என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம். அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக்
காப்பான்
- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும். அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும். அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை) கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
ராமபக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள். ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம். ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர். அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!

எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்னதானம், ரத்த தானம் உள்பட நீங்கள் எத்தனையோ தானங்கள் செய்திருப்பீர்கள். துளசியை நீங்கள் தானமாக கொடுத்து இருக்கிறீர்களா? ஒரு தடவை துளசி இலைகளை தானமாக கொடுத்துப் பாருங்கள். அது தரும் மேன்மைக்கு நிகராக எதுவுமே இல்லை என்பதை உணரலாம். கார்த்திகை மாதம் துளசியை தானம் செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியமும், பலனும் கிடைக்கும்.
எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துளசியின் வேரில் தேவர்களும், தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். எனவே துளசியை வீட்டில் வளர்க்கலாம். வீட்டு மாடத்தில் வைத்திருக்கும் துளசி செடியை தெய்வமாக கருதி சுமங்கலி பெண்கள் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். துளசி செடிக்கு தினமும் காலை, மாலை இரு நேரமும் பூஜை நடத்த வேண்டும்.
பொதுவாக பசுக்கள் நிறைந்த இடம், புனித நதிக்கரைகள் மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களில் துளசி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வீட்டில் துளசியை வளர்க்கும் போது, அதற்குரிய சுத்தம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கார்த்திகை பவுர் ணமி தினத்தன்று துளசி மாடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தால் நினைத்தது நடக்கும்.
பெண்கள் துளசியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களிடம் லட்சுமி கடாட்சம் ஏற்படும். துளசி செடியின் கீழ் தேங்கி இருக்கும் தண்ணீரில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அடங்கி இருப்பதாக ஐதீகம். அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் தோஷங்கள் விலகி விடும்.
துளசித் தீர்த்தத்துக்கு இருக்கும் சிறப்பை பல தடவை மகாவிஷ்ணு வெளிப்படுத்தியுள்ளார். ‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய் தால், ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த அளவுக்கு ஆனந் தம் அடைவேன்’ என்று மகாவிஷ்ணு கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல, ஒரு தடவை துளசிக்கு மகா விஷ்ணுவே பூஜை செய்தார் என்று ஹரிவம்சத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது. விஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரமாகும். எனவே தான் அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகாவிஷ்ணுவுக்கு வெப்பத்தைத் தரும் துளசியை பூஜைக்குரிய பொருளாக வைத்துள்ளனர்.
துளசியை எடுக்கும் போது பயப்பக்தியுடன் பறிக்க வேண்டும். அதிகாலையில் நீராடி சந்தியா வந்தனம் செய்து, எல்லாவித அனுஷ்டானங் களையும் முடித்த பிறகே துளசி இலையை பறிக்க வேண்டும். துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது. வீட்டில் துளசி வளர்ப்பதால் சுத்தமான காற்றை நாம் பெற முடியும். புகை மற்றும் மாசுவை தூய்மைப் படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு.
அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் துளசி உயர்வானது. புனிதமானது. ஈடு இணையற்றது. இத்தகைய சிறப்புடைய துளசியை வைணவத் தலங்களுக்கு செல்லும் போது மறக்காமல் வாங்கிச் செல்ல வேண்டும். துளசி சார்த்தி நீங்கள் வழிபடும் போது பெருமாளின் அருளை மிக எளிதாகப் பெற முடியும்.
அது மட்டுமின்றி மகா விஷ்ணுவின் வைகுண்டத்துக்கு சென்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ வழி ஏற்படும். துளசி வழிபாடு செய்யும் இளம் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். செல்வம் சேரும்.

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வருகிற 8-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வருகிற 16-ந்தேதி பால்குட ஊர்வலம் நடக்கிறது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வருகிற 8-ந்தேதி காலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முன்னதாக வருகிற 6-ந்தேதி மாலை சுமங்கலி பூஜை நடக்கிறது. வருகிற 8-ந்தேதி காலை கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதன் பின்னர் அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சியும் பின்னர் அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள்.
தொடர்ந்து தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வருகிற 15-ந்தேதி மாலை கரகம், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி முத்தாலம்மன் கோவிலில் இருந்து எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா 16-ந்தேதி காலையில் நடக்கிறது. அன்றைய தினம் விரதம் இருக்கும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் அன்றைய தினம் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக காணப்படுவார்கள். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் கரகம் பருப்பூரணிக்கு கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியும், வருகிற 17-ந்தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுமதி தலைமையில் கோவில் கணக்கர் பாண்டி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீநரசிம்மரை விரதம் இருந்து பிரதோஷத்தன்று வழிபடுவது சிறப்பாகும். அன்று மாலை லட்சுமி நரசிம்மர் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும்.
நரசிம்மரை பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவர் எளிதானவர். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக்கூடிய ஆற்றல் நரசிம்மரைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாக பலனும் காண முடியும்.
தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றிக் குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வெல்லத்தினால் செய்த பானகம் நைவேத்தியம் வேண்டும்.
48 நாள்களாவது பூஜித்து வர வேண்டும். மாலை நேரத்தில் செய்வது விசேஷப் பலன் தரும். ஏனெனில் அவர் நரசிங்கமாக அவதரித்தது மாலை நேரத்தில்தான்.
ஆனால் ஒன்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மட்டுமின்றி, தெய்வத்தின் எந்த உருவையும், தோஷப் பரிகாரமாகப் பூஜித்து வரும் காலத்தில், அசைவ உணவைத் தவிர்ப்பதும், நீராடி, நியமத்துடனும், தூய்மையான உள்ளத்துடனும் நம்பிக்கை, பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஸ்ரீநரசிம்மரை விரதம் இருந்து பிரதோஷத்தன்று வழிபடுவது சிறப்பாகும். அன்று மாலை லட்சுமி நரசிம்மர் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மரை விரதம் இருந்து சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் வழிபடலாம். நரசிம்மர் துதியை தினமும் சொல்லி தியானித்துவர ஏவல், பில்லி சூனியம், காரிய தடை, கடன் தொல்லை இவைகள் நீங்கி சுகம் பெறலாம்.
திருமண தடை உள்ளவர்கள் பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து பானகம் வைத்து நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெருமாளின் திவ்ய கருணையை பெறலாம்.
குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள பெண்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி மாதவனையும் மகாலட்சுமியையும் வழிபடுவர். ஆனால் ஸ்ரீ மகாலட்சுமியே நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று மாவிளக்கேற்றி மகா விஷ்ணுவை வழிபடுவதை நீங்கள் எங்காவது பார்த்ததுண்டா?
சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ அஷ்ட லட்சுமி கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையில் காலையில் வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடந்து முடிந்த பிறகு இந்த வழிபாடுகள் துவங்கும். இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.
அதன் பிறகு இங்குள்ள அஷ்ட லட்சுமிகளின் சன்னதிகளில் ஒரு சன்னதிக்கு ஒரு மாவிளக்கு என்ற விகிதத்தில் எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும். (இவற்றை ஸ்ரீ மகா லட்சுமியே ஏற்றுவதாக ஐதீகம்) பிறகு அவை அனைத்தும் ஒவ்வொன்றாக உற்சவர் ஸ்ரீ நிவாசப் பெருமாள் முன்பு கொண்டு செல்லப்பட்டு அந்த எட்டு மாவிளக்கின் தீபச் சுடர்களாலும் பெருமானின் முன்பு ஒரு பெரிய அகண்ட தீபம் ஏற்றப்படும்.
மாலையில் சஹஸ்ரநாம அகண்ட பாராயணம் பூஜைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி பகவானை சேவித்தலும் வரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெருமாளின் திவ்ய கருணையை பெறலாம்.

வருகிற 8-ந்தேதி பச்சைக்காளி மேலராஜவீதி சங்கநாராயணர் கோவிலில் இருந்தும், பவளக்காளி கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்தும் புறப்பட்டு அன்று தஞ்சை நகரம் முழுவதும் வலம் வந்து ஆசி வழங்குகிறார்கள்.
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கோடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களுள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவில் சோழ மன்னன் விஜயாலயனால் கட்டப்பட்டு சோழர், நாயக்கர், மராட்டியர் போன்ற மன்னர்களால் போற்றி பாதுகாக்கப்பட்டது ஆகும்.
இந்த கோவிலின் உற்சவர்களான பச்சைக்காளி, பவளக்காளி ஆகியோருக்கான திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது பூரணம், பொற்கொடியாள் அய்யனாருக்கும் காப்பு கட்டப்பட்டது.
இதையடுத்து வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பச்சைக்காளி மேலராஜவீதி சங்கநாராயணர் கோவிலில் இருந்தும், பவளக்காளி கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்தும் அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு அன்று தஞ்சை நகரம் முழுவதும் வலம் வந்து ஆசி வழங்குகிறார்கள்.
9-ந்தேதி (புதன்கிழமை) மாலை பூஜைகளும், அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தஞ்சையில் நடைபெறும் கோவில் விழாக்களுள் பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகும். 10-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் மேலவீதி காளியாட்ட உற்சாவ கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும். அந்த பார்வை பட்டால் உங்களை எந்த தீய சக்திகளும், திருஷ்டிகளும், தீ வினைகளும் நெருங்காது.
வைணவத் தலங்களில் கருட கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருடனை தரிசனம் செய்த பிறகு, பெருமாளையும், தாயாரையும் தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தார். எனவே சுவாதி நட்சத்திர நாட்களில் (நாளை சுவாதி நட்சத்திர நாள்) கருடனை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிடைப்பார். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆலயங்களில் முக்கிய திருவிழாக்கள் நடக்கும் போது மேலே கருடன் பறப்பதை பார்த்திருப்பீர்கள். அப்படி கருட தரிசனம் கிடைக்கும் போது கை கூப்பி வணங்க தேவை இல்லை. மனதுக்குள் கருடன் அருள் பெறும் மந்திரங்களை சொல்லி வழிபட்டால் போதும்.
மேலும் கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும். கருடனின் பார்வைக்கு, ‘சூட்சும திருஷ்டி’ என்று பெயர். அந்த பார்வை பட்டால் உங்களை எந்த தீய சக்திகளும், திருஷ்டிகளும், தீ வினைகளும் நெருங்காது. எனவே கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கருடனை வழிபட்டால், நோய்கள், பாவங்கள் மனக்குழப்பங்கள் நீங்கும்.
திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் கருடனை வழிபட்டால் பெண்களுக்கு அழகு உண்டாகும். பகை விலகும். குடும்ப சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்.
புதன், வியாழன் கிழமைகளில் வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பகைவர்கள் வைத்த சூனியம் நீங்கும்.
வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஆயுள் கெட்டியாகும். எந்த விஷயத்திலும் துணிச்சல் உண்டாகும். தன்னம்பிக்கை, ஆர்வம் அதிகரிப்பதால் செல்வம் பெருகும்.
புரட்டாசி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் கருட சேவை நடைபெறும். அன்றைய தினம் கருட சேவை வழிபாடு செய்தால், பெருமாளின் கருணைப் பார்வை நம் மீது திரும்பும். எனவே புரட்டாசி கருட சேவைகளை தவற விடாதீர்கள்.

சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றார்கள் என்பது தலவரலாறு.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படும் இந்த கோவில் தேவார பாடல் பெற்ற தலமாகும். முன்னொரு காலத்தில் ஆதிசேஷன், தான் பெற்ற சாபத்தால் உடல் நலிவுற்று ஈசனிடம் வேண்டியபோது, ஈசன், ‘மகா சிவராத்திரி அன்று முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், 2-வது காலத்தில் திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரரையும், 3-வது காலத்தில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரரையும், 4-வது காலத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கினால் சாபம் நீங்கும்’ என்று அருளினார்.
அதன்படி ஆதிசேஷன் இந்த 4 கோவில்களிலும் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றார்கள் என்பது தலவரலாறு. இக்கோவிலில் அஷ்டநாகங்கள் மற்றும் அகலிகை, சுனிதன் போன்ற வடநாட்டு அரசர்களும் இறைவனை வழிபட்டதாக கூறப்படுகிறது.
வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.13 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆவதையொட்டி திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு -கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.
இதையொட்டி ராகு- கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன. ராகு -கேது பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் ஆவர்.
ராகு-கேது பெயர்ச்சி விழாவில் வெளிநாடு மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவியரசு, தக்கார் சீனிவாசன், மேலாளர் வள்ளிகந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இவர்களுடன் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர், கண்ணப்பர் நான்கு மாடவீதிகளில் உலா வந்தனர். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தேர் வீதி வழியாக நேரு வீதி வரை உலா வந்து திருமண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் சரித்திரத்தை சற்று நோக்குங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் தான் அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறது.
ஆண்டவரே நீரே என் கடவுள் நான் உம்மை மேன்மைப்படுத்துவேன். உம் பெயரை போற்றுவேன். நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர். (ஏசாயா 25:1)
ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் தனிமையில் அமருங்கள். உங்கள் லட்சிய கனவுகளை எண்ணிப்பாருங்கள். நீங்கள் நினைத்தது கிடைத்து விட்டது போன்று மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்று விடுவீர்கள், என்று மனத்தத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
நமது கனவுகள் நியாயமானவை. அர்த்தமுள்ளவை. நமது கனவுகளை நாம் தான் வளர்த்து கொள்ள வேண்டும். கனவுகள் நமது நனவுகளை இனிமையாக்கி இருக்கிறது என்பது உண்மை. எடுத்துக்காட்டாக ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை எடுத்துக்கொள்வோம். யாரோ ஒருவருடைய கற்பனை திறமை தான் இது. முதலில் அந்த கண்டுபிடிப்பு எப்படி இருக்கும் என்று விஞ்ஞானி சிந்திக்கிறார். எவ்வகையில் சாத்தியம் என்று தன்னைத்தானே திட்டமிடுகிறார். அதற்கான கருவிகளை வைத்து சோதனை செய்கிறார். சோதனையின்படி நிலைகளை வேறு வேறு விதங்களில் மாற்றியமைக்கிறார். நிறைவான வெற்றி பெறுகிறார். புதிய கண்டுபிடிப்பு உருவாகிறது.
இப்படி சிந்திக்கின்ற போது பல வெற்றிகளை நாம் வாழ்வில் பெற்றுக்கொள்ள முடியும். சிந்தனை என்ற கருவியை எடுத்து வாழ்வில் செயல்படுங்கள். வெற்றியும் தோல்வியும் வாழ்வின் இரு பக்கங்கள். தோல்வியை காணாத மனிதன் முழுமனிதம் அல்ல என்கிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் சரித்திரத்தை சற்று நோக்குங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் தான் அவர்களை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கிறது. வளைத்து கொடுப்பது என்பது அத்தனை சுலபமல்ல. அதற்கு சாதூரியம், எதையும் தாங்கும் இதயம் பெற்றிருக்க வேண்டும்.
அதனை பின்பற்றிய மனிதர்கள் வாழ்க்கையே வரலாறாக மாறி இருக்கிறது. ஒரு மனிதனின் உண்மையான வெற்றி அவன் அடைந்த தோல்வியிலேயே ஆரம்பிக்கிறது.
பொதுவாக வெற்றியின் பாதை மிகவும் நீளமானது. வெற்றியை தொடும் வரை இடையில் இடஞ்சல்கள் தோன்றும். வெற்றி...வெற்றி...என ஏக்கம் கொள்ளும் போது வெற்றி வந்தடைகிறது.
-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.

சிவன்-அம்பாள் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் (ஏழுமலையான் வழங்கிய சீர்) லட்டு, பட்டு வஸ்திரம், மங்கல சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. சிவன்-அம்பாள் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் (ஏழுமலையான் வழங்கிய சீர்) லட்டு, பட்டு வஸ்திரம், மங்கல சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவருடைய மனைவி சொர்ணலதாரெட்டி ஆகியோர் லட்டு, பட்டு வஸ்திரங்கள், மங்கல சீர்வரிசை பொருட்களை மேள தாளம் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள மணிகண்டன் சன்னதி அருகில் இருந்து தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்த வேத பண்டிதர்களிடம் சமர்ப்பித்தனர். அவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை வழிபட்டனர்.
முன்னதாக கோவிலுக்கு வந்த அறங்காவலர் குழு தம்பதியரை பியப்பு.மதுசூதன்ரெட்டி எம்.எல்.ஏ, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் வரவேற்றனர்.

காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ பிரார்த்தனை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த அபூர்வ துஆ பிரார்த்தனையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையில் 95-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த மாதம் 2-ந் தேதி முதல் ஒரு மாத காலமாக புகாரி ஷரீப் சபையில் பல்வேறு நிகழ்ச்சிகள் காலையிலும், மாலையிலும் நடைபெற்று வந்தது. இதில் இஸ்லாமிய ஹாமிதிய்யா சன்மார்க்க பள்ளி மாணவர்களின் சொற்பொழிவு, மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று காலை 9 மணியளவில் இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக அபூர்வ துஆ பிரார்த்தனை நடந்தது.
இந்த பிரார்த்தனையை தமிழ் மொழிபெயர்ப்புடன் காயல்பட்டினம் மாதிஹூல் ஜலாலியா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் டி.எஸ்.ஏ. ஜெஸீமுல் பத்ரி ஆலீம் நிகழ்த்தினார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த அபூர்வ துஆ பிரார்த்தனை உலக அமைதிக்காகவும், உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்கள் அகன்று போவதற்காகவும், அனைத்து நாடுகளும் சமரசமாக வாழ வேண்டியும், நல்ல மழை வேண்டியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும் மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, காயல்பட்டினம் நகர செயலாளரும், நகரசபையின் தி.மு.க. தலைவருக்கான வேட்பாளருமான கே.ஏ.எஸ்.முத்து முகமது, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள் செங்குழி ரமேஷ், தெற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஐ.காதர், காயல்பட்டினம் நகரசபையில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள், முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மீராசாஹிப்,
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் காயல் இளவரசு, வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி தலைவரும், முன்னாள் நகரசபை தலைவருமான வாவு செய்யது அப்துர் ரகுமான், முஸ்லிம் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் பாபு சம்சுதீன், காயல்பட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங், இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அய்யப்பன், பாலமுருகன், கவுரி மனோகரி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நிகழ்ச்சிகளை மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபை நிர்வாகிகள் மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர். தொடர்ந்து மாலையில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் நேர்ச்சை வழங்கப்படுகிறது.