என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.

    தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.

    வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

    அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

    சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.

    இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணுங்கள்.

    இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.

    ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்துங்கள்.

    பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் ‘ராம.. ராம' என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜெபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108-ன் மடங்காக இருக்கட்டும்.

    இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.

    முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ெஜபமும் உதவுகின்றன. 
    இந்தியப் பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த செய்வதற்காக ‘கூகுள் இந்தியா’ என்ற தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    இந்தியப் பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த செய்வதற்காக ‘கூகுள் இந்தியா’ என்ற தனி இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணைய தளம் மூலமாக, பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடுத்த 5 ஆண்டுக்குள் இணையத்தை பயன்படுத்தும் இந்தியப் பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் இருப்பது போல இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா 2-வது இடத்திற்கு வர உள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தை தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு 2-வது இடத்திலும் உள்ளது.

    இந்த நிலையில் ‘கூகுள் இந்தியா’ இந்தியாவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு இணைய தளத்தை அமைத்துள்ளது. hwgo.com (ஹெல்பிங் உமன் கெட் ஆன் லைன்) எனும் முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம், இணைய பயன்பாட்டின் அடிப்படை பற்றி பெண்களுக்கு வழி காட்டுகிறது. இணையத்தை எளிதாக அறிமுகம் செய்யும் வகையில் அதை பயன்படுத்த தேவையான அடிப்படை விஷயங்களை முகப்பு பக்கத்திலேயே கொடுத்துள்ளது.

    கம்ப்யூட்டர் அடிப்படையில் தொடங்கி, இணைய அடிப்படை, இ-மெயில், வீடியோ சேவை ஆகியவற்றை எளிமையாக இந்த பகுதி விளக்குகிறது. இணையத்தில் பெண்களுக்கு பயன் படக்கூடிய விஷயங்களையும் வீடியோ விளக்கத்துடன் அளித்துள்ளது. இணையத்தை பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று வழி காட்டும் இந்த தளத்தில், இணையத்தை பயன்படுத்தி பயன் அடைந்த பெண்களின் அனுபவமும் கொடுக்கப்பட்டுள்ளது. இணைய பயன்பாடு என்பது சகஜமாக கருதப்பட்டாலும் கூட, இதுவரை இணையத்தை பயன்படுத்தியிராத பெண்களை இணையம் அருகே கொண்டு வரும் முயற்சியாக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. 
    இருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான்.
    இருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். மருந்தின் உதவியோடு அதனை வேலை செய்ய வைக்க முடியும் என்பது மருத்துவ முன்னேற்றம். சிறுநீரகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் கிடைக்காத பொழுது சிறுநீரகங்கள் உப்பு, நீர் இவற்றினைத் தேங்க வைத்து விடுகின்றன.

    இந்த அதிக நீர் கணுக்கால், பாதம், கால் சில சமயம் வயிறு பகுதிகளில் வீக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் திடீரென எடையும் கூடலாம். இந்த நீர் தேக்கம் மூச்சுத் திணறலினை உருவாக்கலாம். இது நீண்ட கால தொடர் மருத்துவம் தேவைப்படும் பாதிப்பு. மருத்துவம் இருக்கும் பாதிப்பினை மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தும். மருத்துவத்துடன் உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றினை மாற்றிக் கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கின்றது.
    உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான். ஆகவே

    * உங்கள் எடையினை அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள்.
    * நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீர், டீ, காபி, மோர், ஜூஸ் என எந்த திரவ உணவாயின் அளவினை கணக்கில் கொள்ளுங்கள்.
    * ரத்தக் கொதிப்பினை நல்ல கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்.
    * உப்பின் அளவினை குறைத்துக் கொள்ளுங்கள்.
    * மது வேண்டாமே

    * புகை பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்தி விட வேண்டும்.
    * தினமும் சுறுசுறுப்பாய் இருங்கள்.
    * மருந்து எடுத்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
    * இருதய வால்வினால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை தேவைபடலாம்.

    * மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், இருதய வால்வு பிரச்சினை இவைகள் இருதய பாதிப்பிற்கு பொதுவான காரணங்கள்.
    * வாழ்க்கையே போய் விட்டது போல் கருத வேண்டாம். சிறிது கவனம் உங்கள் வாழ்வை நன்றாக வைக்கும். அதிக வெய்யில், அதிக குளிர் காலங்களில் வெளியில் செல்ல வேண்டாம்.
    நீண்ட நேரம் வேலை செய்யாமல் நேரத்தினை குறைத்துக் கொள்ளுங்கள்.

    இருதயத்தினை பாதுகாப்பதற்கான டிப்ஸ்:

    * அவ்வப்போது இருதயத்திற்கும் சற்று வேக தூண்டுதல் நல்லதே. நல்ல புத்தகம், பாசமானவர்களுடன் இருத்தல், இவை இருதயத்தினை சற்று சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும்.

    * வெய்யில் காலத்தில் அதிக தூசு இருக்கும் நேரங்களில் வெட்ட வெளியில் உடற் பயிற்சி செய்யக் கூடாது. இது உங்களுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவினைக் குறைத்து இருதய பிரச்சினைகளை கூட்டி விடும்.

    * புகை பிடிக்கவும் வேண்டாம். புகை பிடிப்போர் அருகில் இருக்கவும் வேண்டாம்.



    * நீச்சல் போன்ற பயிற்சியினை ஆரம்ப காலத்தில் இருந்தே பழகி விடுவது நல்லது. இது 60 சதவிகிதம் இருதய பாதிப்பு ஏற்படுவதினைக் குறைத்து விடுகின்றதாம்.
    * மனஉளைச்சல் ஒன்றே போதும். உங்கள் இருதயத்தினை அதிக பாதிப்பிற்கு உள்ளாக்க. ஆக முனைந்து கவலைகளை அடித்து துரத்தி விடுங்கள்.
    * அன்றாடம் 20 நிமிட தியானம் அவசியம் என்று வலியுறுத்தாத மருத்துவர்கள் உலகில் இல்லை எனலாம்.

    * punching bag ஒரு தலையணையாவது வைத்துக் கொள்ளுங்கள். கோபம் ஏற்பட்டால் அதனை வலுவாக boxing போல் குத்துங்கள். ஏனெனில் கோபம் உங்களுள் இருந்தால் உங்களை பாதிக்கும். வெளி வந்தால் மற்றவரை பாதிக்கும்.

    * உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு ஆஸ்பிரீன் மாத்திரை அவசியமா என கேட்டறியுங்கள். உங்கள் வயது, உடல் நலம், வேலை பளு இவற்றுக்கேற்ப அவரே உங்களுக்கு சரியான அளவினை தேவையெனின் பரிந்துரை செய்வார்.

    * காலை உணவினை தவறாது உண்பவர்களுக்கு 44 சதவிகிதம் இருதய பாதிப்பின் அபாயம் குறைந்தே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமா? 41 சதவிகித சர்க்கரை நோய் பாதிப்பும் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * பி வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக பபோலிக் ஆசிட் சத்து மாத்திரையாக எடுத்துக் கொள்வது இருதய நோய் பாதிப்பினை குறைத்து விடுகின்றதாம்.

    * 5000 அடிகள் வீதம் தினம் நடப்பவருக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் வெகுவாய் குறைகின்றது.

    * முழு தானியம், காய்கறி சாலட் இவை மாபெரும் உதவியாய் இருதய நோயிலிருந்து மனிதனை காக்கின்றது.

    * டீ குடிக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. அதிலும் கிரீன் டீ, லெமன் டீ, கறுப்பு டீ இவற்றினை நல்லது என்கின்றனர். இதிலுள்ள ப்ளேவனாய்ட் ரத்த நாளங்கள் உறுதியாய் வைப்பதுடன் ரத்தத்தினையும் இறுகாமல் வைக்கின்றது. இதனால் சிறு ரத்த கட்டிகள் உருவாகி அடைப்புகள் ஏற்படுவது வெகுவாய் தடுக்கப்படுகின்றது.

    * காபி இருதய பாதிப்பு உருவாகும் நிலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
    * அடர்ந்த சாக்லேட் ஓரிரு துண்டுகள் தினமும் சாப்பிடலாம்.
    * அதிக சோடியம் அதாவது உப்பினை தவிர்ப்பது இருதய பாதிப்பினை வெகுவாய் குறைக்கின்றது.
    * குடும்ப உறவுகளுடன் தினமும் சிறிது நேரம் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள்.

    * ஓமேகா-3, இதனைப் பற்றி உங்கள் மருத்துவர் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள். 
    வட இந்தியாவில் ஷக்கர்கந்தி என்று அழைக்கப்படும் சக்கரைவள்ளிக் கிழங்கு சாட் மிகவும் பிரசித்தம். சுவையான ஷக்கர்கந்தி சாட் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம்
    சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பாத்திரத்தின் தண்ணீர் ஊற்றி சூடானதும், சர்க்கரைவள்ளிக் கிழங்கை முக்கால் பதம் வேகவைக்க வேண்டும்.

    வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோலுரித்து சதுரங்களாக துண்டுகள் போடவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பிசிறிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிழங்கு துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எடுத்து, சாட் மசாலாத்தூள் தூவி பரிமாறவும்.

    இது வட மாநிலங்களில் குளிர்காலத்தில் விற்கப்படும் பிரபலமான சாட். சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு... இந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடியது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
    உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி அதிகம் தெரியாது.

    மீன் எண்ணெய் என்றால் என்ன?

    இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

    இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டாமல். இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

    இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.



    எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

    இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

    இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

    ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

    முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

    மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.

    கர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
    கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. எனினும், ஹார்மோன்களினால் ஏற்படும் மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும்.

    இந்த மாற்றங்களில் முக்கியம் வாய்ந்ததாக கருதக்கூடியது செரிமானம், குடல் இயக்கங்களிலும் மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும்.

    கர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    கர்ப்பிணிகளின் உடலில் கர்ப்பம் சார்ந்த ஹார்மோன் அதிகரிப்பதால், வேறு சில சுரப்பிகளும் அதிகரிக்கும். இந்த சுரப்பிகள் அவர்களின் மார்பகத்தின் அளவை பெரியதாக்குகிறது. இதனால் கர்ப்பக் காலத்தில் பெண்கள் தங்களது மார்பகங்களை சற்று பாரமாக உணர்வார்கள்.

    கருவுற்று இருக்கும் பெண்களுக்கு மார்பக பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஹார்மோன்கள் மாற்றம் அடைந்து திசுக்கள் உப்பியது போல இருப்பதால், அவர்களின் மார்பகம் பாரமாக இருப்பதுடன் கொஞ்சம் வலி மிகுந்ததாகவும் உணர்கிறார்கள்.

    மேலும் கர்ப்பிணி பெண்களின் மார்பக பகுதியில் நீல நிறத்தில் நரம்புகள் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் மார்பகத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்த ஓட்டம் தான். அதற்காக பயப்பட தேவையில்லை என மகப்பேறு நிபுணர்கள் கூறுகின்றனர்.
    உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. இன்று சுவையான வெண்டைக்காய் பொரியல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 1/4 கிலோ,
    வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
    வரமிளகாய் - 1,
    பூண்டு - 2 பல்,
    தேங்காய் துருவியது - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை

    முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, அதனை ஒரு துணியால் துடைத்து விட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.

    பின்பு அதில் மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமானதும், அதில் நறுக்கிய வெண்டைக்காய் போட்டு கிளறி, வெண்டைக்காய் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.

    வெண்டைக்காய் வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    இறுதியில் அத்துடன் துருவி வைத்துள்ள தேங்காய் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும்.

    சூப்பரான வெண்டைக்காய் பொரியல் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூரிய நமஸ்காரம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பயிற்சி செய்யும் முறை : புதியதாக பழகுபவர்கள் தினமும் 2 முதல் 3 சுற்று பயிற்சி என ஆரம்பித்து சில வாரங்களுக்கு ஒருமுறை உடல் வலிமைக்கு ஏற்றபடி சில சுற்றுக்களை அதிகப்படுத்திக் கொண்டு போய் ஒரு வேளைக்கு 12 சுற்று வரை பயிற்சி செய்யலாம். 12 சுற்றுகளுக்கு அதிகமாக செய்பவர்கள் நிலை 4ல் பின்னோக்கி வைத்த காலையே மீண்டும் நிலை 9ல் முன்னால் வைத்து ஒவ்வொரு சுற்றிலும் இதே போல் இரண்டு கால்களையும் மாற்றிச் செய்ய வேண்டும்.

    சூரிய நமஸ்காரத்தை 27 சுற்றுகளுக்கு அதிகமாக தினமும் காலை, மாலை செய்பவர்கள் வேறு ஆசனப் பயிற்சிகள் செய்யாமலேயே அதிக அளவு பயனைப் பெற முடிகிறது. ஆனால் 27 சுற்றுக்களைவிட அதிகமாக 54, 108 சுற்று செல்ல விருப்பம் உள்ளவர்கள் குருவின் நேரடிப் பார்வையில் பயில்வது நல்லது.

    தடைகுறிப்பு : குடலிறக்கம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் உள்ளவர்கள் சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்யக் கூடாது. பெண்கள் மாதவிலக்கு நாட்களில் செய்யக்கூடாது.

    பயிற்சிக்குறிப்பு : பருவ காலத்திற்கு தகுந்தபடி பயிற்சி செய்ய வேண்டும். குளிர் காலத்தில அதிகமாகவும் கோடை காலத்தில் சற்று குறைத்தும் பயிற்சி செய்வது நல்லது. தன் சக்திக்கு மீறிய அளவு அதிக சுற்றுப் பயிற்சி செய்யக் கூடாது. எவ்வளவு சுற்றுக்களை களைப்பின்றி செய்ய முடிகிறதோ அவ்வளவு நேரம் மட்டும் பயிற்சி செய்யவும்.

    சூரிய நமஸ்காரத்தையும் உடற்பயிற்சிகளையும் ஒன்றாக செய்யக் கூடாது.

    நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.
    அழகாக திகழ வேண்டுமெனில், இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் அதிகம் இருப்பதால், வீட்டிற்கு சென்றதுமே, கைக்கால்களைக் கூட கழுவாமல், அப்படியே சாப்பிட்டு, தூங்கிவிடுவோம். ஆனால் பெண்களை எடுத்துக் கொண்டால், இரவில் படுக்கும் முன் பல்வேறு பராமரிப்புக்களை தங்களின் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கொடுப்பார்கள்.

    அதனால் தான் அவர்களுக்கு சருமம் மற்றும் கூந்தலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை. இருப்பினும் நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.

    சில பெண்கள் இரவில் படுக்கும் போது முடியை விரித்துப் போட்டு, அதன் மேல் தூங்குவார்கள். இப்படி முடியின் மீது நாம் தூங்கினால், உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேறு முடி சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்

    இரவில் படுக்கும் முன் ஆல்கஹால் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆல்கஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

    சிலர் தூங்கும் போது குப்புற படுப்பார்கள். அப்படி குப்புறப் படுத்தால், சருமம் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மார்பகங்கள் வடிவிழந்து தொங்க ஆரம்பித்து, சுருக்கங்களைப் பெறும். எனவே நேராகவோ அல்லது இடது பக்கம் திரும்பியோ படுக்க பழகுங்கள்.

    பகலில் தான் அலுவலகத்தில் ஏசியில் இருந்து சாகிறீர்கள் என்றால், இரவில் கூடவா ஏசி வேண்டும். இப்படி எந்நேரமும் ஏசியிலேயே இருந்தால், சரும செல்கள் தான் அதிகமாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, எப்போதும் ஏசியில் இருப்போருக்கு சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரித்து, சருமமானது முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்

    எந்நேரமும் மொபைலைப் பார்த்தவாறு இருந்தால், அதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் தான் காணப்படும். மேலும் இரவில் காதலி அல்லது காதலுடன் நீண்ட நேரம் போனில் மொக்கைப் போட நன்றாகத் தான் இருக்கும். ஆனால் போனின் திரை தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, பருக்கள் அதிகம் வரும். இவ்வளவு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில், நள்ளிரவு சாட்டிங்கை முதலில் நிறுத்துங்கள்.

    தலையணை உறையை மாற்றாமல் இருப்பது அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், வாரம் ஒருமுறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அதில் சேர்ந்துள்ள அழுக்குகளின் மூலமே முகத்தில் பருக்கள் மற்றும் தலையில் பொடுகு வர ஆரம்பித்துவிடும்.
    சர்க்கரை நோயாளிகள் கோதுமை ரவை, வெஜிடபிள் சேர்த்து சூப் செய்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    விருப்பமான காய்கறிகள் - 1 கப்,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1 அல்லது 1 1/2 கப்,
    பட்டை - 1,
    கிராம்பு - 1,
    ஏலம் - 1,
    இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி,
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    எண்ணெய் - 1 தேக்கரண்டி,
    கொத்தமல்லி இலை - சிறிது,
    உப்பு - தேவைக்கேற்ப,
    கோதுமை ரவையில் சமைத்த சாதம் - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை


    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.

    உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்

    இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பருப்பு வேக வைத்த நீரை சேர்த்து வேகவிடவும்.

    வெந்ததும், கோதுமை ரவை (பெரியது) சமைத்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    கடைசியாக உப்பு, மிளகுத்தூள் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.

    கோதுமை ரவை வெஜிடபிள் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.
    வித, விதமான ஸ்மார்ட்போன்கள் வருகையால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. தற்கால மனிதர்களின் சிறந்த நண்பனாக விளங்குவது செல்போன்தான். அதனுடன் மனிதன் செலவிடும் நேரம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

    படுக்கையில் கூட செல்போன் பக்கத்திலேயே இருக்கிறது. தூங்குவதும், துயில் எழுவதும் செல்போனை பார்த்துவிட்டு தான் நடக்கிறது. அந்த அளவுக்கு செல்போன்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றன.

    அத்தியாவசிய தேவைக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் செல்போன்களை இன்றைக்கு அதிகமாக சார்ந்திருக்கிறோம். திரைப்படங்கள், நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பார்க்க தொலைக்காட்சியை போல செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

    அந்த வகையில், நம்மில் பலரும் செல்போன் கேம்ஸ் விளையாட நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள். தூங்கும் நேரம், பணியில் இருக்கும் நேரத்தை கூட செல்போன் கேம்ஸ் களவாடிவிடுகிறது. இதனால் ஏற்படும் விபரீதத்தை பலரும் உணர்வதில்லை.

    காரணம், ஸ்மார்ட்போன் கேம்ஸ் விளையாடுவது இயல்பான செயல் என்று நம்புகிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, சோம்பலும் அதிகமாகிறதாம்.

    நம் எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மனிதன் நிம்மதிக்கு அடிப்படையான விஷயம். நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் நமது எண்ண வெளிப்பாடுகள் மற்றும் உரையாடல்கள் குறைகின்றன. இது நம்மை ஆழ்ந்த அழுத்தத்துக்கு கொண்டு செல்கிறது.

    அதுமட்டுமின்றி, இந்த பழக்கம் ஒருவித போதை என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு. அதாவது, ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கேம்ஸ் விளையாடுபவர்கள் அந்த போதைக்கு அடிமையானவர்களாக கருதப்படுகிறார்கள்.

    ‘கூகுள் பிளே ஸ்டோர்’ நமக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இலவச விளையாட்டுகளை தருகிறது. குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான கேம்சை தேர்வு செய்து விளையாடுகின்றனர். நீண்ட நேர செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர்கள் மீண்டு வருவது எளிதான காரியமல்ல.

    நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கேம்ஸ் விளையாடும்போது வெவ்வேறு உடல் தோரணைகள் கொண்டு விளையாடுவது வழக்கம். இது நமது கண், காது, கை போன்ற உறுப்புகளையும், மனித உடல் செயல்பாட்டின் தூண்களாக விளங்கும் முதுகு எலும்பையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.



    அதாவது, செல்போன் கேம்ஸ் விளையாடும்போது, இருக்கையில் அமர்ந்து, முதுகெலும்பை 90 டிகிரி நேரான கோட்டில் வைத்து, தலையை மிகவும் குனியாமல், கைகளை ஒரே கோணத்தில் வைத்து, 10 முதல் 20 நிமிடங்கள் விளையாடினால் அது விளையாட்டாக அமையும். அதே சமயம், படுக்கையில் படுத்துக்கொண்டு அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விளையாடினால் அது கண்டிப்பாக உடலுக்கு பல பாதிப்புகளை கொண்டுவந்து சேர்க்கும்.

    விளையாடுபவர்கள் பெரும்பாலும் தன்னையும், தன் சூழலையும் மறக்கின்றனர். இது அவர்களின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கிறது. ஒரு மனிதன் நீண்ட நேரம் ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சுவாசித்துக் கொண்டு இருப்பதால், சுற்றுச்சூழல் தரும் மாசற்ற மற்றும் சுகாதார சூழல் அவருக்கு அங்கு கிடைக்காமல் போகிறது.

    மனிதன் சுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் சுவாசிக்கும் காற்று. நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதால், நமக்கு ஆக்சிஜன் குறைவாகவும், மாசடைந்தும் கிடைக்க நேர்கிறது.

    ஏற்கனவே மனிதன் 6-ல் இருந்து 8 மணி நேரம் உறங்குவதால் அவனுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்கள் பங்குக்கு மனிதனை சிறைபிடிக்கின்றன.

    மீதமுள்ள நேரத்திலாவது நாம் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை மறந்து ஸ்மார்ட்போன் கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கிவிடுகிறோம். இது நமக்கு மட்டுமின்றி நம் சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.

    தூக்கமின்மைை-யும் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. நீண்ட நேரம் கண் விழித்து கேம்ஸ் விளையாடுவதால், நம் மூளை இயல்பான செயல்பாட்டுக்கு திரும்ப சில மணி நேரம் ஆகிறது. இரவில் கேம்ஸ் விளையாடுவது, நமது தூக்கத்தின் இயல்பை பெரிதும் பாதிக்கிறது.

    கேம்ஸ் விளையாடுவதை நிறுத்திய பிறகும், நாம் அதன் ஒலி ஓட்டத்திலே உறங்குகிறோம். இது நமக்கு சிறப்பான தூக்கத்தை அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்படுவோம்.

    கேம்ஸ் விளையாடும் சிலர் தங்களது தூக்கத்தில் கூட விளையாடுவது போல் கனவு காண நேரிடும். எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு கேம்ஸ் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    ஒரு பக்கம் பலவகையான கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ளும் நாம், நமது ஸ்மார்ட்போன் தரும் ஆபத்தான கதிர்வீச்சை உணர மறுக்கிறோம். பெரிதளவில் ஆய்வுகள் இல்லாத போதிலும், பல தன்னலமற்ற அமைப்புகள், ஸ்மார்ட்போன் மூலம் வரும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சை குறைக்க பரிந்துரைத்து வருகின்றன.

    ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால், அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை உணராமலேயே, அவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மனம், உடல், சமுதாயம், படிப்பு, வேலை, வருமானம் போன்ற மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

    எனவே, நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.

    உதவி பேராசிரியர் டாக்டர் ஜனார்த்தனன்
    வளரும் குழந்தைகளுக்கு தினமும் சத்தான உணவுகள் மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
    குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பார்லி, மக்காச்சோளம், கம்பு, ஓட்ஸ், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளில் 2 கப் அளவாவது தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 4 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 4 கப் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றில் புரதம், கால்சியம், இரும்பு, பி-காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் கேரட், பருப்பு, வெங்காயம், குடைமிளகாய, பீட்ரூட் போன்றவற்றிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    பீன்ஸ், பட்டாணி, மொச்சை, கொண்டைக்கடலை, பயத்தம் பருப்பு போன்ற தானிய வகைகளிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. அவைகளில் குழந்தைகள் விரும்பும் சாண்ட்விச், கட்லெட் போன்ற பலகாரங்களை தயார் செய்து கொடுக்கலாம். மேற்கண்ட தானிய வகை உணவுகளில் ஒரு கப் அளவுக்காவது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.



    1 முதல் 3 வயது குழந்தைகள் 2 கப் அளவும், 4-6 வயது குழந்தைகள் 4 கப் அளவும் காய்கறி வகைகளை தினமும் சாப்பிட வேண்டும். கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், ராகி, பட்டாணி போன்றவற்றை பயன்படுத்தி ரொட்டி, உப்புமா, சூப் வகைகள் தயார் செய்து கொடுக்கலாம். பச்சைக்காய்கறிகளுடன் முட்டை சேர்த்து சாண்ட்விச், காய்கறி புலவ் தயார் செய்து கொடுத்து ருசிக்கவைக்கலாம்.

    குழந்தைகள் தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும். நான்கைந்து பழ வகைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பவுலில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். அதனை குழந்தைகள் விரும்பாவிட்டால் ஜூசாகவோ, சாலட்டாகவோ, மில்க் ஷேக்காகவோ தயாரித்து கொடுக்கலாம்.

    தினமும் 500 மி.லி பால் பொருட்களை சாப்பிடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அவற்றுள் தரமான புரதம், கொழுப்பு சத்து உள்ளடங்கி இருக்கிறது. பழங்கள், உலர் தானியங்களை விட பால் பொருட்களில் ஊட்டச்சத்து அடர்த்தி அதிகம்.

    முட்டை, மீன், இறைச்சி வகைகளை 50 கிராம் அளவாவது அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எந்த உணவு வகைகளையும் பிரஷாக தயாரித்து சாப்பிட கொடுக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒருபோதும் சாப்பிட அனுமதிக்கக் கூடாது. அவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும். 
    ×