என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    காரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? சமையலில் மிளகாயை அதிகம் சேர்த்து காரமாக சாப்பிடுவது இந்த பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    காரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? சமையலில் மிளகாயை அதிகம் சேர்த்து காரமாக சாப்பிடுவது மன நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே இந்திய உணவு வகைகளில் காரத்தின் தன்மை சற்று அதிகமாகவே இருக்கும்.

    பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மிளகாய்தூள், கருப்பு மிளகு உள்பட காரமான மசாலா பொருட்களை கொண்டுதான் இந்திய உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. அவை உணவுக்கு ருசி சேர்த்தாலும் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறது அந்த ஆய்வு. தொடர்ந்து உணவில் காரத்தின் தன்மை அதிகரிக்கும்போது நினைவுத்திறன் பாதிப்பு, சிந்தனை திறன் குறைதல், அல்சைமர் நோய் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதிலும் வயதானவர் களுக்கு பாதிப்பின் தன்மை அதிகமாக இருக்கும்.

    இந்த ஆய்வுக்கு 55 வயதுக்கு மேற்பட்ட சீனர்கள் 4582 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 50 கிராமுக்கு அதிகமாக உணவில் காரம் சேர்ப்பவர்கள். அவர்களின் அறிவாற்றல் திறன் படிப்படியாக குறைந்து வருவதும் ஆய்வின்போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதிக எடை கொண்டவர்களை விட மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

    மிளகாயில் உள்ளடங்கி இருக்கும் கேப்சைசின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் தன்மை கொண்டது. கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. எனினும் அதிகம் பயன்படுத்தக்கூடாது என்பதை ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது. இதுபற்றி கத்தார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜுமின் ஷி, ‘‘எங்கள் முந்தைய ஆய்வுகளில் உடல் எடை, ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மிளகாய் நன்மை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வயதானவர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுபற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.

    கார உணவுகளை குறைந்த அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
    ஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம். எனினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
    பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவது அவர்கள் ஆரோக்கியமாக வளரப் போதிய சத்துக்களைத் தரும் என்பது அசைக்க முடியாத உண்மை. சுகப் பிரசவமோ அல்லது அறுவைசிகிச்சை பிரசவமோ, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கியமான கடமையாகும். தாய்ப்பாலில் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கான அத்தனை நோய் எதிர்ப்பொருள்களும் நிரம்பி உள்ளன.

    அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர முடியுமா என்று கேட்டால் அது சற்று சிந்திக்க வேண்டிய கேள்வியாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள் அதற்கான காரணத்தைச் சரியாகக் கண்டறிந்து தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம். எனினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.

    பெருஞ்சீரகம் தாய்ப்பாலை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் அளவை சீர்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகம் கொண்டு நீங்கள் தேநீர் கூடத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

    வெந்தயம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும். இது உடல் சூட்டைத் தனிப்பதோடு ஈஸ்ட்ரோஜன் அளவையும் அதிகப் படுத்தும். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகி வந்தால் ஓரிரு நாட்களில் நீங்கள் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதை உணரலாம்.

    போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும் பெண்கள் இலவங்கப்பட்டையை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

    பனைமரங்களிலிருந்து கிடைக்கப் பெறும் கருப்பட்டிகள் அற்புத மருத்துவ குணங்கள் கொண்டன. குறிப்பாகச் சுக்கு மற்றும் மிளகு கலந்த கருப்பட்டியை தினம் சிறிதளவு உடைத்து உண்பதால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். கூடுதலாகக் கருப்பட்டியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை வியாதி தாய்மார்களைத் திரும்பிக் கூடப் பார்க்காது.

    சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை நீங்கள் தினமும் பருகி வரத் தாய்ப்பாலின் அளவு நிச்சயம் அதிகரிக்கும். மேலும் சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால் இரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும். சீரகத்தைச் சுடு நீரில் போட்டுத் தேவைப்பட்டால் தேன் கலந்து தினமும் இரவில் பருகி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்

    முருங்கைக் கீரை, காய் மற்றும் பூ என்று அனைத்திலுமே இரும்புச் சத்து நிறைந்துள்ளன.தினம் இதில் ஏதாவது ஒன்றைப் பொரியலாகச் செய்து தாய்மார்கள் உட்கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வகையில் நிச்சயம் அதிகரிக்கும்.

    பப்பாளிப் பழங்கள் தாய்ப்பால் சுரப்பிற்குப் பெரிதும் உதவுகின்றன. இதைப் பெண்கள் தினம் மிதமான அளவில் உட்கொள்வதால் பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.

    பூண்டு உணவில் நாம் அதிகம் சேர்த்ததுக் கொள்ளும் மருத்துவ குணமுள்ள பொருளாகும். இது தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. தினமும் நீங்கள் செய்யும் சமையலில் பூண்டைச் சற்று அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலே தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகரிக்கும்.

    வெற்றிலையில் பல மகத்துவங்கள் அடங்கி உள்ளன. பிள்ளைப் பேறு பெண்கள் பலர் போதிய தாய்ப்பால் சுரப்பின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த வெற்றிலை ஒரு வரபிராசாதம் என்றால் மிகையில்லை. வெற்றிலையை நெருப்பில் காட்டி, பின் மார்பில் வைத்துக் கட்ட தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும். இன்றளவும் இந்த வீட்டு வைத்தியம் கிரமங்களில் பெரிய அளவில் பின் பற்றப்பட்டு வருகிறது.

    இரவில் நான்கு ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் பருப்புகளை உட்கொள்ள நல்ல பலன் கிட்டும். இதைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளத் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு பெண்களின் உடல் வலிமையும் பெறும்.
    புத்தக பிரியர்கள் மட்டுமே கொரோனா பற்றிய சிந்தனைகள் ஏதுமின்றி தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாசிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
    கொரோனா நோய் பரவல் காரணமாக வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பவர்கள், நிறைய பேர் பொழுதை போக்குவதற்கு சிரமப்படும் சூழல் நிலவுகிறது. ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பதையே பொழுதுபோக்காக கொண்டவர்கள் கூட, அதில் அணிவகுத்து நிற்கும் கொரோனா நோய் குறித்த செய்திகளை பார்த்து சோர்ந்து போய் விடுகிறார்கள்.

    கொரோனா பற்றிய சிந்தனையில் இருந்து விடுபட்டு மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்த விரும்புகிறார்கள். புத்தக பிரியர்கள் மட்டுமே கொரோனா பற்றிய சிந்தனைகள் ஏதுமின்றி தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாசிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை போலவே, புத்தகங்களை விரும்பி படிக்காதவர்கள் கவனம் கூட இப்போது புத்தகங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. செல்போனில் இ-புத்தகங்களை படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

    கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தனிமையை போக்குவதற்கு புத்தகங்கள் உதவுகின்றன. கேரள மாநிலம் வயநாடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக புத்தகங்களை நன்கொடை பெறும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டில் புத்தகங்கள் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் புத்தகங்களை நன்கொடையாக வழங்கலாம். அந்த புத்தகங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

    “இந்தத் திட்டம் தனிமையில் இருப்பவர்களுக்கு நேர்மறையான சிந்தனையை தோற்றுவிக்க உதவும். இந்த சமூகத்திற்கும், அவர்களுக்கும் இடையேயான பந்தம் விட்டுப்போகவில்லை. தாங்கள் சமூகத்துடன் தொடர்பில்தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தை அவர்களிடம் உருவாக்கும் எண்ணத்திலும், மனிதாபிமான நோக்கத்துடனும் சமூக நலனுக்காகவே இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம்” என்கிறார், மாவட்ட கலெக்டர் அடீலா அப்துல்லா.

    இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனிமையில் இருப்பவர்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிப்பதுடன் அவர்களின் மனநலமும் நன்றாக இருக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.
    மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும்.
    தேவையான பொருட்கள்

    மணத்தக்காளி கீரை- 1 கப்
    மணத்தக்காளி விதை- 2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம்-6
    தக்காளி - 1
    பூண்டு- 1
    தேங்காய் பால் - 1 கப்

    மணத்தக்காளி கீரை

    செய்முறை :

    மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், இடித்து வைத்த பூண்டு போட்டு வதக்கவும்.

    பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
     
    அனைத்து லேசாக வதக்கினால் போதும்.

    வதங்கியதும் தேங்காய்பால் சேர்த்து கொதி வந்ததும் விதை, கீரையை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு போதுமான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக சாப்பிடலாம்.

    சூடான சத்தான மணத்தக்காளி கீரை சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சை திராட்சையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தினால், மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்பது பற்றியும், திராட்சையை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்திற்கு கிடைக்கும் பலன்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    பச்சை திராட்சையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தினால், மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்பது பற்றியும், திராட்சையை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்திற்கு கிடைக்கும் பலன்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    1. சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.

    2. எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன்  பச்சைதிராட்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால், தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும்.

    3. பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு, இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.

    4. தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றம் தருகிறது  பச்சை திராட்சைச் சாறு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு கிண்ணத்தில் எடுங்கள். அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பேக் ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள்.  பச்சை திராட்சை, சருமத்தை மிருதுவாக்கும். எலுமிச்சைச் சாறு, சருமத்தை சுத்தப்படுத்தும். முட்டை, தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர முதுமைத் தோற்றம் மறைந்து இளமை மிளிரும்.

    5. சிவப்பழகை ஜொலிக்கச் செய்யும் தன்மையும் பச்சை திராட்சைக்கு உண்டு. ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன், ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின் முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும். அழகுக்கு ஆதரவு தருவதில் காய்ந்த திராட்சைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும் உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.

    6. காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் நிறைய குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உங்கள் குழந்தைகளின் கண் பார்வை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய காலகட்டத்தில் நிறைய குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சிறு வயதிலேயே அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதனால் அவர்களால் சரியாகப் படிக்க முடியாமலும், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல விளையாட முடியாமலும் போகிறது. கண்ணாடி உட்படப் பல மருத்துவ தீர்வுகள் கண் பார்வை பிரச்சனைக்கு இருந்தாலும் வரும் முன் காப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். உங்கள் குழந்தைகளின் கண் பார்வை அதிகரிக்க சாப்பிட வேண்டிய 9 உணவுகள்!

    * முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது. முட்டைக் கருவில் உள்ள 'ஸிக்ஸாந்தின்' புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.

    * ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும். கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது. பல வகையான கடல் மீன்களில் இந்த சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன. குறிப்பாக சால்மன், டுனா ,மேக்கிரல், ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.

    * பச்சைக் கீரை வகைகளில் அதிகம் வைட்டமின் சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா, பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.

    * இதில் பீடாகரோடின் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.

    * மாம்பழம், ஆரஞ்சு, காரட், எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும். தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

    * சூரிய காந்தி விதையில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்து இ மற்றும் ஜிங்க் கண் கோளாறு வராமல் தவிர்க்க உதவுகின்றன. இவை பல்வேறு கடைகளில் விற்பனையாகி வருகின்றன. வாங்கி பலன் அடையலாம்.

    * காலிஃளாரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண் பார்வைக்கு மிகவும் உகந்தது. ஆக இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் காலிஃளாரை விரும்பி உண்பார்கள்.

    * நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும், இருட்டாக இருக்கும் இடங்களிலும் உங்கள் கண்கள் நன்றாகப் பார்வைப் பெற உதவும். இது கண் சோர்வைக் குறைக்கும். ரெட்டினா சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்தப் பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.

    * கண் பார்வைக் கோளாறுகளைக் குணப்படுத்த முட்டைகோஸை அதிகம் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாகச் சிவப்பு முட்டைகோஸ் கண் பார்வை வளத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ அதிகம் உள்ளதால் உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
    மனித உயிர்களை காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் ரத்ததானம், தானங்களில் சிறந்தது. ஒருவர் செய்யும் ரத்த தானம், ரத்தம் பெறுபவருக்கு கொடுக்கும் ஒப்பற்ற வாழ்நாள் பரிசு.
    மனித உயிர்களை காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் ரத்ததானம், தானங்களில் சிறந்தது. ஒருவர் செய்யும் ரத்த தானம், ரத்தம் பெறுபவருக்கு கொடுக்கும் ஒப்பற்ற வாழ்நாள் பரிசு. ஒவ்வொரு முறையும் தானமாக கொடுக்கப்படும் ரத்தம் மூலம் 3 பேரை காப்பாற்ற முடியும்.

    ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 10.8 கோடி யூனிட் ரத்தம் தானமாக பெறப்படுகிறது. இதில் 50 சதவீதம் வளர்ந்த நாடுகளில் பெறப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ரத்த தானம் செய்கிறார்கள். ரத்தத்தை தானமாக கொடுத்தால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. இது முற்றிலும் தவறு.

    மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின் போது 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்தவர்கள் இழந்த இந்த ரத்தம் 2 நாட்களில் சுரந்துவிடும். 2 மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவை எட்டிவிடும். எனவே, 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம்.

    ஏழை நாடுகளில் பெறப்படும் ரத்தத்தில் 65 சதவீதம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே வளர்ந்த நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் ஆயிரம் பேருக்கு 37 பேர் ரத்த தானம் செய்கிறார்கள். ஆனால், வளரும் நாடுகளில் 12 பேரும், ஏழை நாடுகளில் 4 பேர் மட்டுமே ரத்த தானம் செய்கிறார்கள்.

    நல்ல உடல்நலத்துடன், 45 கிலோவுக்கு மேல் எடை உள்ள 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றின் அளவை பார்த்த பிறகே, ரத்ததானம் செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்த தானம் செய்யலாம். புதிதாக ரத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவும் ரத்த தானத்தை கருதலாம். ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள ரத்ததானம் உதவுகிறது. ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு, தானம் செய்யும்போது சீரடைகிறது. எனவே, இந்த பிரச்சினை உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம்.

    மாதவிடாய் தொடங்கிய 3 முதல் 5 நாட்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த தானம் செய்யக்கூடாது. ரேபிஸ் நோய் சிகிச்சைக்குப் பின் ஓராண்டுவரையும், டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்களுக்கு சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரையும், மது அருந்தியபின் 24 மணி நேரம் வரையும் ரத்த தானம் செய்யக்கூடாது.

    எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள், மஞ்சள் காமாலை உள்பட கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், இதர தொற்று உள்ளவர்களின் ரத்தத்தை பெறக்கூடாது. இதயநோய், காசநோய், வலிப்புநோய், ஆஸ்துமா, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இன்சுலின் பயன் படுத்துபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோயாளிகள், ரத்தம் உறையாமை பிரச்சினை உள்ளவர்கள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.
    தம்பதியரிடையே மனஸ்தாபம் உருவாகும்போது ஒருவராவது அமைதி காக்க வேண்டும். துணை இயல்புக்கு திரும்பியதும் அவரிடம் பேசி மனஸ்தாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.
    தம்பதியரிடையே மனஸ்தாபம் உருவாகும்போது ஒருவராவது அமைதி காக்க வேண்டும். துணை இயல்புக்கு திரும்பியதும் அவரிடம் பேசி மனஸ்தாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே விரிசல் அதிகமாகி பிரிவை எதிர்கொள்ளக்கூடும். பிரிவை எதிர்கொண்டாலும் அதனை நிரந்தரமாக கருதிவிடக்கூடாது. பிரிந்து சென்று விவாகரத்து வாங்கியவர்கள் கூட வாழ்க்கையில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

    தவிர்க்கமுடியாத பட்சத்தில் பிரிவை எதிர்கொள்ள நேர்ந்தாலும் குறுகிய காலகட்டத்திற்குள் புதிய உறவை தேர்ந்தெடுப்பது எளிதான விஷயம் அல்ல. அந்த நபர் நல்லவரா என்பதை கண்டு அறிவதும் கடினமானது. பிரிவுக்கு பின்பு தனிமையில் வாழும் நாட்களில் துணை பற்றிய நினைவுகளும், அவருடைய குணாதிசயங் களும் நினைவுக்கு வந்து போகும். அப்போது மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் துளிர்விடும். உள்ளுணர்வு வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே துணையுடன் மீண்டும் சேர்ந்து வாழும் முடிவுக்கு வந்துவிடலாம்.

    இவ்வளவு நாள் மனதுக்கு பிடித்தமானவராக இருந்தவரை சட்டென்று பிரிவது எளிதான விஷயம் அல்ல. திடீரென்று அவரது நினைவுகளை ஆழ்மனதில் இருந்து அழிக்க முடியாது. தனது துணையின் இடத்தில் வேறொருவரை நினைத்து பார்ப்பதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது.

    பிரிவுக்கு பிறகும் துணையின் சமூக வலைத்தள பக்கங்களை பார்வையிடுவது, வெளியிடங்களுக்கு சென்றபோது எடுத்த போட்டோக்களை ரசிப்பது போன்ற நடவடிக்கைகள் துணையின் மீதான அன்பை அதிகப்படுத்தவே செய்யும். அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றினால் துணையுடன் மீண்டும் சேருவதற்கு முயற்சி எடுக்கலாம். மனப்பூர்வமாக நேசித்தவராக இருந்தால் அவரிடமும் இத்தகைய சிந்தனைகள் வெளிப்படும்.

    வெளியே சென்றாலோ, தனிமையில் இருந்தாலோ துணையுடன் செலவிட்ட கடந்தகால நினைவுகள் அடிக்கடி நினைவுக்கு வந்து கொண்டிருந்தால் அவருடனான உறவு வலுவடைவதற்கு வித்திடும். ஏதாவதொரு வேலையை ஆர்வமாக செய்து கொண்டிருக்கும்போது துணை இருந்தால் எப்படியெல்லாம் உதவிகரமாக இருந்திருப்பார் என்ற எண்ணம் எட்டிப்பார்ப்பதும் மீண்டும் சேர்ந்து வாழும் சூழலை உருவாக்கிக்கொடுக்கும்.

    பிரிவை சந்தித்த பிறகு சிலர் முன்பை விட மகிழ்ச்சியாக இருப்பது போன்று துணை முன்னால் வெளிக்காட்ட முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் போலி புன்னகையைத்தான் வெளிப்படுத்த முடியும். வழக்கத்தை விட உற்சாகமாக இருப்பதை பார்த்ததுமே துணை புரிந்துகொள்வார். இருவருக்கும் இடையே நிலவும் ஈகோ தான் பிரச்சினைக்கு காரணமாக இருக்கும். மனம் விட்டு பேசினாலே மனஸ்தாபத்தை போக்கிவிடலாம்.

    அவசரப்பட்டு எடுக்கும் முடிவு மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். இதயமும், மூளையும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். அவை இயல்புக்கு திரும்புவதற்கு அதிக நேரம் எடுக்கும். பிரிவுக்கு பின்பு மன அழுத்தத்திற்கோ, குற்ற உணர்ச்சிக்கோ ஆளானால் இருவர் தரப்பிலும் தவறு இருப்பதாக அர்த்தம். சிறிது நேரம் பேசினாலே பிரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக இருக்கின்றது.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக இருகின்றது. கர்ப்ப காலத்தில் எப்போதும் நேராக படுக்கக் கூடாது என்று கூறுவார்கள். இதன் காரணமாகவே பெண்கள் பக்க வாட்டிலேயே படுக்க நேரிடும். இதனால், அவர்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி மற்றும் வேறு சில அசௌகரியங்களும் ஏற்படுகின்றது.

    உடலில் பல மாற்றங்கள், குறிப்பாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு என்று பல மாற்றங்கள் ஏற்படுவதால், உடல் மற்றும் மனம் அமைதியற்ற நிலையிலேயே இருக்கும். இதனால் தூக்கம் சரியாக வராமல் இருக்கும். குழந்தை பிறக்கப் போகும் அந்த தருணத்தை பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால், சரியாக தூங்க மாட்டார்கள். இதுவும் தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக உள்ளது.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கின்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மேலும் வழக்கத்தை விட ஒரு நாளைக்கு பலமுறை சிறுநீர் கழிக்கவும் செய்வார்கள். இதனாலேயும் தூக்கம் அதிகம் பாதிக்கப்படுகின்றது.

    கர்ப்பிணி பெண்களுக்கு பல நேரங்களில், கால்களில் தசைபிடிப்பு ஏற்படும். இது மிக அதிக வலியை உண்டாக்கும். மேலும் கால்கள் இயல்பான நிலைக்க வர சற்று நேரமும் பிடிக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது.

    கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகும். மேலும் உடலில் ஏற்படும் சில மாற்றங்களாலும், கால்களில் வலி, எரிச்சல், தசைபிடிப்பு என்று பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால், தூக்கம் பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் சரியாக உணவு உண்ண முடியாது. அதிலும் குறிப்பாக போதிய அளவு உணவை உண்ண முடியாது. மிக குறைவாகவே, அவ்வப்போது உண்ண வேண்டிய சூழல் உண்டாகும். இதனால், வயிற்றில் வாயு, மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். இரவு நேரங்களில் இத்தகைய அசௌகரியங்கள் அதிகமாக இருக்கும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது.
    அவகேடோ பழமானது மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகளைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது கொழுப்பினைக் குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்போது நாம் அவகேடோ மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவகேடோ பழம் - 3
    தேன் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    குளிர்ந்த பால் - 2 டம்ளர்
    ஐஸ் கட்டிகள் - 3

    அவகோடா

    செய்முறை:

    அவகேடோ பழத்தை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும்.

    அடுத்து மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன் அல்லது நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

    டேஸ்ட்டியான அவகேடோ மில்க் ஷேக் ரெடி.

    இது உடலுக்கு ஆரோக்கியமும் தரும். அதேநேரத்தில் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் செய்யும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உலகில் எத்தனை அன்பான உறவுகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு மிக மிக அவசியமான ஒன்று.
    உலகில் எத்தனை அன்பான உறவுகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு மிக மிக அவசியமான ஒன்று. எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர்.

    அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத்திறனையும் வெளிப்படுத்துவார்கள்.

    எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும். எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக்கிறது.

    தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும். அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும் போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது.

    தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது. அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை.
    தலைமுடி கொட்டுவதற்கு பல ஆயிரக்கணக்கில் செலவுகள் செய்து தீர்வு காண முயன்றும் தோல்வி அடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இயற்கை முறையில் சீயக்காய் பொடி தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்,
    தலைமுடி கொட்டுவதற்கு பல ஆயிரக்கணக்கில் செலவுகள் செய்து தீர்வு காண முயன்றும் தோல்வி அடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இயற்கை முறையில் சீயக்காய் பொடி தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள், இதனால் தலைமுடி கொட்டும் பிரச்னைக்கு சிறந்த தீர்வு ஏற்படும்.

    தேவையானவை:

    ஆவாரம்பூ- கைப்பிடியளவு
    கறிவேப்பிலை- கைப்பிடியளவு
    வெந்தயம்- 4 ஸ்பூன்
    பூந்திக் கொட்டை- தேவையான அளவு

    செய்முறை: ஆவாரம்பூவையும், கறிவேப்பிலையையும் காய வைத்துக் கொள்ளவும். அதனுடன் பூந்திக் கொட்டை மற்றும் வெந்தயம் சேர்த்து அரவை மில்லில் கொடுத்து அரைக்கவும்.

    இந்த பொடியை தலைக்குத் தேய்த்து அலசினால் தலைமுடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும். இதனை வாரத்தில் 2 முறையாவது தொடர்ந்து செய்து வர வேண்டும். இயற்கையான பொருட்கள் அடங்கி உள்ளதால் தலைமுடிக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

    ×