என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி இதயத் துடிப்பையும், சுவாசத்தையும் தூண்டி இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இதனை கார்டியோ எக்சர்சைஸ் என்றும் சொல்லலாம்.
சாதாரண உடற்பயிற்சிகளை விட ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி சற்று வித்தியாசமானது. இதயத் துடிப்பையும், சுவாசத்தையும் தூண்டி இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இதனை கார்டியோ எக்சர்சைஸ் என்றும் சொல்லலாம்.
‘‘ஏரோபிக்ஸ் (Aerobics) எக்சர்சைஸ் செய்வதால் எலும்பு, தசைகள் வலுவடைவதைப் போலவே இதயம், நுரையீரலும் வலுவாகும். உடலின் கெட்ட கொழுப்பு கரையும்; டைப் 2 நீரிழிவும் கட்டுக்குள் வரும். தொடர்ந்து ஏரோபிக்ஸ் செய்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான சதையை விரைவில் கரைக்கலாம்.
தோல் சுருக்கமடைவதை தடுப்பதால் வயதான தோற்றத்திலிருந்தும் விடுபடலாம்.
இருந்த இடத்திலேயே Jogging excercise செய்வதால் கால்கள் நன்கு வலுவடைகின்றன. கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி செய்யும் Hand excercise கைகளில் உள்ள தளர்வடைந்த தசைகளை இறுக்கமடையச் செய்யும்.
குழந்தை பிறப்புக்குப் பிறகு இளம் தாய்மார்களுக்கு இடுப்பு மடிப்புகளில் சதை போட்டு விடும். இவர்கள் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு இரண்டு புறமும் பக்க வாட்டில் திரும்பி வேகமாக இடுப்புக்கான பயிற்சியை செய்தால் ஸ்லிம் இடுப்பழகு கிடைத்து விடும்.
வலது கையால் இடது காலையும், இடதுகையால் வலது காலையும் மாற்றி, மாற்றி டான்ஸ் ஆடுவது போல வேகமாக செய்தால் அடிவயிற்று பகுதியில் இருக்கும் சதை குறையும்.
தற்போது அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு மணிக்கட்டு, தோள் பட்டைகளில் வலி ஏற்படுகிறது.
மேலும், இருசக்கர வாகனங்களில் நெடுந் தொலைவு பயணம் செய்பவர்களுக்கும் இடுப்பு, தோள்பட்டை வலி வருகிறது.
இதற்கெல்லாம் தனியாக பயிற்சிகள் இருக்கிறது. வீடியோக்களையும் பார்த்து செய்வதை விட பயிற்சியாளர்களிடம் முறையாகக் கற்றுக் கொண்டு செய்யவேண்டும் என்பது முக்கியம்.
ஏனெனில், ஒவ்வொருவரின் உடல் செயல்பாடும் (Metabolism) வேறு வேறு. அதற்குத் தகுந்தவாறு பயிற்சியாளர் கற்றுக் கொடுப்பார் என்பதே அதற்கு காரணம்.
‘இவற்றுடன் ஏரோபிக்ஸில் முக்கியமான ஒரு ப்ளஸ்…. வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது சலிப்பு ஏற்பட்டு விடும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே தொடர முடியாமல் கொஞ்ச காலத்தில் விட்டு விடுவோம்.
ஆனால், ஏரோபிக்ஸ் பயிற்சிகள் கற்றுக் கொள்வதற்கும், பயிற்சி செய்வதற்கும் சந்தோஷமாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கும் என்பதால் தொடர்ந்து மிஸ் பண்ணவே மாட்டோம். ஏரோபிக்ஸில் இது முக்கியமான விஷயம்’’.

யாருக்கும் சர்க்கரை சேர்த்த இனிப்புகளை வழங்குவதினைக் காட்டிலும் மாதுளம் பழங்களை வாங்கிக் கொடுப்பது அவர்கள் மீது நீங்கள் காட்டும் உண்மையான அன்பாக வெளிப்படும்.
மாதுளம் பழம் மிகச் சிறந்த உணவாக அனைவராலும் ஏற்கப்படுகின்றது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி, வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் சக்தி, கட்டிகளை எதிர்க்கும் சக்தி, வைட்டமின் ஏ, சி, ஈ, ஃப்போலிக் ஆசிட் என நிறைந்த சத்துக்கள் கொண்டதால் அநேக நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டதாக ஆகிவிடுகின்றது.
* ரத்தத்தினை சுத்தமாய் வைத்திருக்கின்றது.
* ரத்த குழாய் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கின்றது.
* ஆக்ஸிஜன் கூடுதலாகச் கிடைக்கின்றது.
* கொலஸ்டிரால் அளவினை கட்டுப்படுத்துகின்றது.
* வீக்கம், மூட்டுக்களில் வீக்கம் இவற்றினைத் தவிர்க்கின்றது.
* இருதய பாதுகாப்பு.
* ப்ராஸ்டிரேட் புற்றுநோய் (ஆண்களுக்கு) ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.
* ஞாபக சக்தியினைக் கூட்டுகின்றது.
* ரத்தக் கொதிப்பினைக் குறைக்கின்றது.
* ஜீரண சக்தியினைக் கூட்டுகின்றது.
இத்தனை உதவிகள் செய்யும் மாதுளம் பழத்தினை இனியாவது உட்கொள்வோம். யாருக்கும் சர்க்கரை சேர்த்த இனிப்புகளை வழங்குவதினைக் காட்டிலும் மாதுளம் பழங்களை வாங்கிக் கொடுப்பது அவர்கள் மீது நீங்கள் காட்டும் உண்மையான அன்பாக வெளிப்படும்.

சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் நல்ல நிவாரணம் தரும். இன்று நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நண்டு - 250 கிராம்.
கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க…
சாம்பார் வெங்காயம் - 1,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 3,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிது,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
கடுகு, மிளகு, சீரகம், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,

செய்முறை:
நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்.
மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
நண்டு நன்றாக வெந்ததும் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைபோட்டு தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து இறக்கவும்.
கொத்தமல்லி தூவி சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.

கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிது.

சூப்பரான நண்டு ரசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தாய்ப்பால் குறைவாகச் சுரப்பது, சுரக்காமல் போவதற்கான காரணங்கள் என்னென்ன? அப்படிக் குறைந்தால் என்னென்ன சாப்பிட்டு சரிசெய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தாய்ப்பால் என்பது ஒரு குழந்தையின் வருங்கால ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரமும் மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் உரிமையும். இப்படிப்பட்ட பேரமுதமான தாய்ப்பால் குறைவாகச் சுரப்பது, சுரக்காமல் போவதற்கான காரணங்கள் என்னென்ன? அப்படிக் குறைந்தால் என்னென்ன சாப்பிட்டு சரிசெய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
காரணங்கள்...
கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்தான உணவுகளைச் சாப்பிடாத பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு பால் சுரப்பு குறையும்.
புரோலக்டின் என்கிற ஹார்மோன் அளவு குறைந்தாலும் பால் சுரப்பு குறையும்.
சில பெண்களுக்குப் பரம்பரையாகவே தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.
சிசேரியன் பிரசவம் நடந்த இரண்டு, மூன்று நாள்கள் வரை சிலரால் எழுந்து உட்கார்ந்து குழந்தைக்குப் பாலூட்ட முடியாது. இதனால், குழந்தை வாய்வைத்து உறிஞ்சும் தூண்டுதல் இல்லாமல் போகும். இத்தகைய பெண்களுக்குப் பால் சுரப்பு குறைவாக இருக்கும்; அல்லது சுரக்காமலே போகலாம்.
டயபடீஸ், ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட நாள்பட்ட வியாதிகளுக்கு மருந்து சாப்பிடும் அம்மாக்களுக்கும் பால் சுரக்காமல் போகலாம்.
குறைபிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கும், 40 வயதுக்கு மேல் பிள்ளை பெறும் அம்மாக்களுக்கும் பால் சுரக்காமல் போகும் வாய்ப்பு அதிகம்.
கர்ப்ப காலத்திலும் பிரசவத்துக்குப் பிறகும் சந்தோஷமின்றி மனப் பிரச்னையில் இருக்கும் அம்மாக்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
பிரசவம் நடந்த அன்றே குழந்தைக்குப் பாலூட்ட ஆரம்பித்துவிட வேண்டும். சிசேரியன் செய்துவிட்டார்கள், எழுந்து உட்கார முடியவில்லை என இரண்டு நாள் கழித்து பாலூட்ட ஆரம்பித்தால், பால் சுரப்பதில் நிச்சயம் பிரச்னை வரும். குழந்தையும் அந்த இரண்டு நாள்களில் பவுடர் பாலுக்குப் பழகி, மூன்றாவது நாள் தாயின் மார்பில் பால் குடிக்காது.
சில பெண்கள் குழந்தை தூங்குகிறது, எழுப்ப வேண்டாம் என அதிக நேர இடைவெளியில் பாலூட்டுவார்கள். அவர்களுக்குப் பால் சுரப்பு குறைவாகும்.
குழந்தை குறைவான எடையில் பிறந்தால், தாய்ப்பாலை நன்கு உறிஞ்சிக் குடிக்க முடியாது. இதனாலும் பால் சுரப்பு குறைந்துவிடும்.
கர்ப்பமாக இருக்கும்போது 8 முதல் 12 கிலோ வரை எடை போடுவதுதான் ஆரோக்கியமான விஷயம். இந்தச் சமயத்தில் அதிக எடை போட்ட பெண்களும், தாய்ப்பால் சுரப்பு குறைவால் அவதிப்படுவார்கள்.
தீர்வுகள்...
பால் சுரப்பைத் தூண்டுவதற்கு லேக்டர் (Lactare), கேலக்ட் கிரான்யூல்ஸ் (Galact granules), சதாவரி ஆகிய மாத்திரைகளை அளிப்போம். இவை ஆயுர்வேத மருந்து என்பதால், பக்கவிளைவுகள் பற்றி பயப்படாமல் குழந்தை பெற்ற அம்மாக்கள் சாப்பிடலாம். ஆனால், இந்த மருந்துகளின் பெயர்களை படித்துவிட்டு, நீங்களாகவே வாங்கிச் சாப்பிடக் கூடாது. உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் சொல்லும் அளவில் சாப்பிட வேண்டும்.

விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம்.
குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம். வீட்டுப்பாடம் எழுத வேண்டாம். அவசரம் அவசரமாக குளிக்க வேண்டாம். ஸ்கூல் பஸ் வருவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டாம் இப்படி ஏராளமான வேண்டாம்கள். அதனால், தனக்குப் பிடித்தமான விஷயங்களில் மூழ்கிவிடுவார்கள்.
காலை எழுந்ததும் டிவியின் முன் அமரும் குழந்தைகள் சாப்பிடக் கூட எழுந்துச் செல்லவதில்லை. நிகழ்ச்சியின் இடைவேளையின்போதுகூட வேறொரு கார்ட்டூன் சேனலுக்கு மாற்றி, கார்ட்டூன் நிகழ்ச்சியைத்தான் பார்ப்பார்கள். டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் முழுமையாகவும் சாப்பிடுவதில்லை. டிவி பார்க்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளைப் பிடித்து வைத்திருப்பது மொபைல் போன்.
மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, இணையதளம் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் உரையாடுவது என நேரத்தைக் கழிக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட மொபைல் திரையிலிருந்து கண்களை எடுப்பதில்லை. அந்த விளையாட்டில் வென்றாக வேண்டும் எனப் பதற்றத்துடன் இருப்பார்கள்.
விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். பிள்ளைகள் டிவி, மொபைலில் மூழ்கியிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர். பிள்ளைகள், அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயத்திலிருந்து விலக வேண்டும் என்றால், அதற்கு இணையான வேறு விஷயத்தைக் கொடுக்க வேண்டும் அல்லவா! பெற்றோர் அதற்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். அப்போதே பெற்றோர் விரும்பும் மாற்றம் நிகழும். அதற்கான சில ஆலோசனைகள்.
காலை: பிள்ளைகள் காலை நேரத்தில் செய்தித்தாள் படிக்க வேண்டும் எனில், நீங்கள் முன்கூட்டியே செய்தித்தாளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் படிக்கக்கூடிய செய்திகளைச் சுற்றி வட்டமிட்டு, கார், விமானம் போன்ற அவுட் லைன் ஓவியத்தை வரைந்துவிட வேண்டும் அல்லது அந்தப் பகுதிகளைக் கத்தரித்து அதை கப்பல் அல்லது காற்றாடி வடிவமாக்கி பிள்ளைகளிடம் தர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில் அவர்களாகவே செய்தித்தாளை விரும்பிப் படிக்கும் மனநிலையை வந்தடைவார்கள்.
டிபன்: செய்தித்தாள் படிக்கும்போதே காலையில் என்ன டிபன் செய்யலாம் பிள்ளைகளோடு சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள். அவர்கள் விரும்பும் உணவு வகையைத் தேர்ந்தெடுப்பதுடன், அவர்களை உதவிசெய்யவும் அழையுங்கள். சப்பாதி என முடிவெடுத்தால், அதன் வடிவத்தை விதவிதமாக செய்யலாம் எனச் சொல்லுங்கள். ஸ்கூல் பஸ், பென்சில் பாக்ஸ், நண்பனின் முகம் போன்ற வடிவங்களில் சப்பாத்தி செய்யலாம் எனச் சொல்லும்போது ஆர்வத்துடன் வருவார்கள்.
ஷாப்பிங்: காலை உணவைப் போலவே மதிய உணவையும் பிள்ளைகளோடு சேர்ந்து முடிவுசெய்யுங்கள். அதற்கு தேவையான பொருள்களை வாங்கச் செல்லும்போது கூடவே அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் இடம் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறுங்கள். வித்தியாசமாக ஏதேனும் பாக்க நேரிட்டால், அதை நன்கு கவனிக்கச் சொல்லுங்கள். வீட்டுக்கு வந்ததும் பார்த்தவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வரைந்துகாட்டுங்கள்.
சின்ன தூக்கம்: மதிய உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் தூங்க வையுங்கள்.
மீட்டிங்: மாலை நேரத்தில் பிள்ளையை வெளியே அழைத்துச் செல்லுங்கள். வெளியில் செல்வது பிள்ளைகளுக்காக மட்டுமே. அப்படியே உங்களின் வேறு வேலையையும் முடித்துவிட்டு வரலாம் எனத் திட்டமிடாதீர்கள். வழக்கமாகச் செல்லும் பூங்கா, கடற்கரை, கோயில் என இல்லாமல் பிள்ளைகளுக்குப் பிடித்த விஷயமாக இருக்கட்டும். அறிவியலில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளை அது தொடர்பாக இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஓவியம் வரைவதற்கு ஆர்வமிருக்கும் பிள்ளைகளை உங்கள் ஊரில் உள்ள ஓவியரிடம் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் பிள்ளைகளின் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். அடுத்த விடுமுறை தினத்தில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்.
இரவு: கதைக் கேட்க விரும்பும் குழந்தைகள் எனில் புதிய கதைகளைக் கூறுங்கள். புதிய புத்தகங்களைப் படித்துக்காட்டுங்கள். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு கதை ஒன்றைத் தயார் சொல்லுங்கள். தயங்கினால் நீங்களே உருவாக்கிக்காட்டுங்கள். சினிமா, அரசியல், கலை, உறவு பற்றிய விஷயங்களை உரையாடுங்கள். அவர்களின் கருத்துகளை இடைமறிக்காமல் முழுமையாகக் கூறச்செய்யுங்கள். நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு விஷயத்தை பிள்ளைகள் அணுகியிருந்தால் மனதாரப் பாராட்டுங்கள்.
இவைத் தவிர இடையிடையே 10 அல்லது 15 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதியுங்கள். மொபைலில் பேசச் சொல்லுங்கள். தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது அறிவுரையாகக் கூறாமல் இயல்பாகப் பழக அனுமதியுங்கள்.
இவற்றையெல்லாம் படிக்கவும் பேசவும் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற எதிர்மறையான சிந்தனை இருந்தால் உடனடியாகக் கைவிடுங்கள். பெரிய மாற்றத்தின் தொடக்கம் சிறிய விஷயமாகவே இருந்திருக்கும். தொடர் பயிற்சியினாலே அது சாதிக்கப்பட்டிருக்கும். குழந்தை வளர்ப்பில் மாற்றங்களை உடனடியாகக் காண முடியாது. ஆனால், பிள்ளைகள் வளர வளர அவற்றை உணர முடியும்.

வெயில் காலம் வந்துவிட்டாலே முகத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. வெயில் காலத்தில் அன்றாடம் ஏற்படும் சருமம் பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்ய முடியும்.

சன்டேனிங் பேக்குகள்:
முல்தானிமெட்டி - 2 டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், பட்டை - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 8 சொட்டு.
இவற்றைச் சுத்தமான பவுல் ஒன்றில் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக் போட்டுக்கொள்ளவும். 20 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ கருமை நீங்கி முகம் பிரகாசமாய் இருக்கும்.
கடலை மாவு - ரெண்டு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - ஒரு சிட்டிகை, க்ளசரீன் - சில சொட்டு, தயிர் - ஒரு டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன். சுத்தமான காட்டன் துணியை பாலில் நனைத்து முகத்தை ஒரு முறை சுத்தம் செய்து கொள்ளவும். பின் பேக்கிற்காக மேலே கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக்காக அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ முகம் டால் அடிக்கும்.
கற்றாழையின் சதைப்பகுதி - 2 டீஸ்பூன், ரெட் ஒயின் - 2 டீஸ்பூன் இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்தால் ஜெல்லி பதம் கிடைக்கும். அதை முகத்தை அப்ளை செய்து 10 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளிச்சென்று இருக்கும்.
புதினாச் சாறு - 2 டீஸ்பூன்.கஸ்தூரி மஞ்சள் - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 4 டீஸ்பூன் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ முகம் ஃப்ரெஷாக இருக்கும்.
பேக் போட நேரம் இல்லையென நினைப்பவர்கள் வெயிலில் போய் வந்தவுடன் பால் - 4 டீஸ்பூன்,தேன் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் கலந்து சுத்தமான பஞ்சால் முகத்தைத் துடைத்து எடுக்க அழுக்குகள், இறந்த செல்கள் உடனடியாக நீங்கும்.
அன்றாடம் பேஸ் பேக் போட முடியாது என்பவர்கள்... தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன், முல்தானிமெட்டி - 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - கால் டீஸ்பூன் நான்கையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து கால் மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவ வெயிலினால் கறுத்த உங்கள் முகம் தகதகவென மின்னும்.

கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வயதானவர்களுக்கு உகந்த கவுனி அரிசியில் காரப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி மாவு - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
எலுமிச்சம் பழம் - அரை மூடி,
கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
வேர்க்கடலை, தேங்காய் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, 10-15 நிமிடம் ஊறவிடவும்.
இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
பின்னர் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், துருவிய கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஆவியில் வேக வைத்த புட்டு சேர்த்துக் கிளறவும்.
பிறகு, கீழே இறக்கி எலுமிச்சம் பழம் பிழிந்து, தேங்காய் துருவல் தூவி, கிளறிப் பரிமாறவும்.
சூப்பரான சத்தான கவுனி அரிசி காரப் புட்டு ரெடி.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, 10-15 நிமிடம் ஊறவிடவும்.
இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
பின்னர் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், துருவிய கேரட், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஆவியில் வேக வைத்த புட்டு சேர்த்துக் கிளறவும்.
பிறகு, கீழே இறக்கி எலுமிச்சம் பழம் பிழிந்து, தேங்காய் துருவல் தூவி, கிளறிப் பரிமாறவும்.
சூப்பரான சத்தான கவுனி அரிசி காரப் புட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. உடற்பயிற்சியினால் உங்கள் தசைகள் இறுக்கமடைகின்றன.
உடற்பயிற்சியானது உடலின் அனைத்து உறுப்புகளும் இரும்புபோல் வலிமையாவதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறது. அதனாலேயே அதன் பயிற்சிகள் யாவும் வேகமான அசைவுகளாகவும், அதிகம் பளு உள்ள பயிற்சிகளாகவும் அமைகிறது. உடலின் உள்ளே சில உறுப்புகள் மிருதுவான தன்மையுடன் இருந்தால்தான் அவைகளால் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆனால் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் மென்மையாக இருக்க வேண்டிய உள்ளுறுப்புகளையும் இறுக வைத்து விடுகிறது.
மென்மையாகவும், துவளும் தன்மையுடனும் இருக்கவேண்டிய பல உள்ளுறுப்புகள் கடினமானப் பயிற்சியின் மூலம் இறுக்கப்பட்டு அதன் இயல்பான இயக்கங்கள் பாதிக்கப்படுவது குறித்து அது பெரிதும் கவலைப்படுவதில்லை. எனவேதான் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் முதுமைக்காலங்களில் பல ஆபத்தான நோய்களில் துன்புறுவதைக் காண்கிறோம்.
ஆனால் யோகாசனப்பயிற்சி உடலை இறுக்குவதில்லை. மாறாக உடலை நன்கு துவளும் தன்மையுடன் வைக்கிறது. சிறுகுழந்தைகளின் உடல் எவ்வாறு ரப்பர் போல் வளையும்தன்மை பெற்றுள்ளதோ அதே தன்மைக்கு உங்கள் உடலை கொண்டு வருகிறது. எனவே முதுமையிலும் உடல் இளமையும் சுறுசுறுப்பும் பெற்று திகழ்கிறது.
உடலின் உள்ளுறுப்புகளை இறுக்கநிலைக்கு கொண்டுசெல்லாமல் அத்தனை உள் உறுப்புகளையும் மென்மையாக மசாஜ் செய்து இரத்தஓட்டத்தை சீராக்கி நரம்புமண்டலத்தை வளப்படுத்தி என்றும் மாறாத இளமையையும், சுறுசுறுப்பான நோயணுகா உடலையும் தருகிறது.

இன்றைய பெண்கள் மிக திறமைசாலிகள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது.
இன்றைய பெண்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள். புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள். கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள். மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை. பழகி கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர்.
இவையெல்லாம் நமது இளைய சமுதாயத்தை பற்றிய நல்ல செய்தி. ஆனால் கெட்ட செய்திகளும் உண்டு. புகை பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் அதிகரிக்கும் அபாயம் தெரிகிறது. செல்போன் மோகம் அதிகரித்ததால் தடம்புரண்டு போகும் அவல நிலை. உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை இல்லை. விளையாட்டில் ஆர்வம் இல்லை. ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளிலேயே உன்னதமானது.
மிகப்பெரிய சொத்து. ஆனால் அதன் அருமை அது இல்லாத போதுதான் தெரிகிறது. விளையாட்டாக செய்ய ஆரம்பிக்கும் தவறுகள் பிற்காலத்தில் விடமுடியாத கெட்ட பழக்கமாகி விடுகிறது. புகைபிடிக்கும் பெரும்பாலோர் அப்படித்தான் சொல்கிறார்கள். உங்கள் மீது பாசமும் நேசமும் கொண்டவர்கள் உங்களையே நம்பியுள்ள நெஞ்சங்களையும் ஒரு கணம் மனதில் கொண்டு வாருங்கள்.
தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது. நல்ல நண்பர்கள் ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைக் கொண்டு ஏராளமாய் சாதிக்க முடியும். அதேசமயம் கெட்ட நண்பர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.
எனவே நண்பர்கள் வேண்டும், அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு காரியமும் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். காலந்தாழ்ந்து செய்யும் வேலைகள் உரிய பலன் தராது. எனவே நேரந்தவறாமை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய திறமை. நம்முடைய இருப்பிடத்தையும், உடைகளையும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இது சுகாதாரம் மட்டுமன்றி, நம் மீது பிறருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தும். பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கண்காணிப்பு மிக அவசியம். நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களில், ஒரு தவறுக்கான சூழல் ஏன் உருவானது என பார்க்கும்போது கண்காணிப்பு இல்லை என்பதே பதிலாக வருகிறது. எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளர்களோ அந்த அளவு கண்காணிப்பும் அவசியம்.
உங்கள் பிள்ளைகள் திறமையானவர்களாக நல்லவர்களாக வருவார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள். உன்னால் முடியும் நிச்சயமாக நீ வெல்வாய் என்று நம்பிக்கையை உள்ளங்களில் விதையுங்கள். இது நேர்மறை அணுகுமுறை. நல்ல பண்பாடு, பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுங்கள். இதன் மூலம் இளைய சமுதாயம் எழுச்சி பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன.
நியூசிலாந்தில்தான் கிவி பழம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நியூசிலாந்து நாட்டு மக்களை ‘கிவிஸ்’ என்று செல்லமாக அழைப்பதும் உண்டு. நியூசிலாந்து தான் கிவி பழத்தை அதிகம் விளைவிக் கும் நாடு என்றாலும், அந்த பழத்துடன் பாரம்பரிய தொடர்பு கொண்ட நாடு சீனா. அதனால் இந்த பழத்துக்கு சீனத்து நெல்லிக்கனி என்ற மற்றொரு பெயரும் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக கிவி பழமானது சீனாவில் விளைவிக்கப்படுகிறது. தவிர, இத்தாலியிலும் இது விளைகிறது.
இந்தியாவுக்குள் கிவி பழங்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருப்பதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும், அந்த பழத்தில் உள்ள நிறைந்த மருத்துவக் குணங்களுக்காக அவற்றை நாம் விரும்பி வாங்கி சாப்பிடலாம். கிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். வைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய் தடுப்பாற்றலை அதிகம் தரக்கூடியது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மாரடைப்பைத் தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் சூழலில், அதற்கு முன்னதாக பல வகையான நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. அப்போது ரத்தக் குழாய்களில் உள்ள ரத்தத்தில் சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு இதய தமணிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் சக்தி ‘கிவி’ பழத்துக்கு உண்டு.
வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. நீரிழிவு நோயாளி பயப்படாமல் இந்தப் பழத்தை சாப்பிடலாம். கிவி பழம், இனிப்பானது தான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் கிவி. மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் கிவி பயன்படுகிறது. இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும். கிவி பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு, பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையையும் உருவாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு கிவி பழம். அவர்கள் தொடர்ந்து இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களின் நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம். இத்தனை நன்மைகள் இருப்பதால் கிவி பழத்தை நிறைய சாப்பிடலாம்.

புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. மேலும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
ப்ரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) ஆகியவையும் இருக்கின்றன. ப்ரோக்கோலி யின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் ப்ரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தது. சிறிய அளவில் இருக்கும் ப்ரோக்கோலி பெரிய காய்களைவிடச் சிறந்தது. இளசான ப்ரோக்கோலி புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி ப்ரோக்கோலிக்கு உண்டு.
ப்ரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். ப்ரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவையும் பார்வைத்திறன் மேம்பட உதவுபவை.ப்ரோக்கோலி , நம் உடலில் ஆறு சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது’ என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
எலும்புகளின் உறுதிக்குக் கால்சியம் அவசியம் தேவை. கால்சியம் சத்து நிறைந்தது ப்ரோக்கோலி. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.
கொழுப்புச்சத்துகள் இல்லாத உணவுப் பழக்கத்துக்கு வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே சிறந்தவை. அந்த வகையில், கலோரிகள் குறைந்த உணவான ப்ரோக்கோலியை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அரை கப் ப்ரோக்கோலியில் 25 கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன.
நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். ப்ரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.
ப்ரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த ப்ரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஜிலேபி மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜிலேபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
அரிசி - 30 கிராம்
சர்க்கரை - 1 கிலோ
லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ்

செய்முறை :
அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து (தண்ணீரில் சர்க்கரை மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும். சீனிபாகு கம்பி பதம் வந்தவுடன் பாகு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் மிதமான தணலில் வைக்கவும்.
அதே நேரம் உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்..
வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.
நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். ஒரு தடவைக்கு 4,5, ஜிலேபி போட்டு எடுக்கவும்.
சுவையான இனிப்பான ஜிலேபி ரெடி.
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
அரிசி - 30 கிராம்
சர்க்கரை - 1 கிலோ
லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ்
டால்டா, நெய், அல்லது ரீபைண்ட் ஆயில்

செய்முறை :
அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து (தண்ணீரில் சர்க்கரை மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும். சீனிபாகு கம்பி பதம் வந்தவுடன் பாகு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் மிதமான தணலில் வைக்கவும்.
அதே நேரம் உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்..
வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.
நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். ஒரு தடவைக்கு 4,5, ஜிலேபி போட்டு எடுக்கவும்.
சுவையான இனிப்பான ஜிலேபி ரெடி.
ஜாங்கிரி பிழியும் ரெட்டில் இல்லாதவர்கள் கனமான கைக்குட்டை போன்ற துணியால் சுண்டு விரல் நுழையக் கூடிய அளவு ஒரு சின்ன ஓட்டைப் போட்டு அதில் ஒரு கைப்பிடி மாவை எடுத்து வைத்து கை முறுக்கு பிழிவது போன்றும் பிழியலாம்.