என் மலர்
நீங்கள் தேடியது "Vision Impairment"
- இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
- இம்ரான் கான் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இம்ரான் கான் உடல்நிலை குறித்து அறிந்து வர, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளர், சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த பிறகு இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீதப் பார்வை மட்டுமே இருப்பதாகவும், வலது கண் நரம்பில் அடைப்பு காரணமாக இது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும் 2025 அக்டோபர் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாகப் பார்வை மங்கத் தொடங்கியும் சிறை அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததே இந்தப் பாதிப்பிற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, வரும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து இம்ரான் கானுக்கு முழுமையான பரிசோதனைகளை நடத்த வேண்டும். அவர் தனது குடும்ப மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல் உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த 14 புகழ்பெற்ற கேப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடித்தில், "முன்னாள் கேப்டன்களான நாங்கள், பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் கேப்டனும் உலக கிரிக்கெட்டின் புகழ்பெற்ற நபருமான இம்ரான் கானின் சிகிச்சை மற்றும் சிறைவாச நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலையுடன் எழுதுகிறோம். இம்ரான் கானின் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1992 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தானின் கேப்டன் இம்ரான் கானுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
- சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை.
- அண்மையில் மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை.
பல்வேறு ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இம்ரான் கான் உடல்நிலை குறித்து அறிந்து வர, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளர், சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த பிறகு இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீதப் பார்வை மட்டுமே இருப்பதாகவும், வலது கண் நரம்பில் அடைப்பு காரணமாக இது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும்
2025 அக்டோபர் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாகப் பார்வை மங்கத் தொடங்கியும் சிறை அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததே இந்தப் பாதிப்பிற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்மபிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, வரும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து இம்ரான் கானுக்கு முழுமையான பரிசோதனைகளை நடத்த வேண்டும். அவர் தனது குடும்ப மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அண்மையில் மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மரபணுக்களின் வீரியத்தைப் பொறுத்து கண் பார்வை இருக்கலாம்.
- பெற்றோர்களினுடைய மரபணுக்களின் தொகுப்பைப் பொறுத்தே அமையும்.
ஒரு குழந்தை, பார்வை குறைபாட்டுடனோ அல்லது பார்வை சுத்தமாக இல்லாமலோ பிறக்கிறதா என்பது அந்தக் குழந்தையின் பெற்றோர்களினுடைய மரபணுக்களின் தொகுப்பைப் பொறுத்தே அமையும்.
இதுதவிர பெற்றோர்களில் ஒருவர் கண் பார்வை இல்லாதவராக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் கண் பார்வை இல்லாமல் போகும் என்பது உண்மையல்ல.

முதலில் அந்த பெண்ணின் பெற்றோருக்கு பரம்பரையாகவே கண் பார்வை இல்லையா அல்லது நடுவில் ஏற்பட்ட விபத்தினால் பார்வை இல்லாமல் போனதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
விபத்துக் குறைபாடு தொகுப்பு மரபணுக்களுக்குள் நுழையாது, போகாது. அது பரம்பரைக் கோளாறு இல்லை. நடுவில் எப்படியோ ஏற்பட்ட விபத்து. அதன் பாதிப்பு மரபணுவில் காட்டாது.
இரண்டாவதாக, அந்த பெண்ணின் பெற்றோரில் இன்னொருவர் பிறக்கும்போதே கண் பார்வை இல்லாதவரா என்பது தெரிய வேண்டும்.
தாய்-தந்தை இருவருமே பிறக்கும்போதே கண் பார்வை அற்றவர்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை இருக்குமா? இருக்காதா? என்றால் - அது அந்த தாய் தந்தையரின் பிரச்சனை என்ன என்பதைப் பொறுத்தே அமையும்.

கண்கள் சம்பந்தப்பட்ட மூளை நரம்புகளைப் பாதிக்கும் ஒரு அதிதீவிர நோயினாலோ, அல்லது பரம்பரைக் கோளாறு காரணமாகவோ தாய் தந்தையருக்கு கண் பார்வை கோளாறு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் கண் பார்வை இல்லாமலிருக்க வாய்ப்பு அதிகம்.
பரம்பரையாக வருகின்ற நோய், பரம்பரையாக தொடர்கின்ற கோளாறுகள், அவர்களின் மரபணுக்களில் பதிந்துவிடும். ஆனால், அந்த தாய் தந்தையருக்கு ஏதோ ஒரு விபத்தில் கண் பார்வை போய்விட்டது என்றாலோ, அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தாலோ, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை போக வாய்ப்பில்லை.
மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால், மரபணுக்களின் வீரியத்தைப் பொறுத்து, மரபணுக்களின் தாக்கத்தைப் பொறுத்து, பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
- தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம்.
- வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும்.
தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனையின்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது.
தலைவலி ஏன் வருகிறது?
நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணர் அறிவுரையின்படி, 5 நாட்கள் மாத்திரை உட்கொண்டால், சீராகி விடும்.

கண் பார்வை குறைபாடும் ஒரு காரணமா?
மூக்கின் நடுச்சுவர் வளைவு, ஜவ்வு வீக்கம் இருந்தாலும், அடிக்கடி தலைவலி வரும். இதை, அறுவை சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும். கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கும், பின்பக்க தலைவலி வரும். கண்ணில் நீர் அழுத்தம் அதிகமானால், தலைவலி வரும்.

ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?
தலையின் ஒரு பக்கத்தில் ஒற்றைத் தலைவலி வரும். நீண்டநேரம் இருக்கும். வாந்தி வந்தால் குறைந்துவிடும். சில பேருக்கு, ஆண்டுக்கணக்கில் பாதிப்பு வரும். வலி நிவாரணிகளை, டாக்டரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒற்றைத் தலைவலி வரலாம். நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம்.
தலைவலி வந்தால் நடக்கும்போது தள்ளாட்டம் வருமா?
இரவில் அதிகம் கண் விழிப்போர், நீண்ட நேரம் புத்தகம் படிப்போர், இரவு ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்வோர், `வெப்சைட்'டில் மூழ்கி கிடப்போர், `டிவி'யை நீண்ட நேரம் பார்ப்போருக்கும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. தூக்கத்தை தொலைப்பது தான், இதற்கு முக்கிய காரணம். சிலருக்கு முன்பக்க தலை வலிக்கும். நடக்கும்போது தள்ளாட்டம் வரும். மயக்கம் வரும். இத்தகைய பாதிப்பு உடையோர் நல்ல மனநல நிபுணரை சந்திப்பது நல்லது.
விட்டு விட்டு தலைவலி வருவது ஏன்?
தாழ்வான கட்டிடங்களுக்கு குனிந்து செல்லும்போதோ, கிரிக்கெட் விளையாட்டாலோ, எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு கவனிக்காமல் விட்டால், உள் காயங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு, விட்டு விட்டு தலைவலி வரும். தலையில், எக்ஸ்-ரே, `ஸ்கேன்' எடுத்து, பாதிப்பின் காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

தீராத தலைவலி, புற்றுநோயின் அறிகுறியா?
இடைவிடாத தலைவலி உள்ளோர், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து உட்கார்ந்து கொள்வோருக்கு, மூளையில் நீர் கட்டி, புற்றுநோய் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு, நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய நிலை வரும். அதற்காக தலைவலி வருவோருக்கெல்லாம், புற்றுநோயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தலைவலிக்கும், உணவில் சேர்க்கும் உப்புக்கும் தொடர்பு உண்டா?
பெரும்பாலான வைரஸ் காய்ச்சல்களுக்கு, தலைவலி, ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். காரணம் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு குறைந்தாலும், உப்பின் அளவு கூடி அல்லது குறைந்தாலும், அளவுக்கு அதிகமாக தலைவலி வர வாய்ப்புண்டு.

மன அழுத்தம் தலைவலிக்கு காரணமா?
தலைவலி என, கடைகளில் இஷ்டம்போல் வலி நிவாரண மாத்திரை வாங்கிப்போட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடக்கூடாது. அப்படி செய்தால், மனநோயாக மாற வாய்ப்புள்ளது. தொழில் வர்த்தகர்கள், பணிகளை இழுத்துப்போட்டுச் செய்வோர், வங்கி அதிகாரிகளுக்கும் தலைவலி வர வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தாலும் பாதிப்பு வரலாம். வேலையை கண்டபடி இழுத்துப்போட்டு செய்யாமல், பணிகளை முறைப்படுத்தி செய்வதும், இடைஇடையே ஓய்வு எடுப்பதும் நல்லது.
சரியான நேரத்தில் உணவு கட்டாயம் என்கிறீர்களே?
சாப்பிடாமல் பட்டினி கிடப்போர், உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோர், முறையாக உணவு பழக்கம் இல்லாதோருக்கும், தலைவலி வரும். சரியான உணவு பழக்கம் அவசியம். இந்தியாவில், பெரும்பாலும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக்கொதிப்பு காரணமாக உள்ளது. இதற்காக, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பெரிய மருத்துவமனைகளில், தலைவலிக்கென பிரத்தியேக பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், சரியான நேரத்தில் உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்தால் பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணியாற்றுதல் ஆகியவற்றால், தலைவலி பாதிப்பில் இருந்து தப்பலாம்.
- நம்மில் எத்தனை பேருக்கு கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து தெரியும்?
- எழுத்துக்களை நல்ல பெரிய எழுத்துருக்களில் படிக்கவும்.
இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் கையிலும் செல்போன்கள் வந்து விட்டன, இதன் கூடவே கண்கள் சோர்வு வந்துவிட்டது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்குதலுக்கு பிறகு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மோகத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். மொபைல் ஃபோன், லேப் டாப், ஐ பேட் என வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கேட்ஜட்களும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
அதில் முதன்மை வகிப்பது மொபைல் போன்கள் தான். என்னதான் உலகை ஒரு சிறு பெட்டிக்குள் அவை இணைத்தாலும், அதற்கான பின்விளைவு களையும் நாம் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. அதுவும் முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தும் பகுதி என்றால் அவை கண்கள்தான்.
உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் நடப்பதை உடனடியாக பார்க்க முடியாத விஷயங்களை கூட நம்மை பார்க்க வைக்கும் இந்த எலக்ட்ரானிக் டிவைஸ்களால் நாளடைவில் நம்மை நிரந்தரமாக பார்வையே இல்லாமல் கூட செய்ய முடியும்.
மன அழுத்தம், ரத்த அழுத்தம் பற்றியெல்லாம் கேள்விபட்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து தெரியும்? நம்மை பொறுத்தவரை கண்கள் தெரிந்தால் போதும், ஆனால் அதை முறையாக பராமரிக்கிறோமா என்றால் இல்லை.
எல்லாவற்றையும் பார்க்க தெரிந்து கொள்ள நாம் முதலில் பயன்படுத்துவது கண்களைத் தான். நார்மலாக ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 20 முறை வரை கண் இமைகள் மூடி திறக்கும். அதுவே ஒரு புத்தகம் படிக்கும்போதோ அல்லது டிவி, மொபைல் பார்க்கும்போதோ ஒரு நிமிடத்திற்கு ஒன்றிலிருந்து இரண்டு முறைதான் அவை திறந்து மூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உங்களது கண்களை ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை உங்கள் டிவைஸிலிருந்து கண்ணை திசைதிருப்பி 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பாருங்கள். இப்படி தொடர்ந்து செய்வது கண்களை பாதுகாக்கும் குறிப்பாக கண்கள் உலர்ந்து போகாமல் தடுக்கும்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இரே இடத்தில் உட்கார கூடாது. கண்களுக்கு அதிக பணி கொடுக்க கூடாது. அதற்கு போதுமான இந்த இடைவெளி தேவை. நீங்கள் பயன்படுத்தும் அறையில் நல்ல வெளிச்சம் நிறைந்த மின்விளக்குகளை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கண்கள் சிரமமின்றி பார்க்க அல்லது படிக்க வேண்டியவற்றை பார்த்து கொள்ளும்.
உங்கள் டிவைஸின் ஸ்கிரீனை ஒரு கை அளவு தூரத்தில் எப்போதும் வைத்துக் கொள்ளவும். அதே போல் உங்கள் கண்பார்வைக்கு 10 டிகிரி கீழே உங்கள் ஸ்கிரீன் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அதே போல் ஸ்கிரீன் வழியாக படிக்கும் போது எழுத்துக்களை நல்ல பெரிய எழுத்துருக்களில் படிக்கவும்.
குறுகிய வடிவ எழுத்துக்கள் கண்களுக்கு படிக்க சிரமத்தை ஏற்படுத்தும். எனவே ஸ்கிரீனை பெரிது படுத்தி பயன்படுத்தவும். மேலும் நீங்கள் அமர்ந்திருக்கும் வடிவம் சவுகரியமானதாக இருந்தால் மட்டும் கழுத்து, இடுப்பு, கண்களுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். அமரும் போதே சரியான இடத்தில் அமருங்கள்.






