என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண்கள் குரல் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதை விட அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் கேட்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை கோரிக்கை.
    ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற காலம் மாறி இன்று ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் நிலை வந்துவிட்டது. இந்திய ராணுவத்தில் “காம்பட்” எனப்படும் போர்களத்தில் சண்டையிடும் பணிகளில் மகளிர் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக சேவை செய்கின்றனர். சி.ஆர்.பி. போன்ற துணை ராணுவ பிரிவுகளில் பெண்கள் பட்டாலியன் அணியில் முழுக்க பெண்களே பணி புரிகின்றனர். போர் விமான பிரிவிலும் பெண்கள் பைலட்டுகளாக பயிற்சி பெற்று வீர தீரத்தில் ஆண்களுக்கு நாங்களும் நிகர் என்று நிரூபித்துள்ளனர். காவல் துறையிலும் இதர அரசு பணிகளில் அதிகமாக பெண்கள் பங்குகொள்வது வரவேற்க வேண்டிய மாற்றம். அரசு பணிகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடு.

    தேர்தல் பணியில் பெண் அதிகாரிகள் நடத்தும் வாகன சோதனையில் அதிகம் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. 2011-ம் ஆண்டு தேர்தலின் போது ஒரு பெண் வருவாய்த்துறை அதிகாரி நடத்திய சோதனையில் ஐந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது மறக்க முடியாது. இப்போதுள்ள இளம் சேலம் மாவட்ட கலெக்டர் துணிச்சலோடும், பொறுப்புணர்ச்சியோடும் செயல்பட்டு மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்பது உண்மையாகிறது.

    துணிச்சலோடு செயல்படுவதற்கு உறுதுணையாக இருப்பது கல்வி. அதிலும் பெண்களுக்கு கல்வி கொடுப்பது ஒரு குடும்பத்திற்கு விளக்கேற்றியது போல், அதன் பலனால் ஒரு தலைமுறை முன்னுக்கு வரும். குழந்தைகளை தாயுள்ளத்தோடு வழிநடத்தும் பல பெண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மயிலை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியில் ஆசிரியைகள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து மற்ற குழந்தைகளுக்கு இணையாக திறமையை வளர்த்து அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் காந்தாடு பஞ்சாயத்து யூனியன் அரசு தொடக்கப்பள்ளியின் ஆங்கில ஆசிரியை அபர்ணா மோஹன் தனது சொந்த பணம் செலவு செய்து பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தி குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேசவும், சரியாக உச்சரிக்க பயிற்சியும் அளித்துவருகிறார். மேலும் ரூ.7 லட்சம் கடன் பெற்று காணொலி மூலம் மாணவர்கள் பயில எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கியுள்ளார். இவரது தன்னலமற்ற சேவை செய்தியாக வந்து பலர் இவரது முயற்சியை பாராட்டி பள்ளிக்கு பொருளுதவி அளித்துள்ளனர். வீரர்களுக்கு விசேஷ பயிற்சி அளித்து அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்க உதவி அளித்து வருகிறார். இத்தகைய கனவு ஆசிரியர்கள் உள்ளதால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

    உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் குறியீட்டில் 47 சதவீதம் எட்டி தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. அரசு பணி போட்டி தேர்வுகளில் பெண்கள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்கள். பேனோ சபீன் என்ற பார்வை குறைவான மாற்றுத்திறனாளி தமிழ் பெண் அகில இந்திய அளவில் 2015-ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். போட்டி தேர்வில் வெற்றி பெற்று ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணிபுரிகிறார். இத்தகைய முன்னேற்றத்திற்கு நடுவே மனதை உறுத்தும் நடப்புகள் வேதனை அளிக்கின்றன. ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் இந்தியாவில் கொல்லப்படுகின்றன.

    பெண் சிசு வதையால் முளைக்கும் பிரச்சினைகள் இவை. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு உண்மை நிகழ்வு. விவசாய குடும்பத்தை சேர்ந்த கணவன்-மனைவிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பெண்ணுக்கு திருமணம் செய்ய சொத்து முழுவதும் விற்றால் கூட போதாது. அத்தகைய அவல நிலை. அந்த பெண் மூன்றாவது முறை கர்ப்பமுற்றாள். அடுத்தது பெண் குழந்தை என்றால் பிறந்த வீட்டிலிருந்து திரும்ப வேண்டாம் என்று கணவன் கறாராக கூறிவிட்டான். ஆனால் பிறந்தது பெண்குழந்தை.

    அபலை பெண் செய்வதறியாது தவித்தாள். அவளது சகோதரன் கணவனிடம் பேசி மனைவியை ஏற்றுக்கொள் மூன்றாவது குழந்தை இருக்காது என்ற உத்திரவாதம் அளித்தான், அப்படியாவது தங்கைக்கு வாழ்வு கிடைக்கும் என்ற ஆசையோடு! ஆனால் அவளுக்கோ உடன்பாடில்லை. வேண்டா வெறுப்பாக கணவன் வீட்டிற்கு சென்று மூன்றாவது கைக்குழந்தையை வெறும் உடம்போடு பனியில் உறையட்டும் என்று நெஞ்சை கல்லாக்கி வீட்டு வாசல் திறந்த வெளியில் போட்டுவிட்டு படுத்தாள்.

    குழந்தை இறந்திருப்பாள் என்று நெஞ்சம் பதப்பதைக்க மறுநாள் எழுந்து பார்த்தால் குழந்தை உடம்பு பனியில் ஜில்லிட்டிருந்தது, ஆனால் மூச்சு நிற்கவில்லை. பச்சிளம் குழந்தைக்கு உயிரோடு போராடும் சக்தியும் வைராக்கியமும் இருக்கும்போது நான் ஏன் மனம் கலங்க வேண்டும் என்று அந்த தாய் மூன்று பெண் குழந்தைகளையும் போராட்டத்தின் நடுவே ஆளாக்கி வெற்றி கண்டாள். இத்தகைய வெற்றி போராட்டங்கள் வெறு சிலவே.

    சோகங்கள் பல. தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளால் வட மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் இங்கில்லை. பெண்கள் குரல் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பதை விட அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் கேட்கப்பட வேண்டும், தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை கோரிக்கை. பெண்கள் பாதுகாப்பு பல மாநிலங்களில் நகரங்களில் சவாலாக உள்ளது.

    பாலியல் கொடுமைகள் குறையவில்லை. டெல்லி நிர்பயா மானபங்க கொடுமைக்கு பிறகு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய நீதியரசர் வர்மா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு நல்ல பல பரிந்துரைகள் பெண்களுக்கு எதிரான வழக்குகள் துரிதப்படுத்தவும் பாதுகாப்பு பலப்படுத்தவும் அளிக்கப்பட்டன. நடைமுறைபடுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். சென்னை பாதுகாப்பான நகரம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முதலிடம் வகிக்கிறது என்பதில் பெருமை கொள்ளலாம்.

    இணையதளத்தில் வரும் ஆபாச படங்கள் கைபேசி புகைப்படங்கள் விரசமான தகவல் பரிமாற்றங்கள் காவல்துறைக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கு ஒரு சவால். பாலியல் கொடுமைகள் நிகழ்வதற்கு இவை காரணமாகின்றன. இயற்கை அழகு நிறைந்த பொள்ளாச்சியிலா இத்தகைய பாலியல் கொடுமைகள் என்று பதற வைக்கிறது. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே: அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர் வளர்ப்பினிலே என்பது உண்மையாகிறது. ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில் மெத்தன போக்கு இதற்கு காரணம். சுதந்திரம் கட்டுக்கடங்காமல் போகக்கூடாது. அதற்கு ஒரு வரையறை உண்டு. அதை தாண்டவிடக்கூடாது. பெண் விடுதலை பெற்றாயிற்று ஆனால் அவள் சுதந்திரம் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு.

    நடராஜ் ஐ.பி.எஸ்.,

    சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர்.
    இறைவனின் படைப்பில் மனித உடல் ஒரு சிக்கலான படைப்பு என்பதை நாம் காணப்போகும் சில எண்ணிக்கையால், சொல்லப் போகும் விஷயங்களால் அறிந்துகொள்ளலாம்.
    இறைவனின் படைப்பில் மனித உடல் ஒரு சிக்கலான படைப்பு என்பதை நாம் காணப்போகும் சில எண்ணிக்கையால், சொல்லப் போகும் விஷயங்களால் அறிந்துகொள்ளலாம்.

    மனித உடல் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?

    நம் உடலில் 37.2 டிரில்லியன் செல்களும், அவைகளில் 200 விதமான வகைகளும் இருக்கின்றன.

    நம் தோலில் 100 பில்லியன் தோல் செல்கள் உள்ளன.

    நம் மூளையில் 100 பில்லியன் நியூரான்கள் உள்ளன. நாம் மூளையில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிந்தனைகள் செய்கிறோம்.

    நமது மூளை 1 குவாட்ரில்லியன் (1 மில்லியன் பில்லியன்) பிட் (Bit) அளவு தகவலைத் தாங்கக் கூடியது.

    நம் உடலில் 60 மில்லியன் ‘உணர்வு ஏற்பிகள்’ (receptors) உள்ளன.

    கண்களைப் பொறுத்தவரை 127 மில்லியன் விழித்திரை செல்கள் உள்ளன. இதன் பயனாகத்தான் நம்மால் 10 மில்லியன் வெவ்வேறு நிறவேறுபாட்டைக் காண இயலுகிறது.

    நம் கண்களில் 120 மில்லியன் ‘கம்பி செல்’கள் (rod cells) மற்றும் 6 மில்லியன் ‘கூம்பு செல்’கள் (cone cells) உள்ளன.

    நமது கண் மட்டும் ஒரு டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் ஒளியியல் தீர்மானம் (digital resolution) 576 மெகா பிக்சல் கொண்டதாயிருக்கும்.

    மூக்கில் 1000 நுகர்வு ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் நம்மால் 50 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளை வேறுபடுத்தி உணர முடியும்.

    நம் உடலில் 6 லிட்டர் ரத்தம் ஓடுகிறது. 42 டிரில்லியன் சிவப்பு ரத்த அணுக்கள் உள்ளன. இவை சுமார் 42 பில்லியன் ரத்த நாளங்களில் பயணிக்கின்றன.

    நாம் தினசரி 23,040 முறை மூச்சு விடுகிறோம். இதயம் தினசரி 1,15,200 முறை துடிக்கிறது.

    நம் உடலில் 640 தசைநார்களும், அதன் பயனாய் 360 தசைகூட்டுகள் (joints) உள்ளன.

    ஒவ்வொரு நாளும் நம் இதயம் தரும் சக்தியின் அளவால் நம்மால் ஒரு சாதாரண டிரக்கை 32 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்ல முடியும்.

    சராசரி மனிதனின் வாழ்நாளில் நமது இதயம் ரத்தத்தை உடலில் பாய்ச்சும் அளவு 1.5 மில்லியன் பீப்பாய் அளவுக்கு சமம்.

    நமது இதயம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாலும் தன் துடிப்பை உடனே நிறுத்தாது. ஏனெனில் இதயத்தில் உள்ள மின்சார உந்துவிசை சிறிது நேரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

    நம் தலையில் சுமார் ஒரு லட்சம் மயிர்க்கால்கள் உள்ளன. தினசரி சுமார் 100 மயிரிழைகள் உதிர்கின்றன.

    சாதாரணமாய் மனித உடலில் தினசரி சுமார் 800 மி.லிட்டர் வியர்வை சுரக்கிறது.

    ஒரு வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் 300 எலும்புகள் இருக்கும். நாளாவட்டத்தில் குழந்தை வளரும்போது சில எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்து விடும்.

    சாதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு சுமார் 23 ஆயிரம் லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறான்.

    நம் உடலில் இரும்பு சத்து இருப்பதை அறிவோம். இந்த இரும்பு சுமார் 7.5 செ.மீ. நீளமுள்ள சாதாரண அளவு ஆணியை உருவாக்கும் அளவுக்கு உள்ளது.

    நம் உடலின் எல்லா செல்களில் உள்ள டி.என்.ஏ. (DNA) வைப் பிரித்து நீட்டி இழுத்தால், அதன் நீளம் 10 பில்லியன் மைல்கள் இருக்கும். இது நாம் பூமியிலிருந்து புளூட்டோ கிரகம் சென்று திரும்பி வரும் அளவுக்கு சமம்.

    நமது விரல்கள் 13 நானோ மீட்டர் அளவு குறைந்த பொருளையும் உணரும் தன்மை பெற்றவை.

    நம் நாக்கில் உள்ள உணர்வு மொட்டுகள் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும்.

    நம் வயிற்றில் சுரக்கும் அமிலம் நம் தோலின் மீது பட்டால் ஒரு துளையே உருவாகும் அளவுக்கு காரத்தன்மை நிறைந்தது.

    மனித உடலையும், அதில் உள்ள உறுப்பு களின் செயல்களையும் எண்ணிப்பார்க்கையில் ஒரு விந்தையே. இவ்வளவு அதிசயங்கள் நிறைந்த இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசே. அதை நலத்துடன் பாதுகாப்போம்.

    முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.
    பிங்க் நிறத் தோல் கொண்டு முட்டை வடிவில் இருக்கும் லிச்சிபழம், பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

    கோடைக்காலத்தில் வட இந்தியாவில் அதிகம் கிடைக்கும் ஓர் பழம் தான் லிச்சி. பிங்க் நிறத் தோல் கொண்டு முட்டை வடிவில் இருக்கும் இப்பழம், பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

    லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இதனை உட்கொண்டால் செரிமானம் சீராக நடைப்பெற்று, கோடையில் ஏற்படும் வயிறு கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

    கோடையில் கிடைக்கும் லிச்சிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

    லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

    லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

    லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.
    இறாலில் கோலா உருண்டை செய்தால் அருமையாக இருக்கும். சாதம், தோசை, சப்பாத்திக்கு அருமையான இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - முக்கால்  கிலோ,
    கடலை மாவு - அரை கப்,
    சின்ன வெங்காயம் - 150 கிராம்,
    பெரிய வெங்காயம் - 3,
    தக்காளி - 4,
    மீன் வறுவல் மசாலா - 50 கிராம்,
    மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    சோம்பு, சீரகம், கசகசா - தலா ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
    தேங்காய் - அரை மூடி,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.

    கொத்தமல்லி, சின்னவெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

    அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டைகளை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து வேகவிடவும்.

    பிறகு, கொத்தமல்லி தூவி இறக்கினால்... சுவையான இறால் கோலா உருண்டை குழம்பு ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.
    பண்டைய காலம் முதல் இன்று வரை பண்பாடு நிறைந்த மூத்த இனம் எதுவெனில், அது நாம் பிறந்த தமிழர் இனம் தான். மேற்கத்திய கலாசார புழுதியில் சிக்கினாலும், பிறரைவிட தமிழர் பண்பாடு இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. அதனை இன்றும் கிராமங்களில் பார்க்கலாம். நமது பண்பாடுகளில் பெண்மையை போற்றுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

    தாய் மண், தாய்மொழி, அன்னை பூமி என்று எதிலும் நம்மை ஈன்றெடுத்த தாய்க்கு முதலிடம் தருகிறோம். அதோடு தெய்வங்களிலும் பெண் தெய்வங்களை தான் பலரும் வணங்குகிறோம். பொதுவாக பெற்றெடுத்த தாயை, அம்மா என்று தான் அழைப்போம். பிறரிடம் கூறும்போது தான் எனது தாய் என்று கூறுவோம். அப்போதும் பெரும்பாலும் அம்மா என்றே குறிப்பிடுவோம்.

    தாய் எனும் உறவுமுறை சொல்லால், பெற்றெடுத்த தாயை அழைப்பதில்லை. ஆனால், தாயை தவிர பிற பெண்களை, தாய் என்று அழைக்கும் வழக்கம் நமது பண்பாட்டில் இருக் கிறது. தங்கையை உடன் பிறந்த அண்ணன், தாய் என்றும் அழைப்பதை கிராமங்களில் நாம் கேட்கலாம். தாயை போன்று தன் மீது அக்கறை கொண்டவள் என்பதால், தங்கையை அவ்வாறு அழைப்பார்கள்.

    மேலும் உடன் பிறந்த தங்கை மட்டுமின்றி, தன்னை விட வயது குறைந்த பிற பெண்களையும் தங்கை என்று குறிப்பிடுவோம். அதை கிராமங்களில் தங்கச்சி என்றும், தாய் என்றும் அழைப்பதை கேட்கலாம். நண்பரை பார்க்க வீட்டுக்கு சென்றால் கூட, நண்பரின் தங்கையை பெயரை சொல்லி அழைப்பது இல்லை. அது சிறுமிகளாக இருந்தாலும் தாயி, அண்ணன் இருக்கிறாரா? என்று தான் கேட்பார்கள். அதிலும் சிலர் நண்பரின் தங்கையாக இருந்தாலும் அந்த பெண்ணின் பெயரை கூட கேட்பதற்கு அக்கறை காட்டுவது இல்லை. ஒரே வார்த்தை, தாய் என்று குறிப்பிட்டு பேசி விடுவார்கள்.

    ஈன்ற தாயை கூட தாய் என்று அழைக்காத நிலையில், பிற பெண்களை ஏன்? தாய் என அழைக்க வேண்டும். அதிலும் வயது குறைந்த பெண்களையும் தாய் என்று அழைக்க வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கு எழலாம்.

    வயது குறைந்த பெண்களாக இருந்தாலும் தாய் என்று அழைக்கும் போதே மனம் கள்ளம், கபடம் எதுவுமின்றி தெளிவான நிலைக்கு வந்து விடும். அந்த வார்த்தைக்கு அத்தனை மந்திர சக்தி உண்டு. அதன் மூலம் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதேநேரம் ஆண்களுக்கும் மிகுந்த மரியாதை கிடைக்கிறது. அதனால் தாயை தவிர, பிற பெண்களை தாய் என்று அழைக்கும் வழக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளனர்.

    இதுதவிர வயதில் மூத்த பெண்களை அக்கா, சித்தி, அத்தை என தகுந்த உறவுமுறைகளை வைத்து அழைப்பார்கள். அதேபோல் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை, ‘அண்ணே’ என்ற உறவுமுறையுடன் தான் அழைப்பார்கள். அதில் சமவயது ஆணாக இருந்தாலும் சரி, ஒன்றிரண்டு வயது குறைந்த ஆணாக இருந்தாலும் அண்ணே என்று அழைக்க பெண்கள் தயங்குவது இல்லை.

    இதனால் ஆண்களும், பிற பெண்களை தாய் என்று அழைக்க தொடங்கி விடுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு என்பது ஆயுதங்களோடு கூடவே செல்வது அல்ல. அற்புதமான உறவு முறையை குறிக்கும் வார்த்தையை கூறி அழைப்பது தான் முதல் பாதுகாப்பு என்று முன்னோர்கள் கற்று கொடுத்துள்ளனர். இது இன்றும் கிராமங்களில் நாடித்துடிப்போடு இருந்து கொண்டி ருக்கிறது.

    அது நாகரிக வேகத்தில் சின்னா பின்னமாகி விடாமல் காப்பது நமது கடமை. அடுத்த தலைமுறையிடம் அந்த பண்பாட்டை கொண்டுபோய் சேர்ப்பது முக்கியம். இதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. ஆண் குழந்தைகளிடம், பெண் குழந்தைகளை எப்படி அழைக்க வேண்டும், அதற்கு எந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்போம். அதன்மூலம் பெண்மையை போற்றி, பெண்களுக்கு அழகான, இயல்பான பாதுகாப்பை அளிப்போம்.

    ஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான போஸ்சரை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும். உடலும் ஃபிட்டாகும்.
    ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. காலையில் இந்த பயிற்சிகளை செய்யும்போது, உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடக்கிறது. இதனால், நாள் முழுவதும் ஃபிரஷ்ஷான உணர்வு கிடைக்கும். ஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான போஸ்சரை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும். உடலும் ஃபிட்டாகும்.

    ரிவர்ஸ் கிரன்ச் (Reverse crunch)

    தரையில் அமர்ந்து கால்களை சற்று அகட்டி வைக்க வேண்டும். கால்களுக்கு இடையே சுவிஸ் பந்தை வைத்து, பாதங்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது, மேல் உடலை சாய்த்து தரையில் படுக்க வேண்டும். பின்னர், மெதுவாக கால்களால் பந்தினை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை, 15 முதல் 20 முறை செய்யலாம்.

    பலன்கள்: வயிறு, அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து, தசைகள் வலுவடையும்.

    பட் மஸ்கல் கிரன்ச் (Butt muscle crunch)

    கட்டில் அல்லது படுக்கும் வகையிலான நாற்காலியில், நுனியில் அமர்ந்து கொள்ள வேண்டும். பந்தை கால்களுக்கு இடையில், பக்கவாட்டுப் பாதங்களால் பிடித்துக் கொண்டு, கைகளை கட்டிலின் முனையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக படுக்க வேண்டும். அப்படியே மூச்சை உள்ளிழுத்து, வெளியில் விட்டபடி பந்தை பிடித்தபடி கால்களால் உயர்த்தி, இறக்க வேண்டும். இதை 10 முறை செய்யலாம்.

    பலன்கள்: உள்ளுறுப்புகள் பலப்படும். சிறுநீரகம் தொடர்பான தொந்தரவுகளை தீர்க்கும். இடுப்பு மற்றும் பின்புறத் தசைகள் வலுவடைந்து, ஃபிட்டாகும்.
    பெண்கள் கருத்தரித்தவுடன் சில அரிய உடல் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்கவேண்டும் எனத் திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
    பெண்கள் கருத்தரிப்பது என்பது அவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அம்சமாகும். அதுவும் முதல் பிரசவம் என்றால் எல்லா விடயமும் வித்தியாசமாகவும், சந்தேகத்துடனும், விளங்காத புதிராக இருக்கும். கர்ப்பகாலத்தில் இயற்கையாக ஏற்படும் சில சின்ன பிரச்சினை கூட பெரிய பிரச்சினையாக தோன்றும். அதே போல சில அரிய உடல்மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. ஆகையால் கருத்தரிக்கவேண்டும் எனத் திட்டமிடும் போதிலிருந்தே சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை சுருக்கமாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

    ஆலோசனை பெறுதல் : இதுதான் கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். கருத்தரிக்கும் முன்பு என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எப்போது கருத்தரிக்கும் என்பன போன்ற விவரங்களையும், பாதுகாப்பான முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மாதவிலக்கு தள்ளிப்போதல் : கர்ப்பத்தின் அடையாளம் இது. மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவாலும் இப்படி நேரிடலாம். அடுத்த விலக்குவரும் வரை பொறுத்திருந்து கர்ப்பமானதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    பிரசவ காலம் : கடைசி மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து கர்ப்ப காலம் கணக்கிடப் படுகிறது. சரியான பிரசவ காலத்தை தெரிந்துக் கொள்ள, கடைசியாக உங்களுக்கு மாதவிலக்கு எப்போது ஆனது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

    உணவு: தாய் போதுமான ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொண்டால்தான் பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களால் உணவில் மீது வித்தியாசமான ஆசைகள் ஏற்படலாம். புளிப்பான சுவை கொண்ட உணவுகளை அதிகம் விரும்புவர். முதல் சில மாதங்கள் மசக்கை இருப்பதால் சாப்பிடப்பிடிக்காது. புளிப்பு சுவை கர்ப்பகாலத்தில் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு கேடானது என்பதை அறிந்து தவிர்த்து விட வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

    இரத்த சோகை : கருக் காலத்தில் குழந்தை ஒட்சிசன், ஊட்டம் போன்றவை தாயின் இரத்திலிருந்தே அனுப்பப்படுகிறது. எனவே தாய்க்கு கூடுதலான இரத்த உற்பத்தி இருக்க வேண்டும். பழங்கள், கீரைகள் போன்றவற்றை நிறைய சாப்பிட்டால் இரத்த உற்பத்தியும் ஊட்டமும் கிடைக்கும். இல்லா விட்டால் இரத்த சோகை ஏற்படும். இது கர்ப்பிணிக்கு மட்டுமின்றி கருவுக்கும் ஆபத்தை தரும். இரும்புச்சத்து, பாலிக் அமில மாத்திரைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். 
    கால்சியம் : குழந்தையின் எலும்பு, பல் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து தேவை, பால், பால் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    வலிகள் : கருப்பை வளர்த்து முன்னே தள்ளும்போது உடல் சமநிலையை இழந்து தடுமாறும். இதனால் முதுகு வலி வரக்கூடும். கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் கருப்பை வளர்ச்சியால் அழுத்தப்படுவதால் கால்கள் வலிக்கும், வாசனைகளை முகர்ந்தால் ஒத்துக்கொள்ளாமல் அவ்வப்போது தலைவலி போன்றவை வரக்கூடும்.

    மார்பகங்கள் : கர்ப்பம் தரித்த பிறகுதான் மார்பகத்தின் வளர்ச்சி முழுமையடையும். நிறமாற்றங்கள் ஏற்படும். இரத்த அழுத்தம் அந்தப் பகுதிக்கு அதிகம் செல்வதால் இரத்த நாளங்கள் வீங்கி தொட்டாலே வலிக்கும். மார்பகப்பகுதிகளைச் சுற்றி சின்னச்சின்ன முடிச்சுகள் தோன்ற ஆரம்பிக்கும். இதெல்லாம் மார்பக மாற்றங்கள். இதை ஏதோ பிரச்சினை என நினைத்து பயப்படகூடாது.

    மூச்சு திணறல்: கரு வளர்ச்சியடையும் போது கருப்பையானது மேல் நோக்கி அழுத்து வதால் நுரையீரல் முழுமையாக விரிவடைய இயலாது. இதனால் ஆழ்ந்து சுவாசிக்க இயலாமல் அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படும். இது கர்ப்ப காலத்தில் சாதாரணம். 

    மயக்கம் : இரத்த அழுத்தம் அவ்வப் போது குறைந்துவிடுவதால் களைப்பு, கிறுகிறுப்பு, திடீர் மயக்கம் போன்றவை ஏற்படக் கூடும். பட்டினியின்றி சாப்பிட வேண்டும்.

    மலச்சிக்கல், மூலநோய் : ஜீரண மண்டலம் மெதுவாகச் செயற்படுவதாலும், ஹார்மோன் மாற்றத்தால் குடல் விரிவடைதாலும் குடலுக்கு உணவுப் பொருட்கள் தள்ளப்படுவரில் தாமதம் ஏற்படும், நீர்ச்சத்துக்களை குடல் உறிஞ்சி விடும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும். இது தொடர்ந்தால் மூலநோய் வரும். கருப்பை இடுப்புக் கூட்டை அழுத்துவதாலும் ஆசன வாயின் சிரை நாளங்கள் வெளி நோக்கித் தள்ளப்பட்டு மூலக் கட்டிகள் தோன்றும். இந்தப் பிரச்சினை பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்றாலும் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    கண்களில் மாற்றம் : திடீர் திடீரென இரத்த அழுத்தம் உயர்வது, குறைவது இயல்பு. ரத்த அழுத்தம் உயர்வதால் கண்களில் ஏதோ திரை விழுந்ததைப் போன்று இருக்கும். பார்வை மங்கலாகும். இதற்குப் பயப்பட வேண்டியதில்லை. பிரசவத்திற்குப் பிறகு இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.

    ஈறுகளில் அழற்சி : கர்ப்பத்தின்போது ஈறுகள் மென்மையடைவதால் ஈறுகளில் அழற்சி தோன்றுவது இயல்பு. கடினமான பொருட்களைக் கடிக்காதீர்கள். பல் பாதுகாப்பில் கவனம் செலுத்தங்கள்.

    தடையற்ற சிறுநீர் : கர்ப்பத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் அதிர்ந்து சிரித்தாலோ அல்லது பேசினாலோ சிறுநீர் தானாகப் பிரியும். பத்தாம் மாதவாக்கில் இப்படி சிறு நீர்க்கசிவு தொடர்ந்து இருந்தால் பனிக்குடம் உடைந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே மருத்துவரை பார்க்க வேண்டும். இல்லா விட்டால் குழந்தைக்கு ஆபத்து. 

    உறக்கமின்மை : அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருப்பதால் உறக்க மின்மை ஏற்படும். எந்தப் பக்கம் படுத்தால் சரியாக இருக்கும் என்பது தெரியாததாலும் இவ்வாறு ஏற்படும்.

    நமைச்சல் : கர்ப்பக் காலத்தில் வயிற்றுப் பகுதியில் வரிக்கோடுகள் தோன்றுவதால் நமைச்சலெடுக்கும். உடல் முழுவதும் நமைச்சலெடுத்தால் கல்லீரல் பாதிப் பிருக்கலாம். இந்த பிரச்சினை அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது. 

    மூட்டுகள் : கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாவதால் தசைநார்கள் தளர்ந்து மென்மையடைந்து விடும். இதனால் உடலிலுள்ள மூட்டுகளில் வலி ஏற்படும். ஓய்வு எடுப்பது, உறங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையும் தேவை.

    பாலுறவுசிந்தனைகள் : ஹார்மோனின் ஏற்ற இற்றங்களால் பாலுறவு அதிகரிப்பதும், குறைவதும் கர்ப்பக் காலத்தில் இயல்பு.

    மனநிலையில்மாற்றம் : தாய்மையை நினைத்து சந்தோஷப்பட்டாலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள், பிரசவத்தைப் பற்றி பயம் ஆகியவற்றால் திடீரென பயம், கவலை போன்ற மனமாற்றங்கள் வரலாம். அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறவேண்டும். கருக்காலத்தில் அதிகமாக வீடு மற்றும் வெளி வேலை செய்வதால் எரிச்சல், கோபம், சோர்வு போன்றவை ஏற்பட்டு அதன் காரணமாக மன நிலையில் மாறுதல் வரலாம்.

    நீர்கோர்த்தல் : கர்ப்ப காலத்தில் உடலில் நீர்கோர்த்தல், பனிக் குடத்தில் நீர் சேருதல் இயல்பு. இதனால் கை, கால்களில் வீக்கம் வருவதும் இயல்பு. பயப்பட வேண்டாம். நடை பயிற்சி செய்யுங்கள்; ஓய்வெடுங்கள். 

    இதயத் துடிப்பு : கர்ப்ப காலத்தில் இதயம் மிக அதிகமாகத் தூண்டப்படுவதால் படபடப்பு அதிகமாகும். பயம் வேண்டாம். சருமம் : சருமத்தில் வரிக்கோடுகள் தோன்றும். இளமையான சருமம் இப்போது மாறத் தொடங்கும். இது இயல்பு. பெரும்பாலானவை மறைந்து விடும், சில கோடுகள் இறுதிவரை நீடித்திருக்கும்.
    எடை அதிகரிப்பு : கர்ப்ப காலத்தில் 12 கிலோவரை எடை அதிகரிக்கும். இதில் குழந்தையின் எடை, நஞ்சு, தொப்புள்கொடி போன்றவற்றின் எடை, கொழுப்பு போன்றவை அடங்கும்.  

    கரு நெளிதல் : 18 20 வாரங்களில் முதன் முறையாக கரு நெளிதல் ஏற்படும். குழந்தையின் உதைப்பு வலித்தாலும், இன்பம் தரக்கூடியது. இந்த உதைப்பு குறைந்து விட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டும். 

    வேலை, ஓய்வு : கர்ப்பக் காலம் முதல் பிரசவத்திற்குத் தயாராவது என வேலை செய்வதில் தவறில்லை. ஆனால் போதுமான ஓய்வு தேவை, அலைச்சல் இருக்கக்கூடாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே மருந்து மாத்திரை பயன்படுத்த வேண்டியிருந்தால் டாக்டரைக் கேட்டு அதன்படி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை உருவாகும் போதே குறைபாடுகள் தோன்றலாம்.

    பிரசவம் : பிரசவிக்கும் போது வலி இருக்கத்தான் செய்யும். இந்த வலி பத்து நிமிடங்கள் அல்லது அதிகமாகக் கூட இருக்கலாம். குழந்தை பிறப்பதற்கு வசதியாக அமைந்திருந்தால் சாதாரணமாகப் பிறந்துவிடும். இல்லாவிட்டால் சிசேரியன் நடக்கலாம். 
    சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட கீரை பருப்பு கடைசல் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு -  100 கி
    அரைக்கீரை - ஒரு கட்டு.
    வெங்காயம் - 1
    பூண்டு - 10 பல்
    தக்காளி - 1  
    பச்சைமிளகாய் - 2
    மஞ்சள் பொடி : 2 சிட்டிகை

    தாளிக்க

    கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு
    சிறிது வடவம் - பெருங்காயம்
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்கீரையை ஆய்ந்து நன்றாக கழுவி, பின்பு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கியப்பின் கழுவக்கூடாது.

    துவரம்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து வேகவைக்கவும்.

    வேக வைத்த பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்தவுடன், அதில் நறுக்கிய கீரையைப்போட்டு, கீரை வெந்தவுடன் (பச்சைநிறம் மாறிவிடாமல்) உப்புப்போட்டு கலக்கி இறக்கி, கீரைக்கடையும் சட்டியில் கொட்டி, நன்கு கடைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வடவம், பெருங்காயம் போட்டு தாளித்து கீரையில் கொட்டவும்.

    சூப்பரான சத்தான கீரை பருப்பு கடைசல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.
    கணினி திரைகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க  உதவுகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

    1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.

    2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

    3. சோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும்.
     
    4. 4 தேக்கரண்டி பால் மற்றும்  2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த குளிர்ந்த கிரீம்மை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்கள் கண்கள் புத்துயிர் மற்றும் ஆரோக்கியம்  பெரும்.

    5. பச்சை தேயிலை, கறுப்பு தேநீர் மற்றும் பல்வேறு பிற மூலிகை தேநீர் வகைகள் கருவளையத்திற்கு பெரிய தீர்வாகும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும். 
    தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.
    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவின் போது வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதையும், தோல்வியடைந்தவர்கள் மனச்சோர்வுடன் முடங்கிக்கிடப்பதையும் அக்கம் பக்கத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

    தேர்வு முடிவு வருகிறது என்றாலே மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? அதிக மதிப்பெண் கிடைக்குமா? நினைத்த உயர்கல்வி படிப்பில் சேர முடியுமா? என்று மாணவர்கள் எண்ணிக் கொண்டு இருப்பர். பெற்றோருக்கும் இதே தவிப்புதான் இருக்கும். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடட்டும் தவறில்லை. ஆனால் தோல்வியடைந்தவர்கள் முடங்கிக்கிடக்கத்தான் வேண்டுமா? ஒரு தோல்வி மனரீதியாக ஒருவனுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தைவிட புறச்சூழலான பெற்றோர் மற்றும் நண்பர்களால் ஏற்படும் அழுத்தமே கூடுதல் சோர்வை அளிக்கிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

    சிறு குழந்தைகளையே எடுத்துக்கொள்ளுங்கள் அது கீழே விழுந்துவிட்டால் நாம் அதைக் காணாத மாதிரி இருந்துவிட்டால் அது தான் விழுந்தது குறித்து அலட்டிக் கொள்ளாமல் எழுந்து போய்க் கொண்டே இருக்கும். நாம் அதைப் பெரிதுபடுத்தி ஐயோ..செல்லம் விழுந்துட்டியா? என்று கொஞ்ச ஆரம்பித்தால் அது தனக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாய் நினைத்து வீறிட்டு அழத் தொடங்கும். சிறுகுழந்தை கொஞ்சும்போதே அழுகிறதென்றால், ஓரளவு உலகம் தெரிந்த மாணவனை அவனது தேர்வுத் தோல்விக்காக கடும் சொல் கூறினால், அவன் எந்த மாதிரி வருத்தமுறுவான்? தான் வாழத் தகுதியற்றவன் என்கிற விபரீத முடிவுகளுக்கும் அவன் செல்லக்கூடுமே. தேர்வில் தோல்வி தரும் வலியைவிட பெற்றோர்கள் திட்டுவது, குறை கூறுவது, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஆகியவையே இன்றைய பிள்ளைகளை பெரும் மனவருத்தம் கொள்ள வைக்கிறது.

    தேர்வு முடிவு என்பது எந்த விதத்திலும் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் வெற்றி பெற்ற பெரும்பான்மையான வெற்றியாளர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள்தான். தோல்வியை கூட அவர்களால் ஒரு புதிய வெற்றியாக மாற்ற முடிந்தது. அப்படி ஒரு புதிய வெற்றியை பெற்றவர்தான் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயிஸ் பிரெய்லி. ஐயோ கடவுளே, என்ற அலறல் சத்தம் கேட்டு செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தந்தை ஓடி வந்தார். மகன் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பதறினார், துடித்தார். சிறுவன் விளையாட்டாக செருப்பு தைத்த அந்த ஊசியால் கண்ணைக் குத்திக்கொண்டான்.

    குத்துண்ட கண்ணுக்குச் சிகிச்சை மேற்கொண்ட போது துரதிருஷ்டவசமாக மறுக்கண்ணும் பாதிக்கப்பட்டு, இரு கண்ணுமே பார்வை இழந்தார் பரிதாபத்திற்குரிய அந்த சிறுவன். ஆனால் பிற்காலத்தில் பார்வையிழந்தோரின் கல்விக்கண் திறந்த கண்ணாளன் ஆனார். பார்வையிழந்த பலர் கைகளால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையை கண்டுபிடித்தார். இந்த புதிய மொழியின் மூலம் பார்வையிழந்த பலர் பட்டதாரிகளாகி வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்கள். லூயிஸ் பிரெய்லி கண்களில் பார்வை போய்விட்டதே என்று துவண்டு போயிருந்தால் இப்படியொரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைத்திருக்குமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.

    பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா? மனஉறுதியுடன் ஒரு சில வாரங்களில் வரும் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். எத்தனையோ மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் சிறப்பு துணைத்தேர்வு எழுதி பொறியியல், கலை அறிவியல் மற்றும் இதர படிப்புகளில் சேர்ந்து உயர்கல்வியை சிறப்பாக படித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கக்கூடிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அது போன்ற பெற்றோர் அமைந்துவிட்டால் எந்தத் தோல்விக்கும் மாணவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.

    பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே தங்களது குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கும் சக்தியை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தோல்விக்கும் பிறகு ஒரு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்குள் வளர்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது, கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்” என்கிறார். அந்த நம்பிக்கை விதைகளை மாணவர்கள் தங்கள் மனதில் விதைத்துக் கொள்ள வேண்டும்.

    21 வயது இளைஞர் ஒருவர் கல்லூரிக்கு செல்லும் போது ஷூ லேஸ் கட்டுவதற்கு சிரமப்பட்டார், அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைக்கு எல்லாம் தனது மகன் சிரமப்படுவதை கவனித்த அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு சொன்னார், உங்களது மகனுக்கு நரம்பு குறைபாடு தொடர்பான ஒரு கொடிய நோய் தாக்கி உள்ளது. உடல் தசைகளை பாதிக்கும் இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பாதிக்கும் இரண்டே வருடங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

    அப்போது அதை கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி இந்த நோய் எனது உடலை பாதிக்கும், ஆனால் என்னுடைய மூளையை பாதிக்குமா? என்று கேட்டார். அதற்கு மருத்துவர் மூளையை பாதிக்காது என்றார். உடனே அந்த இளைஞர் சொன்னார் என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என் உடலா செய்யப்போகிறது, எனது மூளைதான் ஆராய்ச்சிக்கு உதவப்போகிறது என்றார் தன்னம்பிக்கையுடன். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்க வேண்டிய சூழல். கழுத்துக்கு கீழே அத்தனை உறுப்புகளும் செயலிழந்து இரண்டு விரல்கள் மட்டும் செயல்பட்டு கொண்டு இருந்தது. அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். தனது நவீன அறிவியல் பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளை சுவாரசியமான புத்தகங்களாக வெளியிட்டார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு.

    இரண்டே வருடத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மனஉறுதியின் மேல் நம்பிக்கை கொண்டிருந்ததே. அவர் தான் நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங்ஸ்.

    காலத்தை வென்ற மாமனிதர் ஸ்டீபன் ஹக்கிங்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், வாழப்பழகு, போராடு, தோல்விகளை தூக்கி எறி, தொடர்ந்து முயற்சி செய், வெற்றியை நோக்கிப் புறப்படு என்பது தான்.

    தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களை சுற்றி உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய உற்சாகப்படுத்தக்கூடிய நேர்மறையாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.

    பெற்றோர்களே உங்கள் பிள்ளை மீது நீங்கள் நம்பிக்கை இழக்காதீர்கள். அவர்களது ஆர்வத்தையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பப்பட்ட துறைகளில் அவர்களை ஈடுபட உதவுங்கள். தேர்வு தோல்விகள், குறைந்த மதிப்பெண்கள் என்பவை தற்காலிகம் தான். அவற்றை உளவியல் ரீதியாக உங்கள் பிள்ளைகள் கடந்து வர நீங்கள் உதவியாக இருங்கள். தேர்வு முடிவு ஒரு முடிவல்ல, அது ஒரு ஆரம்பமே என்பதை மட்டும் புரிந்து கொண்டால், அதற்கு பின்னான நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பானதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.

    முனைவர் அ.முகமது அப்துல்காதர்,

    முதல்வர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி,

    மதுராந்தகம்.
    காற்று மாசினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ததில், சுத்தமற்ற காற்றால் இதயநோய், சுவாசக் கோளாறுகள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் வரலாம் என்று கூறப்படுகிறது.
    அதிகரித்து வரும் காற்று மாசினால், உயிரிழப்போரின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

    உலகளவில் காற்று மாசின் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் 49 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

    அசுத்தக் காற்று நம் ஆயுட்காலத்தை சராசரியாக ஓராண்டு எட்டு மாதங்கள் வரை குறைக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சுகாதார தாக்கங்களை ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம், செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தி, சுமார் 10 ஆயிரம் கண்காணிப்புக் கருவிகளை வைத்து காற்று மாசு குறித்த தரவுகளைச் சேகரித்தது.

    அவற்றை, காற்று மாசினால் ஏற்பட்ட தாக்கங்களின் ஆதாரங்களோடு ஒப்பிட்டு, 2017-ம் ஆண்டில் சுத்தமற்ற காற்றால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கணக்கிட்டது.

    அந்த அறிக்கையில், உலகளவில் அதிக கேடுகளை விளைவிக்கும் நோய்கள் குறித்துப் பட்டியலிடப்பட்டது.

    அப்பட்டியலில் காற்று மாசு ஐந்தாவது இடத்தில் உள்ளது. உணவுமுறை, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல் மற்றும் சர்க்கரை நோய் முதல் நான்கு இடங்களிலும், உடல் பருமன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

    காற்று மாசினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ததில், சுத்தமற்ற காற்றால் இதயநோய், சுவாசக் கோளாறுகள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் வரலாம் என்று கூறப்படுகிறது.

    உலகளவில் காற்று மாசினால் மனித ஆயுட்காலம் 20 மாதங்கள் குறைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், தெற்காசியாவில் இது மிகவும் மோசமாக உள்ளது.

    இப்பகுதியில் பிறக்கும் குழந்தைகள், காற்று மாசினால் தங்கள் வாழ்க்கையில் 30 மாதங்களை இழக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

    காற்று மாசினால் மட்டும் இங்கு ஆயுட்கால விகிதம் குறைகிறது என்று கூறிவிட முடியாது. தெற்காசிய நாடுகளில் இதனைக் கட்டுப்படுத்த போதிய சுகாதார அமைப்புகள் இல்லை என்பதும் ஒரு காரணம்.

    சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பது, டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் மூன்றாவது பெரிய காரணியாக உள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் காற்று மாசுக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    ஆனால், இது எப்படி நிகழ்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரிய வரவில்லை. எனினும், காற்று மாசினால் நுரையீரலில் வீக்கம் ஏற்படுவது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அது உடலின் மற்ற அமைப்புகளுக்குப் பரவக்கூடும்.

    இன்சுலின் உற்பத்தியில் ஈடுபடும் செல்கள் வீக்கமடைந்து, உடலில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சுலினை பாதிக்கும் என்று ஒரு கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.

    வெளிப்புற காற்று மாசு தவிர, வீட்டுக்குள் நிலவும் காற்று மாசும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீட்டில் ஏற்படும் காற்று மாசுபாட்டால் 2017-ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் பேர் முன்கூட்டியே உயிரிழந்திருக்கிறார்கள்.

    சமைக்க அல்லது குளிர்காலங்களில் தங்களை வெப்பமாக வைத்திருக்க திட எரிபொருட்களை எரிப்பதால் இது பொதுவாக நிகழ்கிறது. இந்தியாவில் 84.6 கோடி மக்களும், சீனாவில் 45.2 கோடி மக்களும் இந்தக் காற்றைச் சுவாசித்துள்ளனர்.

    ஆனால், திட எரிபொருட்களில் மக்கள் சமைப்பதைக் குறைக்க, இந்தியாவும் சீனாவும் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.

    அதேநேரம் ஆப்பிரிக்கா போன்ற கண்டங் களில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உணவைச் சமைக்க திட எரிபொருட்களையே இன்னும் பயன்படுத்துகின்றனர்.

    சுத்தமற்ற காற்றால் பொதுவாக வயதானவர்கள்தான் அதிகம் உயிரிழக்கின்றனர்.

    காற்று மாசுபாட்டால் ஏற்படும் தாக்கங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து பல்வேறு ஊடகங்களும் கவனம் செலுத்துகின்றன. ஆனால், இதனால் உயிரிழக்கும் பத்தில் ஒன்பது பேர் 50 வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றனர்.

    இது ஒப்பீட்டளவில் ஒரு புதிய விஷயம் ஆகும். 1990-ல் ஐந்து வயதுக்குஉட்பட்ட குழந்தைகள்தான் காற்று மாசினால் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் இருந்தார்கள்.

    அப்போது இருந்த பெரிய பிரச்சினை, வீட்டில் ஏற்படும் காற்று மாசுதான். ஆனால், இந்த நிலை தற்போது மாறியுள்ளது.

    இன்னொரு நல்ல விஷயம், உலகளவில் காற்று மாசின் அபாயகரமான நிலையில் வாழும் மக்களின் எண்ணிக்கை 1990-ல் 96 சதவீதமாக இருந்தது. 2017-ல் அது 92 சதவீதமாகக் குறைந்துள்ளது.

    இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்காவில் காற்று மாசின் அளவு வெகுவாக குறைந்திருப்பதாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் சீனாவும் இதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

    எது எப்படியோ, காற்று மாசைக் கட்டுப்படுத்த இன்னும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.
    தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த வரமிளகாய் கோழி வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் -  250 கிராம்,
    வரமிளகாய் - 10,
    சாம்பார் வெங்காயம் - 100 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 100 மி.லி.கிராம்,
    உப்பு - தேவைக்கு.
    கொத்தமல்லி - சிறிதளவு,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தனியா - 5 கிராம்.



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

    கடாயில் வரமிளகாய், தனியாவை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    சிக்கன் வேக சற்று தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமாக தீயில் வேக விடவும்.

    அடுத்து அதில் பொடித்த மசாலாவை போட்டு நன்றாக கிளறி விடவும்.

    சிக்கன் நன்றாக வெந்து மசாலாவுடன் இணைந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.

    சூப்பரான வரமிளகாய் கோழி வறுவல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×