search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black circles under eyes"

    கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.
    கணினி திரைகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க  உதவுகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

    1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.

    2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

    3. சோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும்.
     
    4. 4 தேக்கரண்டி பால் மற்றும்  2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த குளிர்ந்த கிரீம்மை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்கள் கண்கள் புத்துயிர் மற்றும் ஆரோக்கியம்  பெரும்.

    5. பச்சை தேயிலை, கறுப்பு தேநீர் மற்றும் பல்வேறு பிற மூலிகை தேநீர் வகைகள் கருவளையத்திற்கு பெரிய தீர்வாகும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும். 
    கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் மனதளவில் சோர்வடைய செய்து விடுவர்.

    கண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல்  2மி. மீ தடிமனும் கொண்டது. அதனால் மற்ற தோலை விட கண்களுக்கு கீழ் உள்ள தோல் மிக விரைவில் பாதிப்படைகிறது. மிக விரைவில் கருவளையத்தை  மறைய வைக்கலாம்.
     
    காரணங்கள்:
     
    அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது.
     
    தூக்கம் நமது உடலுக்கும் கண்களுக்கும் சிறந்த ஓய்வு ஆகும். சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நமது நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும். ஒரு நாளுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
     
    கண்களில் ஏற்படும் தொற்றினால் கண்களில் சில நேரம் அரிப்பு ஏற்படும். இதனால் கண்களை கசக்க நேரிடும். அதிகமாக கண்களை கசக்குவதால் மிகவும்  மெல்லிய தோலான கண்களுக்குக் கீழ் உள்ள தோல் கருமையடைகிறது.
     
    சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு ஏற்படலாம். சத்துக்குறைவினால் சிலருக்கு கண் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்கு தீர்வு.
     
    பெண்கள் அன்றாடம் முகத்தில் பல கிரீம்களை உபயோகிக்கின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்கு அடியில் கருமையாக மாறுகிறது
     
    அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம்  ஏற்படுகிறது. அதனால் வெயில் காலங்களில் கருவளையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது கண்ணை குளிர்ச்சி படுத்தும் விதமாக  கேரட் அல்லது வெள்ளரி பிஞ்சை மெல்லிதாய் நறுக்கி கண்ணின் மேல் வைத்தல் நலம் பயக்கும்.
    தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் உண்டாகும் மாற்றம் போன்ற காரணங்களால், நாளடைவில் கண்களுக்குக் கீழே கருவளையம் உண்டாகிறது. இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் சரி செய்துவிடலாம்.
    தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் உண்டாகும் மாற்றம் போன்ற காரணங்களால், நாளடைவில் கண்களுக்குக் கீழே கருவளையம் உண்டாகிறது. கருவளையம் வந்தபிறகு முகமே பொலிவிழந்து போவதாக உணர்கிறோம். தோலில் ஏற்படும் அதிக நிறமி காரணமாகவே இந்தக் கருவளையம் உண்டாகிறது. இதனால் கண்ணுக்கு ஆபத்தோ, வேறு எந்தத் தொந்தரவோ வருவதில்லை. இது, வெறும் அழகுக் குறைபாடுதான். இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் சரி செய்துவிடலாம்.

    கண்ணைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மெல்லியது. வெயிலில் சுற்றுவது, கண்களை அடிக்கடி கசக்குவது, தூங்காமல் இருப்பது, அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவற்றால் கருவளையம் உண்டாகிறது. வைட்டமின் குறைபாடுகள் மற்றும் கடும் காய்ச்சல், நிமோனியா, புற்றுநோய், காசநோய் போன்றவை தாக்கும்போதும் இந்தக் கருவளையம் உருவாகிறது.

    கண்களுக்குப் போதிய ஓய்வு தருதல், வைட்டமின் ஏ,ஈ, உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ளுதல், இரவில் விளக்கொளியை சரியாகப் பயன்படுத்தல், கணினியில் பணிபுரியும்போது கவனமாக இடைவெளி கொடுத்தல், மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியாக இருத்தல் போன்றவையே இந்தக் கருவளையம் உருவாகாமல் காக்கும்.

    அப்படியும் உங்கள் கண்களைக் கருவளையம் தாக்கினால், கவலைப்பட வேண்டாம். கவலையே அந்தப் பிரச்சனையைப் பெரிதாக்கி விடக்கூடும். உருளைக்கிழங்கு, வெள்ளரி, புதினா, கற்றாழை போன்ற இயற்கையான காய்கறிகள், பழங்களைக்கொண்டே கருவளையத்தை நீக்கிவிடலாம். அப்படியும் நீங்கவில்லை என்றால், இதற்கென இருக்கும் மருத்துவ ஆலோசகர்களை அணுகி, முகப்பூச்சுகளை எடுத்துக்கொள்ளலாம். 
    ×