என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    வாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும பொலிவையும் மெருகேற்றலாம். இன்று வாழைப்பழத்தோலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    வாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும பொலிவையும் மெருகேற்றலாம்.

    வாழைப்பழத்தோலுடன் பால் சேர்த்து சருமத்துக்கு அழகு சேர்க்கலாம். சரும வறட்சி, எண்ணெய் பசைத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் பாலை முகத்தின் அனைத்து பகுதியிலும் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.

    தேனுடன் வாழைப்பழ தோலை சேர்த்து பயன்படுத்தினால் முகப்பருக்களை போக்கலாம். சருமத்தில் ஈரப்பத தன்மையை தக்கவைக்கலாம். சரும வறட்சியை கட்டுப்படுத்தலாம். முகப் பருவால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கலாம். இதற்காக வாழைப்பழ தோலை கூழாக்கி அதனுடன் தேன் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் ஒருதடவை இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.



    முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கற்றாழை இலை ஜெல்லுடன் வாழைப்பழ தோலை சேர்த்து பயன்படுத்தி நிரந்தர தீர்வு காணலாம். இரண்டையும் சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

    வாழைப்பழ தோலை கூழாக்கி அதனுடன் மஞ்சள் தூள் கலந்தும் முகத்தில் பூசி வரலாம். முகப்பரு பிரச்சினையால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இது உதவும். இரண்டு நாட் களுக்கு ஒருமுறை மேற்கண்ட கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.

    ரோஸ் வாட்டருடன் வாழைப்பழ தோல் கூழை கலந்தும் சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம். 
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான சுவையான லஞ்ச் செய்து கொடுக்க விரும்பினால் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பட்டன் காளான்கள் - 20
    இஞ்சி, பூண்டு - சிறிதளவு,
    வெங்காய‌த்தாள் - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - ஒன்று
    ப‌‌ச்சை மிள‌காய் - 3
    சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
    மிள‌குத்தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
    சாத‌ம் - 4 கப் ( உதிரியாக வ‌டித்து ஆறவைத்தது)
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :
     
    பட்டன் காளானை நீரில் சுத்தப்படுத்தி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
     
    ஒரு பெரிய வாணலியில், சிறிதளவு எண்ணெயை விட்டு சூடானதும் வெங்காய‌ம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

    அடுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து, சிறிது நேர‌ம் வத‌க்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் சிறிதளவு உப்பு, சோயா சாஸ் சேர்த்து, வடித்து வைத்திருந்த சாதத்தைக் கொட்டி கிளறவும்.
     
    கடைசியாக மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து வாணலி சூட்டிலேயே கலந்து இறக்கினால் சூடான சுவையான மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பெலும்புகள் நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை

    விரிப்பில் வலது பக்கத்தில் சாய்ந்து படுக்கவும். வலது முட்டிக்கை தரையில் படும்படி, வலது உள்ளங்கையால் தலையை தாங்கி கொள்ளவும். இடது உள்ளங்கை தரையில் படும்படி, நெஞ்சத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளவும். கால்களை நன்கு நீட்டி, நேராக வைத்துக் கொள்ளவும். இடது காலை மெல்ல மேலே தூக்கவும்.

    காலை மேலே தூக்கியவாறு, வட்டமிடவும். பின் காலை கீழே கொண்டு வரவும். இவ்வாறு மற்றொரு பக்கம் திரும்பி வலது காலை மேலே தூக்கி, வட்டமிட்டு பின் கீழே கொண்டு வரவும். ஒரு பக்கத்தில் 5-6 முறை செய்யவும். இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பலன்கள்

    இந்த ஆசனம் இடுப்பெலும்பை நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும்.
    இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும்.
    இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்றிதழ்களுடன் வேலைக்கு அமர்ந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானவர்கள் பற்றி பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கிறோம். ஆள்மாறாட்டம் செய்து அகப்பட்டுக்கொள்கின்ற நிகழ்ச்சிகளும் நிகழவே செய்கின்றன. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற விரும்புவதில் தவறில்லை. அதற்கு நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    போலித்தனம் என்பது ஏமாற்றுகின்ற முயற்சியின் வெளிப்பாடேயாகும். ஒரு பொருள் அமோகமாக விற்பனை ஆகிறது என்றால், அது எந்தப் பெயரில் விற்பனை ஆகிறதோ, அதே பெயரில் போலிகள் வரத்தொடங்கிவிடுகின்றன. உடனே அந்தப் பொருளை உற்பத்தி செய்கின்ற நிறுவனத்தார் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். இதெல்லாம் எதை காட்டுகிறது? பொய்யை நிஜம் போல நம்பவைப்பதில் சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் என்பதைத்தானே.



    ஆனால் உறவுமுறைகளில் போலித்தனம் வெற்றிப்பெறுவதில்லை. நாம் நாமாக இருப்பதில்தான் நமக்கு பெருமை. நாம் இன்னொருவரைப் போல எதற்காக நடிக்க வேண்டும்? நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டிக்கொண்டு எதற்காக வாழ வேண்டும்?

    ஆனால் உறவுகளில் போலித்தனம் மிகுந்தே காணப்படுகிறது. முகத்துக்கு நேராக புகழ்பவர்கள், யாரை புகழ்ந்தார்களோ, அவர்களையே இன்னொருவரிடம் இகழ்வார்கள். இதுபோன்ற போலிகளுக்கு செல்வாக்கும் பலமும் இருப்பது மறுப்பதற்கில்லை. எதிரில் அளவுக்கு மீறிப் புகழ்கிறவர்களை நம்புவது ஒரு பலவீனம். இந்த உறவுகள் நெருக்கடி நேரங்களில் துணை நிற்பதில்லை.

    பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும். எப்போது எந்த பொய் காட்டிக் கொடுக்கும் என்று தெரியாது. எல்லா நேரத்திலும் எச்சரிக்கையுடன், அச்சத்துடன் வாழ வேண்டி இருக்கும். யோசித்து பார்த்தால் போலித்தனமாக வாழ வேண்டிய அவசியமே இல்லை. நாம் எப்படி இருக்கிறோமோ அந்த நிலையில் உறவுகளை மேற்கொண்டால் போதும். நாம் இருக்கின்றபடி நம்மை ஏற்றுக்கொண்டு நம்மிடம் உறவு செய்கின்றவர்களே நல்ல உறவினர்களாக இருப்பார்கள். அவர்களே நிலைத்து நீடிக்கக் கூடியவர்கள். பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்த பிறகு ஏற்படுகின்ற உறவுகளே இயற்கையான உறவுகளாகும்.

    ஜெ.யுகாதேவி, சமூக ஆர்வலர்
    காலை வேளையில் வேகமாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஏதேனும் சமைக்க வேண்டுமென்றால், அதற்கு போதுமை ரவை உப்புமா மிகவும் சிறந்ததாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    பெரிய வெங்காயம் - 1
    வரமிளகாய் - 2
    இஞ்சி - சிறிது
    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி தட்டி வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.

    பிறகு அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, சிறிது நேரம் மூடி போட்டு வேக வைக்கவும்.

    பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

    இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

    இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டு தோறும் 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டு தோறும் 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் டபிள்யூஎச்ஓ யுனிசெப் சார்பில் 10 அம்ச புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டன.

    குழந்தைக்கு பால் ஊட்டுவதற்காக தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும், மருத்துவமனைகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா எச் போர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம். குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டினால் நோய் தொற்றுகளில் இருந்தும், உயிரிழப்பில் இருந்தும் பாதுகாக்கலாம். தாய்ப்பால் ஊட்டாமல் விட்டுவிட்டாலோ அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பால் ஊட்டினாலோ, வயிற்றுப்போக்கு மற்றும் இதர நோய் தொற்றுகள் காரணமாக பச்சிளங் குழந்தைகள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    உலகம் முழுவதும் சரியாக தாய்ப்பால் ஊட்டாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றன. எனவே, பிறந்தது முதல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டுக்கு 5 வயதுக்கு உட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க முடியும். தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தையின் கவனம், அறிவுத்திறன் மேம்படும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும்.

    இதன் மூலம் தனிப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் சுகாதாரத்துக்காக ஒதுக்கும் செலவு கணிசமாக குறையும். எனவே, தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிப்பதும், ஆதரிப்பதும் அவசியமாகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நமக்கு குழந்தை பிறப்பது எவ்வளவு பாக்கியம் என்று நினைக்கிறோமோ, அதே போல் தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட, தாய் கிடைப்பதும். நம் நாட்டில் பல குழந்தைகள் தாயின்றி, காப்பகத்தில் காப்பாளர்களின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறார்கள். 
    பரபரப்பான இன்றைய வாழ்வியில் முறையில் நாம் குழந்தை பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.
    எல்லோரும் விரும்புவது தம்மக்களை நல்லமுறையில் வளர்க்க வேண்டும், அவர்களை எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க செய்ய வேண்டும் என்பதை தான். ஆனால் பரபரப்பான இன்றைய வாழ்வியில் முறையில் நாம் குழந்தை பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.

    கருத்தரிப்பிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை குழந்தை பராமரிப்பின் மிக முக்கியமான காலம் ஆகும். நம்முடைய பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சிலவேளைகளில் குழந்தைகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தி விடுவதுண்டு.

    உதாரணமாக, கருத்தரிப்பு உறுதியானதுமே சில தாய்மார்கள் குழந்தை சிவப்பாக இருக்கவேண்டுமென்று குங்குமப்பூ சாப்பிடுவர். நிறத்திற்கும் குங்குமப்பூவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதைப்போல கருப்பட்டி சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. அதே வேளையில் இவற்றை சாப்பிடுவதால் ஒரு பலனுண்டு. தாய்க்கும் சேய்க்கும் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.

    அதைப் போன்று குழந்தை பிறக்க சரியான காலம் நிர்ணயித்து, அக்குறிப்பிட்ட நேரத்தில் மகப்பேறு பார்க்க மருத்துவரை கட்டாயப்படுத்துவது சிலநேரங்களில் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை உருவாக்கலாம். சரியான நேரம் என்று ஒன்றினை கணிக்கவே முடியாது. மருத்துவர் உத்தேசமாக சொல்வதுதான் நேரம்.

    பிறந்த குழந்தைக்கு உடனே தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். குறைந்த எடை, குறைப்பிரசவம், உடற்குறைபாடுகள், தாயின் உடல்நிலை பாதிப்பு போன்றக் காரணங்கள் தவிர்த்து குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது தவறு. பிறந்த குழந்தையை நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குள் மென்மையாக, மிதவெப்ப நீரில் குளிப்பாட்டுவதும் தலையைச் சுத்தம் செய்வதும் அவசியம்.

    ஆறுமாதங்கள் முடியும்வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. பசும்பால், பவுடர் பால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் குறையும் பட்சத்தில், தாய் அதிக அளவில் பசும்பால், தயிர், பழச்சாறு, கஞ்சி ஆகியவற்றை உட்கொள்வதினால் பால் சுரக்கும். குறித்தக் காலத்தில் பால் ஊட்டுவது அவசியமற்றது. குழந்தை அழுதால் மட்டுமே புகட்டுவது சிறந்தது.

    தாய் அமர்ந்த நிலையில்தான் பால் ஊட்டவேண்டும். தாய்ப்பால் அருந்தும் தருணங்களில் குழந்தை மலம் கழிப்பது இயற்கை. இது வயிற்றுப்போக்கு அல்ல. இதற்கு எந்த மருந்தும் தேவை இல்லை.



    மலம் கழித்தபின் சுத்தம் செய்ய கையோ, பஞ்சோ, துணியோ உபயோகிக்காமல், நேரடியாக குளிர்ந்தநீரில் கழுவுவது அவ்விடத்தில் புண் ஏற்படாமல் பாதுகாக்கும். குழந்தை அதிக நேரம் தூங்குவது நல்லது. துணித் தொட்டிலைத் தவிர்த்து, தரையில் மெத்தை விரித்து தாய்க்கு அருகாமையிலோ அல்லது மார்பின் மீதோ தூங்க வைப்பது நல்லது.

    ஆறு மாதங்களுக்கு பிறகு திட உணவு கொடுக்க தொடங்கலாம். முதலில் தயிர், மசித்த வாழைப்பழம், பழச்சாறு என தொடங்கி, படிப்படியாக, தயிர்சாதம், பருப்பு சாதம், காய்கறிசூப், இளநீர், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்க்கலாம்.

    அந்தி சாய்ந்த நேரங்களில் குழந்தைகள் அழுவது இயற்கை. அதற்கு தொப்புளில் எண்ணெய் வைப்பதும், கிரைப் வாட்டர் மற்றும் நாட்டு மருந்துகள் தருவதும். எந்த பலனையும் அளிக்காது. தாயின் தாலாட்டு அல்லது பதிவு செய்யப்பட்ட தாலாட்டு இசை, மற்றும் குறைவான வெளிச்சம் தரும் மின்விளக்கு போன்ற சூழல் நல்ல பலனை அளிக்கும்.

    சில குழந்தைகள் விரல் சூப்பும். இதைத் தவிர்க்க தாய்மார்கள் விரலில் வேப்பெண்ணெய் தடவுவது உண்டு. இது தவறானது. விரல் சூப்புவது இயற்கை அளித்த நல்லதொரு வரம். இத்தகைய குழந்தைகள் மிக அமைதியாகவும், தெளிந்த சிந்தனையுடன் உருவாகுவதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. விரல் சூப்புவதால் பசியின்மை, பல் அமைப்பில் குறைப்பாடு போன்றவை ஏற்படும் என்பது தவறான கருத்து.

    பதினோரு மாதத்தில் குழந்தைக்கு முடி எடுப்பது, மொட்டை அடிப்பது வழக்கம். பெரும்பாலும் இத்தகைய சடங்குகளை வீட்டிலோ அல்லது சுகாதாரமுள்ள இடங்களில் நடத்துவது நல்லது. பல குழந்தைகள் இச்சடங்குகளுக்கு பிறகு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், கைகால் வலிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுவதை நீண்ட அனுபவத்தில் கண்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் நீண்ட பயணம், சுகாதாரமற்ற நீரில் குளிப்பது, அசுத்தமான சூழல் போன்றவைதான்.

    பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தையின் முதல் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கூட்டம் கூட்டி நடத்துவார்கள். கூட்டம், இரைச்சல் இவற்றால் குழந்தைகள் பயத்தினாலும் சோர்வினாலும் அல்லல்படுவதுண்டு. முதல் பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடிவிட்டு இரண்டாம் பிறந்தநாளை அனைவரையும் அழைத்து கொண்டாடுவது சிறந்தது.

    ஆரோக்கியமான குழந்தை வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் ஒளிவிளக்காய் திகழும்.

    டி.எம்.மாணிக்கராஜ்,

    குழந்தைகள் நல மருத்துவர்
    அளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    உடலின் பெரும்பகுதியில் தண்ணீர்தான் நிரம்பியிருக்கிறது. அதை சார்ந்தே உடல் இயக்கமும் நடைபெறுகிறது. போதுமான அளவில் தண்ணீர் குடிப்பது உடல் இயக்கத்திற்கும், வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் உதவும். கோடைகாலத்தில் அதிக தாகம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதேவேளையில் தாகம் எடுக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.

    அளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும் அதிகளவில் தண்ணீர் பருகும் போது அது சிறுநீரகத்தையும் சோர்வடையச்செய்யும். உடலில் தேங்கி இருக்கும் அதிக தண்ணீரை சமநிலைப்படுத்துவதற்கு உடல் உறுப்புகள் இயங்கும்போது சோடியத்தின் அளவு குறைந்து போய்விடும். மேலும் மூளையில் வீக்கம் ஏற்படவும் வழிவகுத்துவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 8 டம்ளர் குடிப்பது போதுமானது. 
    சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. அந்த வகையில் இவர்கள் சாப்பிடக்கூடிய - சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

    சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவுகள்:

    கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை மாவு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், து.பருப்பு, பாசிபயறு, உளுத்தம்பருப்பு.

    காய்கறிகள்:- கேரட், பீட்ருட் தவிர்த்து மற்ற காய்கறிகளை சாப்பிடலாம். எல்லா கீரை வகைகளையும் சாப்பிடலாம்.

    பழங்கள்:- ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி போன்ற பழ வகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம், கொழுப்பு நீக்கப்பட்ட பால், அதிக புளிப்பில்லாத மோர், சூரிய காந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்லெண்ணை, ஆலிவ் எண்ணெய், சர்க்கரை இல்லாத காபி, டீ அளவோடு சாப்பிடவும். முந்திரி, பாதாம், வால்நட் சாப்பிடலாம்.


    சாப்பிடக்கூடாத உணவுகள்: உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிக்காய், சர்க்கரையில் செய்த இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் வகைகள், கேக் வகைகள், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அண்ணாசிபழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரீச்சம்பழம், எருமைபால், தயிர், பாலாடை, வெண்ணை, நெய், பால்கோவா, ஆட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணை, வனஸ்பதி, பாமாயில், எண்ணையில் பொறித்த உணவு வகைகள், (சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா) பிரட், பன், கேக், பப்ஸ், பிஸ்கட், ஊறுகாய் வகைகள், வேர்கடலை சாப்பிடக்கூடாது.
    புலாவ், சப்பாத்தி, நாண், சாத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    சிக்கன் - அரை கிலோ
    சோம்பு - 1 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 7
    பூண்டு - 10 பல்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்



    செய்முறை

    சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அடுப்பை மிதமான தீயில் மூடிவைத்து வேக விடவும்.

    தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

    கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதே புருவங்கள்தான். புருவம் அழகாக, நேர்த்தியாக வளர உங்களுக்கான சில இயற்கை வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதே புருவங்கள்தான். சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும்... வேறு சிலருக்கு திடீரென்று அவற்றில் இருக்கும் முடி உதிர ஆரம்பித்து வயிற்றில் புளியைக் கரைக்கும்.. புருவத்தை காக்க வீட்டிலேயே பின்பற்றக்கூடிய இயற்கை வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    * விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து செய்துவரவும். விளக்கெண்ணெய் புருவ வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    * இதைத் தூங்குவதற்கு முன்னர் புருவத்தில் தேய்த்து, காலையில் கழுவிவிடவும். இது முடியின் புரோட்டீன் இழப்பைத் தடுக்கும். இதிலிருக்கும் லாரிக் அமிலம் (Lauric acid) புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து, முடி வளர உதவும்.

    * இதை விரலால் புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்துக் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு இதைச் செய்துவந்தால் முடி வளரும். ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும். வைட்டமின் ஏ உடம்பில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெயை (Sebum) அதிகரிக்கும்.



    * தூங்குவதற்கு முன்னர் இதைத் தேய்த்துவிட்டு காலையில் கழுவவும். இதிலிருக்கும் வைட்டமின் ஏ, பி, இ முடி வளர உதவும்.

    * கற்றாழை ஜெல்லைத் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது விரைவில் முடி வளர உதவும்.

    * ஒரு வெங்காயத்தைச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, மூன்று டீஸ்பூன் தண்ணீர் கலந்து தேய்த்துவந்தால், முடி வளரும். வாரம் மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் சல்ஃபர் முடி உதிர்வைத் தடுக்கும்.

    * இதைப் புருவங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் பயோட்டின் முடி வளர உதவும்.

    * பாலைப் பஞ்சால் தொட்டுத் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். ஆறு மாதங்களுக்கு இதைத் தொடர்ந்து செய்துவர புருவ முடி சீராக வளரும்.

    * செம்பருத்தி இலையை அரைத்து, புருவங்களில் தேய்த்துவர புருவ முடி வளரும்.
    உணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஒரு நாளின் தொடக்கத்தில் அதிகமான கலோரிகளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது என்று இன்னும் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

    உடல் எடையைக் குறைக்க விரும்பும், அதற்காக முயற்சிக்கும் பெண்கள், மதிய உணவை முன்னதாக எடுத்துக்கொள்ளும்போது அதிக எடையை இழக்கிறார்கள். ஆனால், அதேநேரம் காலை உணவைத் தள்ளிப்போடும் பெண்களுக்கு உடல் நிறை குறியீடு மோசமாக இருக்கிறது. அதாவது, உடல் உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு.

    லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் விரிவுரையாளர் கெர்டா ஒரு பழமொழியை மேற்கோள் காட்டுகிறார், ‘‘காலை உணவை அரசனைப் போல உண்ணுங்கள், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் உண்ணுங்கள் என்கிறது ஒரு பழமொழி. இதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்’’ என்கிறார் அவர்.

    நாம் என்ன உண்கிறோம் என்பதைவிட, எப்போது உண்கிறோம் என்பது மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



    சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜோனாதன் ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தைத் தள்ளிப் போடுவது உடல் இயக்கத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என்கிறார்.

    பத்து ஆண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், உணவு உண்ணும் நேரத்தை ஐந்து மணி நேரம் தள்ளிப்போடுவது, அவர்களின் உடல் கடிகாரத்தின் உயிரியல் குறியீட்டை தெளிவாக மாற்றியதை ஜோனாதன் கண்டறிந்தார்.

    உணவு உண்பது குறித்து மக்களிடம் பல கேள்விகள் உள்ளன. அந்த கேள்விகளில் முதன்மையானது, எப்போது உண்ண வேண்டும்? எப்போது உண்ணக் கூடாது? என்பதுதன்.

    இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தை முன்னதாக மாற்றுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்கிறார். ஆனால், எதனால் இது ஏற்படுகிறது, எப்போது உண்ணுவது நலம் என்பது போன்ற கேள்விகளுக்கு இனி வரும் ஆய்வுகள்தான் தெளிவான விடை தரும் என்று சொல்கிறார்.
    ×