search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையின் வயதும்... பால் பருகும் அளவும்...
    X
    குழந்தையின் வயதும்... பால் பருகும் அளவும்...

    குழந்தையின் வயதும்... பால் பருகும் அளவும்...

    குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பால் பருகும் அளவு வேறுபடும். எந்தெந்த வயது குழந்தைகள் எவ்வளவு பால் பருக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
    குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் அவர்கள் தினமும் பால் பருகுவது அவசியம். இது சிறந்த புரத மூலமாகவும், இறைச்சிக்கு சைவ மாற்றாகவும் விளங்குகிறது. உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பால் பருகும் அளவு வேறுபடும். எந்தெந்த வயது குழந்தைகள் எவ்வளவு பால் பருக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

    6 மாதங்கள் வரை

    பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதங் களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த சமயத்தில் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுவதும், அதனை தாய்ப்பால் நிவர்த்தி செய்வதும் அதற்கு முக்கிய காரணம். சீரான இடைவெளியில் குழந்தையின் பசியை போக்க உணவளிப்பதும் இன்றியமையாதது. தினமும் 600 மி.லிட்டர் அளவாவது பால் கொடுப்பதும் மிகவும் முக்கிய மானது. அப்போதுதான் குழந்தைக்கு சரியான அளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.

    6-12 மாதங்கள்

    6 முதல் 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத பட்சத்தில் புட்டிப்பால் கொடுக்கலாம். அது ஒத்துக்கொள்ளாவிட்டால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருபோதும் பாலை தவிர்க்கக்கூடாது. தினமும் சுமார் 600 முதல் 700 மி.லி. பால் கொடுக்க வேண்டும்.

    1-2 வயது

    இது குழந்தைகள் சாப்பிட தொடங்கும் வயது. சில குழந்தைகள் பால் பருகுவதற்கு தயங்குவார்கள். அவர்களுக்கு தாய்ப்பால் தவிர வேறு பால் ஒத்துக்கொள்ளாது. வலுக்கட்டாயமாக கொடுத்தால் வாந்தி எடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு புட்டிப்பால் கொடுப்பதை தவிர்க்கவேண்டும். சத்தான பால் பவுடர் மூலம் பால் தயாரித்து கொடுக்கலாம். இந்த வயதில் தினமும் சுமார் 800-900 மி.லி. பால் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

    3-8 வயது

    இந்த வயது குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற, இந்த வயதில் தினமும் குறைந்தது இரண்டரை கப் பால் பருகுவது அவசியம். அதனுடன் பால் சார்ந்த பொருட்களையும் கொடுத்து பழக்கலாம்.

    9 முதல் 15 வயது

    குழந்தைகள் 9 வயதில், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுப்பட தொடங்கிவிடுவார்கள். வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பால் பருகுவது அவசியமானது. 9 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினமும் 3 கப்புக்கும் அதிகமாக பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் டீன் ஏஜ் வயதுக்குள் அடியெடுத்து வைப்பதால் தினமும் சுமார் 3000 கலோரிகள் தேவை. அதனால் பால் அதிகம் பருகுவது நல்லது.

    15 வயதுக்கு மேற்பட்டவர்கள்

    இந்த வயதில் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வது முக்கியமானது. அதுபோல் தினமும் பால் பருகுவதும் அவசியமானது. தினமும் 2 டம்ளர் பால் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண் டும். அதன் மூலம் போது மான ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
    Next Story
    ×