search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்புள்ளிகள்"

    • கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும்.
    • ஜாதிக்காய் அரைத்து போட்டு வர கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான்.

    ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம்.

    இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பரு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுபடுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா...

    எலுமிச்சை ஸ்கரப்

    இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.

    எலுமிச்சை- சர்க்கரை ஸ்க்ரப்

    கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்க்ரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

    எலுமிச்சை-முட்டையின் வெள்ளைக் கரு

    இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    எலுமிச்சை-ரோஸ் வாட்டர்

    ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

    மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளை புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். முகத்தில் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு மேலும் பல வழிகள் உள்ளன.

    * ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

    * வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

    * வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

    * உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

    * ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    * முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

    * பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

    * வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

    * கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.

    இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.

    • சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    சிலருக்கு நல்ல கலராக இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் சிலருக்கோ இருக்கும் கலர் போதும் ஆனால் சருமத்தில் எந்த பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். இதில் இரண்டாவது விருப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. சருமம் கலராக இருக்கிறதோ இல்லையோ ஆரோக்கியமாக மற்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்..

    அரிசி கழுவிய தண்ணீர்

    முகம் கழுவுவதற்கு நாம் விதவிதமாக சோப்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் கொரிய பெண்களோ அரிசி கழுவிய தண்ணீரே முகம் கழுவுவதற்கு சிறந்த கிளன்சராக பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அது சருமத்தை நீண்ட நேரம் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவி செய்யும்.

    ஒரு ஸ்பூன் அரிசியை ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி முகம் கழுவுவதற்குப் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    கிரீன் டீ ஐஸ்கியூப்

    கிரீன் டீயில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகளும் அதிகமாக இருக்கின்றன. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமின்றி சருமத்தையும் டீடாக்ஸ் செய்ய உதவி செய்யும்.

    ரெண்டு ஸ்பூன் கிரீன் டீ சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை பிரிட்ஜில் ஐஸ் க்யூப் டிரேவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். அது ஐஸ் ஆன பிறகு அந்த ஐஸ் கட்டிகளை எடுத்த சருமத்தில் நன்கு மசாஜ் செய்து வர சருமத்துளைகள் திறந்து அதில் உள்ள மாசுக்கள் வெளியேறும் கண் முக வீக்கங்கள் குறையும் சருமம் பொலிவுடன் பளிச்சென்று இருக்கும்.

    எலுமிச்சை - தேன் மாஸ்க்

    நம்முடைய சரும துளைகளுக்குள் நாம் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் சுற்றுச்சூழலில் இருந்து வரும் மாசுக்கள் ஆகியவை படிந்திருக்கும். அதனால் சரும துளைகளுக்குள் இருக்கும் மாசுகளை வெளியேற்றவும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாவதற்கும சருமம் சரியாக சுவாசிப்பதற்கு இடமளிப்பதும் அவசியம். அதற்கு மிகச்சிறந்த ஒன்றாக இந்த எலுமிச்சை - தேன் மாஸ்க் இருக்கும்.

    இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவி விட்டு இந்த கலவையை அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு விரல்களால் லேசாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த மாஸ்கை முகத்தில் அப்ளை செய்து வரும் பொழுது சருமத்தில் உள்ள பெரிய துளைகள், பள்ளங்கள் ஆகியவை சிறிதாக ஆரம்பிக்கும். சருமம் சுத்தமாகும்.

    சரும பராமரிப்பு முக பராமரிப்பு என்று சொன்னாலே நம்முடைய முழு கவனமும் முகத்தில் தான் இருக்கிறதே தவிர கண்களைப் பற்றி நாம் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை.. ஆனால் கண்கள் தான் முகத்தின் உயிராக இருக்கிறது என்பதை உணர வேண்டும். கண்ணுக்கு கீழ் கருவளையம், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கமாகி அவற்றை குறைக்க உருளைக்கிழங்கு அற்புதமான ஒரு வீட்டு வைத்தியம் என்று சொல்லலாம்.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு வட்ட வடிவில் மெலிதான துண்டுகளாக நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். இப்படி செய்யும் போது கண்கள் குளிர்ச்சி அடைவதோடு கண்களைச் சுற்றிலும் உள்ள கருவளையங்கள் நீங்கும். சருமத்தை பட்டு போன்ற மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள கொரிய பெண்கள் தயிரை பயன்படுத்துகிறார்கள். தயிர் அவர்களுடைய சரும பராமரிப்பில் மிக முக்கிய இடத்தைப் பெற்று இருக்கிறது.

    இரண்டு ஸ்பூன் தயிருடன் கால் ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பிறகு மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி வைத்து கொள்ளலாம். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாகவும் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளவும் மாய்ஸ்ச்சராக வைத்துக் கொள்ளவும் இது உதவி செய்யும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவி விட்டு கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்வது கொரிய பெண்களின் மிக முக்கியமான இரவு நேர சரும பராமரிப்பு ஆகும்.

    கற்றாலை ஜெல்

    இரவு முழுவதும் சருமத்தில் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்திருக்கும் பொழுது அது சருமத்தில் உள்ள காயங்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவற்றைப் போக்கவும் நல்ல ஹீலிங் பண்பு கொண்டிருப்பதால் சருமத்தில் உள்ள அரிப்புகள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவியாக இருக்கும். கொரியப் பெண்களின் சரும பராமரிப்பில் ஷீட் மாஸ்க் களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த சீட் மாஸ்குகள் சருமத்தின் வறட்சியைப் போக்குவதோடு சருமத்தை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க செய்யும்.

    இன்னொரு முக்கியமான விஷயம் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க இந்த சீட் மாஸ்குகள் பயன்படும். அதிலும் வெள்ளரிக்காய் உட்பொருளாக சேர்க்கப்பட்ட ஷீட் மாஸ்குகளைப் பயன்படுத்தும்போது சருமம் மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், மூக்கை சுற்றிலும் உள்ள வெண்புள்ளிகள் ஆகியவற்றைக் குறைக்க முட்டையின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்தலாம்.

    முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    பளபளப்பாக கண்ணாடி போல இருந்தாலும் வறட்ச்சியாகவும் இருக்காது, அதிக எண்ணெய் பசையுடனும் இருக்காது. சருமத்தின் பிஎச் அளவை சமநிலையில் பராமரிக்கும். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான மாஸ்குகளில் ஒன்று தான் முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    முட்டையின் வெள்ளைக் கருவை தனியே பிரித்து எடுத்து, நன்கு ஸ்பூனால் பீட் செய்து முகம் மற்றும் மூக்கு பகுதிகளில் நன்கு அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே ஊற விட்டு விட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து பீல் ஆப் மாஸ்க் போல அதை உரித்து எடுத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட்டுப் பாருங்கள். முதல் முறை அப்ளை செய்யும்போதே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

    சரும பராமரிப்புகளில் நம்மில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல் விடும் விஷயம் இந்த மசாஜ் தான். எவ்வளவு சரும பராமரிப்புகள் செய்தாலும் சருமத்தை சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் சருமத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. சருமத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்தை மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாய்ஸ்ச்சராகவும் வைத்துக் கொள்வதற்கு மசாஜ் மிக முக்கியம்.

    • பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்ய வேண்டும்.
    • அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப்.

    நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கருமை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பவில்லை?

    வேப்பிலை ஃபேஷியல் முகத்திற்கு அழகு கூட்டுவது மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கிருமிகளையும், கரும்புள்ளிகளையும், முகப்பருக்களையும் நீக்குவதற்கு பயன்படுகிறது. அதை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்வார்கள். இதற்கு நாம் உபயோகிக்கக்கூடிய பொருள்தான்

    எலுமிச்சம் பழத்தோலை கேரட் உரசுவது போல் உரசி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு

    அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் 300 மில்லி அளவு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதை நன்றாக கலக்கி, அதில் வரும் ஆவியில் நம்முடைய முகத்தை ஐந்து நிமிடம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலுமிச்சை பல தோளில் இருக்கக்கூடிய கிருமி நாசினி ஆனது நம் முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்களை திறந்து அதில் இருக்கும் கிருமிகளையும், அழுக்குகளையும் நீக்க உதவுகிறது.

    அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப். இதற்கு நாம் முதலில் ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து அதில் இருக்கும் சதைப்பகுதியை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு அரிசி மாவை சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் அரை எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு சோற்றுக்கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, முகத்தை ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இறந்த செல்களும் நீக்கப்படும். கடைசியாக நாம் செய்யப்போவது தான் ஃபேஸ் பேக்.

    இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு வேப்பிலை பொடி தேவைப்படும். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் வேப்பிலை பொடியை போட்டு, அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக தடவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்.

    இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கிருமிகளும் நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த இயற்கையான பொருட்களை வைத்து எந்தவித செலவு செய்யாமல் வீட்டிலேயே பேஷியல் செய்து பயனடைவோம்.

    • உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு.
    • தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது.

    இந்த காலத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை பேசியல் செய்து கொள்கிறார்கள். பல ரசாயன பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அந்த பேசியலால் முகத்திற்கு மேலும் பாதிப்புகள் அதிகரிக்குமே தவிர எந்தவித நன்மையும் ஏற்படாது. இவ்வாறு செய்வதற்கு பதிலாக நாமே நம் வீட்டில் இயற்கையான முறையில் எப்படி பேசியல் செய்வது என்று இந்த அழகு குறிப்பு பகுதியில் பார்ப்போம்.

    கரும்புள்ளிகள் நீங்க

    5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பின் ஆவிப்பிடித்து ஈரமான துணியால் தேய்த்தால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும். இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தை கழுவி தேங்காய் பாலில் நனைத்த பருத்தி துணியால் துடைக்கவும், காலையில் நீரில் கழுவவும், இது கருப்பு புள்ளிகளை அகற்றும். தேங்காய் பால், தேன் மற்றும் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெயையும் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது சருமட்தை ஈரப்பதமாக்குகிறது.

    வறண்ட சருமம் பளபளக்க...

    உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு. 2 ஸ்பூன் எள்ளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பயத்தமாவு கலந்து முகத்தில் பூசிவர முகச்சுருக்கம் மறைந்துவிடும். முகக்கருமை நீங்க சர்க்கரை, கற்றாழை ஜெல், பால் சேர்த்து ஒன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழித்து ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    முகத்தில் உள்ள தழும்புகள் மறைய

    தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவ சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

    ×