search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wrinkles"

    • சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    சிலருக்கு நல்ல கலராக இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் சிலருக்கோ இருக்கும் கலர் போதும் ஆனால் சருமத்தில் எந்த பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். இதில் இரண்டாவது விருப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. சருமம் கலராக இருக்கிறதோ இல்லையோ ஆரோக்கியமாக மற்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்..

    அரிசி கழுவிய தண்ணீர்

    முகம் கழுவுவதற்கு நாம் விதவிதமாக சோப்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் கொரிய பெண்களோ அரிசி கழுவிய தண்ணீரே முகம் கழுவுவதற்கு சிறந்த கிளன்சராக பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அது சருமத்தை நீண்ட நேரம் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவி செய்யும்.

    ஒரு ஸ்பூன் அரிசியை ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி முகம் கழுவுவதற்குப் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    கிரீன் டீ ஐஸ்கியூப்

    கிரீன் டீயில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகளும் அதிகமாக இருக்கின்றன. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமின்றி சருமத்தையும் டீடாக்ஸ் செய்ய உதவி செய்யும்.

    ரெண்டு ஸ்பூன் கிரீன் டீ சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை பிரிட்ஜில் ஐஸ் க்யூப் டிரேவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். அது ஐஸ் ஆன பிறகு அந்த ஐஸ் கட்டிகளை எடுத்த சருமத்தில் நன்கு மசாஜ் செய்து வர சருமத்துளைகள் திறந்து அதில் உள்ள மாசுக்கள் வெளியேறும் கண் முக வீக்கங்கள் குறையும் சருமம் பொலிவுடன் பளிச்சென்று இருக்கும்.

    எலுமிச்சை - தேன் மாஸ்க்

    நம்முடைய சரும துளைகளுக்குள் நாம் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் சுற்றுச்சூழலில் இருந்து வரும் மாசுக்கள் ஆகியவை படிந்திருக்கும். அதனால் சரும துளைகளுக்குள் இருக்கும் மாசுகளை வெளியேற்றவும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாவதற்கும சருமம் சரியாக சுவாசிப்பதற்கு இடமளிப்பதும் அவசியம். அதற்கு மிகச்சிறந்த ஒன்றாக இந்த எலுமிச்சை - தேன் மாஸ்க் இருக்கும்.

    இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவி விட்டு இந்த கலவையை அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு விரல்களால் லேசாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த மாஸ்கை முகத்தில் அப்ளை செய்து வரும் பொழுது சருமத்தில் உள்ள பெரிய துளைகள், பள்ளங்கள் ஆகியவை சிறிதாக ஆரம்பிக்கும். சருமம் சுத்தமாகும்.

    சரும பராமரிப்பு முக பராமரிப்பு என்று சொன்னாலே நம்முடைய முழு கவனமும் முகத்தில் தான் இருக்கிறதே தவிர கண்களைப் பற்றி நாம் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை.. ஆனால் கண்கள் தான் முகத்தின் உயிராக இருக்கிறது என்பதை உணர வேண்டும். கண்ணுக்கு கீழ் கருவளையம், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கமாகி அவற்றை குறைக்க உருளைக்கிழங்கு அற்புதமான ஒரு வீட்டு வைத்தியம் என்று சொல்லலாம்.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு வட்ட வடிவில் மெலிதான துண்டுகளாக நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். இப்படி செய்யும் போது கண்கள் குளிர்ச்சி அடைவதோடு கண்களைச் சுற்றிலும் உள்ள கருவளையங்கள் நீங்கும். சருமத்தை பட்டு போன்ற மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள கொரிய பெண்கள் தயிரை பயன்படுத்துகிறார்கள். தயிர் அவர்களுடைய சரும பராமரிப்பில் மிக முக்கிய இடத்தைப் பெற்று இருக்கிறது.

    இரண்டு ஸ்பூன் தயிருடன் கால் ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பிறகு மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி வைத்து கொள்ளலாம். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாகவும் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளவும் மாய்ஸ்ச்சராக வைத்துக் கொள்ளவும் இது உதவி செய்யும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவி விட்டு கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்வது கொரிய பெண்களின் மிக முக்கியமான இரவு நேர சரும பராமரிப்பு ஆகும்.

    கற்றாலை ஜெல்

    இரவு முழுவதும் சருமத்தில் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்திருக்கும் பொழுது அது சருமத்தில் உள்ள காயங்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவற்றைப் போக்கவும் நல்ல ஹீலிங் பண்பு கொண்டிருப்பதால் சருமத்தில் உள்ள அரிப்புகள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவியாக இருக்கும். கொரியப் பெண்களின் சரும பராமரிப்பில் ஷீட் மாஸ்க் களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த சீட் மாஸ்குகள் சருமத்தின் வறட்சியைப் போக்குவதோடு சருமத்தை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க செய்யும்.

    இன்னொரு முக்கியமான விஷயம் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க இந்த சீட் மாஸ்குகள் பயன்படும். அதிலும் வெள்ளரிக்காய் உட்பொருளாக சேர்க்கப்பட்ட ஷீட் மாஸ்குகளைப் பயன்படுத்தும்போது சருமம் மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், மூக்கை சுற்றிலும் உள்ள வெண்புள்ளிகள் ஆகியவற்றைக் குறைக்க முட்டையின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்தலாம்.

    முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    பளபளப்பாக கண்ணாடி போல இருந்தாலும் வறட்ச்சியாகவும் இருக்காது, அதிக எண்ணெய் பசையுடனும் இருக்காது. சருமத்தின் பிஎச் அளவை சமநிலையில் பராமரிக்கும். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான மாஸ்குகளில் ஒன்று தான் முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    முட்டையின் வெள்ளைக் கருவை தனியே பிரித்து எடுத்து, நன்கு ஸ்பூனால் பீட் செய்து முகம் மற்றும் மூக்கு பகுதிகளில் நன்கு அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே ஊற விட்டு விட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து பீல் ஆப் மாஸ்க் போல அதை உரித்து எடுத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட்டுப் பாருங்கள். முதல் முறை அப்ளை செய்யும்போதே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

    சரும பராமரிப்புகளில் நம்மில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல் விடும் விஷயம் இந்த மசாஜ் தான். எவ்வளவு சரும பராமரிப்புகள் செய்தாலும் சருமத்தை சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் சருமத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. சருமத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்தை மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாய்ஸ்ச்சராகவும் வைத்துக் கொள்வதற்கு மசாஜ் மிக முக்கியம்.

    • 40 வயதை கடந்தது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையான விசயம் தான்.
    • முகம் நன்றாக இருக்கனும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இளமையை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கிறார்கள் இந்த உலகில். 40 வயதை கடந்ததும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பது இயற்கையான விசயம் தான். ஆனால் இப்போது 30 வயது, 20 வயதிலேயும் பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சிலர் அறுபது வயதில் கூட முகத்தை இளமையாக சின்ன குழந்தை மாதிரி வைத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

    முகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதனால் முகத்தை நல்லா வைத்திருக்க நினைப்பவர்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும்.

    அதேபோல் நம் முகத்தில் ஒரு இருக்கம், பரபரப்பு, டென்ஷன் எது இருந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் தசைகள் தளர்வுறும்போதும் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு அடிக்கடி சிரித்துக்கொண்டு இருந்தாலே முகத்திற்கு நல்ல பயிற்சி. ஆனால் நாம் சிரிப்பை மறந்து திரிகிறோம்.

    அடுத்ததாக நாம் முகத்திற்கு போடும் மேக்கப். இந்த மேக்கப்பில் உள்ள கெமிக்கல்ஸ். இதனால் நம் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டும். மேக்கப் ரிமூவரை பயன்படுத்தும் போது அதில் உள்ள கெமிக்கல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    அந்த காலத்தில் மேக்கப்பை அழிப்பதற்கு தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் ஆயில் தான் தேய்ப்பார்கள். அதற்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் கொடுத்து முகத்தில் உள்ள தசைகளை இறுகச்செய்து இன்னும் முகத்திற்கு பொலிவை கொடுக்கிறது. அதன்பிறகு காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பழங்களான பப்பாளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றை பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். மற்றும் பழவகைகளையும் முகத்திற்கு ஃபேஷியலாக பயன்படுத்தலாம். அல்லது கடலைமாவு, பால் சேர்த்து கலந்து அந்த பேஸ்டையும் வாரத்திற்கு இரண்டுமுறை முகத்திற்கு தடவி வர முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாகி சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    அதுமட்டுமல்லாமல் குளிர்ந்த தண்ணீரில் அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இல்லையென்றால் ஐஸ்கியூப்பை கூட முகத்தில் தேய்த்து கழுவலாம். புதினா இலைகளை அரைத்து ஒரு ஐஸ்கியூப் பாக்சில் ஊற்றி எடுத்து தேவைப்படும் போது அதனை பயன்படுத்தலாம். நீங்க எப்போதெல்லாம் பிரஷ்சாக இருக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த கியூப்களை எடுத்து முகம் முழுக்க தடவினால் சுருக்கங்களில் இருந்து விடுபடலாம்.

    இதோட இல்லாம பாசிபயிறு, கோதுமை, கடலைமாவு, ஓட்ஸ் இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வாரத்திற்கு ஒருநாள் இந்த பொருளுடன் பன்னீர் அல்லது பாலில் குளைத்து பேக் போட்டு வந்தாலே முகம் இறுக்கமாக மாறும். மனம் தான் இறுக்கமாக இருக்க கூடாது. முகம் இறுக்கமாக இருந்தால் தான் வயதான தோற்றம் அவ்வளவு சீக்கிரமாக நமக்கு வராது.

    • துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது.
    • துளசி ஃபேசியல் செய்தால் முகப்பருக்கள், தழும்புகள் மறையும்.

    துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசை போல் அரைக்கவும். அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும்.

    எண்ணெய்ப்பசை நீங்க:

    ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை பசை போல அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும். இதை  முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.

    முகச்சுருக்கம் மறைய:

    ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக்கொண்டு முகத்தை கழுவவும். தினமும் இதுபோல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறைந்து இளமை அதிகரிக்கும்.

    முகம் பொலிவு பெற:

    சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அது நன்றாக கொதித்த பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும், அந்த தண்ணீருடன் சிறிதளவு சந்தனம் சேர்த்து ஃபேஸ்பேக் தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவவும். அவ்வப்போது இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

    முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:

    சிறிதளவு துளசி இலைகளை நன்றாக அரைத்து, அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் கலந்து முகத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்த பின்பு ஈரமான துணியால் மென்மையாக துடைத்து எடுக்கவும். பிறகு சிறு துண்டு பஞ்சை ரோஸ்வாட்டரில் தோய்த்து அதைக்கொண்டு முகத்தை துடைக்கவும். இதுபோல் வாரத்திற்கு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

    முகத்தில் உள்ள வறட்சி நீங்க:

    2 சிட்டிகை துளசி பொடியுடன், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசவும். ௧௫ நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் சரும வறட்சியை போக்கி, முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.

    சருமம் புத்துணர்ச்சி பெற:

    சிறிதளவு துளசி மற்றும் புதினாவுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பசை போல அரைக்கவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி நன்றாக உலர்ந்த பிறகு கழுவவும், இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

    சில முக்கிய காரணங்களை கவனிக்கத் தவறி விடுவதால்தான் சீக்கிரம் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படுகின்றது. அக்காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் முகத் தோற்றத்தினைக் காக்க முடியும்.
    எல்லோருக்கும் (அ) அநேகருக்கு தனது முகத்தினை கண்ணாடியில் பார்க்கும் பொழுது பல மனக்குறைகள் ஏற்படும். கரும்புள்ளி, முக சுருக்கம், வயதான தோற்றம். ஏன் தனக்கு வயதுக்கு மீறின முதுமையாகத் தோன்றுகின்றது என வருந்துவர். 40 வயதில் 20 வயது போல் இருக்க வேண்டும் என படாதபாடுபடுபவர் பலர் உண்டு. இவர்கள் எப்பொழுதும் முகத்தில் எதையாவது தேய்ப்பதும், பார்ப்பதுமாக காலத்தினை செலவழிப்பர். ஆனால் சில முக்கிய காரணங்களை கவனிக்கத் தவறி விடுவதால்தான் சீக்கிரம் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படுகின்றது. அக்காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் முகத் தோற்றத்தினைக் காக்க முடியும்.

    * சூரிய ஒளி உடலுக்குத் தேவைதான். வைட்டமின் டி சத்திற்கு அது மிகவும் அவசியமானது. அதுவே மிக அதிக நேரம் கடும் வெயிலில் இருப்பது சருமத்தினை வெகுவாய் பாதிக்கும். சரும பாதுகாப்பு லோஷனை தடவி வெளியில் செல்வதே நல்லது.

    * காரமான சோப்புகளை உபயோகிப்பது தேவையான ஈரப்பதத்தினை நீக்கி வறண்ட சருமம் ஆக்கிவிடும். இது முதுமைத் தோற்றத்தினைக் கூட்டும். சருமத்திற்கு மாஸ்ட்ரைஸர் உபயோகிப்பது நல்லது.

    * பலருக்கு குப்புற படுத்து முகத்தினை புதைத்து தூங்கும் பழக்கம் உண்டு. காலப்போக்கில் தலையணை, பெட்ஷீட் போன்றவைகளால் முகத்தில் தேய்க்கும் காரணத்தால் முகத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படலாம்.

    * கண்களை அடிக்கடி சுருக்கி படிப்பது முதுமையை கூட்டும்.

    * உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் இவை உண்டால் முதுமை துள்ளி ஓடும். கார்ப்போஹைடிரேட் அதிகமுள்ள உணவு, அதாவது எப்பொழுதும் சாதம், இட்லி, தோசை போன்ற மாவு சத்து உணவினையே உண்பவர்கள் முகம் எளிதில் முதுமை அடைந்து விடும்.

    * புகை பிடிப்பவர்களுக்கும், மது அருந்துவபவர்களுக்கும் முகத்தில் அதிக சுருக்கங்கள் ஏற்படும்.

    * உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு முதுமைத் தோற்றம் எளிதில் ஏற்படும்.

    * தூசு, மாசு நிறைந்த சூழல் சரும பாதிப்பினை ஏற்படுத்தும்.

    * இரவில் செல்போனிலேயே காலம் கடத்துபவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் ஒளி தூக்கத்தினை கெடுத்து விடும். இதனால் முகம் வயதான தோற்றத்தினைக் காட்டும்.
    பெண்கள் தங்கள் சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் முதுமை தள்ளிப் போட உதவும்.
    முதுமையை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் அழுத்தி, சுருங்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தம், மாசுக்கள், சூரியக்கதிர்களின் நேரடித் தாக்கம் போன்றவற்றாலும் சருமம் வேகமாக முதுமைத் தோற்றத்தைப் பெறும்.

    இப்படி சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

    * தேங்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து, வறட்சி அடைவதை தடுத்து சருமம் சுருங்குவதை தடுக்கலாம்.

    * கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் உறிஞ்சி, முதுமை தோற்றத்தைப் பெறுவது தள்ளிப் போடப்படும்.

    * விளக்கெண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கும். அதற்கு விளக்கெண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்யுங்கள்.

    * தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முதுமை தள்ளிப் போடப்படும்.

    * பாதாம் எண்ணெயிலும் வைட்டமின் ஈ உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலும், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
    ×