search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Our Lady of Sorrows"

    • இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.
    • தினமும் திருப்பலி, ஜெபமாலை புகழ்மாலை நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் மறைசாட்சி புனித தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு திருப்பலியும், 11 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. இதில் கோட்டார் மறைவட்ட வட்டார முதல்வர் ஆனந்த் தலைமையில், கோட்டார் மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெனிட்டோ மறையுரை ஆற்றினார். பிற்பகல் 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம் முழங்கி யது.

    அதனைத்தொடர்ந்து கொடி நேர்ச்சையும் ஜெபமாலையும், புகழ்மாலையும் நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்றம் நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணை பங்குதந்தை ரெக்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் சிலுவைதாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளர் மற்றும் கவுன்சிலர் ஜெனட் சதீஷ்குமார், துணைச்செயலாளர் சகாய செலீன், கோட்டார் மறைமாவட்ட பேரவை உறுப்பினர் ஜேக்கப் மனோகரன், முன்னாள் பங்கு பேரவை துணைத்தலைவர்கள் பயஸ் ராய், மிக்கேல், முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை புகழ்மாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ம் திருவிழாவன்று நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருவிழாவையொட்டி (சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கையும், அதனைத் தொடர்ந்து தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் திருவிழாவன்று (ஞாயிற்றுக்கிழமை) திருப்பலி, மாலை தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.

    • மார்ச் 4-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.
    • 5-ந்தேதி மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் மறைசாட்சி புனித தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திருவிழா அறிவிப்பும், காலை 11 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடக்கிறது. இந்த திருப்பலிக்கு கோட்டாறு மறை மாவட்ட வட்டார முதல்வர் ஆனந்த் தலைமை தாங்க, கோட்டாறு மறை மாவட்டம் பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெனிட்டோ மறையுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு கொடி நேர்ச்சை, 6:30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும், இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அவர் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதே போல் திருவிழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் திருப்பலியும், ஜெபமாலையும், புகழ்மாலையும் நடைபெறுகிறது.

    26-ந்தேதி காலை 6.30 மணிக்கு அருட் பணியாளர் மரியசெல்வன் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. நாஞ்சில் நாதம் இயக்குனர் ராய் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு ராமபுரம் பங்கு தந்தை அன்பரசன் தலைமை தாங்க, எட்டாம் மடை பங்குத்தந்தை ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு வாண வேடிக்கையும், 10:30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.

    5-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலிக்கு கன்னியாகுமரி காசா கிளாரட் அதிபர் அன்சல் தலைமை தாங்க, வட்டார முதல்வர் எஸ்.பி. ஜான்சன் மறையுரையாற்றுகிறார். காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மாவட்டத்தை சேர்ந்த கிளாடின் தலைமையில் மலையாள திருப்பலியும், மறையுரையும் நடக்கிறது. 9 மணி திருப்பலிக்கு ஆரல்வாய்மொழி ஆரோக்கிய நகர் பங்குத்தந்தை ஏசுதாஸ் தலைமை தாங்க, டெனிஸ்டர் மறையுரையாற்றுகிறார். 10.30 மணி திருப்பலிக்கு வெள்ளமடம் பங்குத்தந்தை பேட்ரிக் சேவியர் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு தேர்பவனி, இரவு7 மணிக்கு நற்கருணை ஆசீர், 9.30 மணிக்கு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு இறை மக்கள், திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்கு தந்தை பிரைட், இணை பங்கு தந்தை ரெக்வின், பங்கு பேரவை துணைத் தலைவர் சிலுவைதாசன், செயலாளர் தேவ சகாய டேவிட், பொருளாளர் மற்றும் கவுன்சிலர் ஜெனட் சதீஸ்குமார், துணைச் செயலாளர் சகாய செலின், மற்றும் பங்கு அருட் பணி பேரவையினர், அருண் சகோதரிகள் செய்து வருகிறார்கள்.

    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மேலும் நேற்று மாலையிலும் தேர் பவனி நடைபெற்றது. தேர் தேவசகாயம் மவுண்டில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.

    இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசித்து சென்றனர். தொடர்ந்து நற்கருணை, மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், திருத்தொண்டர்கள், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    ×