என் மலர்
பெண்கள் உலகம்
- சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.
- ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.
* இட்லிப்பொடி தயாரிக்கும்போது சிறிது கறிவேப்பில்லையை வறுத்து அரைத்து சேர்த்தால் மணமாகவும், பித்தத்தை போக்கவும் உதவும்.
* பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி மென்மையாக மாறும்.
* சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.
* தோசைமாவு குறைவாக இருந்தால், அந்த அளவிற்கு அரிசி மாவு, தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நீர் விட்டு சிறிது நேரம் கழித்து ஆப்பம் ஊற்றலாம்.
* ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.
* இட்லி மாவு அரைக்கும்போது சிறிது ஐஸ்வாட்டர் ஊற்ற இட்லி பஞ்சு போல் மிருதுவாக வரும்.
* பீர்க்கங்காயுடன் தக்காளி, வரமிளகாய், வெங்காயம், வதக்கி சட்னி செய்தால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.
* மீதமான அப்பளம் இருந்தால், அத்துடன் தேங்காய், கருவேப்பிலை, புளி, உப்பு, பச்சை மிளகாய் வறுத்து சேர்த்து அரைக்க அப்பள துவையல் ரெடி. மாறுபட்ட சுவையை கொண்டிருக்கும்.
- வெள்ளரி சருமத்துக்கு மட்டுமல்ல கண்களுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள்.
- ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் முகத்தில் உஷ்ணத்தால் வரும் கட்டிகள் தடுக்கப்படும்.
வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. முகத்துக்கான பராமரிப்புக்கு என்று சொல்வதை விட சருமத்துக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், சருமம் வறட்சி ஆக ஆக முகத்தில் எரிச்சல் உண்டாகும். மேலும் பல பிரச்சனைகளையும் சந்திப்போம். வெயிலினால் உண்டாகும் பாதிப்பு ஒரு புறம் என்றால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்காமல் இன்னும் சருமம் பொலிவிழக்கக் கூடும். அதிகப்படியான உஷ்ணத்தை தாங்கக் கூடிய அளவுக்கு சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருந்தால் வெயிலில் சென்றாலும் கூட இந்த பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும். அப்படி சருமத்திற்கு குளுமை தரக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று பார்க்கலாம்.
கற்றாழை
அழகிலும், ஆரோக்கியத்திலும் முக்கியத்துவமிக்க இது, இயற்கையின் அற்புத குணங்கள் நிரம்ப பெற்றது. கற்றாழையை சமீப வருடங்களாக கோடைக்கேற்ற பானமாக பயன்படுத்தி வருகிறார்கள். கற்றாழை எளிதில் கிடைக்க கூடியது மட்டுமின்றி விலை மலிவானதும் கூட. கற்றாழையின் சதை பகுதியை முகம், கழுத்து, கை, கால் பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி எடுங்கள். அதிகப்படியான வெயிலையும் தாங்கும் வல்லமை கற்றாழைக்கு உண்டு என்பதோடு எரிச்சலையும் தராது. சருமத்தை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.
வெள்ளரி
வெள்ளரி சருமத்துக்கு மட்டுமல்ல கண்களுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள். வெள்ளரியை அரைத்து முகம், கழுத்து பகுதியில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை ரோஸ் வாட்டர் கொண்டு கழுவி எடுங்கள். அப்படியே வெள்ளரி துண்டு இரண்டை வட்டமாக நறுக்கி கண்கள் மீது வைத்து ரிலாக்ஸாக இருங்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் முகத்தில் உஷ்ணத்தால் வரும் கட்டிகள் தடுக்கப்படும். பருக்கள் வராது. வியர்க்குரு பிரச்சினையும் இருக்காது. குளிப்பதற்கு முன் இதை உபயோகித்தால் முகத்துக்கு சோப் போடுவதை தவிர்த்துவிடுங்கள். வெயிலில் சென்றாலும் சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.
இளநீர்
உடல் உஷ்ணத்தை தவிர்க்கக்கூடிய இளநீர் கோடையில் முகத்துக்கும் குளிர்ச்சியை தரும். வெயிலில் சென்று திரும்பியதும் சுத்தமான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். பிறகு சுத்தமான பஞ்சில் இளநீரை நனைத்து முகத்தில் ஒற்றி எடுங்கள். குறைந்தது கால் மணி நேரம் இப்படி செய்து வந்தால் சரும துவாரங்களில் இருக்கும் அழுக்கு வெளியேறும். இளநீரில் இருக்கும் லாரிக் ஆசிட் சருமத்துக்கு தளர்வு தராது என்பதால் வயது முதிர்வும் கூட தள்ளி போகும்.
தயிர்
தினமும் குளிப்பதற்கு முன்பு முகத்தில் தயிர் தடவி பத்து நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் சருமம் வெயிலால் நிறம் மாறாது, பொலிவாக இருக்கும். தயிர் முகத்தில் இருக்கும் அழுக்கை வெளியேற்றக்கூடியது. கெட்டித்தயிருடன் சந்தனத்தூளை கலந்து பேக் போன்றும் கலந்து முகத்துக்கு பயன்படுத்தலாம். அல்லது ஆரஞ்சு தோலை பொடித்து வைத்தும் கலந்து பயன்படுத்தலாம். கோடையிலும் முகத்தில் ஒரு தனி மினுமினுப்பு கிடைக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினால் கூட சருமத்தை பத்திரமாக பாதுகாக்கலாம்.
உள்புறமும் கவனிப்பு தேவை
உடலில் நீர் வறட்சி குறைந்தால் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல அந்த பாதிப்பு சருமத்துக்கும் இருக்கும். அதனால் கோடை காலத்தில் தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இந்த காலத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக எண்ணெய் கொண்ட பொருள்கள், நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சிகள் போன்றவையும் உள்ளுறுப்புகளை பாதிப்பதோடு சருமத்திற்கும் பங்கம் விளைவித்துவிடும். உஷ்ணக்கட்டிகளை மேலும் பெரிதாக்கவும் செய்யும். இவைகளை தவிர்த்துவிட்டு, பழச்சாறுகள், பழங்கள், மோர், இளநீர், பழ சாலட், நீர்ச்சத்துமிக்க காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும்.
- குழந்தைகளின் புரிதல் திறன் வளர்கிறது.
ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது என்று கதை சொல்ல தொடங்கும் போதே குழந்தைகள் காட்டிற்குள் சென்று விடுகிறார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருந்தது என்றதும் பெரிய சிங்கத்தை கற்பனையில் உருவாக்கி விடுகிறார்கள்.
இப்படி குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அவர்கள் தங்களை மறந்து கதை உலகிற்குள் சென்று விடுகிறார்கள். இந்த கதைகள் குழந்தைகளை எப்படி உருவாக்குகிறது? என்ன பயன் கிடைக்கிறது? என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

இன்றைய காலச்சூழலில் குழந்தைகளோடு அமர்ந்து பேசுவதற்கும், அவர்கள் சொல்வதை கேட்பதற்கும் நேரம் இல்லாமல் பல பெற்றோர் வேலை என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு தயங்குகிறார்கள்.
இந்த சூழலை சரி செய்ய பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும். இது குழந்தைகளுக்கு அன்பை வெளிப்படுத்துகிற செயல்பாடாக மாறும். இதனால் குழந்தைகள் பெற்றோர் உறவு நெருக்கமாகும்.
நேர்மறை எண்ணம் வளர்தல்
குழந்தைகளுக்கு நீதிக்கதைகளையும், தன்னம்பிக்கை கதைகளையும், வரலாற்று கதைகளையும், புரட்சியாளர்களின் வாழ்க்கை கதைகளையும் சொல்கிறபோது அவர்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கை வளர்கிறது.
இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற உந்துதல் கிடைக்கிறது. எல்லா சூழலிலும் வாழ்க்கையை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொள்ளும் எண்ணத்தை கதைகள் குழந்தைகளுக்குள் விதைக்கிறது.

புரிதல் திறன் அதிகரித்தல்
குழந்தைகள் கதைகளை ஆர்வமுடன் கேட்பதால் அந்த கதையின் கருத்துகளை புரிந்து கொள்கிறார்கள். ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வம் அதிகமாகிறது. இதனால் அவர்களின் புரிதல் திறன் வளர்கிறது.

சொல் அறிவு
ஒவ்வொரு முறை கதை சொல்கிற போதும், கதைகளை கேட்கிற போதும் குழந்தைகள் புதிய சொற்களையும் அதற்குரிய அர்த்தங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். நிறைய கதைகளை கேட்கிறபோது பல சொற்கள் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிகமான சொல் அறிவு அவர்கள் எழுதுவதற்கு உதவுகிறது.
நல்லொழுக்கம் வளர்கிறது
கதைகள் குழந்தைகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆர்வமுடன் கேட்பதால் அவர்களின் ஆழ்மனதில் கதைகள் பதிந்து விடுகிறது. எனவே குழந்தைகளுக்கு ஒழுக்கம் சார்ந்த கதைகளை சொல்வது அவர்களை ஒழுக்கமானவர்களாக மாற்றும்.

கலாசாரங்களை அறிதல்
குழந்தைகள் கதைகளின் வழியாக அவர்களுடைய கலாசாரத்தை அறிந்து கொள்கிறார்கள். பல நாட்டு கதைகள் வழியாக குழந்தைகள் பரந்துபட்ட உலகத்தையும், பிற பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்கிறார்கள். இதனால் குழந்தைகள் எல்லா மக்களையும் புரிந்து கொண்டு பன்முகத்தன்மை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.
எனவே, அன்பு பெற்றோரே! குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள், குழந்தைகளின் கதைகளை கேளுங்கள். கதைகளை வாசிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகள் சொல்லும் கதைகளை புத்தகமாக்குங்கள். கதைகள் அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்றும்.
- குறட்டை, மாறுபட்ட பணிநேரம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன
- நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இந்த SLEEP DIVORCE பழக்கத்தை கைக்கொண்டுள்ளனர்.
இந்தியர்களிடையே அண்மையில் Sleep Divorce என்ற பழக்கம் உருவெடுத்துள்ளது.
திருமணத்திற்கு பின்பும் கணவன், மனைவி தனித்தனியே தூங்கும் இந்த தூக்க விவாகரத்து பழக்கத்தை 70% பேர் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இப்பழக்கம் உருவாக குறட்டை, மாறுபட்ட பணிநேரம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. வேலை செய்து களைத்த தம்பதிகள் நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இந்த Sleep Divorce பழக்கத்தை அதிகம் கைக்கொண்டுள்ளனர்.
- ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும்.
- இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும்.
அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கரை (பேஸ்மேக்கர் என்பது இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும் ஒரு மருத்துவ மின்சாதனம்) கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும். இந்த பேஸ்மேக்கர் தற்காலிகமாக தேவைப்படுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரிசியை விட சிறியதாக இருக்கும் இந்த சாதனம், 1.8 மி.மீ. அகலம், 3.5 மி.மீ. நீளம் மற்றும் 1 மி.மீ. தடிமன் மட்டுமே கொண்டது. மேலும் தேவைப்படாதபோது உடலில் கரையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதை உடலில் இருந்து வெளியே எடுக்க வேண்டியதில்லை. இதனால் பேஸ்மேக்கரை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை தேவையில்லை.

நிரந்தர பேஸ்மேக்கர் இதயத்தில் உள்ள மின் அமைப்பை (இதய மின் அமைப்பு என்பது, இதயம் துடிக்கவும், ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்யவும் உதவும் அமைப்பு) ஆதரிக்க அறுவை சிகிச்சை மூலம் உடலில் வைக்கக்கூடிய ஒரு சாதனமாகும். இது அசாதாரண இதய துடிப்புகளை சரிப்படுத்தி, உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.
இதேபோல சில நேரங்களில், இதய செயல்பாட்டை ஆதரிப்பதற்கு குறுகிய காலத்திற்கு பேஸ்மேக்கர் தேவைப்படுகிறது. குறிப்பாக திறந்த இதய அறுவை சிகிச்சை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் காரணமாக இதயத் துடிப்பு மாறும்போது இந்த வகையான தற்காலிக பேஸ்மேக்கர் பயன்படும்.
இது இதயத் துடிப்பு நிலைப்படுத்தப்படும் வரை, ஒரு சில நாட்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும். தற்போது உள்ள தற்காலிக பேஸ்மேக்கரை அறுவை சிகிச்சை மூலம் இதய தசைகளில் வைக்க வேண்டியுள்ளது.
அந்த சாதனம் இனி தேவைப்படாதபோது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதால் சில நேரங்களில் சேதத்தை ஏற்படுத்தும்.
ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பேஸ்மேக்கர் தேவைப்படாதபோது உடலில் கரைந்து போகும் என்பதால் அதனை வெளியே எடுக்க வேண்டியதில்லை.

இந்த பேஸ்மேக்கர் ஒரு கால்வனிக் கலத்தால் (கால்வனிக் கலம் என்பது ஒரு மின்வேதியியல் கலமாகும், இதில் ரசாயன ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது) இயக்கப்படுகிறது. இது வேதியியல் ஆற்றலை இதயத்தை ஒழுங்குபடுத்தும் மின் துடிப்புகளாக மாற்ற உடலின் திரவங்களைப் பயன்படுத்துகிறது.
ஒரு சதவீத குழந்தைகள் பிறவி இதயக் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். அக்குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையின்போது தற்காலிக பேஸ்மேக் கருக்கான தேவை உள்ளது. அவர்களுக்கு இந்த சிறிய அளவிலான பேஸ்மேக்கர் சிறந்தது.
அதன் சிறிய அளவு காரணமாக, வயது வந்தோருக்கான இதய சிகிச்சைகளிலும் பயனுள்ளதாக இருக்கும். நிரந்தர பேஸ்மேக்கரை போலவே அதிக தூண்டுதலை இதனால் வழங்க முடியும்.
பாதிக்கப்பட்ட நோயாளியின் மார்பில் சிறிய நெகிழ்வான, வயர்லெஸ் முறையில் இயங்கும் சாதனத்துடன் பேஸ்மேக்கர் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒழுங்கற்ற இதயத்துடிப்புகளை கண்டறியும்போது, பேஸ்மேக்கருக்கு ஒளி சமிக்ஞையை அனுப்பி, அதை செயல்படுத்துகிறது.

ரேடியோ சிக்னல்களை பயன்படுத்தும் முந்தைய பேஸ்மேக்கரை போல் அல்லாமல், இந்த புதிய சாதனம் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்த ஒளியைப் பயன்படுத்துகிறது.
ஆய்வகத்தில் எலிகள், பன்றிகள், நாய்கள் மற்றும் மனித இதய திசுக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பேஸ்மேக்கர் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது.
மனிதர்களிடத்தில் இந்த பேஸ்மேக்கரை பரிசோதிக்க சில ஆண்டுகள் ஆகும் என்றாலும், குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.
- பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
- கருணைக் கிழங்கை புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.
மூல நோய் என்பது மருத்துவத்தில், 'ஹெமராய்ட்ஸ்' அல்லது 'பைல்ஸ்' என்று குறிப்பிடப்படுகிறது. பெருங்குடலின் கடைசிப் பாகம் முதல் ஆசனவாய் வரையுள்ள ரத்த நாளங்கள் புடைத்து வீங்கி வலியைத் தருவதைத் தான் 'மூலம்' என்கின்றோம்.
ஆசன வாயில் உள்ள வெண் கோடு போன்ற பகுதிக்கு மேலே தோன்றுவது 'உள்மூலம்' என்றும், கோட்டிற்கு கீழே தோன்றுவது 'வெளிமூலம்' என்றும் பிரிக்கப்படுகிறது.

மூல நோய் எதனால் ஏற்படுகின்றது?
'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையர் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கை நிலையில் இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.
ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

உணவு பழக்கம்
துத்திக் கீரையுடன், சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.
கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.

பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
காரநூல் சிகிச்சை
மருந்துகளினால் தீராத மூல நோய்க்கு சித்தர்கள் கூறியுள்ள பாரம்பரிய 'காரநூல்' அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம். காரநூல் என்பது உறுதியான லினன் நூலை, நாயுருவி உப்பு, மஞ்சள், உத்தாமணிப் பால், எருக்கம்பால் போன்றவைகளைக் கொண்டு முறைப்படி செய்து மூலம் பாதித்த பகுதிகளை அந்த நூலினால் இறுக்கிக்கட்டி விடும் முறை. இது மூலத்தை அறுத்து புண்ணை ஆற்றும் இயல்புடையதால் நோயாளிக்கு எந்த பக்க விளைவுகளும் கிடையாது.
- நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
- நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும்.
'இடதுபக்க நெஞ்சுவலி என்றதுமே, நாம் முதலில் நினைத்து மிகவும் பயப்படுவது 'மாரடைப்பு' அதாவது 'ஹார்ட் அட்டாக்' தான். கொஞ்சமாக நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
நெஞ்சின் இடதுபக்கம் கனமாக, பாரமாக, இறுக்கமாக இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. அவை: இதயம், நுரையீரல், நெஞ்சிலுள்ள தசைப்பிரச்சினைகள், ஜீரணக்கோளாறு, மன நல பிரச்சினைகள், விலா எலும்பு நோய், அதிக அளவில் வாயு சேருதல், ஆஸ்துமா, நிமோனியா போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றால், நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும். இடது தோள்பட்டை வலிக்கும், இடது கை, இடது கைவிரல்கள் வரை வலி பரவும், உடம்பெல்லாம் மிக அதிகமாக வியர்த்துக் கொட்டும். தலை லேசாக வலிக்கும், வாந்தி வருவது போன்று இருக்கும், இதயத் துடிப்பு மிக அதிகமாக துடிக்கும்.
மூச்சு வாங்கும், இதயத்துக்கு நேராக பின்பக்க முதுகில் வலி, நெஞ்சைச் சுற்றி கயிற்றைக் கட்டி இறுக்குவது போன்றதொரு உணர்வு ஏற்படும். இதுபோன்ற மாரடைப்புக்கான அறிகுறிகளில் சில உங்களுக்கு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.

வாய்வுக்கோளாறு தான் நெஞ்சுவலியை ஏற்படுத்துகிறது என்று முடிவுசெய்து அதற்குண்டான வீட்டு வைத்தியம், மருந்துக் கடையில் நீங்களே மருந்தை வாங்கி சாப்பிடுவது போன்றவை மிகப்பெரிய தவறாகும்.
மேலும், அதிக காரம், கொழுப்பு, மசாலா நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது நெஞ்செரிச்சலை உண்டுபண்ணும். இதுவே நெஞ்சு வலி வந்துவிட்டதோ என்ற பயத்தை உண்டாக்கும். எனவே இவைகளை குறையுங்கள்.
மது, புகைப்பழக்கம் கூடாது. ஆஸ்துமா இருப்பவர்கள் அதை தூண்டிவிடும் பொருட்கள், உணவுகளிடமிருந்து விலகி இருங்கள்.
உங்களுக்கு இதயப் பிரச்சனையைவிட, மனப்பயம் தான் அதிகமாக இருக்கிறது. வீடு, அலுவலகம், தொழில் போன்ற பிரச்சனைகளால் டென்ஷனாகும் போது சிலருக்கு நெஞ்சுவலி வரலாம். முதலில் மன தைரியம் வேண்டும். நெஞ்சுவலி வந்தால், உடனே அருகிலுள்ள இதய நோய் சிகிச்சை நிபுணரை சந்திக்க வேண்டும்.
- இஞ்சி-பூண்டு விழுது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் கலந்து பிரிட்ஜில் வைக்கலாம்.
- மீன் பொரிக்கும்போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க, அதில் சிறிது அரிசி மாவு அல்லது ரவை தடவலாம்.
* வெங்காயத்தை வெட்டும்போது கண்களில் நீர் வராமல் இருக்க, அதை 10 நிமிடம் பிரிட்ஜில் வைத்து வெட்டுங்கள்.
* மிளகாய் தூள் அதிகமாகிவிட்டால், சிறிது தயிர் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் காரம் சமநிலையாகும்.
* தயிரை விரைவாக தயார் செய்ய, அதில் ஒரு மிளகாய் சேர்த்து வைத்தால் சீக்கிரம் பதனமடையும்.
* சமையல் மேசையில் எறும்புகள் வராமல் இருக்க, சிறிது எலுமிச்சைச்சாறு தடவலாம்.
* பாத்திரங்களில் எண்ணெய் ஒட்டாமல் கழுவ, சோப்புடன் சிறிது உப்பு கலந்து தேய்த்தால் பாத்திரங்கள் பளிச்சிடும்.
* இஞ்சி-பூண்டு விழுது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் கலந்து பிரிட்ஜில் வைக்கலாம்.
* தோசை மாவு விரைவாக புளிக்க, அதை குளிர்ச்சியான இடத்தில் வைக்காமல், லேசான சூடான இடத்தில் வைக்கவும்.
* மோருடன் சிறிது இஞ்சி விழுது சேர்த்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
* தக்காளி பச்சை நிறத்தில் இருந்தால், அவற்றை அரிசி இருக்கும் டப்பாவில் வைத்தால் விரைவில் சிவப்பு நிறமாகும்.
* ஆட்டிறைச்சி மென்மையாக இருக்க, அதை பப்பாளி விழுது அல்லது தயிரில் ஊறவைத்து சமைக்கவும்.
* மீன் பொரிக்கும்போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க, அதில் சிறிது அரிசி மாவு அல்லது ரவை தடவலாம்.
* சூப் மிகவும் ருசியாக இருக்க, கடைசியாக சிறிது பட்டாணி மாவு அல்லது முந்திரி விழுது சேர்க்கலாம்.
* பிரியாணியில் தனித்துவமான மணம் வர, இறுதியாக ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
* தேன் நீண்ட நாட்கள் `பிரஷ்'ஆக இருக்க, அதை ஒளி புகாத இடத்தில் கண்ணாடி பாட்டிலில் வைப்பது நல்லது.
- மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடிக்கக்கூடாது.
- மாம்பழம் சாப்பிடும்போது அன்று சாப்பிடக்கூடிய மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பொதுவாக 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. 100 கிராம் எடையுள்ள மாம்பழத்தில் கிட்டத்தட்ட 60 கலோரிகள், 2 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் ப்ரக்டோஸ் வடிவிலான சர்க்கரை உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி6, சி, ஈ, மற்றும் பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. 51 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ள பழம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை உட்கொள்ளலாம்.
இருப்பினும், மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதன் பழுத்த நிலையை பொறுத்து மாறுபடும். நன்றாக பழுத்த மாம்பழம் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவையும், குறைவாக பழுத்த மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருக்கும். எனவே, மிகவும் பழுத்த மாம்பழங்களை சாப்பிடக்கூடாது.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும்போது கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மாம்பழம் சாப்பிடும்போது அன்று சாப்பிடக்கூடிய மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அளவை குறைத்து கொள்ள வேண்டும். அத்துடன் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ள உணவுகள், குறைந்த கிளை செமிக் இன்டெக்ஸ் உள்ள பெர்ரி, கிவி போன்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் மாம்பழம் உண்ட பின்னர் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் சற்று தாம திக்கப்படும்.
மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடிக்கக்கூடாது. மாம்பழத்தை காலையில் 11 மணிக்கு ஒரு இடைப்பட்ட உணவாகவோ அல்லது மாலை வேளையிலோ சாப்பிடலாம். பெரும்பாலும் கார்போஹைட்ரேட் நிறைந்த மதியம் அல்லது இரவு உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சர்க்கரை நோயாளிகள் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்த பிறகு மாம்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் மாம்பழம் சாப்பிடக் கூடாது. 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிறிய மாம்பழத்தில் பாதி சாப்பிடலாம். மாம்பழங்களை சாப்பிடும்போது கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள பாதாமி, அல்போன்சா வகை மாம்பழங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இங்கு அரிசி நுகர்வு ஒரு பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் அரிசியில் அதிக அளவு ஆர்சனிக் ஏற்பட வழிவகுக்கும், இது 2050 ஆம் ஆண்டுக்குள் ஆசிய நாடுகளில் உள்ள மக்களுக்கு வாழ்நாள் புற்றுநோய் மற்றும் உடல்நல அபாயங்களை அதிகரிக்கும் என்று தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை அதிகரிப்பதும், கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதும் மண் வேதியியலில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆர்சனிக்கிற்கு சாதகமாக மாறக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆர்சனிக், அரிசி தானியத்தில் எளிதில் உறிஞ்சப்படுகிறது. நெல் சாகுபடியின் போது மாசுபட்ட மண் மற்றும் பாசன நீர் ஆகியவை அரிசியில் கனிம ஆர்சனிக் அளவை அதிகரிப்பதாக அறியப்படுகிறது. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரிலிருந்து கூடுதல் ஆர்சனிக்கையும் அரிசி உறிஞ்சிவிடும்.
ஆர்சனிக்கின் அதிகரித்த வெளிப்பாடு நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றின் அபாயத்தை அதிகரிப்பதாக அறியப்படுகிறது.
இந்தியா, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரிசி முக்கிய உணவாக உள்ளதால், இங்கு அரிசி நுகர்வு ஒரு பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் வயலில் 10 ஆண்டுகளில் 28 அரிசி வகைகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைட்டின் விளைவுகளை அளந்தனர்.
மாதிரிகளைப் பயன்படுத்தி, பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஏழு ஆசிய நாடுகளுக்கான கனிம ஆர்சனிக் அளவுகள் மற்றும் சுகாதார அபாயங்கள் மதிப்பிடப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், அரிசியில் ஆர்சனிக் செறிவுகளை அதிகரிக்க வெப்பநிலை மற்றும் CO2 ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவதையும், அரிசி நுகர்வோருக்கு உணவு ஆர்சனிக் வெளிப்பாடுகளை அதிகரிப்பதையும், 2050 ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளின் மக்கள்தொகையில் கோடிக்கணக்கானோருக்குப் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்பதையும் கண்டறிந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு செய்யப்பட்ட ஏழு நாடுகளில், 2050 ஆம் ஆண்டில் அரிசியில் உள்ள ஆர்சனிக் காரணமாக அதிகபட்சமாக சீனாவில் 1.34 கோடி புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- செம்பருத்தி பாரம்பரியமாகவே உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடிக்கு ஏற்றது.
- ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கும் குல்கந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது.
தினசரி சருமமானது, வெளியுலக மாசுவை எதிர்கொள்கிறது. இது பல தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. முகப்பூச்சு பராமரிப்புகள் சருமத்தை குறிப்பிட்ட அளவு குணப்படுத்தும் என்றாலும் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையானது வீக்கத்தை உண்டு செய்யும். அது சருமத்தில் பிரதிபலிக்கலாம். உடலுக்கு உள்ளிருந்து ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் அது ஆரோக்கியமான சருமத்துக்கும் கூந்தலுக்கும் உதவும். அந்த வகையில் பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த நான்கு விதமான தேநீர் உதவும்.
செம்பருத்தி தேநீர்
செம்பருத்தி பாரம்பரியமாகவே உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடிக்கு ஏற்றது. குறிப்பாக கூந்தல் அழகுக்கு இது மூலப்பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பராமரிப்பு போன்று இது சருமத்துக்கும் நச்சு நீக்கும் மூலிகையாகவும் செயல்படுகிறது. நீரேற்ற பண்புகளை கொண்டுள்ளதால் இது தோல் வறட்சி, அரிப்பு பிரச்சினைகளை குறைக்கிறது. இதில் உள்ள கொலாஜன் தோலும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
டேண்டேலியன் தேநீர்
டேண்டேலியன் தேநீரை அற்புதமான மூலிகை என்று சொல்லலாம். இந்த மூலிகை தேநீரில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. இது வயதான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் நச்சுத் பொருட்களை வெளியேற்றுகிறது. இது சில வகையான செல் சேதத்தை தடுக்க உதவும். மேலும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல் சேதத்தை தவிர்க்கவும் துணை புரியும்.

ரோஜா தேநீர்
ரோஜா வாசனை மிக்க பூ. ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் நறுமணமிக்க பன்னீர் அழகுப்பராமரிப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கும் குல்கந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. சரும பராமரிப்பில் ரோஜாவுக்கு தனி இடம் உண்டு. இது சரும சுருக்கங்களை குறைத்து பொலிவாக வைத்திருக்க செய்யும். இந்த ரோஜா இதழ்களை தேநீராக்கி குடித்தால் சருமம் பளபளப்பதை நன்றாகவே பார்க்கலாம்.
மல்லிகை பூ தேநீர்
மல்லிகை தேநீரில் இருக்கும் இயற்கை எண்ணெய்கள் சருமத்தை புத்துயிர் பெறவும் நிறமிகளை சமன் செய்யவும் உதவுகிறது. சருமத்தில் மெல்லிய கோடுகளை குறைக்கவும் செய்கிறது. இந்த மல்லிகை தேநீரை தினமும் பருகிவருவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் செய்யும்.
- மரபணுக்களின் வீரியத்தைப் பொறுத்து கண் பார்வை இருக்கலாம்.
- பெற்றோர்களினுடைய மரபணுக்களின் தொகுப்பைப் பொறுத்தே அமையும்.
ஒரு குழந்தை, பார்வை குறைபாட்டுடனோ அல்லது பார்வை சுத்தமாக இல்லாமலோ பிறக்கிறதா என்பது அந்தக் குழந்தையின் பெற்றோர்களினுடைய மரபணுக்களின் தொகுப்பைப் பொறுத்தே அமையும்.
இதுதவிர பெற்றோர்களில் ஒருவர் கண் பார்வை இல்லாதவராக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் கண் பார்வை இல்லாமல் போகும் என்பது உண்மையல்ல.

முதலில் அந்த பெண்ணின் பெற்றோருக்கு பரம்பரையாகவே கண் பார்வை இல்லையா அல்லது நடுவில் ஏற்பட்ட விபத்தினால் பார்வை இல்லாமல் போனதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
விபத்துக் குறைபாடு தொகுப்பு மரபணுக்களுக்குள் நுழையாது, போகாது. அது பரம்பரைக் கோளாறு இல்லை. நடுவில் எப்படியோ ஏற்பட்ட விபத்து. அதன் பாதிப்பு மரபணுவில் காட்டாது.
இரண்டாவதாக, அந்த பெண்ணின் பெற்றோரில் இன்னொருவர் பிறக்கும்போதே கண் பார்வை இல்லாதவரா என்பது தெரிய வேண்டும்.
தாய்-தந்தை இருவருமே பிறக்கும்போதே கண் பார்வை அற்றவர்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை இருக்குமா? இருக்காதா? என்றால் - அது அந்த தாய் தந்தையரின் பிரச்சனை என்ன என்பதைப் பொறுத்தே அமையும்.

கண்கள் சம்பந்தப்பட்ட மூளை நரம்புகளைப் பாதிக்கும் ஒரு அதிதீவிர நோயினாலோ, அல்லது பரம்பரைக் கோளாறு காரணமாகவோ தாய் தந்தையருக்கு கண் பார்வை கோளாறு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் கண் பார்வை இல்லாமலிருக்க வாய்ப்பு அதிகம்.
பரம்பரையாக வருகின்ற நோய், பரம்பரையாக தொடர்கின்ற கோளாறுகள், அவர்களின் மரபணுக்களில் பதிந்துவிடும். ஆனால், அந்த தாய் தந்தையருக்கு ஏதோ ஒரு விபத்தில் கண் பார்வை போய்விட்டது என்றாலோ, அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தாலோ, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை போக வாய்ப்பில்லை.
மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால், மரபணுக்களின் வீரியத்தைப் பொறுத்து, மரபணுக்களின் தாக்கத்தைப் பொறுத்து, பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.






