search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இட்லி பொடி"

    • பொடிக்கு சுவையை கூட்டுவது வறுத்து சேர்க்கும் வேர்க்கடலை தான்.
    • சிறிதளவு நெய் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம்.

    பல வகை இட்லி பொடிகளை செய்தும் சாப்பிட்டும் பார்த்திருப்பீர்கள். ஆனால் வேர்க்கடலை மற்றும் பூண்டில் செய்யப்பட்ட பொடியை ருசித்திருக்க மாட்டீர்கள். இந்த பொடிக்கு சுவையை கூட்டுவது நீங்கள் வறுத்து சேர்க்கும் வேர்க்கடலை தான். இந்த பொடியோடு சிறிதளவு நெய் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம். இந்த இட்லி பொடியை மிகவும் எளிமையாக செய்துவிடலாம். இதை செய்ய மிகக்குறைவான பொருட்களே தேவைப்படும்.

    தேவையான பொருட்கள்

    வேர்க்கடலை (தோல் அகற்றப்பட்டது) - 1 கப்

    உலர்ந்த சிவப்பு மிளகாய் - 3-4  (காரத்திற்கேற்ப)

    பூண்டு - 3 அல்லது 4 பல்

    புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

    சீரகம் - 1 தேக்கரண்டி

    கொப்பரை- ஒரு கப்

    பொட்டுக்கடலை- கால் கப்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    பெருங்காயம்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேர்க்கடலை நன்றாக வறுக்கவும். அதன்பிறகு சீரகம் மற்றும் பூண்டு, புளி மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய், பொட்டுக்கடலை, கொப்பரை தேங்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். பூண்டு கருக்காத அளவிற்கு மிதமான தணலில் வைத்து வறுக்கவும். பூண்டின் சுவை மாறாமல் அதே சுவையில் உங்களுக்கு வேண்டுமானால், அவற்றை வறுக்காமல் தட்டியும் போட்டுக்கொள்ளலாம்.

    இப்போது நீங்கள் வறுத்த பொருட்கள் அனைத்தும் குளிர்ந்தவுடன், அவற்றை ஓரளவுக்கு தூளாக அரைக்கவும். நீங்கள் பொடி அரைக்கும்போது சிறிது இடைவெளி விட்டு அரைக்கவும், இல்லையென்றால் அவற்றில் உள்ள எண்ணெய் சத்துக்கள் வெளியேறக்கூடும். உங்களுக்கு பேஸ்டியாக வேண்டும் என்றால் அப்படி அரைத்துக்கொள்ளலாம்.

    ஆனால் தூள் போன்று வேண்டும் என்று விரும்பினால், கொஞ்சம் இடைவெளி விட்டு அரைப்பது நல்லது. தூளாக அரைத்து முடிந்ததும், அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கலாம்.

    நீங்கள் இப்போது அரைத்து தூளாக வைத்துள்ள இந்த பொடியை சிறிது நெய் அல்லது நல்லெண்யுடன் சேர்த்து சேர்த்து இட்லிக்கோ அல்லது சாதத்திற்கோ சேர்த்து ருசிக்கலாம். மற்றும் காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கொள்ளவும். பொடியை தயாரித்து இரண்டு வாரங்களுக்கு மேல் பயன்படுத்தலாம்.

    • இட்லி, தோசைக்கு பல்வேறு பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம்.
    • இன்று கொள்ளுவில் இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - அரை கப்

    உளுந்தம் பருப்பு - கால் கப்

    கடலை பருப்பு - ஒரு கைப்பிடி

    காய்ந்த மிளகாய் - 5

    பூண்டு - 10 பல்

    மிளகு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    கறிவேப்பிலை - 1 கொத்து

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    கறிவேப்பிலையை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் ஆறவைத்து கொள்ளவும்.

    வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.

    அடுத்து உளுந்து, கடலைப்பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

    மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

    மிளகையும் கருகாமல் வறுத்து கொள்ளவும்.

    கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.

    கடைசியாக சூடான கடாயில் பூண்டை போட்டு வைத்தால் போதும்.

    அனைத்தும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    இப்போது சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.

    இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வல்லாரை ஜாம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரி க்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் நோய் வராமல் தடுக்கும்.
    • ஜாம் மற்றும் இட்லி பொடியினை பல்கலைகழக வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்தில் 4-ஆம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டபடிப்பு பயின்று வரும் மாணவிகள் பாலமுனீஸ்வரி, ஷெர்லி, பிளஸ்சி, ஹேமபிரியா, லெட்சுமி, அபிநயா ஆகியோர் ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தில் நடந்த திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு வகுப்பின் கீழ் இயற்கை முறையில் வல்லாரை கீரை உற்பத்தி செய்து, வல்லாரை இலை களோடு பழங்களையும் சேர்த்து ஜாம் மற்றும் இட்லி பொடி தயார் செய்து வருகின்றனர்.

    கீரைகளை குழந்தைகள் உண்ணுவதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கும் நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த வல்லாரை ஜாம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரி க்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் நோய் வராமல் தடுக்கும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலியை குறைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த ஜாம் மற்றும் இட்லி பொடியினை பொது மக்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்வதால் தொடர்ந்து இவற்றை தயாரித்து அவர்கள் பல்கலைகழக வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

    • பிரண்டையில் அடங்கியிருக்கும் சத்துக்கள் ஏராளம்.
    • பிரண்டை பொடி எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

    தேவையான பொருட்கள்:

    பிரண்டை - 100 கிராம்,

    உளுந்து - 100 கிராம்,

    துவரம் பருப்பு - 50 கிராம்,

    பெருங்காயம் - 1/4 ஸ்பூன்,

    வெந்தயம் - 1 ஸ்பூன்,

    மிளகு - 1 ஸ்பூன்,

    வரமிளகாய் - 10,

    கறிவேப்பிலை - 1 கொத்து,

    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    பிரண்டையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடி செய்வதற்கு பிரண்டையை பிஞ்சாக இருப்பது மிகவும் நல்லது.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, பிரண்டையை அந்த எண்ணெயில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். பிரண்டை எண்ணெய்யில் மூழ்கி இருக்க வேண்டும். பிரண்டை சிவந்து உடையும் அளவிற்கு வறுக்க வேண்டும்.

    வறுபட்ட பிரண்டையை எண்ணெயில் இருந்து நன்றாக வடிகட்டி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். (அந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை மூட்டு வலி உள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் உடனடியாக உண்டு.)

    அதே கடாயில் எண்ணெய் எதுவும் ஊற்ற தேவையில்லை. உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம், மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை இந்த எல்லாப் பொருட்களையும் தனித்தனியாக போட்டு இட்லி பொடிக்கு வறுப்பது போல சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எதையும் கருக விடாதீர்கள். பொன்னிறம் வரும் வரை, வாசம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்து முதலில் வறுத்த பிரண்டை யோடு மொத்தமாக வைத்துவிடுங்கள்.

    நன்றாக ஆறிய பின்பு இந்த கலவையை மிக்ஸியில் போட்டு, இறுதியாக மிக்ஸி ஜாரில் புளி துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நைசாக அரைத்தால் பிரண்டை பொடி தயார்.

    • இந்த இட்லி பொடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    இறால் கருவாடு - 250 கிராம்

    காய்ந்த மிளகாய் - 10

    சின்ன வெங்காயம் - 7

    பூண்டு - 8 பல்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    தேங்காய்த் துருவல் - 200 கிராம்

    புளி - எலுமிச்சை அளவு

    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து கருவாட்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.

    அதே வாணலியில் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும், சின்னவெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை கலவையை வறுக்கவும்.

    இதை கருவாடு, காய்ந்த மிளகாயுடன் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

    இந்த இறால் பொடி சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

    ×