என் மலர்
பொது மருத்துவம்

கண்பார்வை குறைபாடு என்பது மரபணுக்களால் ஏற்படுகிறதா?
- மரபணுக்களின் வீரியத்தைப் பொறுத்து கண் பார்வை இருக்கலாம்.
- பெற்றோர்களினுடைய மரபணுக்களின் தொகுப்பைப் பொறுத்தே அமையும்.
ஒரு குழந்தை, பார்வை குறைபாட்டுடனோ அல்லது பார்வை சுத்தமாக இல்லாமலோ பிறக்கிறதா என்பது அந்தக் குழந்தையின் பெற்றோர்களினுடைய மரபணுக்களின் தொகுப்பைப் பொறுத்தே அமையும்.
இதுதவிர பெற்றோர்களில் ஒருவர் கண் பார்வை இல்லாதவராக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் கண் பார்வை இல்லாமல் போகும் என்பது உண்மையல்ல.
முதலில் அந்த பெண்ணின் பெற்றோருக்கு பரம்பரையாகவே கண் பார்வை இல்லையா அல்லது நடுவில் ஏற்பட்ட விபத்தினால் பார்வை இல்லாமல் போனதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
விபத்துக் குறைபாடு தொகுப்பு மரபணுக்களுக்குள் நுழையாது, போகாது. அது பரம்பரைக் கோளாறு இல்லை. நடுவில் எப்படியோ ஏற்பட்ட விபத்து. அதன் பாதிப்பு மரபணுவில் காட்டாது.
இரண்டாவதாக, அந்த பெண்ணின் பெற்றோரில் இன்னொருவர் பிறக்கும்போதே கண் பார்வை இல்லாதவரா என்பது தெரிய வேண்டும்.
தாய்-தந்தை இருவருமே பிறக்கும்போதே கண் பார்வை அற்றவர்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை இருக்குமா? இருக்காதா? என்றால் - அது அந்த தாய் தந்தையரின் பிரச்சனை என்ன என்பதைப் பொறுத்தே அமையும்.
கண்கள் சம்பந்தப்பட்ட மூளை நரம்புகளைப் பாதிக்கும் ஒரு அதிதீவிர நோயினாலோ, அல்லது பரம்பரைக் கோளாறு காரணமாகவோ தாய் தந்தையருக்கு கண் பார்வை கோளாறு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் கண் பார்வை இல்லாமலிருக்க வாய்ப்பு அதிகம்.
பரம்பரையாக வருகின்ற நோய், பரம்பரையாக தொடர்கின்ற கோளாறுகள், அவர்களின் மரபணுக்களில் பதிந்துவிடும். ஆனால், அந்த தாய் தந்தையருக்கு ஏதோ ஒரு விபத்தில் கண் பார்வை போய்விட்டது என்றாலோ, அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தாலோ, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை போக வாய்ப்பில்லை.
மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால், மரபணுக்களின் வீரியத்தைப் பொறுத்து, மரபணுக்களின் தாக்கத்தைப் பொறுத்து, பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.






