லி கிளம்பினார்.

    பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை, இந்த உலகில் இல்லை. பிரச்சினைகள் தான் வாழ்வின் சுவாரசியம். ஒரு மனிதனின் சரியான திறமை பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இருக்கிறது. உண்மையான மகிழ்ச்சி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்தான் உள்ளது.

    ஒரு சிறு பிரச்சினையை கூட, கண்ணுக்கு அருகே வைத்துப் பார்த்தால் அது பெரிதாகத் தெரியும். பிரச்சினைகளை சற்று தூரத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் தெளிவு உண்டாகும். பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாமல் தங்களை மாய்த்துக்கொள்வதும், குடும்பத்தோடு தற்கொலை செய்வதும், வாழ்க்கை முழுவதும் வருந்திக்கொண்டே இருப்பதும் என வாழ்க்கையை பலரும் பாழாக்குவது கண்கூடு. குழந்தைகள் படிக்க ஆரம்பிக்கும்போது அவர்களுடைய மொழிப்பாடம் எளிதாக இருக்கும். தீர்வு காணவேண்டிய கணித பாடங்கள் சற்று கடினமாக இருக்கும். கணக்கு கடினம் என்பதற்காக படிக்காமல் விடுவது எத்தகைய அறிவின்மையை தருமோ, அதுபோல பிரச்சினைகளை கையாளவேண்டும் என்பதற்காக வாழ்க்கையை நிர்மூலமாக்கிக் கொள்வதும் முட்டாள்தனமே.

    “மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்து போகச்செய்யும் காலச்சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள் இவையெல்லாம் மானிட வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள்” என்கிறது பகவத்கீதை. இதுபோன்ற போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்கின்ற மானிடன் எவனோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணமிக்கிறான் என்று அதற்கு தீர்வும் கீதை தருகிறது.

    முதலில் பிரச்சினைகளை அடையாளம் காணவேண்டும். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அதைப் பகுத்தாய்ந்து சிறுசிறு கூறுகளாக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு என்னவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து, அதற்கு சரியான இடம், காலம், ஆள் பார்த்து கொடுத்துவிட்டால், பிரச்சினைகள் எவரிடமும் துவண்டு போகும். எந்தச் சூழ்நிலையிலும் தைரியத்தோடும், நம்பிக்கையோடும் பிரச்சினைகளை அணுகுபவர்கள் மனித வாழ்க்கையில் அழகானவர்கள், அற்புதமானவர்கள்.

    நாளிதழ்களில் வருகின்ற புதிர் போட்டிகள், எளிய புதிர் கணக்குகள், குறுக்கெழுத்துப் போட்டிகள், புதிர் விளையாட்டுகள் இவை அனைத்தும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பிரச்சினைகளை தீர்வுகாணும் யுக்தியை கற்றுத்தரும். அந்த புதிர் விளையாட்டுகளை யார் ஒருவர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறாரோ, அந்த புதிர்களுக்கு விடை காண்கிறாரோ அவர் வெற்றியாளராக பரிணமிக்கின்றார். சிறிய புதிர்களை கூட கண்டுபிடிப்பதற்கு சலிப்பு கொள்பவர்கள்; அல்லது புதிர் என்றதுமே பயந்து ஓடுபவர்கள் எல்லோரும் பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர்.

    தீர்க்கப்படாத தீர்வுகளே இந்த உலகில் இல்லை. முடிவுகள் தெரியாத பிரச்சினைகள் இந்த உலகில் இல்லை. பிரச்சினைகளைக் கையாளுகின்ற பொழுது, அனைத்து பிரச்சினைக்கும் நடந்த பிரச்சினை இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் இயல்பானது என்ற மனநிலை கொண்டிருந்தால் பிரச்சினைகள் விலகிப்போகும். நமக்கு மட்டும் தான் பிரச்சினைகள் வருகிறது என்று நினைத்தால், பிரச்சினைகள் நம்மை துரத்த ஆரம்பிக்கும்.

    ஒரு திரைப்படத்தின் முடிவினை முன்னரே தெரிந்திருந்தால் அத்தகைய படத்தை பார்க்க யாரும் விரும்புவதில்லை, ஆனால், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சிந்துபாத் கதைகள் அனைவருக்கும் பிடித்துப்போகும். காரணம், அக்கதையில் பல தீர்வுகளைக்காண கதாநாயகன் முற்படுவதால்தான். தனக்குள்ள வாழ்க்கையில், சின்னச் சின்ன முடிச்சுகளோடு சில பிரச்சினைகள் இருக்கவேண்டும். அந்த முடிச்சுகளை அவிழ்க்கத் தெரிந்த மனிதனால்தான் நம்பிக்கையோடு பெரிய சவால்களை ஏற்றுக்கொள்ள முடியும்.

    பிரச்சினைகளைச் சமாளித்தால் மனிதன்!! பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டால் தீரன்!!

    ஆர்.திருநாவுக்கரசு,

    துணைஆணையர், நுண்ணறிவுப்பிரிவு
    சில முக்கிய காரணங்களை கவனிக்கத் தவறி விடுவதால்தான் சீக்கிரம் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படுகின்றது. அக்காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் முகத் தோற்றத்தினைக் காக்க முடியும்.
    எல்லோருக்கும் (அ) அநேகருக்கு தனது முகத்தினை கண்ணாடியில் பார்க்கும் பொழுது பல மனக்குறைகள் ஏற்படும். கரும்புள்ளி, முக சுருக்கம், வயதான தோற்றம். ஏன் தனக்கு வயதுக்கு மீறின முதுமையாகத் தோன்றுகின்றது என வருந்துவர். 40 வயதில் 20 வயது போல் இருக்க வேண்டும் என படாதபாடுபடுபவர் பலர் உண்டு. இவர்கள் எப்பொழுதும் முகத்தில் எதையாவது தேய்ப்பதும், பார்ப்பதுமாக காலத்தினை செலவழிப்பர். ஆனால் சில முக்கிய காரணங்களை கவனிக்கத் தவறி விடுவதால்தான் சீக்கிரம் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படுகின்றது. அக்காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் முகத் தோற்றத்தினைக் காக்க முடியும்.

    * சூரிய ஒளி உடலுக்குத் தேவைதான். வைட்டமின் டி சத்திற்கு அது மிகவும் அவசியமானது. அதுவே மிக அதிக நேரம் கடும் வெயிலில் இருப்பது சருமத்தினை வெகுவாய் பாதிக்கும். சரும பாதுகாப்பு லோஷனை தடவி வெளியில் செல்வதே நல்லது.

    * காரமான சோப்புகளை உபயோகிப்பது தேவையான ஈரப்பதத்தினை நீக்கி வறண்ட சருமம் ஆக்கிவிடும். இது முதுமைத் தோற்றத்தினைக் கூட்டும். சருமத்திற்கு மாஸ்ட்ரைஸர் உபயோகிப்பது நல்லது.

    * பலருக்கு குப்புற படுத்து முகத்தினை புதைத்து தூங்கும் பழக்கம் உண்டு. காலப்போக்கில் தலையணை, பெட்ஷீட் போன்றவைகளால் முகத்தில் தேய்க்கும் காரணத்தால் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படலாம்.

    * கண்களை அடிக்கடி சுருக்கி படிப்பது முதுமையை கூட்டும்.

    * உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் இவை உண்டால் முதுமை துள்ளி ஓடும். கார்ப்போஹைடிரேட் அதிகமுள்ள உணவு, அதாவது எப்பொழுதும் சாதம், இட்லி, தோசை போன்ற மாவு சத்து உணவினையே உண்பவர்கள் முகம் எளிதில் முதுமை அடைந்து விடும்.

    * புகை பிடிப்பவர்களுக்கும், மது அருந்துவபவர்களுக்கும் முகத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படும்.

    * உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு முதுமைத் தோற்றம் எளிதில் ஏற்படும்.

    * தூசு, மாசு நிறைந்த சூழல் சரும பாதிப்பினை ஏற்படுத்தும்.

    * இரவில் செல்போனிலேயே காலம் கடத்துபவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் ஒளி தூக்கத்தினை கெடுத்து விடும். இதனால் முகம் வயதான தோற்றத்தினைக் காட்டும்.
    பீட்ரூட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் தீரும் நோய்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்:

    * புற்று நோய் எதிர்க்கும்.
        
    * மலச்சிக்கல் நீங்கும்.

    * கல்லீரலை சுத்தம் செய்யும்.

    * ரத்த ஓட்டத்தினை சீராக்கும்.

    * இரும்பு சத்து நிறைந்தது.

    * மாதவிடாய், மாதவிலக்கு வலி நீங்கும்.

    * மனநிலை நன்கு இருக்கும்.

    * சதைகள் பலத்துடன் நன்கு இயங்கும்.

    * குழந்தை பிறப்பில் குறைகளை நீக்கும்.

    * உயர் ரத்த அழுத்தத்தினை சீராக்கும்.

    இப்படி பல உணவுகளின் முக்கியத்துவத்தினை குறிப்பிடுவதன் காரணம் கொளுத்தும் வெயில் இருப்பதால் இத்தகைய உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தினை காத்துக் கொள்ள முடியும் என்பதற்காகவே.
    குழந்தைகளுக்கு சப்பாத்தி, நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இது இரண்டையும் சேர்த்து சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    நூடுல்ஸ் - ஒரு கப்,
    பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்,
    பால் - 2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
    தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    பிறகு நூடுல்ஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

    பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்யவும்.

    தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சப்பாத்தியை ஒரு நிமிஷம் போட்டு எடுத்து நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான சப்பாத்தி  நூடுல்ஸ் ரோல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.
    பெருங்காயத்தில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.

    பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது. இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது. பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு. பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிக்கிறது; சுவையை அதிகப்படுத்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படுகிறது.

    பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

    நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

    பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.

    ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.

    வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.

    இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் - சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.

    மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது. 
    தாயான பிறகு குழந்தையை கவனித்துக்கொள்வது, தாய்மைக்கு பிறகான உடல் மாற்றங்களுக்கு நடுவில் மீண்டும் வேலைக்குத் திரும்புவது கடினமாக இருக்கலாம்.
    தாயான பிறகு குழந்தையை கவனித்துக்கொள்வது, தாய்மைக்கு பிறகான உடல் மாற்றங்களுக்கு நடுவில் மீண்டும் வேலைக்குத் திரும்புவது கடினமாக இருக்கலாம். அதை எளிதாக்கும் குறிப்புகளை பார்க்கலாம்.

    உங்கள் உடல் இந்த நிலையை அடைய 9 மாதங்கள் ஆனது. எனவே அது  பழைய நிலைக்கு வர பொறுமை அவசியம். உங்களுக்கான புதிய ஆடைகளை வாங்கி உடுத்திக்கொள்ளவும். பாதங்களின் அளவு மாறியிருக்கலாம். புதிய ஷூக்கள் வாங்கவும். பணிக்கு செல்வதற்கு தயாராக தேவையான அவகாசம் அவசியம்.

    வேலைக்குச் செல்வது உங்களை மோசமான அம்மாவாக ஆக்காது என்பதை நினைவில். வேலைக்குச் செல்லும் முன்பு தினமும் கொஞ்சம் வெளியே சென்று வருவது குழந்தையை மிஸ் செய்வதன் வலியைக் குறைக்கும்.

    குழந்தையிடமிருந்து பிரிந்திருப்பது உங்களுக்கும் குழந்தைக்கும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம் என்பதால் பணிக்கு திரும்பும் நாளை வாரத்தின் மத்தியில் தேர்வு செய்யுங்கள்.

    பணிக்கு திரும்பும் போது அலுவலக சூழல் மாறியிருக்கலாம். புதியவர்கள் வேலைக்கு சேர்ந்திருக்கலாம். எனவே மீண்டும் பணிக்கு சேரும் முன் மேலதிகாரியை சந்தித்து பணியாற்றக்கூடிய திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    பணிக்கு செல்லும் முன்பு ட்ரையல் பார்க்கவும். குழந்தைக்கு பாலூட்ட 20 நிமிடம் அல்லாமல் 10 நிமிடமே போதுமானதாக இருக்கலாம். முன்னதாக செய்து பார்ப்பது முதல் நாள் பதற்றத்தை குறைக்கும்.

    பாலூட்டுவதில் உள்ள சிக்கலை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அலுவலக  மேஜையில் நர்சிங் பேட் வைக்கவும். குழந்தைக்கு போதிய பால் கிடைக்கும் வகையில் முந்தைய இரவு அல்லது காலையில் பாலை பிழிந்து வைக்கவும். தேவை எனில் பணி இடத்தில் மாற்று உடை வைத்திருக்கவும். பணிக்கு செல்லும் வழியில் இமெயில், மளிகை போன்றவற்றை கவனிக்கவும். பில்களை ஆன்லைனில் செலுத்தவும். இதன் மூலம் குழந்தைக்கு போதிய நேரம் ஒதுக்கலாம்.  

    பசியுடன் குழந்தைக்கு பாலூட்ட வேண்டாம். உலர் பழங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை சாப்பிட்டு உடம்பை தெம்பாக வைக்கவும்.

    பணியில் இருந்து திரும்பும் வரை குழந்தையை பாதுகாப்பானவர்களிடம் ஒப்படையுங்கள். பல குழந்தை மையங்களில் 18 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளையே அனுமதிக்கின்றனர்.

    குழந்தையை பார்த்துக்கொள்பவரை மரியாதையுடன் நடத்தவும். அவசர கால தொடர்பு எண்களை தரவும். பணம் கொடுத்து வைக்கவும்.
    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சுசியம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 1 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    வெல்லம் / பனை வெல்லம் - 1 கப்
    கடலைபருப்பு - 1 கப்
    துருவிய தேங்காய் - 1 கப்
    ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
    நெய் - 1 தேக்கரண்டி



    செய்முறை:

    கடலைபருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    ஒரு கடாயில் வெல்லம் எடுத்து தண்ணீர் விட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் அதை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் வேக வைத்த கடலை பருப்பு, வடிகட்டிய வெல்லப் பாகு, துருவிய தேங்காய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.

    அது கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வைக்கவும்.

    பின்னர் அவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுவையான சுசியம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே இன்பம் நிறைந்த ஒன்றாகும். மகனுக்கு அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே இன்பம் நிறைந்த ஒன்றாகும். மகன்கள் பெரியவர்களாகும் போது தந்தை சிறிது இடைவெளியை கடைபிடிப்பார். ஆனால், அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளன. அவை முக்கியமான வாழ்க்கை பாடங்களாகும். சில நேரம் அப்பாக்களுக்கே பிள்ளைகளுக்கு என்ன சொல்லித்தர வேண்டுமென்று தெரிவதில்லை. சொல்லித்தர வேண்டிய முக்கிய வாழ்க்கை பாடங்களை பட்டியலிட்டுள்ளோம்.

    1 பெண்களை மதித்தல்:

    மகனுக்கு சொல்லித்தர வேண்டிய மிக முக்கியமான பாடம் எந்த சூழ்நிலையிலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதாகும். பிள்ளைகள் பெற்றோரின் செயல்களில் இருந்தே கற்றுக்கொள்வார்கள். எனவே, தந்தை எப்போதும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும்.

    2 பொறுப்பு:

    நாம் பிறந்த நாளில் இருந்து ஒரு நிகழ்வுக்கோ அல்லது பிற செயல்களுக்கோ பொறுப்பை எடுக்க வேண்டும். எனவே, பொறுப்பை ஏற்றுக்கொள்ள குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அப்பாவின் கடமையாகும். தாய்மார்கள் பெரும்பாலும் அதிக உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பதால், தந்தைதான் இவற்றை கற்றுத்தர வேண்டும். எடுத்துக்காட்டு, பொதுச் செயல் செய்ய மற்றவர்கள் தயங்குவார்கள். எந்தத் தயக்கம் காட்டாமல் உடனே பொறுப்பை ஏற்று செய்யவேண்டும்

    3 உழைப்பு:

    இது அம்மா மற்றும் அப்பா இருவரும் கற்றுத்தர வேண்டிய பண்பாகும். அப்பா கடுமையான பக்கத்தையும். கடின உழைப்பையும் பற்றி கற்றுக்கொடுக்கும்போது, அம்மா கடினமான வேலையின் மென்மையான பக்கத்தையும், அதை எப்படி புத்திசாலித்தனமாக முடிக்க வேண்டுமெனவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    4 விடாமுயற்சி வெற்றி தரும்:

    தோல்வி பயத்தில் குழந்தைகள் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்ப்பார்கள். சில நேரம் ஏமாற்ற கூட முயற்சிப்பார்கள். ஆனால், வெற்றியோ தோல்வியோ போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவேண்டியது அப்பாவின் கடமையாகும். அதை தொடர்ந்து தான் குழந்தைகள் புதிய சிந்தனைகளை கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள்.

    5 மகிழ்ச்சியாக வாழ்தல்:

    பெரும்பாலும் நம்மை சுற்றியுள்ள கவலைகள் நம்முடைய மகிழ்ச்சியை சிதைப்பதோடு நாம் கொண்டுள்ள வாழ்க்கையையும் மறக்க செய்யும். எனவே அப்பா கற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தும் காட்டவேண்டும். அப்பாக்கள் என்பவர்கள் உலகிலுள்ளவர்களின் மிக சிறந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் குழந்தையின் நலன் மற்றும் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்ததை வழங்கவும், சிறந்ததைச் செய்யவும் அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள். செய்ய வேண்டும். 
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் நல்ல பளபளப்பாகவும் மாறும்.
    வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதுதான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

    தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.

    முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

    முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை மேற்கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பவுலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பதமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.

    4 ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

    அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

    ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். 
    தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பசலைக்கீரை டிப். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - ஒரு கட்டு
    ஆலிவ் ஆயில் - 1 மேசைகரண்டி
    சின்ன வெங்காயம் - 5
    தயிர் - 2 கப்
    உப்பு மற்றும் மிளகு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிது தண்ணீல் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

    வேக வைத்த பசலைக்கீரையை விழுதாக அரைத்து அதனுடன் தயிர், உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வதங்கிய வெங்காயத்தை தயிர் கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    பரிமாறுவதற்கு முன்பு குளிரவைத்து, அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பசலைக்கீரை டிப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குறைபிரசவத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் எச்சரிக்கையாக இருந்தால் அதை தள்ளி போடலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குறைபிரசவம் என்றால் என்ன?

    பொதுவாக கருவின் வயது 40 வாரங்கள் என வரையறுக்கபட்டுள்ளது. ஆனால் இந்த 40 வாரங்கள் முற்று பெறாமல் 37 வாரங்களிலோ அல்லது அதற்கு முன்போ பிரசவம் தொடங்கி விட்டால் அதை குறைமாதபேறு அல்லது குறைபிரசவம் என சொல்கிறார்கள். கர்ப்பிணி பெண்களில் குறைந்தது 10% பேருக்கு இந்த குறைமாத பேறு உண்டாகிறது.

    குறைபிரசவம் எதனால் ஏற்படுகிறது?

    குறைபிரசவம் உண்டாவதற்கான சரியான காரணம் இது தான் என வரையறுக்க முடிவதில்லை. சில சமயம் பெண்களின் இயக்குநீர்கள், நச்சுக்கொடி, வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம் என சொல்லபடுகிறது. கீழ்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்று குறைமாதபேறு உண்டாவதற்கு காரணமாக சொல்லபடுகிறது.

    1. கர்ப்ப பையின் வாய்ப்பகுதி பலமில்லாமல் இருந்தால்
    2. கர்ப்ப காலத்தின் தொடக்க காலத்தில் ரத்த போக்கு உண்டாகியிருந்தால்
    3. இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருந்தால்
    4. சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால்
    5. கர்ப்ப காலத்தில் சரியான சத்து மிகுந்த உணவை உட்கொள்ளாமல் இருந்தால்.

    குறைபிரசவம் ஏற்பட போகிறது என்பதை எவ்வாறு கண்டறிவது?

    குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பது முன்பே தெரிந்துவிட்டால் மருத்துவரை அணுகி உங்களின் பிரசவத்தை சில நாட்களுக்கு
    ஒத்தி வைக்கலாம். கீழ்காணும் இந்த அறிகுறிகள் குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பதன் முன்னறிவிப்பாகும்.

    1. பிறப்புறுப்பிலிருந்து நீரானது ரத்தகசிவுடன் வெளியாவது

    2. அளவுக்கு அதிகமான அழுத்தமானது இடுப்பு மற்றும் அடிவயிற்றில் ஏற்படுவதால்

    3. பிரசவ காலத்தில் ஏற்படும் கர்ப்பபை சுருங்கி விரியும் நிகழ்வு இப்போதே ஏற்படும்.

    குறைபிரசவத்தை எவ்வாறு தடுக்கலாம்?

    குறைபிரசவத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் எச்சரிக்கையாக இருந்தால் அதை தள்ளி போடலாம். உங்கள் மகபேறு மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் சந்திப்பது நல்லது. இதற்கு முன்பே குறைமாத பேறு ஏற்பட்ட பெண்களுக்கு மருத்துவர் ப்ரோஜெஸ்டிரான் ஊசியை போடுவதன் மூலம் குறைமாத பேறு ஏற்படாமல் தடுப்பார்.

    மேலும் கனமான பொருட்களை கையாள கூடாது, சிரமம் நிறைந்த வேலைகளை செய்யகூடாது மேலும் உடலுறவு கொள்ள கூடாது. இவற்றை கடைபிடித்தால் குறைபிரசவத்தை தள்ளி போடலாம்.

    ×