என் மலர்
ஆரோக்கியம்
குழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குண்படுத்திவிடலாம் என்கிறது மருத்துவ உலகம்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை, கழுத்து, கை, இடுப்பு பகுதியில் கருப்பு கயிற்றில் தாயத்து கட்டியிருப்பார்கள். அந்த நடைமுறை காலப்போக்கில் பழமை, மூடநம்பிக்கை என்ற அடிப்படையில் தூக்கி எறியப்பட்டு விட்டது. மிகவும் சிலரே இப்போது தாயத்து கட்டுகிறார்கள். அதுவும் வெத்து தாயத்துதான்.
அப்படியானால் முன்காலத்தில் அந்த தாயத்தில் என்ன இருந்தது? என்கிறீர்களா...
குழந்தை பிறந்ததும், அதன் தாயோடு இணைந்த தொப்புள் கொடி துண்டிக்கப்படும். குழந்தையின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி இருக்கவே செய்யும். அதுவும் காலப்போக்கில் காய்ந்து விழுந்து விடும். அந்த காய்ந்த தொப்புள் கொடியைத்தான், தாயத்துக்குள் வைத்து அந்தக் குழந்தைகளின் கழுத்திலோ, கையிலோ, இடுப்பிலோ அந்த காலத்தில் கட்டிவிடுவார்கள். சிலர் தொப்புள் கொடியை காயவைத்து அரைத்து பொடியாக்கியும் தாயத்துக்குள் வைப்பார்கள்.
அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனானதும், ஏதாவது கொடிய நோய் ஏற்பட்டால் அவற்றில் இருந்து காப்பற்ற, தாயத்துக்குள் இருக்கும் தொப்புள் கொடி பவுடரை, நீரில் கரைத்து கொடுப்பார்கள். அதன் மூலம் நோய் அகன்றுவிடும் அதிசயம் நிகழ்ந்தது. அதைத்தான் மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கிவிட்டோம்.
இந்த நேரத்தில் இங்கே ஒரு மருத்துவர் ஆராய்ச்சியைப் பற்றி சொல்லியாக வேண்டும். தனியார் மருத்துவமனைகளில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைப்பதற்காக அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்படுகிறதாம். அதற்காக அவர்களுக்கு பெரிய அளவில் தொகையும் கொடுக்கப்படுகிறது.
வெறும் தொப்புள்கொடிக்கு எதற்கு பணம் கொடுத்து சேமிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பின்னால் இருப்பது தான் மருத்துவம். குழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குண்படுத்திவிடலாம் என்கிறது மருத்துவ உலகம்.

மருத்துவமனைக்கு போகும் வழியில் கார் அல்லது பிற வாகனங்களில் குழந்தை பிரசவமாவது பற்றி அவ்வப்போது கேள்விப்படுவது உண்டு.
பயணம் செய்யும் காரில் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது நிறைய சிக்கல்களைக் கொண்டது. காரின் தூய்மையற்ற சூழல் தாய்க்கும் சேய்க்கும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிரசவத்திற்கு பிறகு நடக்க வேண்டிய அத்தியாவசிய காரியங்களை காரில் செய்ய முடியாது.
உலகின் எல்லாப் பகுதிகளிலுமே கர்ப்பிணிகளின் மீது வாகன ஓட்டுனர்கள் கனிவுடனேயே இருக்கின்றனர். இந்தியாவிலும் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கர்ப்பிணிகளை அழைத்துச் செல்லும்போது மிதமாகவே வண்டிகளை ஓட்டுகின்றனர். பிரசவத்துக்கு இலவசம் என்று சலுகை கொடுக்கும் ஓட்டுனர்களும் நம்மிடம் உண்டு.
மேற்கு நாடுகளில் இதுபோன்ற அசாதாரணமான விஷயங்கள் கொண்டாடப்படுகின்றன. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் செய்திகளாக ஆகும் போது, நம்மூரில் நடக்கும் சம்பவங்கள் பெரிதாகப் பதிவாவதில்லை. ஏனெனில் இந்த விஷயங்கள் இங்கே வழக்கமானவை. கிராமங்களில் மிகவும் சகஜமாக இந்த நிகழ்வுகள் உள்ளன. அத்துடன் இதுபோன்ற அசாதாரணமான பிரசவங்கள் பற்றி பெற்றோர் அதிகம் பேசவும் இங்கு விரும்புவதில்லை.
வேப்பம்பூப் பொடி ஏப்பம், வாயுத் தொல்லையைப் போக்கும். பித்தத்தைக் கட்டுப்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ - 10 கிராம்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 25 கிராம்,
மிளகு, கொத்தவரை வத்தல் - தலா 20 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் கடாயில் நன்கு வறுத்து எடுத்து, கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.
நல்லெண்ணெய் சேர்த்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தற்கொலை என்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனால் அது பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான வழி என சிலர் கருதி தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர்.
தற்கொலை என்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனால் அது பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான வழி என சிலர் கருதி தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். அது நம்மவர்களுக்கு பிரச்சினையையும், அவமானத்தையும், சுமையையும் கொடுத்து விடும் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை.
பொதுவாக மக்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சூழ்நிலை கைதியாக மாறி தற்கொலை செய்யும் முடிவை எடுக்கின்றனர். கடன்தொல்லை, கணவன்-மனைவி பிரச்சினை, தொழில்ரீதியான நஷ்டம், இலக்குகளில் தோல்வி, காதல் தோல்வி, உடல்நல பிரச்சினைகள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறமுடியாது போன்ற பெரும்பான்மையான காரணமாக உள்ளன. முதலில் வறுமையும், இழப்பும் நம் குற்றமல்ல என்பதை உணருங்கள். துன்பங்களை கண்டு நாம் அஞ்சாவிடில் துன்பங்கள் நம்மை கண்டு அஞ்சும் நிலை ஏற்படும் என நினைவில் கொள்ளுங்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம் மனதினை மாற்றிக்கொள்ளும் இயல்பை மேம்படுத்தி கொள்ளுங்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதால் முடிந்தவரை ஆசைகளை குறைத்து கொள்ளுங்கள்.
நமக்கு பின்னால் நம்மைப்பற்றி பேசும் கேலி பேச்சுக்களையும், குற்றச்சாட்டுக்களையும், நமது முன்னேற்றத்திற்கான தூண்டுதலாக எண்ணுங்கள். இதுபோன்ற நம்மை சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் நேர்மறை எண்ணங்களாக மாற்றும் இயல்பை வளர்த்து கொள்ளுங்கள். மேலும் ஒவ்வொரு பிரச்சினையின் போதும், நம் மீது தவறு என்ன என உணர முயற்சியுங்கள்.
துன்பங்கள் என்பவை அனுபவங்களை நமக்கு தரக்கூடியது. பிறர்சொல் கேட்டு நடப்பதை காட்டிலும், அனுபவங்களே சிறந்த ஆசானாக கருதப்படுகிறது. துன்பங்களில் காணும் இன்பமே புதுமையை தரக்கூடியது. மேலும் துன்பங்கள் இல்லாமல் வரும் இன்பம் நேர்மையான வழியில் வருவது அல்ல. அது கட்டாயமாக நிலையானதும் அல்ல. இயற்கையும் கூட இந்த உலக நியதியை உணர்த்துகிறது. வசந்த காலத்தில் வரும் பசுந்தளிர்களுக்கு முன்பு உள்ள வெறுமையான மரத்தினை போல நம் வாழ்விலும் துன்பங்களுக்கு பிறகு வரும் இன்பம் தான் ரசனைக்குரியதாக மாறும்.
முடிந்தவரை மன அழுத்தத்தை தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். எதனையும் நம்மவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அனைத்து தற்கொலைக்கும் காரணம் மனஅழுத்தமே ஆகும். முக்கியமாக மன அழுத்தம் வர காரணம் மனநிலையே ஆகும். அதாவது இந்நிகழ்விற்கு பிறகு நம்மைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ? என்பதே ஆகும். இந்த மனநிலையை அடியோடு அழித்திடுங்கள். அதற்கு பதிலாக அவர்கள் முன்னால் இனி எப்படி முன்னுதாரணமாக வாழ்ந்து, நம்மை பற்றிய மனநிலையை மாற்றுவது என சிந்தியுங்கள்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இச்சமூகத்தில் இயற்கைக்கு மாறாக நம்மை சார்ந்தோரை பிரிந்து செல்லுதல், மாபெரும் வலியை ஏற்படுத்திவிடும் என மறந்து விடாதீர்கள். எதுவுமே நிலையில்லாத இவ்வுலகில் உங்கள் துன்பங்கள் மட்டும் எப்படி நிலையாகும் என்பதில் நிலையாக இருப்போம். மாணவ செல்வங்களே வருங்கால தூண்களாகிய நீங்கள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டாம். தற்கொலை என்னும் முடிவை கைவிடுங்கள். அது உங்களுக்கும், உங்களை சார்ந்தோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.
கொரோனா நெருக்கடியால் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் ஏராளமான சிறுவர்-சிறுமியர்கள் ‘மொபைல் போன் கேம்ஸ்’ விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அதனை நினைத்து பெரும்பாலான பெற்றோர்கள் இப்போது சந்தோஷப் படுகிறார்கள். ‘அடிதடி இல்லாமல் அமைதியாக இருந்து பிள்ளைகள் விளையாடுகிறார்கள்’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விடும் பெற்றோர்களால், பள்ளிக்கூடம் திறந்து அவர்கள் பள்ளிக்கு செல்லும்போதுதான் அந்த விளையாட்டின் விபரீதத்தை உணர்ந்து கொள்ள முடியும். மொபைல் போன் கேம்ஸ், கிட்டத்தட்ட குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலும் தகர்க்கும் விளையாட்டாகும்.
இது போலத்தான் ஒருமுறை, இரண்டு மாத விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தது. பள்ளி சென்ற சிறுவனால் நோட்டில் எழுத முடியவில்லை. கை வலித்தது. கண்கள் இருண்டது. சோர்ந்து போய் வீடு திரும்பினான். அவனை டாக்டரிடம் பெற்றோர் அழைத்து சென்றனர். ‘இவனால் பேனா பிடிக்க முடியவில்லை. கைவிரல்கள் வலிக்கின்றன என் கிறான். என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்’ என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
டாக்டர் பரிசோதித்துவிட்டு, என்ன நோய் என்று சொன்னதும் பெற்றோர் அதிர்ந்து போய்விட்டார்கள். அந்த நோயின் பெயர் ‘வீடியோ கேமேர்ஸ் தம்ப்’! நிரந்தரமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் பெருவிரல் வீங்கி, நீர்கட்டுடன் காணப்படுவதுதான் இந்த நோயின் அறிகுறி. மகன் கேட்டபோதெல்லாம் அவன் இஷ்டத்திற்கு மொபைல்போனில் போட்டுக்கொடுத்த விளையாட்டுகள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று பெற்றோர் நினைத்துப்பார்த் திருக்கவில்லை.
விரல் வீக்கம் முதல்- திருட்டு மனோபாவம் வரை பல விபரீதங்கள் இந்த கேம்ஸ்களால் சிறுவர், சிறுமியர்களிடம் ஏற்படுகின்றன. பஸ்சுக்கு காத்திருக்கும்போது, படிக்க விருப்பம் இல்லாதபோது, ராத்திரி உறக்கம் வராதபோது... இப்படிப்பட்ட பல நேரங்களில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே சிதறடிக்கிறது.
திருடனை பிடிப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.
மேலோட்டமாக பார்க்கும்போது இந்த விளையாட்டுகள் புள்ளிகள் அதிகம் எடுக்கவும், அடுத்த லெவலுக்கு செல்லவும் ஏற்ற பொழுதுபோக்கு என்று சொல்வார்கள். ஆனால் குழந்தைகள் இதில் ஆழ்ந்துவிட்டால் தேவைக்கு அதிகமாக ஆவேசம் காட்டுவார்கள். கேம்ஸ்சின் ‘பிரேக் டைம்’ நேஇரத்தில் காத்திருக்க முடியாமல் மொபைலில் தேதியை மாற்றிவிட்டும் ‘பேக்’ செய்துவிட்டும், பெரும்பாலான குழந்தைகள் அடுத்த விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்கள்.
பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபாவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.
குழந்தைகளை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்கும்போது படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.
‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.
‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும். உங்கள் குழந்தைகள் தினமும் 2 மணி நேஇரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாட அனுமதிக்காதீர்கள். வேறு வெளிவிளையாட்டுகளிலும், நல்ல பொழுதுபோக்குகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்.
தூக்கமின்மை, ஒற்றை தலைவலி, சோர்வு, பலவீனம், பள்ளி பாடங்களில் பின்னடைவு, கை- கால்- முதுகு- கழுத்துவலி, மன அழுத்தம், காரணமற்ற கோபம், எரிச்சல், சுத்தமின்மை, பொய் சொல்லுதல், சக நண்பர்களிடம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்றவை எல்லாம் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையானவர்களின் அறிகுறியாகும்.
இதை எல்லாம் தெரிந்துகொண்டு, வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளை கண்காணியுங்கள்.

வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையையும் குறைக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வேர்க்கடலையின் பங்களிப்பு குறித்து பார்ப்போம்.
வேர்க்கடலைக்கு ‘மலிவான பாதாம்’ என்றொரு பெயரும் உண்டு. பொழுதை போக்குபவர்கள் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனி வகைகளில், வேர்க்கடலை பிரதானமானது. பயணங்களின்போது வேர்க்கடலை பர்பியை விரும்பி சாப்பிடுவோர் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். வேர்க் கடலையில் புரதச் சத்து அதிகம் இருப்பதால் ‘புரதத்தின் புதையல்’ என்றும் அழைக்கப்படுகிறது. வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையையும் குறைக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வேர்க்கடலையின் பங்களிப்பு குறித்து பார்ப்போம்.
உடலில் வளர்சிதை மாற்றத்தை சீராக தக்கவைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் உள்ளவர்களுக்கு, எதை சாப்பிட்டாலும் அது எளிதில் ஜீரணமாகிவிடும். இத்தகைய ஆரோக்கியமான செரிமானம் காரணமாக, தேவையற்ற கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்காது. அதனால் உடல் எடை அதிகரிக்காது. அதேவேளையில் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த அளவிலேயே இருக்கிறது. குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிரம்பியது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதனால் பசி தாமத மாகும். உடலில் கார்போஹைட்ரேட்டும் குறைவான அளவிலேயே சேரும்.
வேர்க்கடலையில் புரதம் மட்டுமின்றி பயோட்டின், தாமிரம், பொட்டாசியம், போலேட், நியாசின், தையமின், வைட்டமின் ‘ஈ’ போன்ற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் இதில் இருக்கும் கொழுப்பு, கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் பருமனை குறைக்க கலோரிகளை எரிப்பது முக்கியம் என்பதால் வேர்க்கடலையை தாராளமாக சாப்பிடலாம்.
வேர்க்கடலையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் எளிதில் கரையாத தன்மை கொண்டவை. அவை உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். அத்துடன் இஇரத்த த்தில் சர்க்கரையை நிலையாக வைத்திருக்கவும் உதவும். வேர்க் கடலை மெதுவாக ஜீரணமாவதால் இஇரத்த த்தில் சர்க்கரையையும் மெதுவாகவே கலக்கவைக்கும். இதனால் நீண்ட நேரம் ஆற்றலுடன் செயல்பட வைக்கும்.
மலச்சிக்கல் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் வேர்க்கடலையை சாப்பிட்டுவரலாம். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
வேர்க்கடலையில் ஒமேகா 6 அமிலம் நிறைந்திருக்கிறது. அது சருமத்திற்கு நன்மை பயக்கும் தன்மை கொண்டது.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வைக்கும் தன்மையும் வேர்க்கடலைக்கு உண்டு.

நாம் உண்ணும் உணவு ஜீரணமாகாமல் இருக்கும் பட்சத்தில், வயிற்று பிரச்சினைகள் வரக்கூடும். இதுபோன்ற பிரச்சினைக்கு ‘திரிபாலா பொடி’, ‘சூரணம்’ தீர்வு தரும்.
நாம் உண்ணும் உணவு ஜீரணமாகாமல் இருக்கும் பட்சத்தில், வயிற்று பிரச்சினைகள் வரக்கூடும். இதுபோன்ற பிரச்சினைக்கு ‘திரிபாலா பொடி’, ‘சூரணம்’ தீர்வு தரும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் உள்ளடங்கிய கூட்டுப்பொருள்தான் ‘திரிபலா.’ இதனை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதங்களின் நன்மை வந்துசேரும்.
இந்த மூலிகை, உணவுப்பாதையில் உள்ள நச்சுக்களை நீக்கி குடல் இயக்கத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும். செரிமான கோளாறு பிரச்சினையை சரிசெய்யும். குறிப்பாக வயிற்றில் பூச்சிகள் வளர்வதை தடுக்கும். அதோடு வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவும். வயிற்றுப்புண்களை ஆற்றும்.
தான்றிக்காய் செரிமானத்தை மேம்படுத்துவதோடு பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் இது துணைபுரியும். கடுக்காய் வயிறு தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சுவாச பாதையில் படிந்திருக்கும் சளியை நீக்கி நுரையீரல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
திரிபலாவில் இருக்கும் கசப்பு சுவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து குளுகோஸின் அளவை சமநிலைப்படுத்தவும் செய்யும். சைனஸ் பிரச்சினையையும் போக்கும். சுவாசக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி சீரான சுவாசத்திற்கு வழிவகை செய்யும். சுவாசப் பாதையில் அடைப்பட்டிருக்கும் சளியை நீக்கும். இஇரத்த சோகை பாதிப்புக்குள்ளானவர்கள் திரிபலாவை சாப்பிட்டுவரலாம். அதற்கு இரத்த த்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் தன்மை இருக்கிறது. இதய நோய் வராமல் தற்காத்துக்கொள்ளவும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.
திரிபலா பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக திரித்துகொள்ளலாம். அல்லது நாட்டு மருந்துகடையில் திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியை கலந்து, வெறும் வயிற்றில் பருகலாம். இரவில் தூங்கச் செல்லும்போதும் பருகுங்கள்.

சிலவேளைகளில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக தவறான அணுகுமுறைகளையும் கையாண்டுவிடுகிறார்கள். பெண்கள் ஒப்பனை விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
பெண்கள் எந்தவொரு சூழலிலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறுவதில்லை. சிலவேளைகளில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக தவறான அணுகுமுறைகளையும் கையாண்டுவிடுகிறார்கள். அது ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சருமத்தையும் பாழ்படுத்திவிடும். பெண்கள் ஒப்பனை விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
குளிர்காலத்தில் சன்ஸ் கிரீமை தவிர்க்கலாம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அது தவறானது. எல்லா பருவகாலத்திற்கும் சன்ஸ்கிரீம் அவசியம். குளிர்காலத்தில் சூரிய கதிர்கள் சருமத்தை நேரடியாக தாக்காது என்றாலும் புற ஊதா கதிர்வீச்சின் வீரியம் குறையாமலேயே இருக்கும். அது சருமத்துக்குள் ஆழமாக ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்திவிடும். வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீமை தவிர்த்து வந்தால் விரைவிலேயே வயதான தோற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
ஒப்பனையுடன் எப்போதாவது தூங்குவது தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஒப்பனையை அப்புறப்படுத்தாமல் தூங்கும்போது அவை சரும துளைகளை அடைத்துவிடும். சரும தசைகளையும் பலவீனமாக்கி விடும். கருவளையம் போன்ற பாதிப்பும் உருவாகும். ஒப்பனை செய்யாவிட்டாலும் கூட வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியது அவசியம். அது சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கை போக்கி புத்துணர்வை ஏற்படுத்தும்.
சருமம் பளபளப்பாக மிளிருவதற்காக தினமும் அழுத்தமாக தேய்த்து மசாஜ் செய்வதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அது இறந்த செல்களை நீக்குவதற்கு சிறந்த வழிமுறையாகும். ஆனாலும் தினமும் அப்படி செய்வது நல்லதல்ல. அதிகபடியான அழுத்தம் சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வறட்சி, நீரிழப்பு, சருமம் சிவப்பாக மாறுதல், சருமம் இறுகுதல், சரும அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். வாரத்திற்கு இருமுறை அழுத்தி தேய்த்து அழுவது போதுமானது. அது சருமத்தின் மேற்பரப்பு மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வழிவகை செய்யும்.
சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம். அது சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும். சிலர் உடலுக்கு பயன்படுத்தும் லோஷனை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள். அது தவறானது. முகத்தின் மென்மை தன்மைக்கு ஏற்ற லோஷனைத்தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உடலுக்கு பயன்படுத்தும் லோஷன் அடர்த்தியான தன்மை கொண்டது. அது சருமத்திற்கு எரிச்சல் தரும்.
முகத்தில் பரு தோன்றினால் பலரும் அதனை கைகளால் அழுத்தி அப்புறப்படுத்திவிடுவார்கள். அது சரும அழகை சிதைத்துவிடும். அப்படி செய்வது சருமத்தில் மேலும் பருக்கள் தோன்ற வழிவகுப்பதோடு இயற்கையாகவே குணப்படுத்தும் சரும கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

கர்ப்பகாலத்தில் பெண்கள் அழகு சாதனப்பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் கருவில் வளரும் குழந்தை உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வு குறிப்பிடுகிறது.
கர்ப்பகாலத்தில் பெண்கள் அழகு சாதனப்பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் கருவில் வளரும் குழந்தை உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வு குறிப்பிடுகிறது. பெரும்பாலான அழகு சாதனப்பொருட்களில் பாராபென்ஸ் எனும் ரசாயனப்பொருட்கள் இடம்பெறுகின்றன. கர்ப்ப காலத்தில் அத்தகைய அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் அது குழந்தையின் எடை வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதுகுறித்து பெர்லினில் உள்ள சாரிட் பல்கலைக்கழக மருத்துவமனை, பெர்லின் சுகாதார நிறுவனம், லீப்ஜிக் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆய்வை மேற்கொண்டிருக்கின்றன.
“அழகு சாதனப்பொருட்களில் மெத்தில் பாராபென், புரோபில் பாராபென், ப்யூட்டில் பாராபென் உள்ளிட்டவை பாராபென் ரசாயனங்களில் குறிப்பிடத்தக்கவை. கிரீம்களிலும், லோஷன்களிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இத்தகைய பொருட்கள் விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற் படுத்தக்கூடும். கர்ப்பிணி பெண்களின் சருமத்தின் வழியாக பாராபென்கள் உள் இழுக்கப்பட்டால் அது குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட கர்ப்பிணிகளின் சிறுநீரில் பாராபென்கள் அதிக அளவில் இருந்தன.
அவர்கள் பயன்படுத்திய அழகு சாதனப்பொருட்களில் இருந்துதான் அந்த பாராபென்கள் கலந்திருப்பது தெரியவந்தது. கிரீம்கள், லோஷன்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது அவை நீண்டகாலமாக சருமத்தில் படிந்திருக்கின்றன. அவை கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியோடும் தொடர்பு கொண்டிருக்கின்றன. தாய்மார்களின் சிறுநீரில் உள்ள பியூட்டில்பராபனின் செறிவுகளுக்கும், அவர்கள் பெற்றெடுத்த மகள்கள் வளர்ந்ததும் வயதுக்கு பொருத்தமில்லாத உடல் பருமன் கொண்டிருப்பதற்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தோம்” என்கிறார்.

உடலுக்கு நலம் சேர்க்கும் சிறுதானிய இனிப்பு பலகாரங்களை தயாரித்து சுவைக்கலாம். இன்று சோளப் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோள மாவு - அரை கப்
உளுந்து மாவு - கால் கப்
தூளாக்கிய வெல்லம் - கால் கப்
பேரிச்சம்பழம் - 6 (சிறிதாக நறுக்கவும்)
சமையல் சோடா - சிறிதளவு
ஏலக்காய் - கால் தூள் டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சோளமாவை போட்டு அதனுடன் உளுந்துமாவையும் ஒன்றாக சேருங்கள்.
பேரீச்சம்பழத்தையும் கலந்திடுங்கள்.
அகன்ற பாத்திரத்தில் வெல்லத்தை கொட்டி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
அதனுடன் சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும்.
பின்பு உளுந்து - சோள மாவு - பேரீச்சம் பழம் கலந்த கலவையும் வெல்ல கரைசலுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
அதனை அரை மணி நேரம் அப்படியே வைத்திருங்கள்.
பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி மாவு கரைசலை ஊற்றி பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.

சூப்பரான சோளப் பணியாரம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெறுப்பு என்ற நான்கெழுத்து வார்த்தை, மனித வாழ்க்கையை கறுப்பாக்கக்கூடியது. மற்றவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டால் நீங்கள் பாதிக்கப்படுவதோடு, சமூகமும் பாதிக்கப்படும்.
வெறுப்பு என்ற நான்கெழுத்து வார்த்தை, மனித வாழ்க்கையை கறுப்பாக்கக்கூடியது. அதனால் மற்றவர்களை நீங்கள் வெறுக்கக்கூடாது. உங்களையும் நீங்கள் வெறுக்கக்கூடாது. வெறுப்பு, உங்கள் மீதே உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். மற்றவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டால் நீங்கள் பாதிக்கப்படுவதோடு, சமூகமும் பாதிக்கப்படும்.
வெறுப்பு ஒருவருக்கு தோன்ற ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. தான் எதிர்பார்த்தபடி மற்றவர்கள் நடக்காமல் போனால், தான் ஆசைப்பட்டது மற்றவர்களுக்கு கிடைத்துவிடும்போது, மற்றவர்கள் பார்வையில் தனது மரியாதை குறைந்து போகும்போது வெறுப்பு வரும். சந்தர்ப்ப சூழ்நிலை தன்னை குற்றவாளியாக்கும்போதும், தனக்கு பிரியமானவர்கள் எதிராளியாகும் போதும், சவாலை எதிர்கொள்ள போதிய பலம் இல்லாதபோதும் வெறுப்பு தோன்றுவதுண்டு. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் தோல்வியடையும் போதும் வெறுப்பு உருவாகலாம்.
உண்மையான உழைப்பு மற்றவர்களின் சூழ்ச்சியால் விரயமாகும் நிலையிலும், நேர்மை தோற்றுப்போகும் நிலையிலும், திறமை இருந்தும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காத போதும் வெறுப்பு ஏற்படலாம். தன்னை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளும்போதும் வெறுப்பு தோன்றுவதுண்டு.
இன்னொருவர் மீதோ, ஒரு குழு மீதோ உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டாலும், உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு தோன்றினாலும், அந்த வெறுப்பை உடனே உங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். அது அப்படியே உங்கள் மனதில் தங்கிவிட்டால் அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும். மற்றவர்கள் மீது காட்டும் காரணமற்ற வெறுப்பு அவர்களை உங்களைவிட்டு விலகச் செய்துவிடும். உங்களை தவறான முடிவுகள் எடுக்கவும் தூண்டிவிடும். வெறுப்பு நம் மனதிலே இருந்துகொண்டிருந்தால், அதன் மோசமான விளைவுகளை நாம் அறிய சில காலம் பிடிக்கும். ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற வெறித்தன எதிர்பார்ப்பில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், அந்த குழந்தை மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பு நாளடைவில் அந்த குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து விடும்.
அந்த மனப்பான்மை குழந்தையை பலமிழக்கச்செய்து, அதனை சமூகத்தில் பின்தங்கச்செய்துவிடும். அதனால் காலங்கள் கடந்த நிலையில், ‘தேவையில்லாமல் குழந்தையை வெறுத்து விட்டேனே’ என்று நினைத்து தந்தையும் தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகி விடுவதுண்டு.
காரணமின்றி வெறுத்துத் தள்ளப்படும் குழந்தைகள், பிற்காலத்தில் சமூகவிரோதிகளாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. மனோதத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, சிறுவயது சூழ்நிலைகளே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. தேவையின்றி வெறுத்து ஒதுக்கப்படும் குழந்தைகள் தடம் மாறி இரக்கமற்ற செயல்களை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகவே உங்கள் குழந்தைகள் மீதோ, சமூகத்தின் மீதோ ஒருபோதும் வெறுப்பைகாட்டாதீர்கள்.

தொடர் விடுமுறை, பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்-சிறுமியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விளையாட்டுடன் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொடுப்பதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர் விடுமுறை, பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்-சிறுமியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறார்கள். விளையாட்டுடன் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொடுப்பதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலம் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் நமக்கு உருவாகும். கல்வியுடனான தொடர்பை தக்கவைக்கும் விதமாக ‘வீட்டு பள்ளிக்கூடம்’ என்ற சூழலையும் ஏற்படுத்தலாம்.
குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது, பள்ளியிலும், வீட்டிலும் அவர்களின் செயல்பாட்டுக்கான நிலையான அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கும். அதன்படியே செயல்பட்டு வந்திருப்பார்கள். அதனை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. பள்ளிக்கூடம் செல்லும்போது இரண்டு மணிநேரம் படிப்புக்காக நேரத்தை ஒதுக்கி இருந்தால், இப்போது ஒரு மணி நேரத்தையாவது செலவிட வைக்கலாம். ஓடியாடி விளையாடும்போது சில மணி நேரங்களில் சோர்ந்து போய்விடுவார்கள். பின்பு ஓய்வு எடுக்க விரும்புவார்கள். அந்த ஓய்வுக்கு பிறகான நேஇரத்தை படிப்புக்காக ஒதுக்கலாம். அதற்கேற்ப வீட்டில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
அது குழந்தைகள் படிப்பின் மீது கவனம் செலுத்துவதற்கு உதவும். தினமும் அதே இடத்தில் படிப்பை தொடரவைக்க வேண்டும். அத்தகைய சூழல், மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். விடுமுறை நாளில் படிக்கும்போது கவனச்சிதறல் ஏற்படலாம். அதனை தவிர்க்க இணையத்தின் உதவியை நாடலாம். குழந்தைகளின் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி அவர்களின் படிப்பு சார்ந்த ஏராளமான தகவல்களும் வீடியோ வடிவில் இணையதளத்தில் நிறைந்திருக்கின்றன. அதனை பார்க்கவைத்தும் கற்றுக்கொடுக்கலாம். எளிமையான கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை இணையதளத்தில் தேடி கண்டுபிடிக்க வைக்கலாம்.
வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் சூழலும் நிலவுவதால், அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு உதவும். ஆசிரியர்களுடன் உரையாடும் சூழல் நிலவும்போது கவனச்சிதறல் இன்றி படிக்கவும் செய்வார்கள். ஓவியம், நடனம், இசை மீது நிறைய குழந்தைகளுக்கு நாட்டம் இருக்கும். அவர் களின் விருப்பத்தை அறிந்து, அதில் தனித்திறனை மெருகேற்றுவதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தினால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் எண்ணம் அவர்களுக்குள் எழாது.
குழந்தைகளை வீடியோ கேம்களில் கவனம் செலுத்தவிடாமல், அவர்களோடு விளையாடுவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டுகள் அதற்கு துணைநிற்கும். அவை குழந்தைகளின் புத்திக்கூர்மைக்கு வழிவகுக்கும். மூளை உடற் பயிற்சியை உள்ளடக்கிய புதிர்கள் மற்றும் பிற விளையாட்டுகளையும் தேர்வு செய்யலாம். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதோடு அல்லாமல் அவர்களிடம் மனம் விட்டு பேசுவதற்கும் குறிப்பிட்ட நேஇரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் நல்லவிதமாக நேஇரத்தை செலவிடக்கூடிய வகையில் உங்கள் நேஇரத்தை ஒதுக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உடற்பயிற்சியும் முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். அதில் ஈடுபாடு கொள்ள வைப்பதற்கு இசையுடன் கூடிய உடற்பயிற்சிகளை தேர்வு செய்யலாம். அது உங்களையும் குழந்தைகளையும் நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க துணை நிற்கும்.