search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விளையாட்டுடன் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொடுங்க
    X
    விளையாட்டுடன் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொடுங்க

    விளையாட்டுடன் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொடுங்க

    தொடர் விடுமுறை, பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்-சிறுமியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விளையாட்டுடன் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொடுப்பதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
    தொடர் விடுமுறை, பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்-சிறுமியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறார்கள். விளையாட்டுடன் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொடுப்பதற்கு இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலம் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் நமக்கு உருவாகும். கல்வியுடனான தொடர்பை தக்கவைக்கும் விதமாக ‘வீட்டு பள்ளிக்கூடம்’ என்ற சூழலையும் ஏற்படுத்தலாம்.

    குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது, பள்ளியிலும், வீட்டிலும் அவர்களின் செயல்பாட்டுக்கான நிலையான அட்டவணை உருவாக்கப்பட்டிருக்கும். அதன்படியே செயல்பட்டு வந்திருப்பார்கள். அதனை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. பள்ளிக்கூடம் செல்லும்போது இரண்டு மணிநேரம் படிப்புக்காக நேரத்தை ஒதுக்கி இருந்தால், இப்போது ஒரு மணி நேரத்தையாவது செலவிட வைக்கலாம். ஓடியாடி விளையாடும்போது சில மணி நேரங்களில் சோர்ந்து போய்விடுவார்கள். பின்பு ஓய்வு எடுக்க விரும்புவார்கள். அந்த ஓய்வுக்கு பிறகான நேஇரத்தை படிப்புக்காக ஒதுக்கலாம். அதற்கேற்ப வீட்டில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

    அது குழந்தைகள் படிப்பின் மீது கவனம் செலுத்துவதற்கு உதவும். தினமும் அதே இடத்தில் படிப்பை தொடரவைக்க வேண்டும். அத்தகைய சூழல், மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். விடுமுறை நாளில் படிக்கும்போது கவனச்சிதறல் ஏற்படலாம். அதனை தவிர்க்க இணையத்தின் உதவியை நாடலாம். குழந்தைகளின் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி அவர்களின் படிப்பு சார்ந்த ஏராளமான தகவல்களும் வீடியோ வடிவில் இணையதளத்தில் நிறைந்திருக்கின்றன. அதனை பார்க்கவைத்தும் கற்றுக்கொடுக்கலாம். எளிமையான கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை இணையதளத்தில் தேடி கண்டுபிடிக்க வைக்கலாம்.

    வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் சூழலும் நிலவுவதால், அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு உதவும். ஆசிரியர்களுடன் உரையாடும் சூழல் நிலவும்போது கவனச்சிதறல் இன்றி படிக்கவும் செய்வார்கள். ஓவியம், நடனம், இசை மீது நிறைய குழந்தைகளுக்கு நாட்டம் இருக்கும். அவர் களின் விருப்பத்தை அறிந்து, அதில் தனித்திறனை மெருகேற்றுவதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தினால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் எண்ணம் அவர்களுக்குள் எழாது.

    குழந்தைகளை வீடியோ கேம்களில் கவனம் செலுத்தவிடாமல், அவர்களோடு விளையாடுவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டுகள் அதற்கு துணைநிற்கும். அவை குழந்தைகளின் புத்திக்கூர்மைக்கு வழிவகுக்கும். மூளை உடற் பயிற்சியை உள்ளடக்கிய புதிர்கள் மற்றும் பிற விளையாட்டுகளையும் தேர்வு செய்யலாம். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதோடு அல்லாமல் அவர்களிடம் மனம் விட்டு பேசுவதற்கும் குறிப்பிட்ட நேஇரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் நல்லவிதமாக நேஇரத்தை செலவிடக்கூடிய வகையில் உங்கள் நேஇரத்தை ஒதுக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உடற்பயிற்சியும் முக்கியம் என்பதை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். அதில் ஈடுபாடு கொள்ள வைப்பதற்கு இசையுடன் கூடிய உடற்பயிற்சிகளை தேர்வு செய்யலாம். அது உங்களையும் குழந்தைகளையும் நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க துணை நிற்கும்.

    Next Story
    ×