என் மலர்
நீங்கள் தேடியது "Jalebi"
- மோசமான உணவு வகைகளால் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
- எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, நாக்பூர் எய்ம்ஸ் உள்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப் பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளைப் பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதில் நாம் தினமும் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்கள் இடம்பெறுகின்றன. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படி இதுவாகும்.
சமோசா, ஜிலேபி ஆகியவை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் ஆகும். ஆனால் இந்த 2 உணவுகளும் உடலுக்கு தீங்கானது என கூறப்படுகிறது. இதன்மூலம் சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என கருதப்படுகிறது.
சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பதுபோல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள லேபிளில் இந்த எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெற உள்ளது என இந்திய இதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் அமலே கூறினார்.
நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆதரவாளர்கள் இதை பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.
இந்நிலையில், சிகரெட் வரிசையில் சமோசா, ஜிலேபிக்கும் எச்சரிக்கை வாசகம் வர உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
எந்த உணவையும் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்ய திட்டமிடப்படவில்லை என்றும், உடல் பருமனைக் குறைக்க எண்ணெய், சர்க்கரை அளவு தொடர்பாகத்தான் எச்சரிக்கை வாசகம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படி இதுவாகும்.
- எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.
இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதில் நாம் தினமும் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்கள் இடம்பெறுகின்றன. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படி இதுவாகும்.
சமோசா, ஜிலேபி ஆகியவை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் ஆகும். ஆனால் இந்த 2 உணவுகளும் உடலுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என்று கருதப்படுகிறது.
சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள லேபிளில் இந்த எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெற உள்ளது என்று இந்திய இருதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் அமலே கூறினார்.
நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆதரவாளர்கள் இதை பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.
- பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று மோடி கிண்டலடித்தார்.
அரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வதுமுறையாக ஆட்சி அமைக்கிறது. தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்றய தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பாதியிலேயே பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது.
தற்போது பாஜக தனது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இனிப்பு பலகாரமான ஜிலேபி டிரண்ட் ஆகி வருகிறது. பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜிலேபியை குறிப்பிட்டு அவர்கள் தேர்ந்தெடுக்க காங்கிரசை வெறுப்பேற்றும் அரசியல் காரணங்களும் உண்டு.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரியானாவில் பிரதியேகமாக தயாரிக்கப்படும் மாதுராம் ஜிலேபி குறித்து பேசியிருந்தார். பிரசித்தி பெற்ற மாதுராம் ஜிலேபிகளை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதால் அரியானாவில் வேலைவாய்ப்பு உயரும் என்ற திட்டத்தைத் தேர்தல் பிரசாரங்களில் ராகுல் முன்வைத்திருந்தார்.
மற்ற ஜிலேபிகளை விட சற்று அதிக நாட்கள் நீடிக்கக்கூடிய இந்த மாதுராம் ஜிலேபிகளின் தயாரிப்பை அதிகப்படுத்தும்போது நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 50,000 வரை மாதுராம் கிளைகளில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியும் என்று அவர் பேசினார். இதைக் கிண்டல் செய்த பாஜக தலைவர்கள், எங்களுக்கும் மாதுராம் ஜிலேபிகள் பிடிக்கும், ஆனால் ராகுல் காந்தி இதுபற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என்று கூறியிருந்தனர்.
பிரதமர் மோடியும் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியா கூட்டணி வருடத்துக்கு ஒரு பிரதமர் என பிரித்து 5 வருடங்கள் ஆட்சி செய்யும் கனவில் உள்ளது, பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று கிண்டலடித்திருந்தார்.
தற்போது காங்கிரசை வீழ்த்தி பாஜக வென்றுள்ளதால் அம்மாநிலத்தில் ஜிலேபிகளை பாஜவினர் டிரண்ட் செய்து வருகின்றனர். அசாமில் பாஜக ஊழியர் ஒருவர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்று ஜிலேபி பெட்டிகளை டெலிவரி செய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
அரிசி - 30 கிராம்
சர்க்கரை - 1 கிலோ
லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ்

செய்முறை :
அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து (தண்ணீரில் சர்க்கரை மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும். சீனிபாகு கம்பி பதம் வந்தவுடன் பாகு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் மிதமான தணலில் வைக்கவும்.
அதே நேரம் உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்..
வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.
நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். ஒரு தடவைக்கு 4,5, ஜிலேபி போட்டு எடுக்கவும்.
சுவையான இனிப்பான ஜிலேபி ரெடி.






