
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவருடைய மனைவி சொர்ணலதாரெட்டி ஆகியோர் லட்டு, பட்டு வஸ்திரங்கள், மங்கல சீர்வரிசை பொருட்களை மேள தாளம் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள மணிகண்டன் சன்னதி அருகில் இருந்து தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்த வேத பண்டிதர்களிடம் சமர்ப்பித்தனர். அவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை வழிபட்டனர்.
முன்னதாக கோவிலுக்கு வந்த அறங்காவலர் குழு தம்பதியரை பியப்பு.மதுசூதன்ரெட்டி எம்.எல்.ஏ, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் வரவேற்றனர்.