என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    முதலில் நமது வாழ்க்கை முறையில் உள்ள தவறுகளை சரிசெய்ய வேண்டும். இக்கட்டுரையில் நாம் செய்யும் எந்த தவறுகள்/விஷயங்களால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
    கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற உடலில் உள்ள கொழுப்பு பொருளாகும். இது உண்ணும் உணவுகளை செரிக்கவும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி-யை உருவாக்கவும் உதவுகிறது. ஏற்கனவே நமது செல்களின் கொழுப்பு உள்ளது மற்றும் தேவைப்படும் போது உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேலும் இந்த கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி மற்றும் சீஸ் போன்ற சில உணவுகளிலும் காணப்படுகிறது. அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற வாஸ்குலர் நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.  அதோடு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றையும் உண்டாக்கும். ஆகவே கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமாக உள்ளது.

    அதற்கு முதலில் நமது வாழ்க்கை முறையில் உள்ள தவறுகளை சரிசெய்ய வேண்டும். இக்கட்டுரையில் நாம் செய்யும் எந்த தவறுகள்/விஷயங்களால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றைத் திருத்திக் கொண்டால், பல அபாயகரமான நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். 

    உடற்பயிற்சி உடலில் சேரும் LDL என்னும் கெட்ட கொழுப்பால் உடல் எடை அதிகரிக்காமல் சரியான அளவில் பராமரிக்க உதவும். பொதுவாக இந்த வகை கொழுப்புக்கள் தான் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

    ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கல்லீரலுக்கு நகர்த்தி, வெளியேற்றும் அல்லது பித்தமாக மாற்றும். மேலும் உடற்பயிற்சியினால் கொழுப்பைப் பரப்பும் புரதத் துகள்களின் அளவை அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு 30-45 நிமிட நடைப்பயிற்சி, ஜாக்கிங், பைக்கிங், யோகா, நடனம் அல்லது ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சிகள் கொழுப்பைக் குறைக்க உதவும்.  எனவே இதுவரை உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், இன்று முதல் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

    அதிக சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளான வறுத்த உணவுகள், பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான சாசேஜ், பேகான் மற்றும் ஹாட் டாக்ஸ், டெசர்ட்டுகளான குக்கீஸ், கேக்குகள், ஐஸ்க்ரீம், மைக்ரோவேவ் பாப்கார்ன் போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கக் கூடியவை.

    மேலும் எந்த ஒரு உணவுப் பொருட்களை வாங்கும் முன்பும், அதன் பின்புறம் "ஹாட்ரோஜினேட்டட் ஆயில்" என்று குறிப்பிட்டிருந்தால், அதை வாங்காதீர்கள் மற்றும்  நார்ச்சத்து நிறைந்த உணவுகளான ஓட்ஸ், பழங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள் அல்லது காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

     அதோடு, நல்ல கொழுப்புக்கள் நிறைந்த சால்மன் மீன், அவகேடோ மற்றும் வெஜிடேபிள் எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், கனோலா எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை வாங்கி சமையலில் பயன்படுத்துங்கள்.

    மொத்தத்தில் மோசமான உணவுப் பழக்கமானது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதை மறவாதீர்கள். புகைப்பிடித்தல் பழக்கமானது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த நாளங்களின் சுவர்களை காயப்படுத்தி, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற வற்றிற்கு வழிவகுக்கும்.

    அதோடு, புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. மேலும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி விடும்.

    ஒருவரது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருந்தால், பொதுவாக எந்த ஒரு அறிகுறியையும் காட்டாது. ஆகவே ஒவ்வொரு 4 வருடத்திற்கும் ஒரு முறை உடலை முழு பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

    அப்படி சோதனை செய்வதால், உடலில் ஏதேனும் பிரச்சனை இருப்பின், அது ஆரம்பத்திலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் மற்றும் சரியான மருந்துகளின் உதவியுடன், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம். எனவே முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்காதீர்கள்.

    உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், அதற்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளுங்கள். நீங்களாகவே மருந்துகளை மாற்றி எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அது கொலஸ்ட்ரால் அளவில் இடையூறு ஏற்படுத்துவதோடு, ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாதித்து விடும். எனவே எக்காரணம் கொண்டும் மருத்துவர் கொடுத்த மருந்துகளை மாற்றாமல் அன்றாடம் உட்கொள்ளுங்கள்.

    ஒரு வேளை உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், மருத்துவர் அறிவுறுத்திய மருந்துகளுடன், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
    கர்ப்பகாலம் பெண்களுக்கு மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், முன்பு உடை அளவில் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்தது.
    கர்ப்பகாலம் பெண்களுக்கு மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், முன்பு உடை அளவில் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்தது. கர்ப்பகாலத்தில் வயிறு பெரிதாகிவிடுவதால் அதற்கு ஏற்ற சவுகரியமான உடைகள் அணியும்போது அவை கூடுதல் அழகு தராதவைகளாக இருந்தன. தொள தொள உடைகளுடனே பெண்கள் வலம் வந்தனர். தற்போது கர்ப்பிணிப் பெண்களும் மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கான உடைகளை பற்றிய விவரம்:

    கர்ப்பிணிகள் பயணம் செய்யும்போது மேக்சி டிரஸ் பயன்படுத்திக்கொள்ளலாம். சுகமான பயணத்திற்கு ஏற்ற சூப்பரான உடை இது. அவுட்டிங் செல்லும்போதும், கடற்கரைகளில் நடக்கும் போதும் மேக்சி நன்றாகவே கைகொடுக்கும். இந்த உடையில் வித்தியாசமாக காட்சியளிக்க விரும்புகிறவர்கள் மேக்சிக்கு மேல் பகுதியில், அதிக அழுத்தம்கொடுக்காத சிறிய ‘பெல்ட்’ அணிந்துகொள்ளலாம்.

    கூடுதலான பேஷனை விரும்பும் கர்ப்பிணிகள் ‘ஜம்ப் சூட்’ அணிந்துகொள்ளலாம். அதற்கு பொருத்தமான டிசர்ட் அல்லது சாதாரண சட்டை அணிந்துகொண்டால், வித்தியாசமான அழகுடன் திகழமுடியும். குண்டாகத் தெரியும் கர்ப் பிணிகள் கறுப்பு நிறத்திலான ஜம்ப் சூட்டினை அணிந்தால், தோற்றம் சற்று ஒல்லியாகத் தெரியும்.

    பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு கவுன் மாடல் உடைகளே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மூட்டுக்கு கீழ்வரை நீளம் கொண்ட ஷிப்ட் டிரஸ்கள் அவர்களுக்கு அதிக சவுகரியத்தை தரும். இந்த உடைகளில் வித்தியாசமான நிறங் களும், டிசைன்களும் கொண்டவைகளை பெண்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அகலம் அதிகமுள்ள நெக் உடைகள் கூடுதல் அழகுதரும். ஷிபான் மெட்டீரியலில் அமைந்த ஒன் பீஸ் உடை, கர்ப்பிணிகளுக்கு அம்சமாக பொருந்தும்.

    ‘ரைப் டிரஸ்’ வகைகள் கர்ப்பிணிகளுக்கு ரசனையான தோற்றத்தையும், சவுகரியத்தையும் தரும். கர்ப்பகாலத்தில் மட்டுமின்றி பிரசவத்திற்கு பின்பும் இதனை அணிந்து கொள்ளலாம். இது ஒருவகை அட்ஜஸ்ட்டபுள் டிரஸ் ஆகும். இது போல் டியூனிக் வகை உடைகளும் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

    கர்ப்பிணிகள் சாதாரண நிலை யில் அணிந்துகொள்ள ‘ஸ்கர்ட்’ பயன்படுத்தலாம். வயிற்றுக்கு மேல் அணியும் விதத்திலான ஸ்கர்ட் நன்றாக இருக்கும். வயிறு பெரிதாகுவதற்கு ஏற்ப இதை பெரிதாக்கிக்கொள்ளும் வசதியும் இருக் கிறது. அதற்கு பொருத்தமாக டெனீம் ஜாக்கெட் அணிந்தால் அழகான தோற்றம் கிடைக்கும்.

    பெண்கள் வழக்கமாக அணியும் இறுக்கமான ஜீன்சை கர்ப்பகாலத்தில் அணிய முடியாது. அதற்கு மாற்றாக கர்ப்பிணிகள் அணிந்துகொள்ள மெட்டர்னிட்டி ஜீன்ஸ் வடிவமைக்கப்படுகின்றன. நெகிழக்கூடிய மெட்டீரியலைக் கொண்டு இது தயார் செய்யப்படுகிறது. அதனால் கர்ப்பிணிகள் அணிந்துகொள்ள இது சவுகரியமாக இருக்கும். அதற்கு ஏற்ற மேலுடை அணிந்துகொண்டால் வயிறு பெரிதாக தோன்றாது.
    சருத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கு முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை எலுமிச்சை பேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    முக அழகினைக் கூட்ட நாம் பொதுவாக ஃபேஸ் கிரீம், மாய்ஸ்ரைஸர் என பல வகையான கிரீம்களை காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். அந்தவகையில் தற்போது முக அழகினைக் கூட்டும் கொய்யா இலை ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையானவை:

    கொய்யா இலை- 10
    எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
    பால்- 3 ஸ்பூன்
    ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்

    செய்முறை: கொய்யா இலையை சுத்தப்படுத்தி வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு, பால், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலந்தால் கொய்யா இலை ஃபேஸ்பேக் ரெடி.

    இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.
    உடலில் ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த மஞ்சள் பாலை குடித்து வந்தால் தொற்றை எதிர்த்து போராடும் ஆற்றலை அதிகரிக்கிறது. இன்று இந்த பாலை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பால் - 120 மில்லி
    மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - சிறிதளவு
    மிளகு தூள் – 1 சிட்டிகை
    பட்டைப்பொடி - 1 சிட்டிகை
    தேன் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    இஞ்சியை தோல் நீக்கி கொரகொரப்பாக தட்டிக்கொள்ளவும்.

    அதன் பிறகு இஞ்சி, மஞ்சள் தூள், பட்டைப்பொடி, மிளகு ஆகிய நான்கையும் சேர்க்க வேண்டும்.

    அதன் பிறகு மஞ்சள் வாசனை போகிற அளவிற்கு நன்கு கொதிக்கவைத்து இறக்கி விட வேண்டும்.

    பிறகு அதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து பருக வேண்டும்.

    செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் அபார பலன்களை கொண்டதுதான் கோல்டன் மில்க் என்று அழைக்கப்படும் மஞ்சள் பால்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    60 வயதுக்கு மேல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்று கருதும் பெண்கள் 40 வயதிலே வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் வழிமுறைகள் பற்றி சிந்திக்கிறார்கள்.
    இளந்தலைமுறையினரிடம் புதிய சிந்தனைத்தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அது சமூகத்தில் புத்துணர்ச்சியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக 25 வயதில் இருந்து 30 வயதுக்குள் வேலையில் சேர்ந்தால், 60 வயது வரை தொடர்ச்சியாக உழைப்பார்கள். பணியில் இருக்கும் காலகட்டத்தில் பலருக்கும் ஊரும், உறவுகளும் நினைவில் இருப்ப தில்லை. வேலை- பணம் என்ற இரண்டு எல்லைக்கோட்டிற்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் எப்பாடுபட்டாவது சொத்துபத்துகளை வாங்கி சேர்ப்பார்கள். வங்கி கணக்கிலும் பணம் ஏறிக்கொண்டிருக்கும். சரியாக ஓய்வுகூட எடுக்கமாட்டார்கள். நேரத்துக்கு சுவையாக சாப்பிடவும் மாட்டார்கள்.

    அப்போது நெருக்கமானவர்கள் அவர்களிடம் ‘இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைக்கிறாயே.. நல்லா சாப்பிட்டால் என்ன.. நாலு இடத்துக்குபோய் சொந்தபந்தங்களை பார்த்தால் என்ன..’ என்று கேட்டால், அதற்கு பதிலாக ‘அறுபது வயது வரை உழைக்கவேண்டும். எவ்வளவு பணத்தை சேர்க்க முடியுமோ அவ்வளவையும் சேர்த்துவிடவேண்டும். அதன் பின்பு நன்றாக உட்கார்ந்து சாப்பிடுவேன். நான்கு இடங்களை சுற்றிபார்ப்பேன். சொந்த பந்தங்களை எல்லாம் தேடிப்போய் சந்திப்பேன். எல்லாம் 60 வயதுக்கு பிறகுதான்”என்பார்கள்.

    ஆனால் அறுபது வயதில் அவர்கள் ஓய்வுபெறும்போது நாடிநரம்பெல்லாம் தளர்ந்துபோகும். உடலில் பல நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். விரும்பியதை சாப்பிடமுடியாது. விரும்பிய இடங்களுக்கு செல்ல உடல் ஒத்துழைக்காது. பணம் மட்டுமே இருக்கும். உடல் நலம் உள்பட மீதி அனைத்தையும் இழந்திருப்பார்கள். 60 வயது வரை வீடு-அலுவலகம் என்று ஓடிக்கொண்டிருந்த அவர்கள், அதற்கு பிறகு வீடு-மருத்துவமனை என்ற இரண்டிற்கும் இடையே இயங்கிக்கொண்டிருப்பார்கள்.

    இந்த வாழ்க்கை முறை இன்றைய இளந்தலைமுறையினருக்கு பிடிக்கவில்லை. 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்று கருதும் அவர்கள் 40 வயதிலே வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் வழிமுறைகள் பற்றி சிந்திக்கிறார்கள். 25 வயதுக்குள் வேலையில் சேர்ந்துவிட வேண்டும். கடுமையாக உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும். 35 வயதில் இருந்து 40 வயதுக்குள் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, வாழ்க்கையை புதிய பாதையில் திருப்பிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    அதாவது ஆரோக்கியமாக இருக்கும் காலகட்டத்திலே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். 40 வயதுகளில் வேலைக்கும், வேலைதரும் மனஅழுத்தத்திற்கும், வேலை பரபரப்பிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எந்த சுமையும் இல்லாமல் விரும்பியதை செய்ய திட்டமிடுகிறார்கள். விவசாயம் செய்வது, ஊர் சுற்றுவது, புதிதாக ஏதாவது தொழில் தொடங்குவது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது என்று புதிய திசையை நோக்கி பயணிக்க விரும்புகிறார்கள். இந்த சிந்தனை செயல்திட்டத்திற்கு ‘பினான்சியல் இன்டிபென்டன்ட், ரிட்டயர் ஏர்லி’ (எப்.ஐ.ஆர்.ஈ) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

    இந்த திட்டத்திற்கு தக்கபடி வாழ்வதற்காக இன்றைய இளையதலைமுறையினர் 25 வயதுகளிலே கடுமையாக உழைக்கத்தொடங்கிவிடுகிறார்கள். கண்டபடி பணத்தை செலவிடாமல் எளிமையாக வாழ்ந்து, பணத்தை சேமிக்கும் வழிமுறைகளையும் கையாளுகிறார்கள்.

    இது பற்றி 26 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் நமிதா கூறுகிறார்:

    “எனக்கும் சில லட்சியங்கள் இருக்கின்றன. இளம் வயதிலே நிறைய சம்பாதித்துவிடவேண்டும். 40 வயதிற்குள் வேலையில் இருந்து விலகி புதிய ஆடைவடிவமைப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கவேண்டும். மேலும் சில தனிப்பட்ட ஆசைகளும் இருக்கின்றன. அவைகளுக்காக எனக்கு 80 லட்சம் ரூபாய் தேவைப்படும். பத்தாண்டுகளில் நான் அதை சம்பாதிக்கவேண்டும். இப்போது நான் 80 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பாதிக்கிறேன். அதில் 50 ஆயிரத்தை சேமிக்கிறேன். இன்னும் ஐந்தாண்டுகள் ஆனதும் நான் என் எதிர்கால திட்டங்களுக்கு உயிர்கொடுக்கத் தொடங்கிவிடுவேன்” என்கிறார்.
    குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பால் பருகும் அளவு வேறுபடும். எந்தெந்த வயது குழந்தைகள் எவ்வளவு பால் பருக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
    குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் அவர்கள் தினமும் பால் பருகுவது அவசியம். இது சிறந்த புரத மூலமாகவும், இறைச்சிக்கு சைவ மாற்றாகவும் விளங்குகிறது. உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பால் பருகும் அளவு வேறுபடும். எந்தெந்த வயது குழந்தைகள் எவ்வளவு பால் பருக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

    6 மாதங்கள் வரை

    பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதங் களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த சமயத்தில் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுவதும், அதனை தாய்ப்பால் நிவர்த்தி செய்வதும் அதற்கு முக்கிய காரணம். சீரான இடைவெளியில் குழந்தையின் பசியை போக்க உணவளிப்பதும் இன்றியமையாதது. தினமும் 600 மி.லிட்டர் அளவாவது பால் கொடுப்பதும் மிகவும் முக்கிய மானது. அப்போதுதான் குழந்தைக்கு சரியான அளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.

    6-12 மாதங்கள்

    6 முதல் 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத பட்சத்தில் புட்டிப்பால் கொடுக்கலாம். அது ஒத்துக்கொள்ளாவிட்டால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருபோதும் பாலை தவிர்க்கக்கூடாது. தினமும் சுமார் 600 முதல் 700 மி.லி. பால் கொடுக்க வேண்டும்.

    1-2 வயது

    இது குழந்தைகள் சாப்பிட தொடங்கும் வயது. சில குழந்தைகள் பால் பருகுவதற்கு தயங்குவார்கள். அவர்களுக்கு தாய்ப்பால் தவிர வேறு பால் ஒத்துக்கொள்ளாது. வலுக்கட்டாயமாக கொடுத்தால் வாந்தி எடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு புட்டிப்பால் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். சத்தான பால் பவுடர் மூலம் பால் தயாரித்து கொடுக்கலாம். இந்த வயதில் தினமும் சுமார் 800-900 மி.லி. பால் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

    3-8 வயது

    இந்த வயது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற, இந்த வயதில் தினமும் குறைந்தது இரண்டரை கப் பால் பருகுவது அவசியம். அதனுடன் பால் சார்ந்த பொருட்களையும் கொடுத்து பழக்கலாம்.

    9 முதல் 15 வயது

    குழந்தைகள் 9 வயதில், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுப்பட தொடங்கிவிடுவார்கள். வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பால் பருகுவது அவசியமானது. 9 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினமும் 3 கப்புக்கும் அதிகமாக பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் டீன் ஏஜ் வயதுக்குள் அடியெடுத்து வைப்பதால் தினமும் சுமார் 3000 கலோரிகள் தேவை. அதனால் பால் அதிகம் பருகுவது நல்லது.

    15 வயதுக்கு மேற்பட்டவர்கள்

    இந்த வயதில் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வது முக்கியமானது. அதுபோல் தினமும் பால் பருகுவதும் அவசியமானது. தினமும் 2 டம்ளர் பால் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண் டும். அதன் மூலம் போது மான ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
    அஜீரணம் எனப்படுவது, உணவு செரிமானமின்மையை குறிக்கும். அஜீரணத்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    அஜீரணம் எனப்படுவது, உணவு செரிமானமின்மையை குறிக்கும். இது கபத்தால் ஏற்படுகிறது. செரிக்கும் ஆற்றல் மந்தமாக உள்ளதால், உணவைச் செரிக்க அதிக நேரம் தேவைப்படும். சாப்பிடாவிட்டாலும் பசி எடுக்காது. இதனுடன் சளி, ஜலதோஷம் காணப்படலாம். எச்சில் அதிகமாக ஊறும். ரத்த ஓட்டம் குறையும். கால்நீர், உடல் எடை, கொழுப்பு, நீரிழிவு நோய், சோம்பேறித்தனம் போன்றவையும் ஏற்படும். நாக்கில் வெண்மை நிறம் வெளிப்படும்.

    எளிதான உணவுகளை உட்கொள்ளத் தோன்றும். வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படலாம். வயிற்றில் கனத்தன்மை காணப்படலாம். கை, கால்களில் கனத்தன்மையும் சோர்வும் காணப்படும். மனது மந்தமாகவும், உற்சாகக் குறைவும் ஏற்படும். வாழ்க்கையில் உற்சாகம் குறையும்.

    குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது, தரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, அதிகமாகச் சாப்பிடுவது, தவறான முறையில் சாப்பிடுவது, தூக்கத்தில் வேறுபாடு, இயற்கை செயல்பாட்டு வேகத்தை கட்டுப்படுத்துவது, அதிகமான காம இச்சை, சந்தேகப்படுவது, வருத்தம் போன்றவை அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.

    அதிகமாக மருந்துகளை சாப்பிடுவது, சோக நிலை, கல்லீரல் சரியாக வேலை செய்யாமலிருப்பது, வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவது, மனச் சோகம் ஆகியவற்றாலும் இது வருகிறது.

    கபம் அதிகமாக இருப்பவர்களுக்கு பொதுவாக பசி ஏற்படுவதில்லை. அவர்களுக்கு பசியை தாங்கும் சக்தி உண்டு. இதற்கு கார்ப்பு சுவையுடைய உணவு வகை நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட வெப்பமான மருந்துகள் நல்ல பலன் அளிக்கின்றன.
    சானிடைசர்கள் சில நேரம் தோலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே எந்த வகையான சானிடைசர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அரசுகளும், மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைத்து உள்ளனர்.

    இதில் கை கழுவுவதற்கு கிருமி நாசினிகளை (சானிடைசர்) பயன்படுத்துமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த சானிடைசர்கள் சில நேரம் தோலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே எந்த வகையான சானிடைசர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

    இதற்கு அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நிபுணர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

    அதன்படி, சானிடைசர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத எத்தில் ஆல்கஹால் அல்லது 70 சதவீத ஐசோபுரொப்பைல் ஆல்கஹால் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் வடிகட்டிய தண்ணீர், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் கிளிசரின் போன்ற அங்கீரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கி இருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் மெத்தனால் அல்லது 1-புரொப்பனால் அடங்கிய சானிடைசர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என கூறியுள்ள அவர்கள், இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை என எச்சரித்து உள்ளனர். மேலும் உணவு அல்லது குடிக்கும் பானம் இருக்கும் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு உள்ள சானிடைசர்களை, குழந்தைகள் தற்செயலாக குடிக்கக்கூடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதைப்போல ஆல்கஹாலுக்கு பதிலாக பென்சல்கோனியம் குளோரைடு கலந்த சானிடைசர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொல்லும் திறன் குறைவு என்பதால் அவற்றை வாங்க வேண்டாம் எனக்கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள், மக்கள் சொந்தமாக வீடுகளில் சானிடைசர்கள் தயாரிக்கக்கூடாது எனவும் எச்சரித்து உள்ளனர். ஏனெனில் வேதிப்பொருட்களின் தவறான சேர்க்கையால் தோலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதைப்போல கை கழுவுவதற்கு சோப் மற்றும் தண்ணீர் இல்லாதபோது மட்டுமே சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும் என கொலம்பியா பல்கலைக்கழக நோய்த்தொற்று ஆய்வாளர் பரன் மதேமா கூறியுள்ளார். கிருமிகளை அகற்றுவதற்கு கை கழுவுதல் சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

    மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைக்க தயாராக இருக்கும் அனைவரும் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் பிருந்து அக்கறை செலுத்தினால், தங்கள் உடலை கட்டுடல் ஆக்கிவிடலாம்.
    பெண்களில் பெரும்பாலானவர்கள் திருமணத்திற்கு தயாராகும்போதுதான் தங்கள் உடல்மீது அக்கறைகொள்ளத் தொடங்குகிறார்கள். முதலில், உச்சி முதல் பாதம் வரை தாங்கள் அழகாக ஜொலிக்கவேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். அடுத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்து கட்டுடலுடன் தோன்ற விரும்புகிறார்கள். அதோடு நல்ல உணவு முறைக்கு திரும்பி தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆர்வம்காட்டுகிறார்கள். அப்போது ஒருபுறம் ஜிம் எங்கே இருக்கிறது என்று தேடிப்போகிறார்கள். மறுபுறம் உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும் முயற்சி செய்கிறார்கள். மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைக்க தயாராக இருக்கும் அனைவரும் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் பிருந்து அக்கறை செலுத்தினால், தங்கள் உடலை கட்டுடல் ஆக்கிவிடலாம்.

    உணவுக் கட்டுப்பாடு: உணவுக் கட்டுப்பாடு பெண்களுக்கு மிக அவசியம். ஆனால் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று பட்டினி இருந்தால், அது மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும். உடல் சோர்ந்து, தளர்ந்து, இருக்கிற அழகும்போய் வருந்தும் நிலை உருவாகிவிடும். தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கி விடும். அதனால் முறையான உணவுக்கட்டுப்பாட்டை மட்டுமே கடைப்பிடிக்கவேண்டும். அதற்குரிய நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏன்என்றால் உணவு முறை என்பது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. ஒவ்வொரு தனி நபரின் உடல்வாகு, வயது, வேலை, தூக்கம் போன்ற பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து நிபுணர்கள் உணவை பரிந்துரைக்கிறார்கள். அதனால் உங்களுக்கான சரியான உணவை பரிந்துரைக்க அதற்குரிய நிபுணரை நீங்கள் சந்திப்பதே சிறந்தது. அதற்கு நீங்கள் விரும்பாவிட்டால் சத்தான உணவை வீட்டிலே சமைத்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்வியல் முறைகளையும் சரியாக்கிக்கொள்ளுங்கள்.

    எடை குறைப்பு: உடல் குண்டாக இருப்பவர்கள், ‘பரவாயில்லை. என் உடல் எடையும் குறைந்துவிட்டது’ என்று சொல்லும் நிலையை அடையவேண்டும் என்றால் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். காலை எழுந்தவுடன் சோம்பேறித்தனத்துடன், ‘நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்காமல், தினமும் உடற்பயிற்சிக்கு செல்லவேண்டும். திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது என்ற நிலையில் இருப்பவர்களும், உடற்பயிற்சி மேற்கொண்டால் அந்த அளவிற்கு அவர்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்படத்தான் செய்யும். எடை குறையும்போது மணப்பெண்களுக்கு தன்னம்பிக்கையும், அழகும் அதிகரிக்கும்.

    எல்லா பெண்களும் அதிக எடை கொண்டவர்களாக இருப்பதில்லை. சிலர் போதுமான எடையின்றி ஒல்லியாகவும் தோன்று கிறார்கள். அவர்களுக்கு தங்கள் உடல் எடையை சற்று அதி கரித்தால் நல்லது என்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் ‘வெயிட் டிரைனிங்’ போன்ற கண்டிசனிங் பயிற்சிகளை பெறவேண்டும். நிபுணரின் ஆலோசனையை பெற்று அதற்கு தகுந்தபடி உணவையும் உண்டால், சில மாதங்களில் அவர்கள் உடல் பூசி மெழுகினாற்போல் ஆகிவிடும்.

    குண்டான உடல் எடையை குறைக்க பயிற்சி பெறும்போது சிலருக்கு இரண்டு மாதத்திலே நல்ல மாற்றங்கள் தெரிந்து விடும். அதனால் தானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிம்முக்கு போனால் போதும் என்று நினைத்துவிடக்கூடாது. ஒவ்வொருவர் உடலுக்கு தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடியே, உடலில் மாற்றங்கள் ஏற்படும். புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள், சுய பயிற்சிகளை தவிர்த்து ஜிம்முக்கு சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற் பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.

    வீட்டிலே செய்யலாம்: ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் இரண்டு வாங்கி, இரண்டு கைகளிலுமாக பிடித்துக்கொண்டு தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி செய்வதும் நல்ல பலன்தரும்.

    ஜிம் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சி கருவிகள் இருக்கவேண்டும். தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்கவேண்டும்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள், ‘காலை முழுவதும் வேலை இருக்கிறது. மாலை நேரத்தில் வந்து பயிற்சி பெறுகிறோம்’ என்று தள்ளிப்போடக்கூடாது. அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. உடற்பயிற்சிக்கு பிறகுதான் மற்ற வேலைகள் என்று, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். காலையில் பயிற்சி செய்தால் அன்று முழுவதும் உடல் உற்சாகமாக இருக்கும்.

    முதல் ஐந்து நிமிடங்கள்: பத்து நிமிடம் முதல் நாள் பயிற்சி பெற்று விட்டு, பின்பு நாளுக்கு நாள் நேரத்தை அதிகரிக்கவேண்டும். வாரத்தில் ஐந்து, ஆறு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு குறையாத அளவிற்கு பயிற்சி பெற வேண்டும். கார்டியோ பயிற்சி பெறும்போது முதல் ஐந்து நிமிடங்கள் உடலில் உள்ள சக்தி வெளியேறும். அதன் பிறகுதான் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் சக்தி செலவாகத் தொடங்கும். அவர்கள் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    மணப்பெண்களுக்கு அழகைவிட ஆரோக்கியம் மிக முக்கியம். கட்டுடலையும், ஆரோக்கியத்தையும் மேஜிக் போன்று உடனடியாக பெற்றுவிட முடியாது. அதற்கு கடுமையான பயிற்சியும், முயற்சியும், போதுமான கால அளவும் தேவை. அதனால் திருமணம் பேசி முடித்த பின்பு உடலை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து பெண்கள் அலட்சியம் காட்டாமல், எப்போதும் உடலில் அக்கறை செலுத்துங்கள். அதை இன்றே இப்போதே நடைமுறைப்படுத்துங்கள்.
    ஆண்களின் மீசை பற்றி பெண்களிடம் கேட்ட போது அவர்கள் ‘ஆண்களுக்கு மீசை தனிப்பட்ட முறையில் இமேஜை தருவதாகவும், அவர்களது தோற்றம் தங்களை கவர்வதாகவும்’ கூறியிருக்கிறார்கள்.
    ஆண்மையின் அடையாளமாக மீசை கருதப்படுகிறது. கலாசார ரீதியாக மீசைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் பல இடங்களில் ஞானம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக மீசை திகழ்ந்து கொண்டிருக்கிறது. பலர் மீசையை தகுதிக்குரியதாகவும் கருதுகிறார்கள். சில நாடுகளில் நீதிபதிகளும், ராணுவதளபதிகளும்தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்ற நடைமுறையும் முன்பு இருந்தது.

    மெசபட்டோமியா கலாசாரத்தில் மீசை வைத்தவர்கள் உயர் தகுதி கொண்டவர்களாகவும், மீசை இல்லாதவர்கள் அடிமைகளாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். எகிப்து போன்ற சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந் தவர்கள் பிரமாண்டமான செயற்கை மீசையோடு வலம் வந்தார்கள் என்று சரித்திரம் சான்றுரைக்கிறது. அதே நேரத்தில் பழங்கால சீன கிராமங்களில் மீசை வைப்பது பாவத்தின் அடையாளமாக கருதப்பட்டிருக்கிறது. வட அமெரிக்காவில் உள்ள சில பழங்குடி இனங்களில் திருமணத்திற்கு பிறகுதான் மீசை வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறார்கள். கம்பீரத்தின் அடையாளமாக கருதப்படும் மீசையை நினைவில் கொள்ளும்போது ராணுவ வீரர்கள் நமது மனக்கண் முன்னே காட்சி தருவார்கள். அடர்த்தியும், ஆண்மைத்தனமும் நிறைந்த மீசையுடன் அவர்கள் எல்லையை பாதுகாப்பது வீரத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது.

    இந்தியர்களின் மீசை உலகைக் கவரக்கூடியதாக இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் மெக்லம் என்பவர், இந்தியா முழுவதும் வலம் வந்து இந்தியர்களின் மீசைகளை பற்றிய ருசிகரங்களை வியக்கும் விதத்தில், வித்தியாசமான ஆங்கில புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். திபெத் எல்லைப்பகுதியில் உள்ள குருமார்கள் வைத்திருக்கும் தெளிந்த நீரோடை போன்ற வெண்தாடி அடங்கிய மீசையும், ராஜஸ்தான் சன்னியாசிகளின் மயில் பீலி அலங்கார ஜடாமுடி மீசையும் மேற்கத்திய நாட்டினரை வெகுவாக கவர்கிறது. தென்னிந்திய வீரப்பன் ஸ்டைல் மீசையும் பிரபலம்தான். கர்நாடகாவில் பலமான மீசைக்காரர்களும் உண்டு. அவர்கள் தங்கள் கடா மீசைகளில் 40 கிலோ எடைகொண்ட பொருட்களையும் கட்டித் தூக்கி பலத்தை காட்டுவார்கள்.

    சினிமாவை பொறுத்தவரையில் வட இந்தியாவையும்-தென்இந்தியாவையும் மீசை பிரித்துக்காட்டுகிறது. இந்தி திரை உலகில் கதாநாயகர்கள் பெரும்பாலும் சுத்தமாக ‘ஷேவ்’ செய்யப்பட்ட முகத்தோடு காட்சி தருவார்கள். அவர்கள் அனேகமாக மீசை வைத்துக்கொள்வதில்லை. ஆனால் வில்லனாக தோன்றுபவர்கள் மீசையோடு காட்சி தருவார்கள்.

    மீசை பழங்காலத்திலே புகழ்பெற்றிருந்தாலும், இருபதாம் நூற்றாண்டில்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. அப்போதுதான் மீசையை நேர்த்தியாக்கவும் கச்சிதமாக வளர்க்கவும், அலங்காரப்படுத்தவும் புதுப்புது கருவிகள் உருவாக்கப்பட்டன. டானிக்குகள், மெழுகு, ஜெல் போன்றவைகள் மீசைக்காக உருவாக்கப்பட்டன. ஆனால் 1950 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் ஹிப்பி கலாசாரம் சர்வதேச அளவில் பரவியது. அவர்கள் தாடியையும் முடியையும் அப்படியே நீளமாக வளர்த்தார்கள். அதனால் தாடியை நேர்த்தியாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். பின்பு அந்த கலாசாரம் காணாமல் போனது.

    ஆனாலும் தற்போது இந்தியர்களுக்கு மீசை மீது ஆசை குறைந்திருப்பதாகவே தெரிகிறது. வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இந்தியர்களில் பெரும் பாலானவர்கள் தங்கள் மீசையை மழித்துப்போட்டுவிட்டு, ‘கிளன் ஷேவ்’ முகத்தோடு காட்சி தருகிறார்கள். இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளில் மீசை இல்லாதவர்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறதாம்.

    மீசைக்கும்-உடல் ஆரோக்கியத்திற்கும் ஏதாவது விதத்தில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் மருத்துவரீதியான ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் ‘அடர்த்தியான கம்பீர மீசை கொண்ட ஆண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், இனப்பெருக்கத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று தெரியவந்திருக்கிறது. மீசை வைத்திருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்கள் என்றும் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    ஆண்களின் மீசை பற்றி பெண்களிடம் கேட்ட போது அவர்கள் ‘ஆண்களுக்கு மீசை தனிப்பட்ட முறையில் இமேஜை தருவதாகவும், அவர்களது தோற்றம் தங்களை கவர்வதாகவும்’ கூறியிருக்கிறார்கள்.

    ஒருவரது மீசையை பார்த்து அவரது குணாதிசயத்தை கணித்துவிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சர்வாதிகாரி ஹிட்லரின் மீசையையும், புன்னகை மன்னன் சார்லி சாப்ளினின் மீசையையும் ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ‘ஒருவர் கொடுங்கோலன். இன்னொருவர் உலகையே சிரிக்கவைத்தவர்’ என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் பொதுவாக மீசையை வைத்து குணாதிசயத்தை கணிப்பது கடினம் என்பதே உண்மை. பயம் நிறைந்த சுபாவம் கொண்டவர்கள்கூட அந்த பயத்தை மறைக்க கம்பீரமாக மீசை வைத்துக்கொண்டு உலாவருவதுண்டு என்பது அனுபவஸ்தர்கள் கருத்து.
    உடல் நலம் காக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வீட்டிலேயே விதவிதமாக தயாரித்து ருசிக்கலாம். இன்று அரிசி ரவாயில் சத்தான டிபன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி ரவா - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    புளி - நெல்லிக்காய் அளவு
    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -1 டீஸ்பூன் வீதம்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கொத்தமல்லி கார பால்ஸ்

    செய்முறை:

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், புளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றவும்.

    அதில் அரைத்த விழுதை கொட்டவும்.

    அதுபோல் நெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து அரிசி ரவாவை கொட்டி லேசாக கிளறி, கால் மணி நேரம் மூடி வைத்து வேகவிட்டு இறக்கவும்.

    ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவி ஏற்றி ருசிக்கலாம்.

    சூப்பரான கொத்தமல்லி கார பால்ஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிற்கு தேவையான பொருட்களை தேடிப்பிடித்து வாங்குவதற்குள் இல்லத்தரசிகள் மன அழுத்ததிற்கு ஆளாகிவிடுவார்கள்.
    வீட்டிற்கு தேவையான பொருட்களை தேடிப்பிடித்து வாங்குவதற்குள் இல்லத்தரசிகள் மன அழுத்ததிற்கு ஆளாகிவிடுவார்கள். மற்றவர்கள் வீடுகளில் இருக்கும் பொருட்களை விட சிறந்ததாகவும், நவீனமயமாகவும் தாங்கள் வாங்கும் பொருட்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அது எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவை ஏற்படுத்திவிடும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பட்ஜெட் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். என்னென்ன பொருட்களை வாங்க போகிறோம், அது எந்த அளவிற்கு வீட்டிற்கு உபயோகமாக இருக்கும் என்பது பற்றி குடும்பத்தினருடன் கலந்தாலோசிக்க வேண்டும். வாங்கும் பொருட்கள் மாதாந்திர பட்ஜெட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

    விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தவணை முறையை தேர்ந்தெடுக்கலாம். அதுவும் அதிக மாதங்கள் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. அது வட்டிவிகிதத்தை அதிகப்படுத்தி விடும். சரியான நேரத்தில் பொருட்களை வாங்குவதும் முக்கியமானது. சில பொருட்கள் அந்தந்த பருவ காலங்களுக்குத்தான் தேவைப்படும். அந்த சமயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் சலுகை விலைகளை அறிவிக்கும். அப்போது வாங்குவது புத்திசாலித்தனமானது. விலையும் குறைவாக இருக்கும் என்பதால் பட்ஜெட்டுக்கு பங்கம் நேராது.

    கண்களில் தென்படும் அழகழகான பொருட்களை பார்க்கும்போதெல்லாம் அவைகளை வாங்குவதற்கு மனம் ஏங்கும். வீட்டிலேயே வாங்கும் பொருட்களை பற்றி திட்டமிட்டு அதற்கான நிதியை ஒதுக்கிவிட்டுத்தான் நிறைய பேர் கடைக்கு செல்வார்கள். ஆனால் கடைக்கு சென்றதும் கண்ணில்பட்ட பொருட்களையெல்லாம் வாங்கிவிடுவார்கள். அப்போது சிலர் வாங்க நினைத்திருந்த பொருட்களையே மறந்துவிடுவார்கள். அது கடனாளி ஆக்கிவிடும். நிதி திட்டமிடல் என்பது முதலீடு போன்றது. அதனை புரிந்துகொண்டு முறையாக செலவழிக்க வேண்டியது அவசியமானது.
    ×