என் மலர்

  வழிபாடு

  நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலை களுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபாடு செய்தபோது எடுத்தபடம்.
  X
  நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலை களுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபாடு செய்தபோது எடுத்தபடம்.

  நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள் வைத்து, பால் ஊற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

  கொரோனா முதல் அலை பரவல் தொடங்கியதில் இருந்து கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், பக்தர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

  இந்தநிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

  இந்தநிலையில் நாகர்கோவில் நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்ய 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  இதைதொடர்ந்து நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள் வைத்து பால் ஊற்றி வழிபாடு செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  Next Story
  ×