என் மலர்

  நீங்கள் தேடியது "Millet Coconut Rice"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள்:

  குதிரைவாலி அரிசி - 1 கப்
  தண்ணீர் - 2 1/4 குவளை
  நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  கிராம்பு - 2 எண்ணிக்கை
  கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
  பெரிய வெங்காயம் - 1
  மிளகு - 8 எண்ணிக்கை
  கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
  கொத்தமல்லி தழை - சிறிதளவு
  தேங்காய் துருவல் - கப்
  உப்பு - சுவைக்கேற்ப  செய்முறை :


  வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  சமைப்பதற்கு முன்னர் குதிரைவாலி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, 10 நிமிடங்கள் கழித்து திறக்கவும். சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும்.

  மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அது சூடானதும் கிராம்பு, கடலைப் பருப்பை போட்டு, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  அடுத்து அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் சற்று வதங்கிய பின் மிளகைப் பொடித்து வாணலியில் போடவும்.

  வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அடுப்பை அணைக்கவும்.

  இப்பொழுது தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறவும்.

  பின்னர் வேகவைத்த சாதத்தை இந்தக் கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

  சூப்பரான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி.

  குறிப்பு:

  இதே செய்முறையில் குதிரைவாலிக்கு பதிலாக, வரகு, திணை மற்றும் சாமை போன்ற சிறுதானியங்களையும் பயன்படுத்தலாம்.

  இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  ×