search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suyyam"

    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சுசியம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 1 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    வெல்லம் / பனை வெல்லம் - 1 கப்
    கடலைபருப்பு - 1 கப்
    துருவிய தேங்காய் - 1 கப்
    ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
    நெய் - 1 தேக்கரண்டி



    செய்முறை:

    கடலைபருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    ஒரு கடாயில் வெல்லம் எடுத்து தண்ணீர் விட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் அதை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் வேக வைத்த கடலை பருப்பு, வடிகட்டிய வெல்லப் பாகு, துருவிய தேங்காய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.

    அது கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வைக்கவும்.

    பின்னர் அவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுவையான சுசியம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×