என் மலர்

  சமையல்

  நார்ச்சத்து நிறைந்த பிரண்டை இட்லி பொடி
  X

  நார்ச்சத்து நிறைந்த பிரண்டை இட்லி பொடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரண்டையில் அடங்கியிருக்கும் சத்துக்கள் ஏராளம்.
  • பிரண்டை பொடி எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

  தேவையான பொருட்கள்:

  பிரண்டை - 100 கிராம்,

  உளுந்து - 100 கிராம்,

  துவரம் பருப்பு - 50 கிராம்,

  பெருங்காயம் - 1/4 ஸ்பூன்,

  வெந்தயம் - 1 ஸ்பூன்,

  மிளகு - 1 ஸ்பூன்,

  வரமிளகாய் - 10,

  கறிவேப்பிலை - 1 கொத்து,

  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

  செய்முறை

  பிரண்டையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடி செய்வதற்கு பிரண்டையை பிஞ்சாக இருப்பது மிகவும் நல்லது.

  அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, பிரண்டையை அந்த எண்ணெயில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். பிரண்டை எண்ணெய்யில் மூழ்கி இருக்க வேண்டும். பிரண்டை சிவந்து உடையும் அளவிற்கு வறுக்க வேண்டும்.

  வறுபட்ட பிரண்டையை எண்ணெயில் இருந்து நன்றாக வடிகட்டி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். (அந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை மூட்டு வலி உள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் உடனடியாக உண்டு.)

  அதே கடாயில் எண்ணெய் எதுவும் ஊற்ற தேவையில்லை. உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம், மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை இந்த எல்லாப் பொருட்களையும் தனித்தனியாக போட்டு இட்லி பொடிக்கு வறுப்பது போல சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எதையும் கருக விடாதீர்கள். பொன்னிறம் வரும் வரை, வாசம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்து முதலில் வறுத்த பிரண்டை யோடு மொத்தமாக வைத்துவிடுங்கள்.

  நன்றாக ஆறிய பின்பு இந்த கலவையை மிக்ஸியில் போட்டு, இறுதியாக மிக்ஸி ஜாரில் புளி துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நைசாக அரைத்தால் பிரண்டை பொடி தயார்.

  Next Story
  ×