என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    சிரிப்பது போன்ற தோற்றமே சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.
    எல்லாரும் மகிழ்ச்சியாக வாழத் தான் விரும்புகிறார்கள்... ஆனால் மகிழ்ச்சியாகத்தான் இருக்க முடியவில்லை.!

    மகிழ்ச்சியாக இருக்க ஏதோ ஒரு  பெரிய விஷயம் நடக்க வேண்டும் என்பதில்லை. அதை யாரோ கொண்டு வந்து தரவேண்டியதில்லை. அதை தேடி நீங்களும் போக வேண்டியதில்லை. ஏன் என்றால் அது உங்களிடமேதான் எப்போதும் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் அதை எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம்.
    மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

    மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் படியே சிரிப்பதுதான். முகத்தில் புன்னகை மலர்ந்தால் அகத்தில் மகிழ்ச்சி மலரும். அதற்காக குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. மெல்லியதாக ஒரு புன்னகை பூத்தாலே போதும். உங்கள் மனதில் மகிழ்ச்சி மலரும். உங்கள் மனத்திற்குள் மகிழ்ச்சியை சுரக்க செய்வது ஒரு ஹார்மோன்தான். அந்த மாமருந்துக்கு பெயர் என்ன தெரியுமா? எண்டோர்ஃபின்ஸ். இது வெளியே எங்கேயும் இல்லை. உங்களுக்குள்தான் இருக்கிறது.

    “நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் மனதார நினைத்தாலே போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோனை சுரக்கும்படி பிட்யூட்டரி சுரப்பிற்கு மூளை கட்டளையிடும். அடுத்த சில நெடிகளில் எண்டோர்ஃபின்ஸ் சுரக்க, மனசுக்குள் மகிழ்ச்சியும் உடலில் புத்துணர்ச்சியும் தோன்றும். இந்த ஹார்மோன் எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா? நீங்கள் நகைச்சுவை உணர்வோடு இருக்கும் போது, சுறுசுறுப்பாக இயங்கும் போது, விறுவிறுவென உடற்பயிற்சி செய்யும் போது, உடலை நேராக நிமிர்த்தி யோகா செய்யும் போது, எந்தவொரு செயலையும் விரும்பி செய்யும் போது ஆகிய தருணங்களில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும்.

    அப்படியானால் இதற்கு எப்போதும்  இதுபோன்ற ஒரு செயலை செய்து கொண்டுதான் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும். அவ்வாறு செய்வது நல்லதுதான். ஆனால் முடியாத பட்சத்தில் இந்த எளிதான விசயத்தை செய்யலாம். அது என்னவென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற பாசாங்கு அதாவது பாவனை செய்வதுதான்.

    பாசாங்கு செய்வதால் பலன் கிடைக்குமா?

    மகிழ்ச்சி குறித்து பாசாங்கு செய்யும் போது உங்கள் மனம் அதை நிஜம் என்பது நம்பி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தயார் என உங்கள் மூளைக்கு தகவல் வரும். உடனே எண்டோர்ஃபின்ஸ் சுரந்து உங்களுக்குள் புத்துணர்ச்சி பெருகும்.

    சோகத்தின் போது நம்மில் பலர் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விடுவார்கள். பிரச்சினைகளால் மனம் சங்கடப்படும் போது அல்லது கடந்த கால சோக சம்பவங்கள் எதையாவது நினைக்கும் போது நீங்கள் உங்களையும் அறியாமல் ஒரு கையால் கன்னத்தில் தாங்கி கொள்வீர்கள். இது எதனால் என்றால் துன்பத்தில் இருக்கும் தன்னை, தன் பிரச்சினைகளை யாராவது தாங்கிக் கொள்ள மாட்டார்களா? என்ற ஏக்கத்தின் வெளிபாடுதான் அது.

    அத்தகைய சமயங்களில் “கன்னத்தில் கை வைக்காதே... கப்பலா மூழ்கி விட்டது?” என்று பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது ஏன் தெரியுமா?நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை நாமேதான் தீர்க்க வேண்டும். அதற்கு மற்றவர்களை எதிர்பார்க்கக்கூடாது. பிறர் தீர்த்து வைப்பார் என்று எண்ணினால் துன்பத்தில் நாம் மூழ்கி போவோம்.

    நம்முடைய உடல் அசைவுகள் மற்றும்  மனநிலைகளை  மூளை உற்று கவனித்து அதற்குரிய சுரபிகளை சுரக்க செய்கிறது. கன்னத்தில் கை வைத்தபடியே கொஞ்சம் சிரிக்க முயன்று பாருங்கள். கண்களில் டன் டனாக சோகம் வழியுமே தவிர உள்ளத்தில் உற்சாகம் பிறக்காது. கன்னத்தை தாங்கி கொண்டிருக்கும் கையை சட்டென எடுத்து விட்டு உங்கள் உதட்டை புன்னகைப்பது போல் செய்யுங்கள். அவ்வளவுதான். உங்கள் சோகம் காணாமல் போய் விடும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மூளைக்கு செய்தி போகும். மூளை அதை அதிகப்படுத்துவதற்காக எண்டோர்ஃபின்ஸ் ஹார்மோனை சுரக்க செய்யும். உடனே உண்மையான உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களுக்குள் தொற்றிக்கொள்ளும்.

    சிரிப்பது போன்ற தோற்றமே இப்படி சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.

    Email:fajila@hotmil.com
    கோடைக்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். அவகேடோவில் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கோடைக்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். முகம், கை கால்கள், ஸ்கால்ப் ஆகியவற்றில் இருக்கக்கூடிய சருமத்தை வறண்டு போக செய்யும். சரியான முறையில் பராமரிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். க்ரீம்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை வைத்து உங்கள் சருமத்தை பராமரிக்கலாம்.

    சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ சிறந்தது. இதில் இருக்க கூடிய எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்கு தடவலாம். இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் இளமை தோற்றத்தை அள்ளித்தரும். மேலும் அவகாடோவில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

    முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
    பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த கீரையில் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொன்னாங்கண்ணிக்கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    சப்பாத்தி மாவு - 2 கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பொன்னாங்கண்ணிக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம், ப.மிளகாய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தது திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான சுவையான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்ப காலத்தில் சில விஷயங்களை செய்வது பிரசவத்தை கடினமாக்கும். எந்த விஷயங்களை எல்லாம் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாது என்பபதை விரிவாக பார்க்கலாம்.
    பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.

    ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சுகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை. வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.

    முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

    ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

    அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.

    இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.

    மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.

    அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம். ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.

    சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

    மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

    தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். 
    இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். நாம் ஏதாவது தவறு செய்தால் குழந்தையை பெரிதாக பாதிக்குமோ என்ற பயம் ஏற்படும். எனவே தாய்மார்கள் பயத்தை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரையை கேட்பது நல்லது. அப்படி பெரியவர்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். இந்ததொகுப்பே உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும். மேலும் தாய்மார்கள் செய்யும் இயல்பான தவறுகளை பற்றி தெரிந்துகொண்டால், அதை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம்.

    குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவேண்டும். அப்படி மாற்றாமல் இருந்தால் ஈரம் பரவி குழந்தைகள் அழத்தொடங்கும். பொதுவாக குழந்தையை டயப்பருக்கு பழக்கப்படுவதைவிட துணிக்கு பழக்கப்படுத்துவது நல்லது. டயப்பரில் இருக்கும் வேதிப்பொருட்கள் குழந்தையின் சருமத்தை பாதிக்கலாம்.

    குழந்தையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை குளிக்க வைத்தால் போதுமானது. அடிக்கடி குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது. தினமும் குளிக்க வைத்தால் குழந்தையின் சருமம் வரண்டு விடும்.

    பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை தொடுவது தாய்மார்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். பஞ்சு அல்லது சுத்தமான துணியை வைத்து தொப்புள் கொடியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் டயப்பரை வைத்தோ வேறு துணியை வைத்தோ தொப்புள் கொடியை மூடக்கூடாது. வெளிக்காற்று படவே குழந்தையின் தொப்புள் கொடியை விட்டு விட வேண்டும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடும். ஒருவேளை தொப்புள் கொடியின் சருமம் சிவப்பாகவும், வீங்கியும் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும். இதுபற்றி பெரிதாக பயப்பட வேண்டியதில்லை. 
    கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.
    கீரையைப் போன்ற உணவு வேறு எதுவும் இல்லை, கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்றார்கள் சித்தர்கள்.அதற்கு ஏற்ப பல உன்னதமான கீரை வகைகள் நம் மண்ணில் விளைகின்றன. அதில் பொன்னாங்கண்ணி கீரை மகத்துவம் நிறைந்தது. இந்த கீரை மேனிக்கு பொன் போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால் தான் அதை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள்.

    பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி.

    பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகைகள் உள்ளன. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் மருத்துவக்குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டுப் பொன்னாங்கண்ணியில் தான் பலவித சத்துகள் நிறைந்துள்ளன.

    பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.

    மருத்துவப் பயன்கள்:

    கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.

    பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்பார்கள். அந்த அளவுக்கு கண் ணொளிக் கொடுக்கும் சத்துக்கள் அதில் உள்ளன. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந் தால் கண்ணாடி அணிய வேண்டிய தேவையே இருக்காது.

    காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
    கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்
    என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்
    பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று.

    என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால் பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான்.

    பொன்னாங்கண்ணிக் கீரையைத் தைலமாகத் தயாரித்தும் பயன்படுத்தலாம். அதாவது கீரையின் சாறுஎடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகுப்பதம் வரை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண் புகைச்சல், உடல் சூடு ஆகிய பிரச்சினைகள் சரியாகும். புத்துணர்வும் கிடைக்கும். கண் பார்வையும் தெளிவாகும்.

    உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி - 1 கப்
    தண்ணீர் - 2 1/4 குவளை
    நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    கிராம்பு - 2 எண்ணிக்கை
    கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    மிளகு - 8 எண்ணிக்கை
    கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    தேங்காய் துருவல் - கப்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :


    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சமைப்பதற்கு முன்னர் குதிரைவாலி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, 10 நிமிடங்கள் கழித்து திறக்கவும். சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும்.

    மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அது சூடானதும் கிராம்பு, கடலைப் பருப்பை போட்டு, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின் மிளகைப் பொடித்து வாணலியில் போடவும்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறவும்.

    பின்னர் வேகவைத்த சாதத்தை இந்தக் கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி.

    குறிப்பு:

    இதே செய்முறையில் குதிரைவாலிக்கு பதிலாக, வரகு, திணை மற்றும் சாமை போன்ற சிறுதானியங்களையும் பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    'எபிடியூரல் டெலிவரி' என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.
    மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது.

    பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

    1. குழந்தையின் எடை.
    2. கருவறையில் குழந்தையின் நிலை.
    3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.
    4. சுருங்கும் தன்மையின் வலிமை.
    5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு

    என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார்கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.

    இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் 'எபிடியூரல் டெலிவரி' என்பது!

    'எபிடியூரல் டெலிவரி' என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.

    நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.

    எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.

    ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார்கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும் ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.



    எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!

    குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.

    ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.

    இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.

    ''இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘

    ''எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவு கள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘

    தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்கும். ''பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘

    ''பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். 
    தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது. இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது.

    நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

    சில வகை நோய்களாலும், சாப்பிட்ட உணவு நஞ்சாகிப்போனதாலும் சிலர் கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இச்சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும். செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.

    நன்மைகள்:

     
    * நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.
     
    * வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
     
    * பிளாக் டீயில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
     
    * மேலும், சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.
     
    * பிளாக் டீயில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.


     
    * பிளாக் டீயில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.

    * பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    * பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது.

    * பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.

    * ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

    * பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது.

    * இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.
     
    தீமைகள்:

     
    * ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக பிளாக் டீ அருந்த கூடாது.
     
    * அதிகமான பிளாக் டீ பருகினால் உறக்கம் பாதிப்படைய கூடும். 
     
    * வெறும் வயிற்றில் பிளாக் டீ வயிறு எரிச்சலை உண்டாக்கும்.
    தோசை, இட்லி, சூடான சாத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பூ (பொடியாக நறுக்கியது) - 1 கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    மிளகாய் வற்றல் - 4
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்
    பச்சைப் பட்டாணி - 1 கப்
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    தனியா - 1 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    முந்திரி - 4
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    பட்டாணியையும் வாழைப்பூவையும் வேகவைத்து எடுங்கள்.

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகாய் வற்றல், சோம்பு, பொட்டுக்கடலை, தனியா, முந்திரி ஆகியவற்றை ஊறவைத்து அவற்றுடன் தேங்காய் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

    தக்காளி குழைய வெந்ததும் வேகவைத்த வாழைப்பூவையும் பட்டாணியையும் சேர்த்துக் கிளறுங்கள்.

    அடுத்து அதில் அரைத்த விழுதை ஊற்றி, கரம் மசாலா துள், மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

    குழம்பு திக்கான பதம் வந்ததும் கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.

    சூப்பரான வாழைப்பூ குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீச்சலில் இருந்து வித்தியாசப்படும் அகுவா ஏரோபிக்ஸ் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எளிதில் அழகான உடல் வடிவத்தைப் பெறவும் நிச்சயம் உதவும்.
    புதிய ஃபிட்னெஸ் பயிற்சி வீட்டின் களேபரங்களுக்கு இடையே டிரெட்மில்லில் மூச்சிரைக்க ஓடும் நேரம் எல்லாம் முடிந்து விட்டது, புதிய அகுவா ஏரோபிக்ஸை முயற்சித்து பார்க்கும் நேரம் இது. ஒருங்கிணைந்த கை, கால் அசைவுகளை மார்பளவு நீரில் நின்று கொண்டு செய்யும் தீவிரமான உடற்பயிற்சி முறை இது. உடலின் கொழுப்பைக் குறைக்கவும், அழகான உடலைப் பெறவும் அகுவா ஏரோபிக்ஸ் ஒரு தீவிரமான, ஆனால் குறைந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு உடற்பயிற்சியாகும்.

    நீச்சலில் இருந்து வித்தியாசப்படும் அகுவா ஏரோபிக்ஸ் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எளிதில் அழகான உடல் வடிவத்தைப் பெறவும் நிச்சயம் உதவும். புத்துணர்வு அளிக்கும் அம்சம் தவிர, உடல், ஆரோக்கிய பலன்களுக்காகவும் இது புகழ்பெற்றது. நீரானது காற்றைவிட 800 மடங்கு அடர்த்தியாக இருப்பதால், நீங்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிக்கு இயற்கையான ஒரு எதிர்ப்புசக்தி எப்போதும் இருக்கும். இதனால் நீச்சல் குளத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவுக்கும் கூடுதல் ஆற்றல் செலவாகும். எடுத்துக்காட்டாக, நீரில் நீங்கள் ஜாகிங் செய்தால், நிமிடத்துக்கு 11 முதல் 12 கலோரிகள் வரை செலவழிப்பீர்கள். ஆனால் ஜிம்மில் ஒரு நிமிடத்துக்கு 8 முதல் 9 கலோரிகள் மட்டுமே செலவாகும்.

    கிடைக்கும் பலன்கள்

    அகுவா ஏரோபிக்ஸ், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை அதிகரித்து, உடலின் எல்லா முதன்மையான தசைப் பகுதிகளையும் வலுவாக்குகிறது.

    1. அகுவா ஏரோபிக்ஸ் கார்டியோ வாஸ்குலர் ஃபிட்னெஸ் வலிமைக்கான பயிற்சிகளில் உதவுகிறது.
    2. நடன அசைவுகளும், சீரான அசைவுகளும் இதில் இருப்பதால், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
    3. செரிமானம், ரத்த ஓட்டம் போன்ற செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதுடன், மனஅழுத்தத்தையும் குறைக்கிறது.
    4. நீரின் மிதக்கவைக்கும் தன்மை, உடல் எடையை பெருமளவு குறைப்பதால், மூட்டுகள் மற்றும் தசைகளில் சுமை குறையும்.

    எல்லா வயதினரும் அகுவா ஏரோபிக்ஸை தாராளமாகச் செய்யலாம். ஆனால் கர்ப்பமடைந்த பெண்கள், மூட்டு பிரச்சினைகள் கொண்ட முதியவர்கள், மற்றவர்கள் பார்க்குமாறு ஜிம்மில் பயிற்சி செய்ய தயங்குபவர்கள் போன்றவர்களுக்கு இது ஏற்றது. ஆனாலும் ஒரு டாக்டரின் ஆலோசனையைப் பெற்ற பின் செய்வது நல்லது.
    இரண்டு வயது குழந்தைகள் கூட, போனில் வீடியோ பார்க்க ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகள் முன்பு போல ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்து விட்டது. அவர்கள் இன்று திரை ஊடகங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு வீட்டின் வரவேற் பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக் கொண்டிருக்க, தாய் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பிள்ளைகள் ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை பார்ப்பது சகஜமானது தான். திரையில் அதிக நேரம் செலவிடுவது, அதிலும் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் இவ்வாறு செய்வது பரவலாகி வருகிறது. இரண்டு வயது குழந்தைகள் கூட, பல்வேறு சாதனங்களில் ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது உணவு உட்கொள்ளும் பிரச்சனை, குழந்தை பருவ பருமன், கவன சிக்கல், தூக்க பாதிப்பை உண்டாக்கலாம்.

    திரையில் செலவிடும் எல்லா நேரங்களும் மோசமானது அல்ல. மணிக்கணக்கில் பார்க்க கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களும் அநேகம் உள்ளன. பல திரைகளில் விருப்பமானவற்றை பார்ப்பது குழந்தைகள் மனதை லேசாக்குகிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது அல்லவா?

    குழந்தைக்கு போரடிக்கும் போது, வெளியே மழை பெய்து விளையாட முடியாமல் போனால், டிவி பார்க்கத்தோன்றும். நீண்ட தூரம் காரில் செல்லும் போது குழந்தை அடம்பிடித்தால், ஃபோனில் வீடியோ பார்க்கச் செய்து சமாளிக்கலாம். ஃபோனில் நண்பர்களுடன் பேச விரும்பும் போது, குழந்தை தன்னுடன் பேச சொல்லும் போது, ஐபேடை கையில் கொடுத்து சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. இப்படி தான் குழந்தைகளின் வாழ்க்கையில் திரைகளின் தாக்கம் அதிகரித்துவிட்டது.

    திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கண்காணிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத திரை நேரம், வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு பொருத்தம் இல்லாத விஷயங்களை பார்க்கின்றனர். இது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். திரைகளில் நேரம் செலவிடுவது பிரச்சனை அல்ல; ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பது தான் சிக்கல். 
    ×