என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததையொட்டி பூர்ணாஹுதி, கலசாபிஷேகத்துடன் கொடியிறக்கம் நடந்தது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி  கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. நிறைவு நாள் காலை நடராஜசாமிக்கு ஆஸ்தானம், திரிசூலத்துக்கு ஸ்நாபன திருமஞ்சனம், திரிசூல ஸ்நானம் நடந்தது. அதன் பிறகு மூலவருக்கு பூர்ணாஹுதி, கலசாபிஷேகம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கொடியிறக்கம் நடந்தது.

    இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ராவணாசூர வாகனச் சேவை, ஆஸ்தானம் நடந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், உதவி அதிகாரி சத்ரேநாயக், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாசநாயக் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
    ஸர்வ மங்களா தேவியை வணங்கி வந்தால், பயணங்களில் பாதுகாப்பு உறுதியாகும். அனைத்து வித மங்களங்களும் வந்துசேரும். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனைத்து அன்பரையும் காக்கின்றது.
    இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்தினங்களும் அலங்கரிக்க, தலையில் வைடூர்ய மகுடம் சூடியிருக்கிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனைத்து அன்பரையும் காக்கின்றது. இந்த தேவி, நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டு உடுத்தி, சர்வ மங்களமும் பொருந்திய தேவியாக அருள்பாலிக்கிறாள். இவளைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன. இந்த தேவியை வணங்கி வந்தால், பயணங்களில் பாதுகாப்பு உறுதியாகும். அனைத்து வித மங்களங்களும் வந்துசேரும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை திரயோதசி, தேய்பிறை திருதியை.

    மந்திரம்:-

    ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
    சந்த்ராத்மிகாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்
    மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று அதிகாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    முன்னதாக, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வேத பண்டிதர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் கங்காபவானி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிைக தாயாரை கோவில் அலங்கார மண்டபத்தில் வைத்து தங்க நகைகளாலும், பல வண்ணமலர்களாலும் அலங்காரம் செய்தனர். அதோடு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய பட்டு வஸ்திரத்தை அணிவித்தும் அலங்காரம் செய்தனர்.

    அங்கு கணபதி பூஜை, புன்னியாவசனம், வருண பூஜை, கலச பூஜை, ஹோமம் நடந்தது. சண்டிகேஸ்வரர் கல்யாண தரகராக செயல்பட்டு 5 முறை பேச்சு வார்த்தை நடத்தி சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள பார்வதிதேவியை சம்மதிக்க வைத்த நிகழ்ச்சியை பக்தர்கள் நடத்தி காண்பித்தனர்.

    இதையடுத்து மணமக்களின் திருமண உடைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து மேள தாளம், மங்கல வாத்தியங்கள் இசைக்க, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத நேற்று அதிகாலை 3 மணியளவில் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது கோவில் வளாகத்தில் திரண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் இரவு 9 மணியளவில் சபாபதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி தம்பதியர், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரகசீனிவாசுலு தம்பதியர், கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. சிறப்பு வாய்ந்த பைரவர் கோவில்கள் எங்குள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
    சீர்காழி சட்டநாதர் ஆலயம்:

    சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும். திருஞான சம்பந்தர் அவதரித்த மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்திலுள்ள மலைக்கோயில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோயில் உள்ளது.

    காஞ்சிபுரம் வைரவேச்சுரம்:

    திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் உள்ளது. இங்கு பிரம்மன்சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளியபைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான். இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது.

    சேத்ரபாலபுரம் கால பைரவர்:

    பைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர்.

    தில்லையாடி கால பைரவ விநாயகர்:

    மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் வழியில் பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது.

    வைரவன்பட்டி:

    பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த வைரவன்பட்டியில் மகா பைரவர் சிவகுமரனாகத் தனிச்சிறப்புடன் வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.

    சென்னிமலை:

    ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது.

    திருப்பத்தூர் யோக பைரவர்:

    யோக பைரவரின் அருட்தலமான இந்த திருப்பத்தூர் மதுரையிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    இலுப்பைக்குடி வடுக பைரவர்:

    காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள இந்த இலுப்பைக்குடித் தலத்தில் தான்தோன்றீஸ்வரர் - வடிவுடையம்மன் மூலவர் வடிவங்களாகத் திகழ்ந்தாலும் பரிவாரத் தெய்வமாகத் திகழும் வடுக பைரவரே சிறப்புத் தெய்வமாக வழிபடப்படுகிறார். புதுச்சேரியிலுள்ள திரு ஆண்டார் கோயில் வடுக பைரவர், திருப்பாதிரிபுலியூர் கால பைரவர், திருமயிலை கபாலீஸ்வரர், திருஒற்றியூர் பைரவர், திருவான்மியூர் பைரவர் முதலிய தலங்களிலுமுள்ள பைரவ வடிவங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக வழிபடப்படுகின்றனர்.

    ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள தலங்கள்: திருப்பதிஏழுமலையான் சக்கரம் ஸ்வர்ண ஆகர்ஷண சக்கரம் என்பதால் பொன் பொருள் குவிகிறது.

    சிதம்பரம்:

    தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார்.

    விருதுநகர்:

    இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார்.

    ஆடுதுறை:

    ஆபத் சகாயேச்வரர் கோயிலில் கால பைரவர் மட்டுமல்லாது ஸ்வர்ண பைரவரும் இருக்கிறார்.

    தபசுமலை:

    புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தபசு மலையில் கௌசிக முனிவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும், முருகப் பெருமானையும் நேரெதிரே நிர்மாணித்து ஸ்வர்ண பைரவர், பைரவி உற்சவ மூர்த்தங்களை அமைத்துள்ளார்.

    காரைக்குடி:

    இங்கு புகைவண்டி நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இலுப்பைக்குடி என்னும் தலம். இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

    படப்பை:

    தாம்பரத்திலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பை என்னும் ஸ்தலமுள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மூர்த்திகளை சிறப்புற அமைத்துள்ளார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோயில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ளக்ஷத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோயிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

    பஞ்சமுக பைரவர்:

    முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள்பாலிக்கிறார்.

    முக்கிய பைரவர் ஸ்தலங்கள்:

    வைரவன்பட்டி:

    பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.

    சிவபுரம்:

    இது கால பைரவ சத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

    எமனேஸ்வரம்:

    எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

    காளையார் கோயில்:

    இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    திருநாகை:

    நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.

    மதுரை:

    இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும், கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.

    திருவண்ணாமலை:

    இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.

    திருமயம்:

    இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.

    பொன்னமராவதி புதுப்பட்டி:

    இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

    சேந்தமங்கலம்:

    இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.

    முறப்ப நாடு:

    எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.

    திருவாஞ்சியம்:

    தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.

    திருச்சேறை:

    கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.

    திருப்பாச்சேத்தி:

    மதுரை - ராமேஸ்வரம் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

    கும்பகோணம்:

    வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.

    காளஹஸ்தி:

    இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.

    சீர்காழி:

    சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.

    சேலம்:

    இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.
    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள் வைத்து, பால் ஊற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

    கொரோனா முதல் அலை பரவல் தொடங்கியதில் இருந்து கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், பக்தர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

    இந்தநிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்தநிலையில் நாகர்கோவில் நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்ய 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள் வைத்து பால் ஊற்றி வழிபாடு செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் மறைசாட்சி தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி நடந்தது.

    இதில் கம்ளார் பங்குத்தந்தை பென்ஹர் தலைமையில், ஆர்.ஆர்.நகர் பென்சிகர் அருளுரையாற்றினார். மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு, கொடி நேர்ச்சை, ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடந்தது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து திருவிழா கொடியேற்றம் நடந்துது. தொடர்ந்து நடந்த திருப்பலியில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை தாங்கி அருளுரையாற்றினார். நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணைபங்குதந்தை ஆன்றனி புருனோ, பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாயமைக்கிள்ராஜ், துனணச்செயலாளர் காயரூபிலெட், பொருளாளர் சகாயபென்சிகர், கோட்டார் மறைமாவட்ட பேரவை உறுப்பினர் ஜேக்கப்மனோகரன், கவுன்சிலர் ஜெனட்சதீஸ்குமார், முன்னாள் பங்கு பேரவை துணைத்தலைவர் பயஸ் ராய், அருட் சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடியேற்று நிகழ்ச்சியின் போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்து.

    விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ம் நாள் விழாவில் நற்கருணை பவனியும், 9-ம் நாள் விழாவில் இரவு வாண வேடிக்கையும், தொடர்ந்து தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் விழாவில் திருப்பலியம், மாலை தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயத்தின் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரா பகுதியில் உள்ள சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    பெங்களூரு கே.பி.அக்ரஹாரா நேதாஜி நகர் பகுதியில் சீயோன் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை, அசன பண்டிகை மார்ச் 4-ந் தேதி (அதாவது நேற்று) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை ஆலய ஆயர் செல்வி தாசன் அதிகாலை 5.30 மணிக்கு ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவில் ஏரியா சேர்மன் அருட்திரு ஜஸ்டின் யேசுதாஸ், சிட்டி ஏரியா சேர்மன் அருட்திரு பால் தினகரன், ஆயர் வில்சன் தாசன் ஆகியோர் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினர்.

    சிவில் ஏரியா சேர்மன் அருட்திரு ஜஸ்டின் யேசுதாஸ் பேசுகையில், கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு சீயோன் ஆலயம் சிறிய ஆலயமாக இருந்தது. தற்போது இந்த ஆலயம் பிரமாண்ட வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு ஆலயத்தின் ஆயர், பரிபாலன குழு மற்றும் சபை மக்களே காரணம். இந்த பண்டிகையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு இருக்கிறீர்கள். மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது இந்த ஆலயத்தில் அமர கூட இடம் இல்லை. இன்னொரு ஆலயம் கூட கட்டலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மக்களாகிய நம்மை தேவன் பாதுகாத்து வருகிறார். தேவன் நம்மை எப்போதும் சீர்படுத்தி, சிறப்பு படுத்தி நிலை நாட்டுவார் என்றார்.

    பின்னர் அவர் 32-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை கொண்டாடும் சீயோன் ஆலய ஆயர் செல்வி தாசன் மற்றும் திருச்சபையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதன்பின்னர் சீயோன் ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் மக்களுக்கு தேவ செய்தியை வழங்கினார். இதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் சிறப்பு ஆராதனை நடந்தது.

    பின்னர் மதியம் 1 மணியளவில் அசன விருந்தை ஆயர் செல்வி தாசன் தொடங்கி வைத்தார். இந்த விருந்தில் நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். அசன பண்டிகையையொட்டி ஆலயத்தில் இன்னிசையுடன் கூடிய ஆராதனை பாடல்கள் ஒலிக்கப்பட்டன. மேலும் விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய ஆயர் செல்வி தாசன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பீட்டர் தங்கதுரை, கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம், வாலிபர்கள் ஐக்கியம், ஓய்வுநாள் பாடசாலை குழு, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்து இருந்தனர். இந்த பண்டிகையில் பல்வேறு ஆலயங்களை சேர்ந்த ஆயர்களும், காந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தினேஷ் குண்டுராவ், முன்னாள் கவுன்சிலர்கள் பி.டி.எஸ்.நாகராஜ், பழனி, கர்நாடக இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் செல்லப்பா மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அசன விருந்தை தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் யோவான் குழுவினர் செய்து இருந்தனர்.
    பக்தர்களுக்கு வழங்கப்படும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இன்று வரை உயர்த்தவில்லை. தற்போது அதை உயர்த்தும் எண்ணமும் இல்லை.
    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று காலை திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள பக்தர்கள் பொருட்கள் வைப்பறை, பழைய அன்னதானக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சாதாரணப் பக்தர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு இலவச தரிசனம் தொடங்கி 10 நாட்களுக்குமேல் ஆகிறது. பக்தர்கள் சிரமமில்லாமல் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    திருமலையில் இலவச தரிசனம் தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப அன்னதானம் வழங்கப்படும். இதுதொடர்பாக அன்னதானத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவுடன் ரொட்டியும், சப்பாத்தியும் வழங்கப்படும். திருமலையில் மேலும் இரு பகுதிகளில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளை மீண்டும் தொடங்க கால அவகாசம் எடுத்துள்ளோம். அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல், கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு வழங்கப்படும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இன்று வரை உயர்த்தவில்லை. தற்போது அதை உயர்த்தும் எண்ணமும் இல்லை.

    சாதாரணப் பக்தர்களுக்கு விரைவான தரிசனம் வழங்கப்படும். இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதற்காக அவர்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டிக்கெட் பெறும் சாதாரணப் பக்தர்கள் அன்றே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். அதற்காக திருப்பதி, திருமலையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    திருமலையில் உள்ளூர் ஓட்டல்களும், துரித உணவகங்களும் வழக்கம்போல் செயல்படும். அதன் உரிமையாளர்களுக்கு எந்த ஒரு நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை. திருமலையில் பல்வேறு இடங்களில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்க கவுண்டர்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தேவஸ்தான அதிகாரிகள் உடனிருந்தனர்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் படிப்படியாக நின்றுவிடும்.
    சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும்.

    பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும்; பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும்; வைத்தப் பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.

    அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்; அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்; இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்;

    இவ்வாறு 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.
    ஊர்வலத்தில் திருநாமக் கொடி ஏந்தியபடி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா அரஹர, அய்யா அரஹர என்று அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி பாதயாத் திரையாக நடந்து சென்றனர்.
    மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 190-வது ஆண்டு அவதார திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு சென்னை, சென்னை புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பக்தர்கள் பழைய வண்ணாரப்பேட்டை ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து இரண்டு குதிரைகள் பூட்டிய அலங்கார சாரட் வண்டியில் அய்யா அருளிச் செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலமாக சென்றனர்.

    காலை 5.30 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், லதாநாராயணன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஊர்வலத்தில் திருநாமக் கொடி ஏந்தியபடி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா அரஹர, அய்யா அரஹர என்று அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி பாதயாத் திரையாக நடந்து சென்றனர்.

    ஊர்வலம் நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சென்றது. முன்னதாக ஊர்வலம் செல்லும் வழியில் டி. எஸ். எஸ். நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர். பி. மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பக்தர்களை வரவேற்று உணவு வழங்கினர். ஊர்வலம் செல்லும் வழியெங்கும் உபய தாரர்கள் நீர், மோர் வழங்கினர்.பகல் 12 மணியளவில் ஊர்வலம் மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஆண்டுக்கு 260 நாட்கள் அங்கு உற்சவம் நடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் எப்போதும் திருவிழா கோலமாக காணப்படும். ஆண்டுக்கு 260 நாட்கள் அங்கு உற்சவம் நடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    சித்திரை மாதம் அவதார உற்சவம்நடைபெறும். வைகாசி பிரமோற்சவம் நடத்தப்படும். ஆனி கோடை உற்சவமும், ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படும். ஆனி சுவாமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பெரியாழ்வார்சாத்தும் முறை கடைபிடிக்கப்படும். ஆடி மாதம் பூசம் உற்சவமும், ஆண்டாள் திருக்கல்யாணமும் நடைபெறும். ஆவணி மாதம் பவித்ரா உற்சவம் 7 நாட்களுக்கு நடைபெறும்.

    அந்த மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் கோகலாமாக கொண்டாடப்படும். புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம் மேற்கொள்ளப்படும். நவராத்திரி 10 நாட்களும் மண்டபத்தில் தயாருக்கு திருமஞ்சனம் செய்யப்படும். இந்த தலத்தில் தாயார் படிதாண்டா பத்தினி அம்சத்தில் உள்ளார். பெருமாளும் தாயாரும் ஏகாந்த சேவையில் இருப்பார்கள்.

    ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். கார்த்திகை மாதம் பரணி தீபமும், கார்த்திகை தீபமும் ஏற்றப்படும். மூலவர் மற்றும் தங்கப்பல்லிக்கு தைலகாப்பு சாத்தப்படும். மார்காழி மாதம் 21 நாட்களுக்கு ராபத்து, பகல்பத்து விழாக்கள் கொண்டாடப்படும். தை மாதம் மகரசங்ராந்தி கொண்டாடப்படும். அந்த மாதத்தில் அனந்தசரஸ் புனித திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். தை மாதத்தில் ரதசத்தமி விழாவும் நடைபெறும்.

    சுவாமி சூரிய பிரபை, சந்திர பிரபை திருவீதி உலா வருவார். மாசி மாதம் வனபோஜனம் நடைபெறும். ஆற்றங்கரை அல்லது வன பகுதியில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். காஞ்சீபுரத்துக்கு மிக அருகில் பாலாற்றாங்கரை இருப்பதால் அங்கு சென்று இந்த பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. மாசி மாதம் தென்னேரியில் இருந்து உற்சவம் நடத்தப்படும். பவுர்ணமி தினத்தன்று ராஜகுளத்தில் தெப்பம் விடப்படும். மூன்று நாட்கள் தவன உற்சவம் நடைபெறும். பங்குனி மாதம் 7 நாட்களுக்கு அவதார திருநாள் கொண்டாடப்படும்.
    கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருத்தேரில் ஸ்ரீமலை மாதேஸ்வர சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் ஸ்ரீமலை மாதேஸ்வர கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மகா தேரோட்டம் நடந்தது. மகா தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருத்தேரில் ஸ்ரீமலை மாதேஸ்வர சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி வர, கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் சில பக்தர்கள் வாழைப்பழத்தில் மரிக்கொழுந்தை சொறுகி, அதனை மகா தேர் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மகா தேருக்கு முன்பாக ருத்திராட்ச தேர், பசு தேர், புலி தேர் ஆகியன கோவிலை சுற்றி வலம் வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த திருவிழாவையொட்டி 50-க்கும் மேற்பட்ட தமிழக, கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் தமிழக, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
    ×