என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கணவருக்கு, மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. தாம்பத்தியத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது. நல்ல தாம்பத்தியத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது.
    முத்தம் அன்பின் வெளிப்பாடு. தாய் கொடுக்கும் அன்பு முத்தத்தில்தான், ஒரு குழந்தையின் வாழ்க்கை தொடங்குகிறது. அன்பான மனைவி கொடுக்கும் கண்ணீர் கலந்த கடைசி முத்தத்தில், ஒரு ஆணின் வாழ்க்கை நிறைவடைகிறது. இந்த இரண்டு முத்தத்திற்கும் இடைப்பட்டதே மனிதன் வாழும் காலம். இதில் வேடிக்கை என்ன வென்றால், முதல் முத்தம் பெறும்போது, குழந்தைக்கு முத்தம் என்றால் என்னவென்று தெரியாது. அந்த முத்தத்தின் சுவையை தாய்தான் அனுபவிக் கிறாள். கடைசி முத்தம் பெறும்போதும், உயிரற்ற உடல் அந்த முத்தத்தின் சுவையை உணர நியாயம் இல்லை. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் இருக்கும் சத்தற்ற முத்தங்கள்தான் பெரும்பாலும் சத்தங்களை எழுப்புகின்றன.

    ‘அன்பு, நம்பிக்கை ஆகிய இரண்டையும், உதடுகள் மூலமாக இன்னொருவரிடம் கொண்டுபோய் சேர்ப்பதே முத்தம்’ என்கிறது முத்த தத்துவம்.

    ‘‘நீங்கள் ஆன்மாவை பார்க்கவேண்டும் என்றால், காதலியின் உதடுகளை பார்த்தால் போதும்” என்று முத்தத்திற்கு முகவரி கொடுத்திருக்கிறார், ஆங்கிலேய கவிஞர் ஷெல்லி.

    ‘வானத்தை மலைகள் முத்தமிடுகின்றன. அலைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து, எந்நேரமும் முத்தமிட்டபடியே ஓடிவிளையாடுகின்றன. சூரியன் பூமியை முத்தமிடுகிறது.. இப்படி இயற்கை முத்தத்தோடு இணைந் திருக்கிறது. மனிதர்களில் ஒரு ஆணும், பெண்ணும் முத்தமிடும்போது, உடலுக்கு ஏற்படும் ரசாயன மாற்றம் விவரிக்க இயலாதது. விருப்பத்தோடு முத்தமிடும்போது இருவர் உடலும் பூப்போல் மலர்கிறது. அதனால்தான் உடலில் இருக்கும் அன்பு சுரப்பிகள், முத்தங்களுக்காக ஏங்குகின்றன.

    உதடுகளின் செயல்பாடு மட்டுமே முத்தம் அல்ல. உடல் முழுவதும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் முத்தம் முழுமையடைகிறது. முத்தத்திற்கு பல முகங்கள் இருக்கின்றன. கணவனாக இருந்து கசப்பை மறக்கவைக்கும். காதலாக இருந்து இனிக்கவைக்கும். வேதனைப்படும்போது ‘நான் இருக்கிறேன். கவலைப்படாதே’ என்று ஆறுதல் தரும். ‘விட்டுத்தொலை. அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற தேறுதலைத் தரும். வலியை, விரக்தியை போக்கடிக்கும். உயிரை விடும் எண்ணத்தில் இருப்பவர்களைக்கூட ஒரு முத்தம் காப்பாற்றி விடக்கூடும். அதனால்தான் முத்தத்திற்கு எல்லோரும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதையும் வகைப்படுத்தி ‘எக்ஸ்கிமோ கிஸ்’, ‘ஸ்பைடர் மேன் கிஸ்’, ‘ஏஞ்சல் கிஸ்’, ‘பிளையிங் கிஸ்’ என்று அழகழகான பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள்.

    கணவருக்கு, மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. கைகளில் முத்தம் கொடுப்பது, ‘ஒருபோதும் உன்னை கைவிடமாட்டேன்’ என்று நம்பிக்கை கொடுப்பதாகும். தாம்பத்தியத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது. நல்ல தாம்பத்தியத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது. போகப்போக அது சூறாவளியாக வீசத் தொடங்குகிறது. வங்கியில் பணம் போடும்போது வட்டியோடு சேர்த்து கிடைக்கும் என்பதுபோல் முத்தத்திற்கும் வட்டி உண்டு. கொடுக்கும் முத்தம் வட்டியோடு சேர்ந்து வளமாக திரும்ப கிடைக்கும். அன்பு மனது நிறைய இருந்து என்ன பயன்? அதை முத்தமாக கொடுக்கும்போதுதான், அன்பு நிரூபணமாகும். முத்தம் அன்பை அதி கரிப்பதோடு வலியை குறைக்கும். மனஅழுத்தத்தை மாற்றும். உயர் இஇரத்த  அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். இன்னும் பல வேடிக்கை வினோதங்களைச் செய்யும்.

    டெல்லியைச் சேர்ந்த பாட்டி ஒருவருக்கு, 100 வயது. தாத்தா அதையும் தாண்டிவிட்டார். அவர்களை வாழ்த்த சென்ற டாக்டர் ஒருவர், “உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?” என்று கேட்டார். பாட்டி “முத்தம்” என்று சத்தமாக பதிலளித்தார்.

    டாக்டர் சுதாரித்துக்கொள்ள முடியாமல் தடுமாற, பாட்டியே தொடர்ந்தார். “எங்களுக்குள் இருக்கும் அன்பை, இருவரும் முத்தத்தின் மூலம் பங்குவைத்துக்கொள்வோம். அது வீட்டையே அன்பு மயமாக்கும். அன்புள்ள வீட்டில் அமைதி தவழ்ந்து விளையாடும். அமைதி இருந்தால் ஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் கிடைத்தால் ஆயுள் அதிகரிக்கும்” என்று விளக்கம் அளித்தார்.

    அந்த டாக்டருக்கு புது மருந்து கிடைத்தது. உங்களுக்கு?
    கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் தங்கள் குழந்தைகளை பற்றிய புரிதலே நிறைய பெற்றோர்களிடம் இல்லாமல் இருக்கிறது. உங்கள் எதிர்கால சந்ததியை நோயாளியாக உருவாக்காமல் இருக்க இன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
    இந்தியாவில் 10 முதல் 13 வயதுக்கு உள்பட்ட 23 சதவீத குழந்தைகள் அதிக உடல் எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள். டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, கிட்டத்தட்ட நான்கில் ஒரு குழந்தை அதிக உடல் எடை கொண்டதாக இருக்கிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் தங்கள் குழந்தைகளை பற்றிய புரிதலே நிறைய பெற்றோர்களிடம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள், தங்கள் குழந்தைகள் கொழுகொழுவென்றிருப்பது ஆரோக்கியமானது என்று கருதுகிறார்கள். சிறுவயதில் குண்டாக இருந்தாலும் இளம் வயதில் இயல்பான எடைக்கு திரும்பிவிடுவார்கள் என்று தவறாக புரிந்துகொண்டு, அளவுக்கு அதிகமான உணவை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அதனால் உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்குகள் படி, ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளில் கிட்டத்தட்ட ஐந்து கோடி பேர் அதிக உடல் எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகள் புத்தகப்பையையும் சுமந்துகொண்டு நடந்தே பள்ளிக்கு சென்றார்கள். பள்ளிகளும் சற்று தூரத்தில் இருந்தன. அப்போது பள்ளிகளில் விளையாடினார்கள். வீட்டிற்கு வந்த பின்பும் மாலை நேரங்களில் வீட்டிற்கு வெளியே சக வயதினர்களோடு ஓடியாடி விளையாடினார்கள். பெரும் பாலும் வீட்டில் அம்மா சமைத்துக்கொடுத்த உணவுகளையே சாப்பிட்டார்கள். அந்த உணவுகளும் பூச்சி மருந்து கலப்பற்ற இயற்கை உணவுகளாக இருந்தன. அதனால் அளவான உடலோடும், ஆரோக்கியத்தோடும் வளர்ந்தார்கள்.

    இன்றைய நிலை அப்படியில்லை. குழந்தைகள் பள்ளி வாகனங்களில் செல்கிறார்கள் அல்லது பெற்றோரே சொந்த வாகனத்தில் கொண்டுபோய் விடுகிறார்கள். குழந்தைகளுக்கு விளையாட ஆர்வம் இருந்தாலும் மைதானம் இல்லாத பள்ளிகளிலே படிக்கிறார்கள். வீடுகளுக்கு வந்து விளையாடலாம் என்றால் அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் இருப்பதால், அதனை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். பலர் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பதால், வீட்டின் அருகில் விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதிக உடல் எடைகொண்ட குழந்தைகளால் சரிவர சுவாசிக்க முடிவதில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், மூட்டு நோய்கள் மற்றும் தூக்க குறைபாடு போன்றவை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

    பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் அதிக உடல் எடைகொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே குழந்தைகளின் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். காலையில் சில குழந்தைகள் உணவு சாப்பிடாமலே பளளிக்கு சென்றுவிடுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் மிக குறைந்த அளவிலே காலை உணவை சாப்பிடுகிறார்கள். ஆனால் காலை உணவு போதுமான அளவு சாப்பிடவில்லை என்றால் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் இயல்பாக நடக்காது. நடக்காவிட்டால் அவர்களது உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்ந்துவிடும். அதனால் காலை உணவை கட்டாயம் சாப்பிடவையுங்கள். அவர்கள் நொறுக்குத்தீனிகள் கேட்கும் போதெல்லாம் அவைகளை வாங்கிக்கொடுக்காமல் காய்கறி, பழங்களை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொடுங்கள்.

    குழந்தைகளிடம் உடல் உழைப்பை அதிகரியுங்கள். ஓடியாடி அவர்களை வேலைகளை செய்ய பழக்குங்கள். அதற்கு தக்கபடி உங்களையும் மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டு வேலைகளை செய்தால் அவர்களும் செய்வார்கள். நீங்கள் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்துசென்றால், அவர்களும் அதற்கு பழகுவார்கள். நீங்கள் மணிக்கணக்கில் டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்காதவர்களாக இருந்தால் அவர்களிடமும் நல்ல மாற்றத்தினை எதிர்பார்க்க முடியும். உங்கள் எதிர்கால சந்ததியை நோயாளியாக உருவாக்காமல் இருக்க இன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
    இயற்கை முறையிலேயே எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொப்பையை குறைக்க உதவும் டீ எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    தண்ணீர் - 250 மில்லி
    பட்டை - ஒரு துண்டு
    மிளகு - 10
    மஞ்சள் - சிறிதளவு
    இஞ்சி - ஒரு துண்டு

    செய்முறை:

    250 மில்லி தண்ணீர் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். அதன் பின் எடுத்து வைத்திருக்கும் மிளகை இடித்து தண்ணீரில் போடுங்கள்.

    அதன்பின் சிறிதளவு பட்டையை இந்த தண்ணீரில் பொடித்து போடுங்கள்.

    இவற்றை தண்ணீரில் போட்டு சிறு தீயில் வைத்து தண்ணீரை கொதிக்க விடுங்கள்.

    அதன் பின் மஞ்சள் தூளை எடுத்து நன்கு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் போடுங்கள்.

    இந்த மஞ்சளை தண்ணீரில் போட்ட பிறகு ஒரு சிறு துண்டு இஞ்சி எடுத்து நீங்கள் இந்த டீயை குடிக்க இருக்கும் டம்ளரில் சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள்.

    அதன்பின் கொதிக்க வைத்த தண்ணீரை இந்த டம்ளரில் ஊற்றி விட்டு பத்து நிமிடம் களித்து இந்த தண்ணீரை அருந்துங்கள்.

    இதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். அப்படி முடியாதவர்கள் இரவு தூங்க செல்லும் முன் கூட அருந்தலாம்.

    அதுமட்டுமல்லாமல் இடுப்பு, கால், கழுத்து பகுதிகளில் இருக்கும் வலி குறையும். இதனை பால் கொடுக்கும் தாய்மார்களும் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு குடிக்கலாம். நீரழிவு நோயாளிகளும் இதனை குடிக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மழைக்காலங்களில்தான் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். அந்த சமயத்தில் சருமத்தை சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் சரும நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும்.
    மழைக்காலம் மனதுக்கு இனிமையாக அமைந்தாலும் சருமத்திற்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் ஈரப்பதமான காலநிலை சரும செல்களுக்கு ஒத்துக்கொள்ளாது. மற்ற பருவக்காலங்களை விட மழைக்காலங்களில்தான் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். அந்த சமயத்தில் சருமத்தை சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் சரும நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும்.

    நிறைய பேர் மழை காலத்தில் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள் காரணமாக முகப்பருக்கள், தோல் அழற்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள். அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

    * பெண்கள் மழைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதில்லை. இருண்ட மேகங்களுக்கு பின்னால் சூரியன் மறைந்திருக்கும் என்றாலும், புற ஊதாக்கதிர்வீச்சுகளின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். அக்கதிர்வீச்சுகள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் கோடை காலம் போல் அதன் வீரியம் இருக்காது என்பதால் மழைக்காலத்தில் சன்ஸ்கிரீனை அதிகம் பயன்படுத்தக்கூடாது.

    * மழைக்காலத்தில் குடிநீர் பருகுவதை குறைத்தால் அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த காலநிலை நிலவும் என்பதால் தண்ணீர் தாகம் எடுக்காது. அதற்காக தண்ணீர் பருகாமல் இருக்கக்கூடாது. ஏனெனில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்ட தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது. அது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

    * மழை நீரில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் அதில் படியும் அழுக்குகள் சரும துளைகளை அடைத்துவிடக்கூடும். அப்படியிருக்கையில் மேக்கப் செய்வது அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முகப்பரு பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மேக்கப் தேவையில்லை. ஈரப்பதத்தன்மை கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தி சரும துளைகளை அடைக்காமல் பாதுகாக்கலாம்.

    * மழைக்காலத்தில் நிறைய பேர் முகம் கழுவு வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் முகம் கழுவாவிட்டால் சருமத்தில் அழுக்குகள் தேங்கிவிடும். அதனால் சரும எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மழைக்காலத்தில் மூலிகை தன்மை கொண்ட பேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்துவது சிறப்பானது.

    * கோடை காலத்தை போலவே மழைக்காலத்திலும் சரும செல்கள் உதிரத்தொடங்கும். அழுக்குகள், இறந்த செல் அடுக்குகளை அப்புறப்படுத்த இது அவசியமானது. இல்லாவிட்டால் சரும துளைகள் அடைப்பட்டுவிடும். சரும நோய்த்தொற்றுகளும் உண்டாகும்.
    கொரோனா தொற்றுக்கு மத்தியில் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்தபடி அலுவலக வேலைகளை செய்வது ஆண்களை விட பெண்களுக்குத்தான் சவாலானதாக அமைந்திருக்கிறது.
    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டம் அனைத்து தரப்பினருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. ஏராளமானோர் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உருவானது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் அலுவலக வேலைகளை செய்வதில் ஆண்களை விட பெண்கள் கடும் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வேலை பார்க்கும் பெண்களில் 47 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் விஷயத்தில் மன அழுத்தம், பதற்றத்தை அனுபவித்ததாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற கலக்கமும் அதிகரித்திருக்கிறது. ஆண்கள் விஷயத்தில் இந்த கவலை 38 சதவீதமாக இருந்திருக்கிறது. பெண்கள் அலுவலக வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நாடி இருக்கிறார்கள்.

    வேலை பார்க்கும் தாய்மார்களில் 31 சதவீதத்தினர் தங்கள் குழந்தை பராமரிப்புக்கு முழு நேரத்தையும் செலவிடும் மனநிலையில் இருந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் வேலை பார்க்கும் தந்தையின் பங்களிப்பு 17 சதவீதமாக இருந்திருக்கிறது. அதாவது ஆண்களில் ஆறில் ஒருவர்தான் குழந்தைகளின் பராமரிப்புக்கு முழு நேரத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். அதேநேரத்தில் ஐந்தில் ஒரு தாய்மார்தான் தங்கள் குழந்தைகளை கவனித் துக் கொள்வதற்காக நண்பர்களையோ, குடும்பத்தினரையோ நம்பி இருந்திருக்கிறார்கள்.

    குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்தபடி அலுவலக வேலைகளை செய்வது ஆண்களை விட பெண்களுக்குத்தான் சவாலானதாக அமைந்திருக்கிறது. குழந்தைகளுக்கு மத்தியில் அலுவலக வேலைகளில் போதுமான கவனம் செலுத்த முடிவதில்லை, அவர்களை கட்டுக்குள் கொண்டுவந்து வேலைகளை செய்து முடிக்க வேண்டியிருக்கிறது என்பது 42 சதவீத தாய்மார்களின் கருத்தாக இருக்கிறது. வேலை செய்யும் தாய்மார்களில் 46 சதவீதம் பேர் தங்கள் வேலைகளை தாமதமாக செய்து முடித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    “அலுவலக வேலைகளையும், வீட்டு வேலைகளையும் சமமாக கையாளும் விஷயத்தில் பெண்களுக்குத்தான் சுமை அதிகரித்திருக்கிறது. இருப்பினும் ஊரடங்கு காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு மன திருப்தியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது” என்கிறார், தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி நேகா பகாரியா.
    புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
    நம் முன்னோர்கள் நொதித்தல் மூலம் பயன்படுத்தி வந்த புளித்த உணவுகள் நமக்கு பெரும் வகைகளில் நன்மைகளை தருகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது நல்லது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

    டயாபெட்டீஸ் நோயாளிகள் சில உணவுகளை உண்பது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. உண்மையில் புளித்த உணவுகளை சூப்பர் ஃபுட்கள் என்றே கூறலாம்.

    ஊறுகாய், வினிகர் நிறைந்த சாஸ்கள், கொம்புச்சா, கேஃபிர் மற்றும் உங்களுக்கு பிடித்த தென்னிந்திய இட்லி மற்றும் தோசை போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை குறைக்க புளித்த உணவுகள் எவ்வாறு உதவும் என்பதற்கு பல கூற்றுக்கள் உள்ளன. இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில் புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை அறிவோம்.

    புளித்த உணவுகள் புரோபயாடிக்குகள் நிறைந்தவை மற்றும் குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. இது கார்போஹைட்ரேட்டுகளை சிறப்பாக உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. மேலும் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

    இந்த புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்வது என்பது உங்கள் ஒட்டுமொத்த குடல் தாவரங்களுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியா மற்றும் என்சைம்களைச் சேர்ப்பதாகும். மேலும் இது நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

    கொழுப்பு மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக கொழுப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. புளித்த உணவுகளை உட்கொள்வது சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இருதய நோய்களை ஏற்படுத்தும் என்று அறியப்படும் உடலில் வசோ கன்ஸ்டிரிக்டர்களின் (இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் மருந்துகள்) செயல்பாட்டை தடுக்கிறது.

    தயிர் போன்ற புரோபயாடிக்குகள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், இன்சுலின் உணர்திறனைத் தூண்டவும் உதவுகின்றன, இது டைப் -2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

    உடல் எடை அதிகரித்தாலே நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஏற ஆரம்பித்து விடும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பது என்பது நல்ல விஷயம். உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். மேலும் குறைந்த கார்ப் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த புளித்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்க உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது.

    உங்கள் குடல் பாக்டீரியாவை மேம்படுத்த ஒரு நாளைக்கு ஒரு முறை புரோபயாடிக்குகள் சாஸ் போன்ற புளித்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளலாம். இது உங்கள் எடை மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும்.

    ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகள் புரோபயாடிக் உணவுகளில் நொதித்தல் செயல்முறை நடைபெறுகிறது. இதை எடுத்துக் கொள்ளும் போது புரதத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி, சி மற்றும் தாதுக்களின் உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது. இது நார்ச்சத்து நிறைந்ததாகவும், எளிதில் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கிறது.

    நொதித்தல் என்பது உணவைப் பாதுகாக்கும் மிகப் பழமையான முறைகளில் ஒன்றாகும். இதைத் தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். யோகார்ட் போன்ற நொதித்தல் உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பல வகைகளில் உதவி செய்கிறது.

    எனவே புளித்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொண்டு இரத்த சர்க்கரை நோயை விரட்டுவோம்.
    பெண்கள்,ஆண்கள் தினமும் எதிர்கொள்ளும் தலைமுடி உதிர்வுப் பிரச்சினைக்கு சிறப்பான தீர்வு தரும் சிம்பிளான முள்ளங்கி பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தலைமுடி உதிர்வுப் பிரச்சினை இன்று நம்மில் 10 இல் 8 பேர் சந்திக்கும் பிரச்சினையாகும். இத்தகைய தலைமுடி உதிர்வுப் பிரச்சினைக்கு சிறப்பான தீர்வு தரும் சிம்பிளான முள்ளங்கி பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையானவை:

    முள்ளங்கி- 1

    தயிர்- கால் கப்

    எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

    செய்முறை:

    முள்ளங்கியினை நன்கு கழுவி தோல் நீக்கிக் கொள்ளவும்.

    அடுத்து அதனை சிறு துண்டுகளாக அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.

    இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்துப் பயன்படுத்தவும்.

    இந்த முள்ளங்கி பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் நன்கு ஊறவிட்டு காயவிட்டு முடியினை அலசிவிடவும்.
    குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லுங்கள். மேலும், அது குறித்து தெளிவாக விளக்கும் முகவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து குழந்தைகளுடன் உரையாட வையுங்கள்.
    40 வயதுக்குப் பிறகே பலர் சேமிப்பு குறித்து அக்கறை கொள்கிறார்கள். ’ஒரு பத்தாண்டுக்கு முன் சேமிக்கும் யோசனை வந்திருந்தால், நாலைந்து லட்சமாவது கையில் இருந்திருக்குமே’ என்று புலம்பும் பலரை நாம் பார்த்திருப்போம்.

    உண்மையில் சேமிப்பைத் தொடங்க சரியான வயதுதான் என்ன?

    சட்டென்று உங்களின் பதில்… சம்பாதிக்க ஆரம்பித்ததுமே சேமிக்கத் தொடங்கிவிட வேண்டும் என்பதுதான்.

    ஆனால், சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் செலவு செய்யத் தொடங்குகிறோமா… என்ன?

    இல்லைத்தானே… நாம் செலவு செய்ய எப்போது தொடங்குகிறமோ…. அப்போதே நாம் சேமிக்கவும் தொடங்குவதே சரியானது.

    ஆம். பாக்கெட் மணியாக வரும் காலத்திலிருந்தே சேமிக்கக் கற்றுக்கொடுப்பது அவசியம். சேமிப்பு என்பது ஒரு பழக்கம் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. அந்த மனநிலையைக் குழந்தை பருவத்திலிருந்து கற்றுத்தர வேண்டும்.

    அதற்காக குழந்தைகள் விரும்பி வாங்கித் தின்பதைத் தவிர்க்கச் சொல்லி காசு சேமிக்க சொல்ல வேண்டுமா? என்று கேட்காதீர்கள்.

    பத்து ரூபாய் பாக்கெட் மணியில் ஒரு ரூபாயை மிச்சம் பிடிக்கச் சொல்வதே சேமிப்பின் தொடக்கம்.

    குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நீங்கள் நிறைய திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்வீர்கள். அது உங்களுக்குக் கூடுதல் போனஸ். அதன்வழியே நீங்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

    எது எப்படியானாலும் சேமிப்பின் வழியே உங்கள் குடும்பத்திற்கு பலன் கிடைக்கப்போவது என்பது நிச்சயமான ஒன்று.

    சரி… குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைத் தூண்டும் ஐந்து யோசனைகள்.

    முதலில் நீங்கள் சேமிக்கத் தொடங்குங்கள். எப்படிச் சேமிக்கிறீர்கள்… அதை எவ்வாறு முதலீடு செய்கிறீர்கள் என்பதை குடும்பத்துடன் உங்கள் குழந்தையைச் சேர்த்துக்கொண்டு உரையாடுங்கள். அதற்கான ஆவணங்கள் இருந்தால் அதை எளிமையாகச் சொல்லி எல்லோருக்கும் புரிய வைய்யுங்கள்.

    இது ஒருவகையில் குழந்தைகளின் மனதைத் தூண்டி விடுவதற்கான முயற்சி அல்லது சேமிப்பதால் பலன் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

    அவர்களுக்குத் தரும் பாக்கெட் மணியில் பத்து சதவிகிதம் சேமிக்கச் சொல்லுங்கள். அப்படிச் செய்தால் பாராட்டுங்கள். வீட்டுக்கு வரும் உங்கள் நண்பர்களிடம் கூறி பாராட்டச் சொல்லுங்கள்.

    ஒருவேளை பாக்கெட் மணியில் சேமிக்க மறுக்கிற குழந்தை எனில், நீங்கள் கூடுதலாக பத்து சதவிகித பணம் தந்து அதைச் சேமிக்கச் சொல்லுங்கள். ஒரு மாத முடிவில் எவ்வளவு சேமித்திருக்கிறார்களோ அதன் இன்னொரு மடங்கை நீங்கள் தந்து அதை வங்கி அல்லது உண்டியலில் போடச் சொல்லலாம்.
      
    உங்கள் குழந்தையின் சேமிப்பில் ஒரு பொருள் வாங்குங்கள். அதை எல்லோரும் பார்க்கும் இடத்தில் வைத்து, அதன்மீது ‘இந்தப் பொருள் எங்கள் குழந்தையின் சேமிப்பில் வாங்கியது’ என்று எழுதி ஒட்டுங்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் சேமிக்க ஆசை ஏற்படும்.

    குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லுங்கள். மேலும், அது குறித்து தெளிவாக விளக்கும் முகவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து குழந்தைகளுடன் உரையாட வைய்யுங்கள்.

    சிறுவர் சேமிப்பு திட்டம் குறித்து எங்கேனும் நிகழ்ச்சிகள் நடந்தால் அவசியம் அழைத்துச் செல்லுங்கள்.

    இவையெல்லாம் உங்கள் குழந்தையின் மனநிலையில் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கும். பிறகு, சேமித்த பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதையும் கற்றுக்கொடுங்கள். அதுவும் மிகவும் முக்கியமானது.
    வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் பி, சி, கால்சியம், இரும்புச்சத்து என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்து இருப்பதால் எலும்பு வலுவடையும், உடல் ஆரோக்கியம் உயரும்.
    தேவையான பொருட்கள்

    பூசணிக்காய் - சிறிய துண்டு
    தேங்காய் - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி - சிறிய துண்டு
    இந்துப்பு - தேவையான அளவு

    செய்முறை


    பூசணிக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய பூசணிக்காய், தேங்காய், கறிவேப்பிலை, இஞ்சி, இந்துப்பு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பருகவும்.

    சத்தான பூசணிக்காய் ஜூஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவை தாயையும் வயிற்றில் இருக்கும் சேயையும் பாதிக்கும்.
    கருவுற்ற 10 - 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

    அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் கண் விழிப்பது, பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.

    தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தியோ எழுப்பக்கூடாது. சிறுநீரை அடக்கக் கூடாது, அடக்குவதால் சிறுநீரகக் கற்கள் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நார்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சீஸ் அதிகம் கலந்த உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.

    பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.

    காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் சோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.
    வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பலரும் கூறியிருப்பார்கள். ஆனால், செய்யக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன. அப்படியென்ன இருக்கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.
    கொரோனா தொற்று குறைந்த பகுதிகளில் லாக்டெளனில் சில தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. அதனால், சில அலுவலகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்டு இயங்கத் தொடங்கின.

    கொரோனா நோய்த் தொற்று மீண்டும் பரவத் தொடங்கிவிடுமோ என்று பல நிறுவனங்கள் ஹொர்க் ஃப்ரம் முறையை இன்றளவும் கடைபிடித்து வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் இனி எப்போதுமே வொர்க் ஃப்ரம் ஹோம் முறையையே கடைபிடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளன.

    வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பலரும் கூறியிருப்பார்கள்.

    ஆனால், செய்யக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன. அப்படியென்ன இருக்கின்றன…. அவற்றில் 5 விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

    1.லேப்டாப்பை படுக்கையில், மாடிப்படியில், தரையில் போன்றவற்றில் வைத்து வேலை செய்யாதீர்கள். ஏனெனில், ஒருநாள், இருநாள் எனில் இது பரவாயில்லை. நீண்ட நாள்கள் ஓர் ஒழுங்கு தேவை. இல்லையெனில், கழுத்து வலி, இடுப்பு வலி, தலைவலி உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் வரக்கூடும். அதனால், அலுவலத்தில் உள்ளதைப் போல டேபிளும் சேரும் ஏற்பாடும் செய்துகொள்ளுங்கள்.

    2. இப்போது எல்லாமே ஜூம் மீட்டிங் என்றாகி விட்டது. நன்பர்களுக்குள் உரையாடுவதுகூட ஜூமில் நடப்பதாகச் சொல்கிறார்கள். சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ஜூம் மீட்டிங் அழைப்பிதழ்களைப் பார்ப்பீர்கள். அவற்றில் பலவும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற தலைப்புகளாக இருக்கக்கூடும். ஆனால், வேலை நேரத்தில் இப்படியான ஜூம் மீட்டிங்குகளில் கலந்துகொள்வதைத் தவிருங்கள். தேவையற்ற ஜூம் மீட்டிங்குகளை அட்டெண்ட் பண்ணாதீர்கள்.

    3. வீட்டில்தானே இருக்கிறோம் என்பதற்காக 24 மணிநேரமும் லேப்டாப்பும் கண்ணுமாக இருக்காதீர்கள். ஆபிஸ் செல்லும்போது கரெக்ட்டாக நேரம் ஒதுக்குவதைப் போல வொர்க் ஃப்ரம் ஹோம் முறையிலும் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுங்கி வேலை பாருங்கள். மற்ற நேரத்தில் குடும்பத்துடன் செலவிடுங்கள்.

    4. லேப்டாப் எது.. ஸ்நாக்ஸ் பாக்ஸ் எது என்று குழம்பும் விதத்தில் ஸ்நாக்ஸ்க்கு அடிமையாகி விடாதீர்கள். வீட்டில் இருப்பதால் ஏதாவது கொறித்துக்கொண்டே வேலை செய்ய பிரியப்படுவீர்கள். தவறில்லைதான். ஆனால், அது உடலுக்கு ஏற்றதில்லை. அதனால், எப்போவது ஸ்நாக்ஸ் என்றால் பிரச்னையில்லை. ஸ்நாக்ஸ் இன்றி வேலை இல்லை என்பது போல அமைத்துக்கொள்ளாதீர்கள். ஒருவேளை அதற்கு அடிட் ஆகியிருந்தாலும் ஸ்நாக்ஸ் பதிலாக பழங்களை நறுக்கி வைத்துக்கொண்டு சாப்பிடுங்கள்.

    5 எதிர்மறை செய்திகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். சோஷியல் மீடியாவில் அதிகம் உலவும் நபர் எனில், ஏகப்பட்ட செய்திகள் நீங்கள் தேடிச்செல்லாமலே உங்களை வந்தடையும். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் எல்லோருமே மருத்துவரைப் போல அறிவுரைகளை வழங்கி தள்ளுவார்கள். இன்னும் சில தனக்கு வந்த வாட்ஸப் செய்திகள் அனைத்தும் உண்மை என்று நம்பி எல்லோருக்கும் பார்வேர்டு செய்வார்கள். அதில் உள்ள எதிர்மறை செய்திகளை அதிகம் படித்து மனச் சோர்வு அடைந்துவிடாதீர்கள். ஏனெனில், உங்களின் இயல்பான வேலைகளைப் பார்க்க விடாது அவை செய்துவிடும். மிகுந்த கவனம் தேவை.
    முடி உதிர்வும் கவனிக்காத போது முடி வழுக்கையுமாய் பலவிதமான பிரச்சனைகளை இவை கொண்டுவந்து விடுகிறது. அதிலும் இளவயதில் இந்த பிரச்சனைக்கு ஆளாகும் இளம்பெண்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
    பெண்களுக்கு எப்படி வழுக்கை உண்டாகும். தலையில் நடுவில் ஏற்படுமா என்ன என்று கேட்கலாம்.ஆனால் பெண்களுக்கும் வழுக்கை உண்டாகிறது. முன் நெற்றியில், கொத்து கொத்தாக முடி உதிர்வு உண்டாகும் போது இதுவும் வழுக்கையாகத்தான் கணக்கில் கொள்ளப்படும்.

    முடி உதிர்வும் கவனிக்காத போது முடி வழுக்கையுமாய் பலவிதமான பிரச்சனைகளை இவை கொண்டுவந்து விடுகிறது. அதிலும் இளவயதில் இந்த பிரச்சனைக்கு ஆளாகும் இளம்பெண்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.

    பெண் பிள்ளைகள் சிறுவயது முதலே சீரான சமச்சீரான உணவு எடுத்துகொண்டாலும் கூட பூப்படையும் காலத்தில் உண்டாகும் ஹார்மோன் சுரப்பு பாதிக்காமல் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக இருந்துவிட்டால் அவை உடலையும் கூந்தலையும் பாதிக்காது.

    அப்படி ஆரோக்கியமாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கே பூப்படைந்த காலத்தில் ஹார்மோன் சுரப்பில் முடி கொட்டுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் குறைபாடு ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் இவை தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். அதனாலும் முடி கொட்டுவது தீவிரமாகி இளவயதில் வழுக்கை உண்டாகலாம்.

    பெண்களுக்கு பூப்படைந்த காலத்துக்கு பிறகு ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாவது போன்றே கர்ப்பக்காலத்திலும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாகும். இது கர்ப்பக்காலம் தொடங்கி பேறுகாலம் வரையிலும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை இருக்கும்.

    குறிப்பாக பிரசவக்காலத்துக்கு பிறகு உடல் உள்ளுறூப்புகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை ஹார்மோன் சீரான சுரப்பு உண்டாகும் வரை அவை முடி உதிர்வை உண்டாக்க கூடும். இதை தவிர்க்க முயாலாத அளவுக்கு உடல் பலவீனமாகும் போதும் வழுக்கை உண்டாக வாய்ப்புண்டு.

    சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை பாதிப்பு நேரும் போது அவை பெருமளவு முடி உதிர்வை உண்டாக்கிவிடக்கூடும். தைராய்டின் அறிகுறிகளில் முடி உதிர்வும் ஒன்று. தைராய்டு இல்லாத நிலையில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தாலோ அல்லதுகருப்பையில் ஓவரியை சுற்றி ஏற்படும் சில குறைபாடுகளாலோ உண்டாகக்கூடிய பாதிப்புகளில் முடி உதிர்வும் ஒன்று.

    ஹார்மோன் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் அவை முடி உதிர்வை ஊக்குவிக்க கூடியவை. அதனால் ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் குறைபாடுகளை காலதாமதமில்லாமல் சரி செய்துவிட வேண்டும். இல்லையெனில் தீவிரமான முடி உதிர்வும், அதை தொடர்ந்து வழுக்கையும் உண்டாகிவிடக்கூடும்.

    உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து குறையாமல் இருக்க வேண்டும் என்பது போன்று கூந்தல் பிரச்சனைக்கும் ஊட்டச்சத்து தேவை உடலில் இந்த சத்துகள் பற்றாக்குறையாக இருக்கும் போது அவை கூந்தலிலும் பிரதிபலிக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிக குறைபாடு கால்சியமும் அதைதொடர்ந்து இரும்புச்சத்தும் தான்.

    இந்த ஹீமோகுளோபின் குறைபாடால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகம் குறைவாக இருந்தால் அவை நிச்சயம் முடி உதிர்வை உண்டாக்கி தீவிரமாகும் போது வழுக்கை பிரச்சனையை உண்டாக்கும்.

    குழந்தைப்பேறை தள்ளிப்போட கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளும் போது ஹார்மோன் சுரப்பை மருந்துகளால் மாற்றம் செய்யும் போது இது முடி உதிர்வை அதிகமாக ஊக்குவிக்கிறது. தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை ஆண்டுக்கணக்காக பயன்படுத்தும் போது வழுக்கையும் வேகமாக உண்டாகிறது.
    ×