search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வேர்க்கடலை
    X
    வேர்க்கடலை

    உடல் ஆரோக்கியத்தில் வேர்க்கடலையின் பங்களிப்பு

    வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையையும் குறைக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வேர்க்கடலையின் பங்களிப்பு குறித்து பார்ப்போம்.
    வேர்க்கடலைக்கு ‘மலிவான பாதாம்’ என்றொரு பெயரும் உண்டு. பொழுதை போக்குபவர்கள் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனி வகைகளில், வேர்க்கடலை பிரதானமானது. பயணங்களின்போது வேர்க்கடலை பர்பியை விரும்பி சாப்பிடுவோர் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். வேர்க் கடலையில் புரதச் சத்து அதிகம் இருப்பதால் ‘புரதத்தின் புதையல்’ என்றும் அழைக்கப்படுகிறது. வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையையும் குறைக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வேர்க்கடலையின் பங்களிப்பு குறித்து பார்ப்போம்.

    உடலில் வளர்சிதை மாற்றத்தை சீராக தக்கவைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் உள்ளவர்களுக்கு, எதை சாப்பிட்டாலும் அது எளிதில் ஜீரணமாகிவிடும். இத்தகைய ஆரோக்கியமான செரிமானம் காரணமாக, தேவையற்ற கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்காது. அதனால் உடல் எடை அதிகரிக்காது. அதேவேளையில் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.

    வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த அளவிலேயே இருக்கிறது. குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிரம்பியது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதனால் பசி தாமத மாகும். உடலில் கார்போஹைட்ரேட்டும் குறைவான அளவிலேயே சேரும்.

    வேர்க்கடலையில் புரதம் மட்டுமின்றி பயோட்டின், தாமிரம், பொட்டாசியம், போலேட், நியாசின், தையமின், வைட்டமின் ‘ஈ’ போன்ற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் இதில் இருக்கும் கொழுப்பு, கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் பருமனை குறைக்க கலோரிகளை எரிப்பது முக்கியம் என்பதால் வேர்க்கடலையை தாராளமாக சாப்பிடலாம்.

    வேர்க்கடலையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் எளிதில் கரையாத தன்மை கொண்டவை. அவை உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். அத்துடன் இஇரத்த த்தில் சர்க்கரையை நிலையாக வைத்திருக்கவும் உதவும். வேர்க் கடலை மெதுவாக ஜீரணமாவதால் இஇரத்த த்தில் சர்க்கரையையும் மெதுவாகவே கலக்கவைக்கும். இதனால் நீண்ட நேரம் ஆற்றலுடன் செயல்பட வைக்கும்.

    மலச்சிக்கல் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் வேர்க்கடலையை சாப்பிட்டுவரலாம். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    வேர்க்கடலையில் ஒமேகா 6 அமிலம் நிறைந்திருக்கிறது. அது சருமத்திற்கு நன்மை பயக்கும் தன்மை கொண்டது.

    இதயம் தொடர்பான நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வைக்கும் தன்மையும் வேர்க்கடலைக்கு உண்டு.
    Next Story
    ×