என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம். ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.
அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எலுமிச்சை சேர்த்து செய்யப்படும் ஸ்க்ரப் வறண்ட, சென்சிட்டிவான, எண்ணெய் தன்மையுள்ள சருமத்திற்கு என எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
எலுமிச்சை சேர்த்து செய்யப்படும் ஸ்க்ரப் வறண்ட, சென்சிட்டிவான, எண்ணெய் தன்மையுள்ள சருமத்திற்கு என எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். எலுமிச்சை சேர்த்து முகத்திற்கான ஸ்க்ரப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. சர்க்கரை மற்றும் எலுமிச்சை இரண்டையும் சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் செய்தால், முகத்தில் உள்ள துளைகள் சுத்தமாவதோடு சருமத்தின் நிறம் கூடும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை சாறு - 6 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
செய்முறை
ஒரு பௌலில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் வட்டமாக தேய்த்து மசாஜ் செய்யலாம். சர்க்கரை கரையும் அளவிற்கு முகத்தில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஸ்க்ரப் செய்து முடித்த பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
குறிப்பு: கரும்புள்ளிகள் மற்றும் கருமைநிறத்தை போக்க இந்த ஸ்க்ரப் பயன்படுத்தலாம்.
வறண்ட சருமத்திற்கு - தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஸ்க்ரப்
தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள வறண்ட செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாக்கிவிடும். தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
செய்முறை
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரபை முகத்தில் 8-10 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்து முடித்தபின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

நஞ்சு நோய் என்கிற ‘எக்ளாம்ப்சியா’ (Eclampsia) முதல் பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்க்கே அதிகமாக வரும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்நோய் கடுமையான கர்ப்ப கால நோயாகும். இது சாதாரணமாக இருபத்து நான்காவது வாரத்திற்குப் பின்னரே ஏற்படும். இந்நோயை ‘எக்ளாம்ப்சியா’ (Exlampsia) என்றும் ‘எக்ளாம்ப்சியா முன்கட்ட நோய்’ என்றும் இருவகைப்படுத்தலாம். எக்ளாம்ப்சியா முன்கட்ட நோயில் மிகை இரத்த அழுத்தம், உடல் வீக்கம், சிறுநீரில் புரத இழப்பு போன்றவை மட்டும் இருக்கம். எக்ளாம்ப்சியா நோயில மேலே சொன்னவைகளோடு வலிப்பு அல்லது மயக்க நிலையும் அல்லது இரண்டுமே சேர்ந்து இருக்கலாம்.
யாருக்கு நஞ்சு நோய் வரும்?
இது முதல் பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்க்கே அதிகமாக வரும். கர்ப்பிணியாய் இருக்கும் தாய்க்குச் சர்க்கரை நோயெனும் நீரிழிவு, மிகை இரத்த அழுத்த நோய் மற்றம் சிறுநீரக நோய்கள் இருந்தாலும் மனநிலை இறுக்கங்கள் இருந்தாலும் இந்நோய் வரும்.
எக்ளாம்ப்சியா முன்கட்ட நோயின் அறிகுறிகள்
இந்நோயில் மிகை இரத்த அழுத்த நோயிருப்பதால் அதற்குண்டான அறிகுளிகளான மயக்கம், தலைசுற்றல், கிறுகிறுப்பு, தலைவலி போன்றவை இருக்கலாம். உடலில் நீர் கோர்த்து உடல் வீக்கமும், கை, கால்கள் வீக்கமும் தோன்றும். சாதாரணமாகவே எழுபத்தைந்து சதவீத பெண்களுக்குக் கர்ப்பத்தின் கடைசி வாரங்களில் காலிலும், கணுக்காலிலும் வீக்கம் இருக்கும். இவ்வீக்கம் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டால் குறைந்துவிடும். குழி விழக்கூடிய, அதாவது அழுத்தினால் குழிவிழக்கூடிய வீக்கம் பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேலாக இருந்தால் அது நோயினைக் குறிக்கக் கூடியதாம். வீக்கம் முகம், கைகள், வயிற்றுப் பகுதி போன்ற இடங்களில் இருந்தால் அது நோயினால் ஏற்படக்கூடியதே ஆகும். இத்தகைய வீக்கம் இருதயச் செயலிழப்பு, இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் ஏற்படலாம்.
எந்த ஒரு கர்ப்பிணித் தாயின் எடை அரையிலருந்து ஒரு கிலோ அளவுக்கு வாரமொருமுறை கூடுகிறதோ அத்தாயை கவனமாகக் கண்காணித்தல் அவசியம். இந்த அதிகமான எடை கூடுதல் நீர் சேர்வதால் ஏற்படக்கூடிய மறைந்திருக்கும் வீக்கத்தை உணர்த்தும். அதிகமாக எடை கூடுகின்ற தாய்மார்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவித நோயாளிகள் கர்ப்ப கால நஞ்சு நோயால் தாக்கப்படுவார்கள்.
இந்நோயில் மிகை இரத்த அழுத்த நோயின் அறிகுறிகளோடு வாந்தி, மங்கலான பார்வை, மேல்வயிற்று வலி, சில சமயங்களில் கண்பார்வையற்றுப் போதல் போன்றவை இருக்கலாம். இந்த கர்ப்ப கால நஞ்சு நோய் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களை கர்ப்ப காலத்திலேயே நோய் நிர்ணயம் செய்து முறையான சிகிச்சை அளித்தல் அவசியம். இல்லையெனில் தாய் மற்றும் சேய் ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
‘எக்ளாம்ப்சியா எனும் நோயில் மிகை இரத்த அழுத்தம் மற்றும், உடல் வீக்கம் இஇருப்பதோடல்லாமல் விட்டுவிட்டு உடல் முழுவதும் வலிப்பு வரும். இந்நோய்க்கும் முறையான சிகிச்சை அளித்து, தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும். இந்தக் கர்ப்ப கால நஞ்சு நோய் இருக்கும் தாய்மார்க்கு பூரண ஓய்வு தேவை. உடல் வீக்கம் குறைய சிறுநீர் போகும் மாத்திரைகளைக் கொடத்தல் அவசியம். மிகை இரத்த அழுத்தத்தினைக் குறைக்க இரத்த அழுத்தக் குறைப்பு மாத்திரைகள் தேவைப்படும் அல்லது ஊசிகள் தேவைப்படலாம். மேலும், தூக்க மருந்துகளும் இந்நோயினைக் கட்டுப்படுத்த அவசியம் தேவை.
இந்நோயுடைய தாய்மார்களுக்கு முறையான சிகிச்சை அளித்த பின்னர், பிரசவம் மருத்துவரின் கண்காணிப்பில்தான் செய்யப்பட வேண்டும். தேவையேற்பட்டால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டி வரும். கடுமையான கர்ப்ப கால நஞ்சு நோயிருக்கும் தாய்மார்கள் மூளையில் ஏற்படும் இரத்தப்போக்கு, மேலும் கடுமையான நுரையீரல் வீக்கத்தால் இறந்துகூடப் போக வாய்ப்புகள் உண்டு. இக்கர்ப்ப கால நஞ்சு நோயிருக்கும் தாய்க்குப் பிறக்கப்போகும் குழந்தை, தாய்க்கு நோய் கடுமையாக இருந்தால் இறப்பதற்கான வாய்ப்பு பதினைந்திலிருந்து இருபது சதவீதமாகும். இத்தாய்மார்களுக்குப் பிறக்கும் அறுபது சதவீத குழந்தைகள் குறைப்பிரசவமாகப் பிறக்க வாய்ப்புகள் உள்ளது.

சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியில் சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - 1 கப்

செய்முறை :
வரகு அரிசியை மாவாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு சேர்த்து இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த வரகு மாவை போட்டு அதில் கொதிக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கரண்டியால் நன்றாக கிளறவும்.
சற்று சூடு ஆறியதும் கைகளில் எண்ணெய் தேய்த்து கொண்டு மாவை கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவு போல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைத்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
இந்த சப்பாத்திக்கு எண்ணெய் தேவையில்லை.
வரகு அரிசி - 1 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

சூப்பரான சத்தான வரகு அரிசி சப்பாத்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை விரைவில் அடைய முடியும்.
ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம்.
20 வயது முதல் 30 வயது வரை ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இந்த வயதில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் குறைத்து, தசைகளை வளர்க்க ஆரம்பியுங்கள். ஏனெனில் இது தான் தகைளை வளர்ப்பதற்கான மற்றும் தசைகள் வளர்வதற்கான சிறந்த வயது.
வயது முதல் 40 வயது வரை உள்ள காலகட்டத்தில் தொப்பை வர ஆரம்பிப்பதோடு, டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைய ஆரம்பிக்கும். எனவே இந்த வயதில் HIIT உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படும்.
40 வயதின் தொடக்கதில், 50 வயது முடிவில் தசைகளை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வது சவாலான ஒன்று. எனவே இந்த வயதில் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. தினமும் சிறிது பளுத் தூக்கும் பயிற்சி, ரன்னிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் சைக்கிளிங் செய்யலாம் போன்று தோன்றும். ஆனால் உங்கள் தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்க, வலிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் யோகா செய்து வாருங்கள். இதுவும் அற்புதமான ஓர் உடற்பயிற்சியே.
60 வயதிலிருந்து நீங்கள் இன்னும் வலிமையுடன் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு, இளமையில் நீங்கள் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் தான் காரணம். எனவே இந்த வயதில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாமல், தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு கடினமான பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றால் நடப்பயிற்சியை செய்து வரலாம்.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், அதற்கேற்ப பல கட்டணங்களை விதிக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்வோம்...

குறைந்தபட்ச இருப்பு இல்லாமைக்கான கட்டணம்:
சேமிப்புக் கணக்கு களுக்கு ரூ. ஐநூறு முதல் ரூ. 10 ஆயிரம் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதக் கட்டணத்தை வசூலிக்கின்றன. எனவே, செயல்படாத அல்லது குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க இயலாத வங்கிக் கணக்கு களின் இயக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது.
பணம் எடுத்தல்:
நம் கணக்கு உள்ள வங்கியைச் சாராத பிற ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றின்போது வங்கிகள் நம்மிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன.
பணம் டெபாசிட் செய்தல்:
வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத பிற கிளை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும்போது அதற்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.
காசோலைகள்:
ஒரு மாதத்துக்கு ஒரு காசோலைக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும். வெளியூர் வங்கிகளைச் சேர்ந்த காசோலைப் பரிவர்த்தனைகளுக்குத் தனியான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குறுஞ்செய்தி சேவைக் கட்டணம்:
நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக கைபேசிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.
டெபிட் கார்டு வழங்கும்போது:
தொலைந்துபோன அல்லது திருட்டுப்போன டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் அதற்கென தனியான அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வணிகப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள்:
இணையம் வழியான வணிகப் பரிவர்த்தனைகளின்போது பொதுவாக கட்டணங்கள் விதிக்கப்படுவது இல்லை. ஆனால், நம்முடைய வங்கி அல்லாத பிற முகமை நிறுவனங்கள் மூலமாக வணிக நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தப்படும்போது சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமாக ரெயில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தும்போது, குறைந்தபட்சக் கட்டணம் அல்லது செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதத்தில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
வெளிநாட்டுப் பண மாற்றப் பரிவர்த்தனைகள்:
கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் 2 முதல் 4 சதவீதம் வரை சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதயநோய் மற்றும் முன்கூட்டிய மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முட்டை சாப்பிடுவது நம் உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா என்ற விவாதம் நீண்டகாலமாக நீடித்து வருகிறது.
இதற்கான பதில், நீங்கள் ஒரு வாரத்துக்கு எத்தனை முட்டைகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது என்கிறது ஒரு புதிய ஆய்வு.
ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதயநோய் மற்றும் முன்கூட்டிய மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் அதிக அளவிலான கொழுப்பு. பெரிய முட்டை ஒன்றில் சுமார் 185 மில்லிகிராம் கொழுப்பு இருக்கும் என அமெரிக்க விவசாயத் துறை கூறுகிறது. நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கொழுப்பை உட்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்து உள்ளது.
இதுதொடர்பாக, மொத்தம் 17 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேர் பங்கேற்ற ஆறு ஆய்வுகள் செய்யப்பட்டன.
நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கொழுப்பு எடுத்துக்கொள்வது, இதயநோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் அளவுக்கும், முன்கூட்டியே மரணம் ஏற்படுவதை 18 சதவீதம் அளவுக்கும் உயர்த்தியதாக ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.
முட்டைகளைப் பொறுத்தவரை, ஒரு வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் உட்கொண்டால், இதயநோய் ஏற்படும் அபாயம் 6 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இது முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் 8 சதவீதம் அதிகமாக உள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, மேற்கண்ட இரண்டு நோய்கள் ஏற்படும் அபாயத்தை 27 மற்றும் 34 சதவீதம் அதிகமாக்குகிறது.
இந்த ஆய்வானது, வயது, உடற்பயிற்சி நிலைகள், புகையிலைப் பயன்பாடு அல்லது ரத்த அழுத்தம் போன்ற எதையும் கணக்கில் எடுக்காமல் மேற்கொள்ளப்பட்டது.
‘‘இரண்டு நபர்கள் ஒரே மாதிரியான உணவு முறையைப் பின்பற்றி, முட்டைகள் எடுத்துக்கொள்வது மட்டும் வேறு மாதிரியாக இருந்தால், அதிகம் முட்டை உண்பவருக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது’’ என்கிறார், நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பிரிவின் இணை ஆசிரியர் நொரினா ஆலன்.
முட்டைகள் உட்கொள்வதற்கும், இதயநோய்க்கான அபாயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறப்பட்ட முந்தைய ஆய்வுடன் இந்தப் புதிய ஆய்வு முரண்படுகிறது.
ஆனால், முந்தைய ஆய்வுகளில் குறைந்த வேறுபட்ட மாதிரிகளே இருந்தன என்றும், குறுகிய காலம் மட்டுமே அவர்கள் கண்காணிக்கப்பட்டார்கள் என்றும் ஆலன் கூறுகிறார்.
எனினும், தங்கள் ஆய்வுகளில் சிறு தவறுகள் இருக்கலாம் என் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
சரி, பொதுவாக எத்தனை முட்டைகளை உட்கொள்ளலாம்?
இந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட ஆலன், ஒரு வாரத்துக்கு மூன்று முட்டைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது என்கிறார்.
அதுவும், முட்டையின் வெள்ளைக்கருவை உண்ணுமாறு முட்டைப் பிரியர்களுக்கு அவர் பரிந்துரைக்கிறார்.
‘‘முட்டை சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திவிட வேண்டும் என்று நான் கூறவில்லை. சரியான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறேன்.’’
இந்த ஆய்வு, அமெரிக்கர்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது. ஓர் அமெரிக்கர், ஆண்டொன்றுக்கு 252 முட்டைகளை உட்கொள்கிறார். இந்தப் பட்டியலில் மெக்சிகோ (352) முதலிடத்தில் இருக்கிறது.

பர்கர் உங்களுக்கு மிகவும் பிடிக்குமானால், அதனை கடைகளில் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இன்று சிக்கன் பர்கர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பர்கர் பேட்டி செய்ய…
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்,
வெங்காயம் - 1,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,
பிரெட் தூள் - 1 கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
பர்கர் பரிமாற…
பர்கன் பன் - 4,
சீஸ் ஸ்லைஸ் - 4,
மையோனஸ், வெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,

செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த சிக்கன் கலவையில் சிறிதளவு எடுத்து கட்லெட் போன்று தட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
பர்கர் பன்னை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
பன்னில் உட்புறம் வெண்ணெய் தடவி, செய்த பர்கர் (கட்லெட்) பேட்டியை அதன் நடுவில் வைத்து அதன் மேல் லெட்டூஸ் வைத்து மையோனைஸ் 1 டீஸ்பூன் தடவி, அதற்கு மேல் சீஸ் ஸ்லைஸ், பர்கர் பன்னை வைத்து மூடி பல் குச்சி சொருகி, தேவையானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.

லெட்டூஸ் - தேவைக்கு.

சூப்பரான சிக்கன் பர்கர் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.
குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.
உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….
உங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.
உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.
முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.
வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.
மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம்.
ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.
மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.
கணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.
மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.
மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.
எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
சண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.

மதிய நேரத்தில் சாப்பிட கூடிய உணவை நாம் சரியான முறையில் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் செரிமானத்தில் பாதிப்பு, ஜீரண கோளாறு, உடல் எடையில் ஏற்ற இறக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடும் உணவை காட்டிலும் மதிய நேரத்தில் அதிக அளவு உணவை எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், சாப்பிட கூடிய அந்த உணவின் தன்மையும், அதனால் கிடைக்க கூடிய ஊட்டச்சத்துக்களும் மிக முக்கியமாகும்.
மதிய நேரத்தில் சாப்பிட கூடிய உணவை நாம் சரியான முறையில் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் செரிமானத்தில் பாதிப்பு, ஜீரண கோளாறு, உடல் எடையில் ஏற்ற இறக்கம், மயக்கம் போன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படும். அந்த வகையில் எந்தெந்த உணவுகளை நாம் மதிய நேரத்தில் சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.
1. சூப்
மதிய நேரத்தில் சூப் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த வகை உணவுகள் சாப்பிட்ட உடனேயே பசி அதிகரிக்கும். இதனால் வழக்கமாக சாப்பிடும் உணவை காட்டிலும் அதிகமான உணவை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும். கடைசியில் அது உடல் பருமனை தான் உண்டாக்கும்.
2. ஜுஸ்
வெறும் ஜுஸை மதிய வேளையில் சாப்பிடக்கூடாது. ஜூஸானது மிக விரைவாக பசியை உண்டாக்கி வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டி விடும். இதனால் இறுதியில் நாம் பெறுவது மோசமான உடல் ஆரோக்கியம் மட்டுமே.
3. நூடுல்ஸ், பாஸ்தா
சுவையாக உள்ளதே என்பதற்காக பாஸ்தா, நூடுல்ஸ் முதலியவற்றை மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இது உங்களின் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதித்து விடும். இவற்றில் உள்ள அதிக அளவிலான கார்ப்ஸ் உங்கள் உடல் நலத்தை பாதித்து எடையை அதிகரிக்க செய்துவிடும்.

4. பர்கர்
ஃபாஸ்ட் ஃபூட் உணவுகள் ஆபத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பர்கர், பீட்சா போன்ற உணவுகள் மதிய நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்கள் அதிகளவில் சேரும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். அத்துடன் மலச்சிக்கலையும் இந்த உணவுகள் உண்டாக்கும்.
5. சான்விட்ச்
எப்போதுமே பிரட் வகை உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் அதிக அளவில் கார்ப்ஸ் இருப்பதால் செரிமான கோளாறுகளை உருவாக்கும். முடிந்த அளவிற்கு நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.
6. சாலட்
சாலட்டில் மிக குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஆனால், இது காலை நேரத்தில் எடுத்து கொண்டால்தான் நல்லது. அதனால், இந்த வகை உணவை மதிய நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
7. கொழுப்பு சத்துள்ள உணவுகள்
எப்போதுமே வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் மதிய உணவில் சேர்த்து கொள்ளாதீர்கள். ஏனெனில் இது உங்களின் முழு ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தன்மை கொண்டவை. கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக இதய கோளாறு, மாரடைப்பு, உடல் பருமன், மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
ஆதலால், மதிய நேரத்தில் சாப்பிடும் போது அவசியம் உணவில் கவனம் தேவை. நார்சத்து, நீர்சத்து, புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் எந்தவித உடல் நல கோளாறுகளும் உங்களுக்கு ஏற்படாது. மதிய உணவின் தன்மையும் மிக முக்கியம் என்பதை கவனத்தில் எடுத்து கொண்டாலே போதும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஃபலூடா ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் :
பால் - 1 கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரட் -3
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் - 1 தேக்கரண்டி
ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள் :
வேகவைத்த சேமியா - 1 கப்
ஜெல்லி - 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)

செய்முறை :
முதலில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.
அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும்.
பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
கடைசியாக அதன் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்.
சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.

செர்ரி பழம் -3

செய்முறை :
முதலில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.
அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும்.
பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
கடைசியாக அதன் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்.
சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. மேலும் உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்.
உடற்பயிற்சியின் போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும்.
இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.
ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்களை பெற முத்தான மூன்று பயிற்சிகள் இதோ!
பயிற்சி 1 : ஓரடி அகலம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 2 : முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 3 : முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.
மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும்.
இடைமெலியும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும். ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.