என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பால் அதிகமாக நீங்கள் குடிப்பவராக இருந்தால், அதனை குறைத்து கொண்டு மாறாக, தயிர், மோர், வெண்ணை, சீஸ், பன்னீர் போன்று பாலில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
    காலையில் எழுந்தவுடன் பலருடைய காலை பொழுது, ஒரு கிளாஸ் பால் கலந்த டீ, காபி போன்றவற்றில் தான் துவங்குகிறது.

    பாலில் கால்சியம், வைட்டமின் பி12, விட்டமின் டி, புரோட்டீன், பொட்டாசியம், மினரல்கள், போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், மக்களின் வாழ்க்கையில் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது.

    அதிக அளவில் பால் குடிப்பதால் சிலருக்கு செரிமானப் பிரச்சனை உண்டாகும்.

    வாந்தி, குமட்டல், வயிறு மந்தமாக இருப்பது போல் உணர்ந்தால் அதிகம் பால் எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். சிலருக்கு பால் குடிப்பதால் ஒவ்வாமை, சரும அலர்ஜி உண்டாகும். பால் குடிப்பதால் எலும்புகள் உறுதியாகும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே சமையல் அதிக பால் குடிப்பதால் எலும்புகளுக்கு ஆபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாம்.

    நாள் ஒன்றுக்கு 2 கிளாஸுக்கு மேல் பால் குடித்தால் ஆண்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் பிரச்சனையும், பெண்களுக்கு சில வகையான புற்றுநோய்களை சந்திப்பார்கள் என்றும் BMJ நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    எனவே முடிந்தவரை பால் அதிகமாக நீங்கள் குடிப்பவராக இருந்தால், அதனை குறைத்து கொண்டு மாறாக, தயிர், மோர், வெண்ணை, சீஸ், பன்னீர் போன்று பாலில் செய்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
    இந்தக் காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
    நவீன காலத்தில் பெண்களும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிப்பது குறைத்து விட்டது. குழந்தைகளிடம் மொபைல் போனை கொடுத்து விட்டு தங்கள் வேலைகளை செய்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். இது முற்றிலும் தவறானது. பண்டைய காலத்தை சிந்தித்து பார்ப்போம். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் நேரமும் தூங்க வைக்கும் நேரமும் கதைகளை சொல்லி தருவார்கள். இன்றைக்கு அப்படி நடப்பதே இல்லை.

    ஆனால் பெற்றோர்களே உளவியலாளர்களின் கூற்றுப்படி, படுக்கச் செல்லும் நேரத்தில் குழந்தைகளிடம் கதைகள் சொல்லும் போது குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் நல்ல பிணைப்பு உருவாகும் என்கின்றனர். மேலும் இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் பெருகுவதுடன் அதிகமாக சிந்திப்பதற்கும் தூண்டுகிறது. அவர்கள் வளர்ந்தபின் அறிவாளியாகவும், நுண்நோக்கிப் பார்க்குத் திறன் உடையவர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பார்கள்.

    கதைகள் வழியே அவர்கள் கற்றல் திறன் அதிகரிப்பதுடன் வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் ஏற்படும். இந்தக் காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைகளை சுவாரஸ்யமாக உருவாக்குவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை இங்கு பார்ப்போம்.

    பேசிப் பழகுங்கள்

    ஒரு பெற்றோராக, அன்றைய தினம் முழுவதும் நடந்த விஷயங்களை குழந்தையிடம் முதலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

    கதை சொல்லும்போது அவர்கள் என்ன மாதிரியான கதைகளைக் கேட்க விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். பின்னர் அவர்கள் விரும்பும் கதைகளை அழகாக வர்ணித்து சொல்லுங்கள்.

    இது உங்கள் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள உதவும். மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு புதிய அனுபவத்தை தர கூடியதாக மாறும்.
    கதாபாத்திரம்

    முதலில் நீங்கள் சொல்ல போகும் கதையின் கதாபாத்திரமாக மாற வேண்டும். அப்போது உங்கள் குழந்தை உங்கள் கதைகளை ரசிக்க ஆரம்பிக்கும். வெறும் வாசிப்பு கதை சொல்லும் போது குழந்தைகளை போர் அடிக்க செய்யும்.

    நீங்கள் இன்வோல்வ்மென்டோடு சொல்லும் போது உங்கள் குழந்தை கேட்பதிலும் கவனம் செலுத்துவதிலும் அதிக அக்கறை எடுக்கும். அவர்கள் உங்கள் கதைகளை ரசிக்கத் ஆரம்பிபார்கள். மேலும் அவர்களுக்குத் ஒரு தெளிவான கற்பனை வளரும்.
    நண்பர்கள்

    உங்கள் குழந்தையுடன் வலுவான உறவை ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களுடன் இணக்கமாக இருந்து உங்களையே குழந்தை போல மாற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் நம்பக் கூடிய ஒரு நண்பரைப் போல நடந்து கொள்ளுங்கள்.

    இதனால் அவர்கள் தூங்குவதற்கு முன்பு, நீங்கள் சொல்லும் எந்தவொரு கதையையும் ஆழ்ந்து ரசித்து தூங்குவார்கள்.
    விவாதம்

    கதை முடிந்தவுடன் நீங்கள் சொன்ன கதையைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். அதிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டவை என்னவென்று கேளுங்கள். மேலும் கதையைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடுங்கள்.

    அப்படி இருந்தால் மட்டுமே அக்கதைகளின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும். அப்போது தான் உங்கள் குழந்தைகள் நேர்மை, பணிவு, தயவு போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும்.
    வாசிக்க கற்று கொடுங்கள்

    கடைசியாக, ஏன் கதையை வாசிக்க வேண்டும் என்று வாசிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். கதைகளில் உள்ள எடுத்துக்காட்டுகள் மூலம், அறிவைப் பெறுவதும், வாசிக்கும் பழக்கத்தின் மூலம் தன்னைப் பயிற்றுவிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குக் எடுத்து கூறுங்கள்.

    வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தயிரியத்தை அவர்களுக்கு முன்னிலைப்படுத்துங்கள்.
    அழகான ஆடைகளை அணிந்திருந்தாலும் அதற்கு ஏற்ற காலணிகளை அணியவில்லை என்றால் அந்த அலங்காரம் முழுமை அடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.
    அழகான ஆடைகளை அணிந்திருந்தாலும் அதற்கு ஏற்ற காலணிகளை அணியவில்லை என்றால் அந்த அலங்காரம் முழுமை அடையாது என்றுதான் சொல்ல வேண்டும். உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் தங்களது உடைக்கு ஏற்றாற்போல வெவ்வேறு வகையானஷூ மற்றும் செப்பல்களை அணிந்து விழாக் களுக்கும், ஷோக்களுக்கும் வருவதைப் பார்க்க முடியும். இவ்வாறு அவர்கள் அணிந்து வரும்பொழுது எந்த ஒரு பொருளும் மிகப் பிரபலமாகவும் அதே சமயம் முழுமையான ஸ்டைலை அறிமுகப்படுத்துவதாகவும் உள்ளது.

    காலணிகளின் மீது பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் லான்களில் நடந்து செல்ல நியான் செப்பல்கள், அலுவலகங்களுக்கு ஷூக்கள், ஷாப்பிங்கிற்கு சாண்டல்ஸ் மற்றும் மேற்புறத்தில் துளைகள் கொண்ட ப்ரோக்ஸ், ஸ்னீக்கர்ஸ், பார்ட்டி களுக்கு வெட்ஜஸ் என்று பல வகையான காலணிகளை அணிந்து செல்வதை விரும்புகிறார்கள்.

    திருமணங்கள், கலாச்சார விழாக்கள் மற்றும் பிரமாண்டமான பண்டிகை விழாக் களுக்கு சிறந்த பாதணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவது ஒரு கடினமான பணியாக உள்ளது. கனமான இந்திய உடைகளுக்கு ஏற்ற காலணி பாணிகளை நாம் அறிந்து கொள்ளலாம் வாங்க...

    ஜூத்திஸ் அல்லது மொர்ஜாரிஸ்

    ஜூத்திஸ் என்பது ஹுல் இல்லாத தட்டையான இந்திய ஷூவாகும். இவை பெரும்பாலும் கேஷுவல் அல்லது செமி ஃபார்மல் ஆடைகளுக்கு ஏற்றவை. இன்று ஜூத்திஸ் சிறுமிகள், வயதான பெண்கள், பழமைவாத பெண்கள் மற்றும் நவீன பேஷன் விரும்பிகள் என அனைவராலும் அணியப்படுகின்றது.

    இவற்றை ரெகுலர் சல்வார்ஸ், அனார்கலி சூட்ஸ், குர்திஸ், டிசைனர் அவுட்ஸ்பிட்ஸ், லெஹங்காஸ் மற்றும் பார்ட்டி கெளன்களுடன் அணிந்து கொள்ளும் விதத்தில் தட்டையான ஷூவின் மேற்புறம் கண்ணாடிகள் ஒட்டப்பட்டு கோல்டன் ஜரிவேலைப்பாட்டுடனும், வண்ண வண்ண எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடனும், மிகவும் அழகாக கண்ணை கவரும் விதத்தில் உள்ளன. இவ்வகை ஜூத்திகளின் பிறப்பிடம் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களாக இருந்தாலும் இன்று அனைத்து மாநிலங்களிலும் அற்புதமான வடிவமைப்பு களுடன் கிடைக்கின்றன. மணமகன் மற்றும் மணமகள் அணிந்து கொள்ளக்கூடிய தனியாக வடிவமைக்கப்பட்ட ஜூத்திஸ் மிகவும் பிரபலம்.

    பெலரினாஸ் மற்றும் சாண்டல்ஸ்

    இந்திய பாணியில் இருக்கும் பெலரினால் ஜூத்திகளை ஒத்திருந்தாலும் மிகவும் சமகால தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.

    சாண்டல் எண்ணற்ற ஸ்டைகளில் பெரும்பாலான இந்திய ஆடைகளான சேலைகள், ஸ்ட்ரெய்ட் கட் சூட்ஸ், லெஹங்கா, லாங் ஸ்கர்ட்ஸ் மற்றும் லெஹங்கா சூட்டுகளுடன் அணிந்து கொள்ளும் விதமாக விற்பனையில் உச்சம் தொடுகின்றன.

    வெட்டிங் ஹீல்ஸ்

    திருமண வரவேற்பு, திருமண பார்ட்டி மற்றும் நவீனத் திருமண ஆடைகளுடன் இதுபோன்ற ஹீல்ஸ்களை அணியும் பொழுது அவை அணிபவருக்கு ஆளுமையையும், பிரமாண்டத்தையும் தருவதாக இருக்கும்.

    திருமண வைபவங்களுக்கு அணியும் காலணிகள் என்பதால் அவற்றில் கிறிஸ்டல்கள் பதித்துப் பளபளப் பானதாக இருக்கும். நம்முடைய தனிப்பட்ட (கஸ்டமைஸ்டு) ஆடைகளுக்கு ஏற்ற தனிப்பட்ட ஹீல்ஸ்களை வடிவமைப்பதற் கென்றே காலணி வடிவமைப் பாளர்கள் உள்ளனர்.

    இந்திய செப்பல், ஃபிலிப் ஃப்ளாஸ் மற்றும் சாண்டல் செப்பல்ஸ்

    குர்தி ஜீன்ஸ் காம்போ, சுரிதார் சூட் அல்லது நீண்ட பாவாடை மற்றும் குர்தி காம்போ போன்ற சாதாரண இந்திய ஆடைகளுடன் அணிந்து கொள்ள ஏற்றவையாக இவ்வகை செப்பல்கள் உள்ளன.

    பெருவிரலுக்கும், மெட்டி விரலுக்கும் இடையே தண்டு போன்ற பாகத்தின் மேல் பூ வேலைப்பாடு, பாதத்தின் மேற்புறம் பட்டையான வேலைப்பாட்டுடன் கூடிய வார் இவை பார்ப்பதற்கு பழைய கால பாத ரட்சை போன்ற தோற்றத்தை ஞாபகப்படுத்துகின்றது. அதே சமயம் ஸ்டைலான தோற்றத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

    தட்டையான செப்பல்கள் நவநாகரீகமாகவும் அதே சமயம் வசதியாகவும் உள்ளன. தட்டையான செப்பல்களை விரும்பாதவர்களாக இருந்தால் ப்ளாட் ஃபார்ம் அல்லது கிட்டன் ஹீல்ஸ் ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கலாம். இதுபோன்று அலங்கரிக்கப்பட்ட குதிகால் செப்பல்களை புடவைகள் மற்றும் நவராத்திரி லெஹங்காக்களுடன் அணியலாம்.

    * ஃபிலிப் ஃப்ளாப் செப்பல்களை அருகிலிருக்கும் கடைகள் மற்றும் அக்கம் பக்கம் சென்று வர அணியலாம். விரல்களுக்கு இடையே எந்தப்பிடிப்பும் இல்லாததால் இள வயதினரின் தேர்வாக இவை உள்ளன.

    பராமரிப்பு டிப்ஸ்

    * அன்றாடம் அணியும் நியான், ஹவாய் மற்றும் ஃபிலிப் ஃப்ளாப் செப்பல்களை சோப்புகளை உபயோகித்துக் கழுவி நன்கு காயவைத்து பின்னர் உபயோகிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

    * ஜூத்திஸ், வெட்டிங் ஹீல்ஸ் போன்றவை மிகவும் பளபளப்பாக கண்ணாடி மற்றும் கற்கள், எம்ப்ராடரி வேலைப்பாட்டுடன் இருப்பதால் அவற்றின் மீது தூசு படியாமல் மூடிய அலமாரி மற்றும் ஷூ ஸ்டாண்டுகளில் வைக்கலாம். அதே போல் மென்மையான ப்ரஸ்களை உபயோகித்து தூசு தட்டலாம். எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பைகளில் போட்டு சுற்றி வைக்கக்கூடாது.

    * மழை நேரங்களில் தண்ணீரில் நனையாமல் வைக்க வேண்டும். அதே போல் காற்றோட்டம் இல்லாமல் காலணிகளை வைக்கும் பொழுது அவற்றின் மேல் பூஞ்சைக் காளான் படர்ந்து துர்நாற்றம் வீசத்துவங்கிவிடும். எனவே, காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
    நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 10
    மோர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    ப.மிளகாய் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    புதினா மற்றும் கறிவேப்பிலை பேஸ்ட் - 1/2 tsp

    நெல்லிக்காய் மோர்

    செய்முறை :

    ப.மிளகாய், இஞ்சியை கொரகொரப்பாக தட்டிக்கொள்ளவும்.

    பெரிய நெல்லிக்காய்களை சிறு துண்டுகளாக கொட்டைகளை நீக்கி நறுக்கிக்கொள்ளுங்கள்.

    பின் அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வடிகட்ட ஜூஸ் மட்டும் எடுத்து கொள்ளவும்.

    தற்போது அந்த ஜூஸை மோருடன் கலந்துகொள்ளுங்கள்.

    பின் அதனுடன் கொரகொரப்பாக தட்டிய ப.மிளகாய், இஞ்சி, புதினா, கறிவேப்பிலை பேஸ்டை கலந்து , உப்பு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

    தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் போட்டு குடிக்கலாம்.

    ஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள். அளவுக்கு அதிகமாக குடித்தால் இதுவும் நஞ்சுதான்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களின் மனமானது கர்ப்பகாலத்தில் பெரிய மாற்றத்தை அடைகிறது. அதாவது இந்நிலையில் பெண்களின் இதயம் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
    கர்ப்பம் என்பது பெண்களுக்கு கடவுள் கொடுத்த ஒரு பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த காலத்தில் பெண்களில் உடல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களால் பெண்களின் உடலில் மட்டுமல்லாமல் வடிவத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. அப்படி என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று இந்த பதில் பார்க்கலாம்.

    பெண்களின் மனமானது கர்ப்பகாலத்தில் பெரிய மாற்றத்தை அடைகிறது. அதாவது இந்நிலையில் பெண்களின் இதயம் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    முதலாவது உங்கள் இதயம் சாதாரண நிலையை விட இரண்டு மடங்கு இரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இது உங்கள் உடல் வளர்ச்சி மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    இரண்டாவதாக பெண்களின் இதயம் சாதாரண அளவை விட 12சதவீதம் பெரியதாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்கள் இதயம் பெரியதாவதாக மாறுவதனால் உங்கள் உடல் அதிக வேலையை செய்ய தூண்டுகிறது.

    உங்களுக்காகவும், உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்காகவும் இந்த இதயத்தின் அதிகப்படியான மாற்றங்கள் ஒன்பதாவது மாதத்தில் ஏற்படுகிறது.

    மூன்றாவதாக இதயத் துடிப்புகளும், இயக்கங்களும் கூட சாதாரண நிலையை விட அதிகமாகின்றன. இந்த மாற்றங்கள் ஆரோக்கியான குழந்தையை பெற்று எடுக்க உதவுவது மட்டுமல்லாமல் உங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

    இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் கர்ப்பகாலத்தில் இதயத்திற்கு பலம் தரும் உணவுகளில் அதிக கவனம் செலுத்தி உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துங்கள்.

    ஊரடங்கு முடிவுக்கு வந்து வெகு நாட்களுக்கு பிறகு அலுவலகம் செல்லும்போது சில விஷயங்களை மறந்துவிடுவது வழக்கம். அப்படி சில விஷயங்களை தொகுத்திருக்கிறோம்.
    ஊரடங்கு முடிவுக்கு வந்து வெகு நாட்களுக்கு பிறகு அலுவலகம் செல்லும்போது சில விஷயங்களை மறந்துவிடுவது வழக்கம். அதேபோல, வெகுநாட்களாக பயன்பாட்டில் இல்லாத பொருட்களை தூசி தட்டி, அலுவலக வாழ்க்கைக்கு பத்திரப்படுத்துவதும் அவசியம். அப்படி சில விஷயங்களை தொகுத்திருக்கிறோம்.

    ஆவணங்களை சரிபாருங்கள்

    அலுவலக அடையாள அட்டை, அலுவலக சம்பந்தமான கோப்புகள், அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ரசீதுகள், வாடிக்கையாளர்களிடம் பெற்ற காசோலை, கணக்கு விவர அறிக்கைகள் போன்றவற்றை பத்திரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

    வண்டி ‘ஸ்டார்ட்' ஆகிறதா?

    மாதக்கணக்கில் டூ வீலர், 4 வீலர் வாகனங்கள் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அவை முறையாக ஸ்டார்ட் ஆகிறதா?, ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பதை முன்கூட்டியே கவனித்து விடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் வீட்டில், இத்தகைய பிரச்சினைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் வெகுநாட்களாக ‘ஸ்டார்ட்' செய்யாத வாகனங்களை ஸ்டார்ட் செய்து, அதன் தன்மையை பரிசோதியுங்கள்.

    ஹெல்மெட், காலணிகள்

    ஹெல்மெட் சுத்தமாக இருக்கிறதா என்பதை முன்கூட்டியே சோதிப்பது நல்லது. இல்லையெனில் தூசி படிந்த ஹெல்மெட்டை தலையில் மாட்டியபடி, அழுக்கு தலையோடு அலுவலகம் செல்ல நேரிடும். அதேபோலதான், அலுவலகத்தில் அணிந்து செல்லக்கூடிய காலணிகளும், சாக்ஸ்களும் சுத்தமாக இருக்கிறதா? என்பதை சோதிப்பது நல்லது. வெகுநாட்களாக பயன்படுத்தாத காலணி களுக்குள், விஷ பூச்சிகள் தங்கியிருக்க வாய்ப்புண்டு.

    ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீடு முக்கியம்

    ஓட்டுநர் உரிமத்தையும், வாகன காப்பீட்டையும் மறந்துவிடாமல் எடுத்து செல்வது நல்லது. அதேசமயம், வாகனத்தின் காப்பீடு காலாவதி ஆகிவிட்டதா என்பதையும் சோதித்து கொள்ளுங்கள்.

    மாஸ்க்- கிருமிநாசினி

    அலுவலகப் பொருட்களுடன் உயிர் காக்கும் பொருட்களான முக கவசம் மற்றும் கிரிமிநாசினி ஆகியவற்றையும் கையோடு எடுத்து செல்லுங்கள்.

    பொது போக்குவரத்து பயனாளரா?

    தனி வாகனத்தில் அலுவலகம் செல்பவர்களை விட, நீங்கள்தான் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கூட்டமான பேருந்துகளையும், கூட்ட நெரிசலான பயண நேரங்களை தவிர்ப்பது நல்லது. முன்கூட்டியே பேருந்து நிலையம் வருவது, நெருக்கடியிலிருந்து விடுபட உதவும். ரெயில் சேவையை பயன்படுத்துபவர்களும், வழக்கமான பயண நேரத்தை கணக்கில் கொள்ளாமல், முன்கூட்டியே ரெயில் நிலையம் வருவது நல்லது. மாதாந்திர ரெயில் பயணச்சீட்டை புதுபிக்காதவர்கள், டிக்கெட் கவுண்டர் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதையும் நினைவு படுத்துகிறோம்.

    வீட்டு சாப்பாடு அவசியம்

    ஊரடங்கு முடிந்தாலும் இயல்பு நிலைக்கு திரும்ப சில காலம் தேவைப்படும் என்பதால், சில நாட்களுக்கு வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு வருவது நல்லது. உணவகங்களில் பிரியாணி, தள்ளுவண்டி வெரைட்டி சாதம், அக்கம்-பக்கம் ஓட்டல் ‘விசிட்' போன்ற திட்டங்களுக்கு சில நாட்கள் விடுமுறை விடுவது நல்லது.

    வெயில் காலம் பாஸ்

    கோடை வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்துவிட்டதால், அலுவலகம் செல்லும்போது மோர், சீரக தண்ணீர், வெள்ளரி போன்ற கோடைகால உணவுகளையும் கையோடு எடுத்து செல்லுங்கள்.

    சமூக இடைவெளி

    நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் பழகுவது, உங்களையும், உங்களது நட்பையும் வெகுகாலம் உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதேசமயம் அலுவலகம் செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு ‘லிப்ட்' கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
    கருவாட்டை எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா? அப்படி எந்தெந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிடக் கூடாது என்றும் யாரெல்லாம் கருவாட்டை சாப்பிடக் கூடாது எனவும் இந்த பதிவில் பார்க்கலாம்.
    சிலருக்கு கருவாடு என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் கருவாட்டை எல்லா உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா? மேலும் உடலில் சில பிரச்சனை இருப்பவர்களும் சாப்பிட கூடாது. அப்படி எந்தெந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிடக் கூடாது என்றும் யாரெல்லாம் கருவாட்டை சாப்பிடக் கூடாது எனவும் இந்த பதிவில் பார்க்கலாம். எந்தெந்த உணவுகளுடன் சாப்பிடக் கூடாது:

    மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால் மற்றும் தயிர் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் வெண் மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

    கருவாடு, மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இப்படி சாப்பிட்டால் புட் பாய்சன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    கருவாடு சமையல் செய்யும் போது அவற்றுடன் மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகைகளை சேர்த்து சமைத்தால் உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஏற்படுவதை தடுக்கும்.

    யாரெல்லாம் கருவாட்டை சாப்பிடக் கூடாது:

    சருமத்தில் அழற்ச்சி பிரச்னை உள்ளவர்கள் கருவாட்டை தொடவே கூடாது. ஏனென்றால் இது சருமத்தில் நமைச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.

    கருவாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ள கூடாது. கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது. ஏனென்றால் சைனஸ், சளி, இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    பிரசவம் ஆன பெண்கள் பலருக்குள்ளும், முக்கியமான இரண்டு கேள்விகள் எழுகின்றன. அந்த கேள்விகள் என்ன? அவை இரண்டுக்குமான பதில்களை இங்கே பார்க்கலாம்.
    ஒன்று, ‘பிரசவம் முடிந்து அடுத்து மாதவிலக்கு சுழற்சி ஏற்படும் முன்பே மீண்டும் கர்ப்பமாகி விடுகிறார்களே, அதற்கான காரணம் என்ன?’ என்பது. இன்னொன்று ‘பிரசவத்திற்கு பின்பு எந்த கருத்தடை முறையை கையாளவேண்டும்’ என்பது. அவை இரண்டுக்குமான பதில்களை இங்கே பார்க்கலாம்.

    பிரசவத்திற்கு பின்பு பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் மீண்டும் பழைய நிலைய அடைய, மூன்று மாதங்கள் வரை தேவைப்படும். ஆனாலும் மூன்று, நான்கு வாரங்களில் மீண்டும் தாம்பத்திய உறவை மேற்கொள்ளலாம் என்று நவீன மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவம் மூன்று மாத இடைவெளி தேவை என்று சொல்கிறது.

    பிரசவத்திற்கு பின்பு முதல் முறையாக கருமுட்டை வெளியாகி, கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மாத சுழற்சி மீண்டும் தொடங்கும். பிரசவத்திற்கு பின்பு முதல் மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு, முதல் கருமுட்டை உருவாகும் காலத்தில் தாம்பத்தியம் மேற்கொண்டால் மீண்டும் தாய்மைக்கான வாய்ப்பு உருவாகிவிடலாம். அதனால் பிரசவமான பெண்கள் முதல் மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் கருத்தடை முறை எதையாவது கடைப்பிடிப்பது நல்லது.

    பிரசவத்திற்கு பின்பு கர்ப்பத்தடையை ஏற்படுத்திக்கொள்வதற்காக பெண்கள் பல்வேறு முறைகளை மேற்கொள்கிறார்கள். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஹார்மோன் மாத்திரைகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். கர்ப்பத் தடைக்கு ஊசி மருந்துகளையும் பயன்படுத்தலாம். ஆனால் இவைகள் சில பக்கவிளைவுகளை உருவாக்கக்கூடியவை. சிலர் இவைகளை பயன்படுத்திவிட்டு, மீண்டும் தாய்மையடைய விரும்பினால், தாய்மை பல வருடங்களாக தள்ளிப்போகும் சூழ்நிலையும் உருவாகிறது.

    தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் ‘காப்பர்-டி’ பயன்படுத்திக்கொள்ளலாம். ஆண்களும், பெண்களும் அவரவருக்குரிய கருத்தடை உறைகளையும் பயன்படுத்தலாம். காப்பர்-டி பொருத்துவதாக இருந்தால், அதற்கு முன்பு டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். ஏனென்றால் முன்பு ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டிருந்தால் அதனால் ஒருவேளை காப்பர்-டி பொருத்தும் இடத்தில் பக்கவிளைவுகளின் பாதிப்புகள் தென்படலாம். அதை டாக்டர் பரிசோதித்த பின்பு காப்பர்-டி பொருத்துவது நல்லது. அடுத்து குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தால் பெண்ணுக்கு ‘டியூபல்லிகேஷன்’ அறுவை சிகிச்சையோ, ஆணுக்கு ‘வாசக்டமி’ அறுவை சிகிச்சையோ செய்துகொள்ளலாம்.
    பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த சத்துணவுகள் அவசியம் என்பது போல் சரும அழகிற்கும் சிறந்த பேஷியல் தேவைப்படுகிறது.
    அழகு நிலையங்களுக்கு செல்ல விரும்பாத கல்லூரி மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்கள் அழகை பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களையும், பழங்களையும், காய்களையும், மூலிகைகளையும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி அழகை பேணுகிறார்கள். ‘வீட்டில் இருந்தபடியே பெண்கள் முக அழகை பேணுவதற்கு காபி பேஷியல் ஏற்றது’ என்று, அழகுக் கலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    புரூட் பேஷியலில் தொடங்கி ஒயின் பேஷியல் வரை எத்தனையோ மசாஜ் முறைகள் இருக்கின்றன. அதில் எளிதானது இந்த காபி பேஷியல். பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த சத்துணவுகள் அவசியம் என்பது போல் சரும அழகிற்கும் சிறந்த பேஷியல் தேவைப்படுகிறது. பெண்கள் சாப்பிடும் பழங்கள், காய்கறிகளில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி எடுத்து ஆரோக்கியத்தை தருகிறது. அதுபோல் அவர்கள் பயன்படுத்தும் பேஷியலில் இருக்கும் பொருட்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்கும். சிறந்த முறையில் பேஷியல் செய்யும்போது முகத்தில் உள்ள தசைகள் வலுவடையும். தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைத்து, முகம் எப்போதும் புத்துணர்ச்சியாக காணப்படும்.

    காபி பேஷியல் எப்படி செய்ய வேண்டும்?

    இன்ஸ்டன்ட் காபி பவுடருடன் பாதாம் பருப்பு அல்லது பட்டர் புரூட்டை அரைத்து சேர்த்தால் பேஷியலுக்கான மூலப்பொருள் கிடைத்து விடும். முதலில் ஸ்கிரப் மூலம் முக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கம் செய்யவேண்டும். சருமத் துவாரங்களில் இருக்கும் அழுக்கை நீக்கிவிட்டு மசாஜ் செய்வது அவசியம். அப்போது சருமத்தில் இருக்கும் ஓட்டை வழியாக ஈரப்பதம் ஊடுருவிச் சென்று சருமத்தில் இருக்கும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். பின்பு கலந்து வைத்திருக்கும் காபி பேஷியல் பொருட்களை கொண்டு முகத்திற்கு ‘பேக்’ போடுங்கள். கண்கள், காதுகள், உதடுகள், மூக்குத்துவாரங்களில் படாத அளவுக்கு இந்த பேஷியலை போட்டுக்கொள்ளவேண்டும். நெற்றியோடு ஒட்டியிருக்கும் முடியிலும் படக்கூடாது. அரை மணி நேரத்தில் நன்றாக காய்ந்துவிடும். பின்பு கழுவிவிடலாம்.

    இந்த காபி பேஷியல் ஒரு மாதம் வரை பலன் தரும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இதனால் கூடுதல் பலன் கிடைக்கும். முகம் முக்கியமான வர்மப் புள்ளிகள் அமைந்திருக்கும் இடம் என்பதால், அதில் முறைப்படியாக பேஷியல் செய்யும்போது நச்சுப் பொருட்கள் வெளியேறி தலைவலி, தூக்கமின்மை போன்றவை அகலும். சைனஸ் பிரச்சினையும் நீங்கும்.

    பொதுவாக வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடு மிக குறைவாக இருக்கும். அதனால் முகப்பரு தோன்றாது என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களது முகசருமம் விரைவாக சுருங்கத் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    காபியில் ‘காபின்’ என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது சருமத்தில் சுருக்கங்களை அண்டவிடாமல் இளமையாக வைத்திருக்க துணைபுரிகிறது. பேஷியல் செய்யும்போது காபித் தூளில் இருக்கும் மணம் சுவாசத்தின் வழியாக மூளைக்கு செல்கிறது. அங்குள்ள செல்களைத் தூண்டி புத்துணர்ச்சி தருவதால் மன அழுத்தமும் நீங்கும். அதனால் காபி அருந்தும் பழக்கம் இல்லாத கல்லூரி மாணவிகள்கூட மாதத்தில் ஒரு நாள் வீட்டிலேயே ‘காபி பேஷியல்’ செய்துகொள்ளலாம்.
    குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க விரும்பினால் பேபி கார்ன், காளான் சேர்த்து சூப் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பேபி கார்ன் - 1 கப்
    தண்ணீர் - 4 கப்
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    முட்டைக்கோஸ் - சிறிதளவு
    காளான் - 10
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
    சோள மாவு கரைசல் - 4 மேஜைக்கரண்டி
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    உப்பு - சுவைக்க

    பேபி கார்ன் காளான் சூப்

    செய்முறை

    பேபி கார்னை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    காளானை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும்.

    அடுத்து அத்துடன் பேபி கார்ன் மற்றும் காளான், உப்பு மற்றும் மிளகு சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளவும்.

    அதில் சோயா சாஸ், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் சேர்க்கவும்.

    இந்த கலவை கெட்டியாக வரும்வரை கிளறி பின் அதில் கொத்தமல்லி இலை, முட்டைக்கோஸ் சேர்க்கவும்.
    .
    அடுப்பை நிறுத்திவிட்டு பின் சூடாக பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு, கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
    கோடைகாலம் வந்துவிட்டது. குழந்தைகள், கொரோனா பீதியால் வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். ஊரடங்கு காலம் முடிந்ததும், குழந்தைகள் சுதந்திரமாக தங்களை ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்ள அவர்களை ‘சம்மர் கேம்ப்’களில் சேர்த்துவிடலாம் என்று பெற்றோர்கள் நினைப்பதுண்டு. அந்த பயிற்சி முகாம்களில் குழந்தைகள் நீச்சல், தற்காப்பு, நடனம், ஓவியம், இசைக்கருவிகளை மீட்டுதல், கையெழுத்து பயிற்சி, ஸ்கேட்டிங் பயிற்சி போன்றவைகளை பெற்று தங்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்வார்கள் என்பது உண்மைதான்.

    ஆனால் ‘சம்மர் கேம்ப்’ நடத்துபவர்களில் சிலர் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். சரியான கட்டமைப்புகள் அவர்களிடம் இருக்காது. கோடை காலம் முடிவதற்குள் பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் முகாம் நடத்துகிறவர்களிடம், உங்கள் குழந்தைகளை சேர்த்துவிடக்கூடாது. கடந்த காலங்களில் சில முகாம்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கூட நிகழ்ந்திருக்கின்றன. அதனால் குழந்தைகள் மனோரீதியாக பாதிக்கப்படும் சம்பவங்களும் ஏராளமாக நடைபெற்றுள்ளன. ஆகவே உங்கள் மகள், மகனை சம்மர் கேம்ப் களுக்கு அனுப்புவதாக இருந்தால், நீங்கள் நிறைய விஷயங்களை கவனித்து தரமான முகாமை தேர்ந்தெடுக்கவேண்டும்.

    தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுக்கு, இது தொடர்பாக நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

    உங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுங்கள். முக்கியமாக உடல் உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறுங்கள். அதோடு ‘உடல் உறுப்புகளில் எவை எல்லாம் உள்ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ, அவை உனது தனிப்பட்ட உறுப்புகள். அவைகளை உன் உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல’ என்பதை புரிய வையுங்கள். தவறான தொடுதல் எது?, சரியான தொடுதல் எது? என்பதையும் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுங்கள்.

    நீங்கள் உங்கள் குழந்தையை சேர்க்க விரும்பும் முகாம் பற்றி, முழுமையாக விசாரியுங்கள். அதை நடத்துபவர்களின் பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து, திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள். தினமும் பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள். பயிற்சிக்கு தொடர்பில்லாத நிலையில் தொட்டால், தங்களிடம் சொல்லும்படி கூறுங்கள். சந்தேகத்திற்கு இடமான எல்லா விஷயங்களையும் குழந்தைகளிடம் விளக்கமாக கேளுங்கள்.

    பொதுவாக குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தர விரும்புகிறவர்கள், முதலில் அவர் களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்வசப்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்வார்கள். டான்ஸ் பயிற்சி கொடுக்கும் ஒருவர், பயிற்சி பெறும் சிறுமியிடம் வேண்டுமென்றே பாலியல் ரீதியாக தொடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சிறுமிக்கு அவரது தொடுதல், பயிற்சி தொடர்புடையதா? அல்லது தவறான எண்ணத்திலானதா? என்று வகைப்படுத்தி பார்க்க முடியாத அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாமல் சிறுமிகள் தடுமாறுவார்கள்.

    சிறுவர்களுக்கோ, சிறுமியர்களுக்கோ பாலியல் ரீதியான அணுகுமுறையை அடையாளம் காணும் பக்குவம் இல்லாததால், அவர்களால் உடனடியாக எந்த முடிவுக்கும் வரமுடிவதில்லை. அப்படியே முடிவுக்கு வந்து பெற்றோரிடம் சொன்னாலும், அவா்கள் சொல்வதை எந்த பெற்றோரும் உடனடியாக நம்புவதும் இல்லை. முதலில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை நம்பவேண்டும். ‘நீ சொன்னால் சரியாக இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்’ என்று கூறி, முழு விவஇஇரத்த ையும் கேட்க வேண்டும். பயிற்சியாளர் மிக நல்லவர் என கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.

    பயிற்சிக்கு செல்லும் இடங்களில் உங்கள் குழந்தைகள் தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டாம். ஒருசில குழந்தைகள் மற்ற குழந்தைகளை சார்ந்திருக்காமல், தனியாக இருப்பார்கள். பாலியல் தொந்தரவு கொடுக்க விரும்புகிறவர்கள், அந்த மாதிரி தனிமையை விரும்பும் குழந்தைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வார்கள். அந்த குழந்தைகளுக்கு பயிற்சியில் முக்கியத்துவம் கொடுப்பது போலவும், அவைகள் மீது தனிப்பட்ட அக்கறை தனக்கு இருப்பது போல் நடந்துகொள்வார்கள்.

    மற்றவர்கள் முன்னால் தனக்கு மரியாதை அதிகம் கிடைக்கும்போது, அந்த குழந்தை மகிழ்ந்துபோய் அந்த பயிற்சியாளரிடம் அன்பு செலுத்தும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கிய பின்பு, அவர் தனது கைவரிசையை காட்டத் தொடங்குவார். அது தவறானது என்பதை குழந்தை உணர்ந்து வெளிப்படுத்த முன்வரும்போது, ‘இது ஒருவித விசேஷ பயிற்சி. நீ இந்த பயிற்சியை பற்றி மற்ற தோழிகளிடம் சொல்லக்கூடாது. சொன்னால் உனக்கு இந்த ஸ்பெஷல் பயிற்சி தரமாட்டேன்’ என்று கூறி குழந்தையை மிரட்டுவார்.

    சிலர் குறிப்பிட்ட குழந்தைகளை அழைத்து செல்போனில் இருக்கும் படங்களை காட்டுவார்கள். முதலில் சாதாரண படங்களை காட்டும் அவர்கள், பின்பு பாலியல் தொடர்புடைய படங்களைக்காட்டி, ‘எதுவும் தவறில்லை’ என்பது போன்ற நிலையை உருவாக்கி, குழந்தைகளை தன்வசப்படுத்துகிறார்கள். இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    மத்திய அரசு 2012-ம் ஆண்டில், குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றியுள்ளது. அதில் ‘ஒரு நிறு வனத்தில் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு’ என்று கூறப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கோடைகால பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

    இவைகளை எல்லாம் நன்றாக புரிந்துகொண்டு, உங்கள் குழந்தைகளை கோடைகால முகாம்களுக்கு தயாராக்குங்கள்.
    விடுமுறை நாட்களில் கணவர் வீட்டு வேலைகளில் உதவி செய்வதில்லை என்ற மனக்குறை நெடுங்காலமாக குடும்பத் தலைவிகள் மத்தியில் இருக்கிறது.
    விடுமுறை நாட்களில் கணவர் வீட்டு வேலைகளில் உதவி செய்வதில்லை என்ற மனக்குறை நெடுங்காலமாக குடும்பத் தலைவிகள் மத்தியில் இருக்கிறது. கொரோனா அந்த குறையை ஓரளவு போக்கவைத்துவிட்டது என்றே சொல்லலாம். பெரும்பாலான கணவர்மார்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அதன் மூலம் பொழுதை போக்கவும் செய்கிறார்கள். வாரம் ஒருமுறையாவது சில வேலைகளை குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து செய்வது வீட்டு தூய்மைக்கு வித்திடும். உறவுக்குள் இணக்கத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

    வீட்டில் உள்ள அனைவருக்கும் வேலைகளை பிரித்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்ய வைக்க வேண்டும். அப்போதுதான் சலிப்பு ஏற்படாமல் வேலைகளை மன நிறைவுடன் செய்து முடிப்பார்கள்.

    கடைசியாக குளிக்கும் நபர் குளியலறையை சுத்தம் செய்வது, செல்லப்பிராணிகளை நேசிப்பவர் அதனை குளிப்பாட்டுவது, சாப்பிட்ட தட்டுகளை அவர்களே கழுவுவது போன்ற செயல்பாடுகள் மூலம் குடும்ப தலைவியின் சுமையை குறைக்கலாம்.

    மாடியின் தரைத்தளம், படிக்கட்டுக்களை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். வீட்டு உறுப்பினர்களை சுழற்சி முறையில் சுத்தம் செய்ய சொல்வது வேலைப்பளுவை குறைக்கும்.

    வாரந்தோறும் ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு துப்புரவு பணியை தேர்ந்தெடுக்கலாம். தொலைக்காட்சி திரை, ரிமோட்டை சுத்தம் செய்வது, மின் விசிறி, பிரிட்ஜ், வாசிங் மெஷினை துடைப்பது என பணிகளை பிரித்துக்கொள்ளலாம். இவற்றை செய்துமுடிக்க அரைமணி நேஇரத்திற்கு மேல் ஆகாது. குடும்பத் தலைவியின் வேலைப்பளுவும் குறையும்.

    எல்லா பொருட்களையும் வைப்பதற்கு பிரத்யேகமாக ஒரு இடத்தை தேர்வு செய்துகொள்வது நல்லது. செய்தி தாள், வீட்டு சாவி, பீரோல் சாவி, டி.வி ரிமோட், வாகன சாவிகள் போன்றவற்றை குறிப்பிட்ட இடத்தில் வைத்தால் அநாவசியமாக தேட வேண்டி இருக்காது. வீட்டில் உள்ள அனைவரும் அதன்படி செயல்படுவதை உறுதி செய்து கொள்ளவும் வேண்டும்.

    ஒவ்வொரு முறையும் அறையை விட்டு வெளியேறும்போது ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தால் ஒழுங்கு படுத்திவைக்க பழகிக்கொள்ள வேண்டும். தேவையற்ற குப்பைகள் கிடந்தால் அப்புறப்படுத்திவிட வேண்டும். அது அறையை அழகாக்கும். குடும்பத் தலைவிக்கும் சிரமத்தை கொடுக்காது.

    என்ன சமையல் செய்வது என்று சிந்திப்பது குடும்பத் தலைவிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தும். சுழற்சி முறையில் குடும்ப உறுப்பினர்கள் சமையல் குறிப்புகளை கொடுப்பது அவர்களை ஆர்வமுடன் சமைக்கவைக்கும்.

    வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்தால் சமையல் பாத்திரங்கள் அதிகமாக பரிமாறப்படும். அவற்றை துலக்குவது குடும்பத்தலைவிகளுக்கு சிரமமாக இருக்கும். அப்போது உதவி செய்வது அவர்களின் வேலைப்பளுவை குறைக்கும்.

    தூங்கி எழுந்ததும் அவரவர் படுக்கை விரிப்புகளை சுருட்டி அதற்குரிய இடத்தில் வைப்பதும் நல்ல பழக்கவழக்கமாகும். உடை வைக்கும் அலமாரியை சுத்தமாக பராமரிக்கவும் வேண்டும். துணி துவைக்காவிட்டாலும் அலமாரியில் அவரவர் உடைகளை நேர்த்தியாக மடித்துவைத்து எடுக்க பழகினாலே போதும். குடும்பத்தலைவிகள் நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள்.
    ×