என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடல் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் புரதத்தை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
1. நகம், கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகள்
கூந்தல், நகம் மற்றும் சருமம் ஆகியவற்றிற்கு புரதம் மிகவும் முக்கியமானது. உடலில் புரதச் சத்து குறைந்தால் சருமம் சிவந்து போதல், நகம் உடைதல், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
2. தசை இழப்பு
தசைகளின் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது. உடலில் புரத குறைபாடு ஏற்பட்டால், முதலில் நீங்கள் தசைகளை இழக்க ஆரம்பிப்பீர்கள். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
3. எலும்பு முறிவு ஏற்படும்
எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை பராமரிக்க புரதம் மிகவும் அத்தியாவசியமானது. போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளாவிட்டால் எலும்புகள் வலுவிழந்து முறியும் வாய்ப்பு உள்ளது.
4. அதிகபடியான பசி ஏற்படும்
நாள் ஒன்றுக்கு தேவையான புரதம் கிடைத்துவிட்டால் , அடிக்கடி பசியுணர்வு ஏற்படாமல் இருக்கும். புரத குறைபாடு இருக்கும்போது நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள் இதனால் உடலில் கலோரிகள் சேர்த்து உடல் பருமானாகிவிடும்.
5. நோய் தொற்றின் அபாயம் ஏற்படும்
உடலுக்கு முக்கியமாக தேவைப்படுவது புரதம். புரத குறைபாட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் மிக எளிதில் நோய் தொற்று ஏற்படும்.
6. ஃபேட்டி லிவர்
புரத குறைப்பாட்டின் மற்றொரு அறிகுறி கல்லீரலில் கொழுப்பு தேக்கமடைவது. கல்லீரல் செல்களில் கொழுப்பு குவிந்து ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தை உண்டாக்கும்.
7. குழந்தைகளில் வளர்ச்சியில் தாமதம்
குழந்தைகளில் தசை மற்றும் எலும்பு வளர்ச்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் துணையாய் இருப்பது புரதம். எனவே வளரும் குழந்தைகளுக்கு புரதத்தை அதிகம் கொடுக்க வேண்டும்.
கடல் உணவுகள், சோயா, முட்டை, பீன்ஸ், பால், சீஸ், யோகர்ட், பாதாம், ஓட்ஸ், கோழி, காட்டேஜ் சீஸ், ப்ரோக்கோலி, மீன், சிறுதானியம், பருப்பு வகைகள், பூசணி விதை, ஆளிவிதை, சூரியகாந்தி விதை, இறால், கடலை மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உணவில் சேர்த்து கொண்டு புரத குறைபாட்டை விரட்டலாம்.

பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
11லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.
20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.
மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங் (Maternal Serum Screening)
கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.
கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் (First Trimester Screening) சோதனையும், 15-21 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் (Triple Screening test) சோதனையும் செய்ய வேண்டும்.
பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் (Carrier Screening) சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்

குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் வித்தியாசமான, சுவையான, ஆரோக்கியமான மில்க்ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் நாவல்பழ மில்க்ஷேக் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
நாவல்பழக்கூழ் - அரை கப்
குளிர்ந்த பால் - தேவையான அளவு (காய்ச்சி ஆறவைத்தது)
தூளாக்கிய ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
விருப்பமான ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை :
குளிர்ந்த பாலுடன் நாவல்பழக்கூழ் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும்.
இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடித்து பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.

கோகோ சிரப் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை :
குளிர்ந்த பாலுடன் நாவல்பழக்கூழ் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும்.
இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடித்து பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.
மேலே கோகோ சிரப் ஊற்றிப் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உயர் கல்வி, தனித்திறன், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் இடம்பெயர்வது பெரிய அளவில் நிகழ்கிறது. திருமணம்தான் பெண்கள் இடம்பெயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
உலக அளவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதிலும் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் 12 சதவீதம் குறைந்துள்ளது. சமூக பொருளாதார காரணிகளில் மாற்றம் நிகழும்போது பெண்களின் பங்களிப்பு மீண்டும் உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருத்தமற்ற வேலை, குடும்ப பொறுப்புகள், வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் சராசரி அளவை விட 22 புள்ளிகள் குறைவாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெண்கள் இடம் பெயர்வது முக்கிய காரணமாக இருக்கிறது. உயர் கல்வி, தனித்திறன், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக பெண்கள் இடம்பெயர்வது பெரிய அளவில் நிகழ்கிறது.
திருமணம்தான் பெண்கள் இடம்பெயர்வதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 3.1 ஒரு சதவீத ஆண்களே திருமணத்திற்கு பிறகு இடம் பெயர்கிறார்கள். ஆனால் திருமணத்தால் இடம் பெயரும் பெண்களின் எண்ணிக்கையோ 71.2 சதவீதமாக இருக்கிறது. அதிலும் ஆண்கள் பணி சார்ந்து இடம் மாறும்போது மனைவியும் கட்டாயம் இடம்பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. அங்கு சென்றபிறகு பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இந்தியாவை பொறுத்தவரை திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் தேவை சார்ந்து இடம்பெயரும்போது கடும் எதிர்ப்பு எழுகிறது. அதேவேளையில் திருமணமான பெண்கள் சொந்த வீட்டில் இருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயரும்போது எதிர்ப்பு எழுவதில்லை.

பண்டைக்காலம் முதலே ரோஸ் வாட்டர் அழகு கலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ் வாட்டரை சருமத்திற்கு எப்படியொல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. தினசரி மேக்கப் செய்த பிறகு ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும். தினமும் காலையில் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி வந்தால் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
2. ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து பஞ்சில் நனைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு பின் கூந்தலை அலசி வந்தால், கூந்தல் மென்மையாக இருக்கும்.
3. ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவிய பின், சில துளிகள் க்ளிசரின் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வரலாம். இது முகத்திற்கு சிறந்த க்ளென்சராக இருக்கும்.
4. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கலாம். இதனால் கண்களில் சோர்வு மற்றும் வறட்சி மறைந்துவிடும்.
5. ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிய பிறகு ஒரு கப் ரோஸ் வாட்டரால் கூந்தலை மேலும் ஒரு முறை அலசலாம். இது கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.
6. குளிர்ந்த ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவலாம். அப்படி தடவினால் சரும துளைகள் சுருங்கி முகம் பளபளக்கும்.
7. ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.
8. சில துளிகள் தேங்காய் எண்ணெயுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம்.
9. இரண்டு மேஜைக்கரண்டி கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்துவிடும்.
10. ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெய் மற்றும் நீங்கள் விரும்பும் மாய்சுரைசிங் க்ரீம் ஆகிய மூன்றையும் நன்கு கலந்து சருமம் முழுவதும் தடவிக் கொள்ளலாம். இது உடலுக்கு சிறந்த மாய்சுரைசிங் க்ரீமாக செயல்படும்.

கோடை காலத்தில் அதிகளவு சாலட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
வெள்ளரிக்காய் - 1/2 துண்டு,

செய்முறை :
தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.
சத்தான வெள்ளரிக்காய் தக்காளி சாலட் ரெடி.
பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
வெள்ளரிக்காய் - 1/2 துண்டு,
கேரட் - 1.

செய்முறை :
தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.
சத்தான வெள்ளரிக்காய் தக்காளி சாலட் ரெடி.
குறிப்பு: சாலட் செய்ய நாட்டுத்தக்காளி, ஹெப்பிரிட் தக்காளியைப் பயன்படுத்தாமல், பெங்களூர் தக்காளியை பயன்படுத்தினால் சாலட் புளிக்காது.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.
அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர். தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும்.
தோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் (மரத்தின் கீழ் என்றால் மிகவும் நன்று) செய்ய வேண்டிய பயிற்சி. ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம். இரு கால்களையும் உடலின் அகலத்திற்கு வைத்து நின்றுகொள்ளவும், வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்துக்கொள்ள வேண்டும், இந்நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழவேண்டும். உட்காரும்போது மூச்சினை மெதுவாக உள்ளே இழுக்கவும், எழும்போது மூச்சினை மெதுவாக வெளியே விடவும். இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, என்று பழகியபின் 21 முறை தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராணவாயு >70% மூளைக்கு சென்று உடலுக்கு புத்துணர்ச்சி, உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கிறது. நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அடைகிறோம். குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்து கல்வி, கேள்வி அறிவுச்செல்வம் பெருகுகிறது.

மேலை நாட்டு குழந்தைகள் விதவிதமான தண்ணீர் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்ட சில தண்ணீர் விளையாட்டுகளை நாமும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
நாம், கோடையில், வெப்பம் குறைவாக இருக்கும் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கிறோம். தண்ணீர் நிறைந்த இடங்களில் குளியல்போட்டும், விளையாடியும் மகிழ்ச்சி கொள்கிறோம். மேலை நாடுகளில் தண்ணீர் பூங்காக்களுக்கும், பனிப்பிரதேசங்களுக்கும் படையெடுப்பது அங்குள்ள மக்களின் வாடிக்கை. மேலை நாட்டு குழந்தைகள் விதவிதமான தண்ணீர் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். தண்ணீர் விளையாட்டுகள் என்றால் நீச்சல், படகுப்போட்டி, தண்ணீர் ஜிம்னாஸ்டிக், ஐஸ் சிற்பம் போன்றவையல்ல. வீட்டிலேயே எளிதாக விளையாடி மகிழும் வேடிக்கை விளையாட்டுகள். அப்படிப்பட்ட சில தண்ணீர் விளையாட்டுகளை நாமும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
தண்ணீர் குண்டு
சிறிய பலூன்களில் நீர் நிரப்பிக் கொண்டு, மற்றவரை குறிபார்த்து எறிந்து விளையாடுவது தண்ணீர் குண்டு அல்லது தண்ணீர் பலூன் விளையாட்டு என அழைக்கப்படுகிறது. ஒருவர் சரியாக எறிந்து மற்றவரை ‘அவுட்’ ஆக்கிவிட்டால், அவர் பின்னர் பலூன் எறிவார். மற்றவர்கள் தப்பித்து ஓட வேண்டும்.
இதேபோல மற்றொரு விளையாட்டு உண்டு. பலூன்களில் ஊசியால் குத்தி ஓட்டை போட்டுவிட்டு நீரால் நிரப்ப வேண்டும். பின்னர் சிறுவர்கள் ஒவ்வொருவர் கையிலும் பலூனை கொடுத்துவிட்டு நீரை துளைவழியே அழுத்தி வெளியேற்றச் செய்ய வேண்டும். யார் விரைவாக தண்ணீரை வெளியேற்று கிறாரோ அவரே வெற்றி பெற்றவர். யார் கடைசியாக தண்ணீரை மிச்சம் வைத்திருக்கிறாரோ அவர் தோற்றவர் ஆவார். இந்த தண்ணீரை மற்றவர் மேல் பீய்ச்சி அடித்தும் விளையாடி மகிழலாம்.
நீர் நிரப்புதல்
பாட்டிலில் நீர் நிரப்பி விளையாடுவதுபோல, பஞ்சு மூலம் நீர் உறிஞ்சி நிரப்பி விளையாடும் விளையாட்டு மேலை நாடுகளில் பிரபலம். பெரிய வாளி ஒன்றில் நீர் வைத்துவிட்டு, ஆளுக்கொரு துண்டு பஞ்சு கொடுத்துவிடுவார்கள். அதை நீரில் அமிழ்த்தி எடுத்துச் சென்று தனக்குரிய வாளியில் பிழிந்து நீரை நிரப்ப வேண்டும். யார் முதலில் தனது வாளியை நிரப்பு கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.

குழுவாக விளையாடக்கூடிய மற்றொரு நீர் நிரப்பும் விளையாட்டு உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் மூன்று முதல் 5பேராக பிரித்துக் கொள்ளலாம். பின்பு அவர்களை நேர் வரிசையில், சிறிது தூர இடைவெளியில் நிறுத்தி வைக்கலாம். ஒருபுறம் பெரிய பாத்திரத்தில் நீர் வைத்துவிட்டு ஒவ்வொரு குழுவுக்கும் சிறிய கோப்பை அல்லது டம்ளர் கொடுக்க வேண்டும்.
ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று அடுத்தவருக்கு கொடுக்க, அவர் மற்றவருக்கு மாற்றிவிட இறுதியாக நிற்பவர் தங்களுக்கான காலி பாத்திரத்தை நிரப்ப வேண்டும். படத்தில் உள்ளதுபோல நெருக்கமாக நின்று பின்னால் இருப்பவருக்கு தண்ணீரை மாற்றியும் விளையாடலாம். எந்தக் குழு விரைவாக செயல்பட்டு தங்கள் பாத்திரத்தை நீரால் நிரப்புகிறார்களோ அந்த குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
நனையாமல் தப்பித்தல்...
புல் தரைக்கு நீர்ப்பாய்ச்சும் துளையுள்ள குழாய் இருந்தால் அல்லது தண்ணீர் தெளிக்கும் ஸ்பிரேக்கள் இருந்தால் இந்த விளையாட்டு விளையாடலாம். தண்ணீர் துப்பாக்கிகள் இருந்தாலும் இதை விளையாடலாம்.
முதலில் நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயை இயக்க ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் அல்லது தண்ணீர் ஸ்பிரே, தண்ணீர் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக நிற்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஸ்பிரே அல்லது துப்பாக்கி மூலம் தண்ணீரை தெளிக்க தயாராக நிற்க வேண்டும்.
தண்ணீர் தெறிக்கும் தூரத்தில் எல்லைக்கோடு வரைந்து, அதில் தண்ணீரில் நனையாமல் ஓடிக்கடப்பதே போட்டியாக வைத்து விளையாட வேண்டும். விசில் அடிக்கப்பட்டதும் மற்றவர்கள் தண்ணீரை தெளிக்க, போட்டியாளர் தண்ணீர் தன்மேல் படாமல் குறிப்பிட்ட தூரம் ஓடிக் கடக்க வேண்டும். நனையாமல் ஒருவர் இலக்கை அடைந்தால் அவர் வெற்றி பெற்றவர் ஆவார்.

தண்ணீர் வாலிபால்
ஒரு குழுவுக்கு 5 அல்லது 7 பேராக பிரித்துக் கொள்ள வேண்டும். ஏராளமான பலூன்களில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி ஊதி வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை முழு அழுத்தத்தில் நிரப்பாமல் சிறிது குறைவாக நிரப்பினால் எளிதில் உடையாமல் இருக்கும்.
குழுவில் ஒருவர் பலூனை தங்கள் பக்கத்தில் இருந்து வலையைத் தாண்டி உயரமாக தூக்கி எறிய வேண்டும். எதிர்திசையில் இருப்பவர்கள் இரண்டிரண்டு பேராக சேர்ந்து துண்டின் நுனி களைப் பிடித்தவாறு, பலூன் உடையாமல் கேட்ச் பிடிக்க வேண்டும். பலூன் கீழே விழுந்து உடைந்தால் எதிரணிக்கு புள்ளி வழங்கப்படும். துண்டினுள் உடைந்தால் பலூனை மாற்றிக் கொள்ளலாம். யார் நிறைய புள்ளிகள் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றியைத் தீர்மானிக்கலாம்.
பலூன் பிடித்தல்
நமது ஊர்களில் நடத்தப்படும் இசை இருக்கை (மியூசிக்கல் சேர்) போன்ற விளையாட்டாக இதை விளையாடலாம். முதலில் பலூன்களில் நீர் நிரப்பிக் கொள்ளுங்கள். பெரிய வட்டத்தில் சிறுவர்களை சிறிது இடைவெளியில் நின்று கொள்ளுங்கள். பலூனை அடுத்தவர் கைகளுக்கு தூக்கி வீசச் செய்யுங்கள். யார் பலூனை உடைக்கிறார்களோ அவர்கள் வெளியேறிவிட வேண்டும். அதேபோல மற்றவர் கைகளுக்கு பலூனை எறியாமல், தூரமாக வீசினாலும் அவர்களும் வெளியேற வேண்டும். இறுதியில் யார் வெளியேறாமல் நிற்கிறாரோ அவர்தான் வெற்றியாளர் ஆவார்.
இந்த நீர் விளையாட்டுகளை விளையாடும் முன்பு, ஓய்வு நேர உடைக்கு அல்லது குளியல் உடைக்கு மாறிக் கொள்ளுங்கள். வீட்டில் தம்பி பாப்பா இருந்தால் குளியல் போடும் முன்பாக, இந்த தண்ணீர் விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் இந்த விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். குடிநீரில் விளையாடுவதையும், தண்ணீர் அதிகமில்லாத நேரத்தில் தண்ணீரை கொட்டி விளையாடுவதும் அம்மாவுக்கு சங்கடத்தை தரும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது குட்டீஸ். நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள்தானே. சமர்த்து குட்டீஸ்...

25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம்.

25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம். அவை
* பாதாம் பருப்பு: அன்றாடம் 5-6 பாதாம் பருப்புகளை உண்பது சிறந்த கண் பார்வைக்கு உதவும். கண் பாதிப்புகளைத் தவிர்க்கும்.
* பீட்ரூட் இலை
* பச்சை, சிகப்பு, மஞ்சள் குடைமிளகாய்.
* பரோகலி விதை
* கேரட்
* சியா விதைகள்
* ஃப்ளாக் விதை
* கிரீன் டீ
* கீரை
* மாம்பழம்
* சிகப்பு பூசணி
* சர்க்கரைவள்ளி கிழங்கு
* தக்காளி இவை அனைத்தும் கண் பார்வை குறைபாட்டினை சீர் செய்யும்.

செட்டிநாட்டு அவியலை சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல... டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை - சிறிதளவு
அரைக்க...
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 3 பல்
சோம்பு - 1 ஸ்பூன்

செய்முறை
கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, பெருஞ்சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டையை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
காய்கள் வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
கத்திரிக்காய் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை - சிறிதளவு
அரைக்க...
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 3 பல்
சோம்பு - 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை - ஒரு ஸ்பூன்

செய்முறை
கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, பெருஞ்சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டையை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
காய்கள் வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான்... செட்டிநாட்டு சுவையான அவியல் தயார்...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆரோக்கியம் குறித்து வல்லுநர்கள் கூறுவதை நாம் அறிவோம். நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
ஆம். உண்மையில் ஆரோக்கியத்திற்கும் நம் அழகிற்கும் இரவு நேரத்தில் வெந்நீர் குடிப்பது அவசியம். சிலர் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், சிறுநீர் உபாதைகள் ஏற்பட்டு, தூக்கம் கெட்டுவிடும் என்றே தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுவார்கள். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரவு படுக்கும் முன் வெந்நீர் குடித்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும். மேலும் வெந்நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகளை பார்ப்போம்.
உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது தான் மன அழுத்தம் மற்றும் உணர்வு நிலையில் ஏற்ற இறக்கம் போன்றவை உண்டாகும். மேலும் இதனால் தூக்கம் தடைப்படும். தினசரி இரவு நேரத்தில் தூங்க போகும் முன் வெந்நீர் குடித்துவிட்டு தூங்குவதால் உணர்ச்சி நிலை சீராக இருக்கும்.
வெந்நீர் அருந்துவதால், உடலின் உள்ளே வெப்பம் உற்பத்தியாகி, வியர்வையாக வெளியேறும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
நம் உடலுக்கு நீர் என்பது மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால், வியர்வை, சிறுநீர் போன்றவற்றால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனை சமன் செய்ய தொடர்ச்சியாக நீர் அருந்துவது கட்டாயம். இரவு நேரத்தில் வெந்நீர் குடித்துவிட்டு படுப்பதால் உடலில் நீர் தேவை பூர்த்தியாகிறது.
சாப்பிட்டு முடித்தபின் வெந்நீர் அருந்துவதால் செரிமானம் எளிதாக இருக்கும். கடினமான உணவுகள் கூட எளிதில் ஜீரணமாக்க கூடிய திறன் வெந்நீருக்கு உண்டு. இரவு நேரத்தில் செரிமானம் என்பது சற்றே தாமதமாக இருக்கும். வெந்நீர் குடுப்பதால் அந்த பிரச்சனை இருக்காது.
வெந்நீர் அருந்துவதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகிறது. உணவு எளிதில் உடைத்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்க செய்கிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது. காலையும் இரவும் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியமாக வாழ இதனை பின்பற்றுவோம்.

குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் வாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது.
குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் வாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது. சர்க்கரை நோய் வரும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. சிலவகை புற்றுநோய்கள் வரும் அபாயத்தை 20 முதல் 50 சதவீதம் வரை குறைக்கிறது.
உடல் எடையை குறைப்பதற்கும் வாக்கிங் உதவுகிறது. 20 நிமிடங்களில் 1,500 மீட்டர் தூரம் நடந்தால்கூட சுமார் 100 கலோரி எரிக்கப்படுகிறது. வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வழியில்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும், உடல் நலனுக்காக ஏதாவது ஒன்றை செய்ய நினைப்பவர்களுக்கும் நடைபயிற்சி எளிமையானது.
நம் உடல் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாக இருப்பதற்கு உதவுகிறது. வேகமாக நடக்கும் போதுதான் உடலில் எல்லா தசைகளும் ஒரே நேரத்தில் இருக்கமாகின்றன. நடைபயிற்சி பழக ஆரம்பிக்கும்போது வலிப்பது இதனால்தான். போகப் போக இந்த வலி குறைந்து தசைகள் நெகிழ்வு பெறுகின்றன.
இடுப்புக்கு கீழ் தேவையற்ற சதையைக் குறைத்து கச்சிதமான உடல்வாகு பெற நினைப்பவர்களுக்கு இதைவிட சிறந்த உடற்பயிற்சி எதுவுமில்லை. இதற்கு எவ்வளவு வேகம் முடியுமோ, அவ்வளவு வேகத்தில் நடக்க வேண்டும்.
ஒரு நாளில் 15 நிமிடமாவது விறுவிறுப்பான நடைபயிற்சி செய்பவர்களுக்கு ஆயுளில் 3 ஆண்டுகள் கூடுகிறது. முறையாக இதை செய்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் வருவதில்லை. நடைபயிற்சியால் மூட்டுவலி தொல்லை 25 சதவீதம் குறைகிறது. முதுமை காலத்தில் ஆஸ்தியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் தாக்குவதையும் இதன்மூலம் தவிர்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதம் தருகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு நடைபயிற்சியைவிட சிறந்த பலன் தரும் மருந்து எதுவும் இல்லை. எந்த உடற்பயிற்சியும் உடலுக்கு ஏராளமான ஆக்சிஜனைத் தரும். எனவே கடற்கரை, பூங்கா, திறந்தவெளி, மொட்டைமாடி என எங்கு நடைபயிற்சி செய்தாலும் சுத்தமான காற்று அதிகம் கிடைப்பதால் நுரையீரல் சீராக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் தவிர்க்கலாம்.