search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களின் தனிமையை போக்கிய புத்தகங்கள்
    X
    பெண்களின் தனிமையை போக்கிய புத்தகங்கள்

    கொரோனா காலகட்டத்தில் பெண்களின் தனிமையை போக்கிய புத்தகங்கள்

    புத்தக பிரியர்கள் மட்டுமே கொரோனா பற்றிய சிந்தனைகள் ஏதுமின்றி தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாசிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
    கொரோனா நோய் பரவல் காரணமாக வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பவர்கள், நிறைய பேர் பொழுதை போக்குவதற்கு சிரமப்படும் சூழல் நிலவுகிறது. ஸ்மார்ட்போன், சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பதையே பொழுதுபோக்காக கொண்டவர்கள் கூட, அதில் அணிவகுத்து நிற்கும் கொரோனா நோய் குறித்த செய்திகளை பார்த்து சோர்ந்து போய் விடுகிறார்கள்.

    கொரோனா பற்றிய சிந்தனையில் இருந்து விடுபட்டு மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்த விரும்புகிறார்கள். புத்தக பிரியர்கள் மட்டுமே கொரோனா பற்றிய சிந்தனைகள் ஏதுமின்றி தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாசிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை போலவே, புத்தகங்களை விரும்பி படிக்காதவர்கள் கவனம் கூட இப்போது புத்தகங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. செல்போனில் இ-புத்தகங்களை படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

    கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தனிமையை போக்குவதற்கு புத்தகங்கள் உதவுகின்றன. கேரள மாநிலம் வயநாடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக புத்தகங்களை நன்கொடை பெறும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டில் புத்தகங்கள் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் புத்தகங்களை நன்கொடையாக வழங்கலாம். அந்த புத்தகங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

    “இந்தத் திட்டம் தனிமையில் இருப்பவர்களுக்கு நேர்மறையான சிந்தனையை தோற்றுவிக்க உதவும். இந்த சமூகத்திற்கும், அவர்களுக்கும் இடையேயான பந்தம் விட்டுப்போகவில்லை. தாங்கள் சமூகத்துடன் தொடர்பில்தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தை அவர்களிடம் உருவாக்கும் எண்ணத்திலும், மனிதாபிமான நோக்கத்துடனும் சமூக நலனுக்காகவே இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம்” என்கிறார், மாவட்ட கலெக்டர் அடீலா அப்துல்லா.

    இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனிமையில் இருப்பவர்கள் பயனுள்ள வகையில் பொழுதை கழிப்பதுடன் அவர்களின் மனநலமும் நன்றாக இருக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.
    Next Story
    ×