search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வொர்க் ஃப்ரம் ஹோம்
    X
    வொர்க் ஃப்ரம் ஹோம்

    பெண்களே வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையா? அப்ப இந்த விஷயங்களை செய்யாதீங்க...

    வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பலரும் கூறியிருப்பார்கள். ஆனால், செய்யக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன. அப்படியென்ன இருக்கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.
    கொரோனா தொற்று குறைந்த பகுதிகளில் லாக்டெளனில் சில தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. அதனால், சில அலுவலகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்டு இயங்கத் தொடங்கின.

    கொரோனா நோய்த் தொற்று மீண்டும் பரவத் தொடங்கிவிடுமோ என்று பல நிறுவனங்கள் ஹொர்க் ஃப்ரம் முறையை இன்றளவும் கடைபிடித்து வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் இனி எப்போதுமே வொர்க் ஃப்ரம் ஹோம் முறையையே கடைபிடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளன.

    வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பலரும் கூறியிருப்பார்கள்.

    ஆனால், செய்யக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன. அப்படியென்ன இருக்கின்றன…. அவற்றில் 5 விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

    1.லேப்டாப்பை படுக்கையில், மாடிப்படியில், தரையில் போன்றவற்றில் வைத்து வேலை செய்யாதீர்கள். ஏனெனில், ஒருநாள், இருநாள் எனில் இது பரவாயில்லை. நீண்ட நாள்கள் ஓர் ஒழுங்கு தேவை. இல்லையெனில், கழுத்து வலி, இடுப்பு வலி, தலைவலி உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் வரக்கூடும். அதனால், அலுவலத்தில் உள்ளதைப் போல டேபிளும் சேரும் ஏற்பாடும் செய்துகொள்ளுங்கள்.

    2. இப்போது எல்லாமே ஜூம் மீட்டிங் என்றாகி விட்டது. நன்பர்களுக்குள் உரையாடுவதுகூட ஜூமில் நடப்பதாகச் சொல்கிறார்கள். சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ஜூம் மீட்டிங் அழைப்பிதழ்களைப் பார்ப்பீர்கள். அவற்றில் பலவும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற தலைப்புகளாக இருக்கக்கூடும். ஆனால், வேலை நேரத்தில் இப்படியான ஜூம் மீட்டிங்குகளில் கலந்துகொள்வதைத் தவிருங்கள். தேவையற்ற ஜூம் மீட்டிங்குகளை அட்டெண்ட் பண்ணாதீர்கள்.

    3. வீட்டில்தானே இருக்கிறோம் என்பதற்காக 24 மணிநேரமும் லேப்டாப்பும் கண்ணுமாக இருக்காதீர்கள். ஆபிஸ் செல்லும்போது கரெக்ட்டாக நேரம் ஒதுக்குவதைப் போல வொர்க் ஃப்ரம் ஹோம் முறையிலும் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுங்கி வேலை பாருங்கள். மற்ற நேரத்தில் குடும்பத்துடன் செலவிடுங்கள்.

    4. லேப்டாப் எது.. ஸ்நாக்ஸ் பாக்ஸ் எது என்று குழம்பும் விதத்தில் ஸ்நாக்ஸ்க்கு அடிமையாகி விடாதீர்கள். வீட்டில் இருப்பதால் ஏதாவது கொறித்துக்கொண்டே வேலை செய்ய பிரியப்படுவீர்கள். தவறில்லைதான். ஆனால், அது உடலுக்கு ஏற்றதில்லை. அதனால், எப்போவது ஸ்நாக்ஸ் என்றால் பிரச்னையில்லை. ஸ்நாக்ஸ் இன்றி வேலை இல்லை என்பது போல அமைத்துக்கொள்ளாதீர்கள். ஒருவேளை அதற்கு அடிட் ஆகியிருந்தாலும் ஸ்நாக்ஸ் பதிலாக பழங்களை நறுக்கி வைத்துக்கொண்டு சாப்பிடுங்கள்.

    5 எதிர்மறை செய்திகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். சோஷியல் மீடியாவில் அதிகம் உலவும் நபர் எனில், ஏகப்பட்ட செய்திகள் நீங்கள் தேடிச்செல்லாமலே உங்களை வந்தடையும். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் எல்லோருமே மருத்துவரைப் போல அறிவுரைகளை வழங்கி தள்ளுவார்கள். இன்னும் சில தனக்கு வந்த வாட்ஸப் செய்திகள் அனைத்தும் உண்மை என்று நம்பி எல்லோருக்கும் பார்வேர்டு செய்வார்கள். அதில் உள்ள எதிர்மறை செய்திகளை அதிகம் படித்து மனச் சோர்வு அடைந்துவிடாதீர்கள். ஏனெனில், உங்களின் இயல்பான வேலைகளைப் பார்க்க விடாது அவை செய்துவிடும். மிகுந்த கவனம் தேவை.
    Next Story
    ×