என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நள்ளிரவு ருத்ர கோட்டி விமானத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி எழுந்தருளினார்கள். அவர்கள் 4 மாட வீதி வழியாக உலா வந்தனர்.
    காஞ்சீபுரம் ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 8-ந்தேதி பங்குனி மாத திருக்கல்யாண உற்சவம் கொடியேற் றத்துடன் தொடங்கியது.

    கடந்த 11 தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாக னங்களில் ஏகாம்பர நாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நேற்று அதிகாலை பங்குனி திருக்கல்யாண திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது நேற்று நள்ளிரவு ருத்ர கோட்டி விமானத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி எழுந்தருளினார்கள். அவர்கள் 4 மாட வீதி வழியாக உலா வந்தனர்.

    காஞ்சீபுரம் அனைத்து பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திரு விழா வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏகாம் பரநாதர் மற்றும் வள்ளி தேவயானை முருகன் உள் ளிட்டவர்களை வணங்கி னார்கள். மேலும் நள்ளிரவு 3 மணி வரை வாண வேடிக்கை நடைபெற்றது.
    அழகர்மலையில் இருந்து தல்லாகுளம் வழியாக வைகை ஆறு, வண்டியூர் வரை உள்ள மண்டகப்படிகளை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்க உள்ளது.
    மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சித்திரைப் பெருவிழா நடக்க உள்ளது. இதில் கள்ளழகர் 16-ந் தேதி அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வரும் கள்ளழகர், வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

    இந்த நிலையில் மேற்கண்ட மண்டகப்படிகளின் ஸ்திரத் தன்மை தொடர்பாக ஆய்வு நடத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி அழகர் கோவில் உயரதிகாரி அனிதா தலைமையில் கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், நாராய ணனி, பிரதீபா அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவி லும் தலா 5 பேர் உறுப்பி னர்கள் இடம் பெற்றுள் ளனர்.

    மதுரை அழகர் கோவில் முதல் வண்டியூர் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து உள்ளன. இதற்காக போக்குவரத்து சாலைகள் உயர்த்தப்பட்டு உள்ளதால், மண்டகப்படி பள்ளத்தில் அமைந்து இருக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் தவிர போக்குவரத்து சாலைகளில் எண்ணற்ற இடங்களில் சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    அதுவும் தவிர மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக நடக்க வில்லை. எனவே மண்டகப் படிகளில் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆய்வு நடத்துவது முக்கியமானதாக கருதப்படுகிறது.

    எனவே அந்தந்த மண்டகப் படிகளின் உரிமையாளர்கள் அனுமதி கடிதம், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கைவசம் வைத்து இருக்க வேண்டும் என்று அழகர் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை புறநகரங்களில் அமைந்து உள்ள மண்டகப் படிகளில் மட்டும் அழகர் கோவில் மூவர் குழு ஆய்வு நடத்துகிறது. மதுரை மாநகருக்குள் இருக்கும் மண்டகப்படி நிலையை ஆய்வு செய்வதற்காக, மாநகராட்சி கமி‌ஷனர் தனி குழுவை அமைத்து உள்ளதாக தெரிகிறது.

    அதன்பிறகு 2 குழுக்களும் ஒருங்கிணைந்து மதுரை அழகர்கோவில் முதல் வண்டியூர் வரை உள்ள மண்டகப்படிகளில் ஸ்திரத் தன்மை தொடர்பாக ஆய்வு செய்து, 5 நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    எனவே அழகர்மலையில் இருந்து தல்லாகுளம் வழியாக வைகை ஆறு, வண்டியூர் வரை உள்ள மண்டகப்படிகளை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்க உள்ளது. இது வருகிற 23-ந் தேதி வரை நடக்கும் என்று தெரிகிறது.
    சதுர்த்தி திதியானது, விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.
    பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி. ‘சங்கட’ என்றால் ‘துன்பம்’, ‘ஹர’ என்றால் ‘அழித்தல்’. துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாவதோடு, தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது, விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.

    இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்களுக்கு நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும்.

    வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பவுர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும். இது செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் விசேஷம். வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வதால் கிடைக்கப் பெறும். இந்த விரதம் பற்றிய புராணத் தகவல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

    * முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்கு, கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

    * சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப்பெருமான், ஒரு முனிவருக்கு எடுத்துரைத்ததாக கந்த புராணம் குறிப்பிடுகிறது.

    * கிருஷ்ணர், நான்காம் பிறையை கண்டதால் அவருக்கு அபவாதம் ஏற் பட்டது. எனவே அவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு கணேசனை பூஜித்து அதிலிருந்து மீண்டார் என்றும் புராணங்கள் குறிப் பிடுகின்றன.

    * வனவாசத்தின் போது, கண்ணபிரான் இவ்விரதத்தைப் பற்றி பஞ்ச பாண்டவர்களிடம் எடுத்துரைத்ததாகவும், அதன்படி இதனை அனுஷ்டித்து யுதிஷ்டிரர் நாட்டை மீண்டும் அடைந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

    * இந்த நாளில் தான், விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று, சந்திரன் சாப விமோசனம் அடைந்தான். எனவே இந்நாளில் சந்திரன் பிரதானமாகிறான்.

    * தமயந்தி நளனை அடைந்தது இந்த விரதத்தின் மகிமையால் தான் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

    * இந்த விரதத்தை முதன் முதலில் அங்காரகன் (செவ்வாய்) கடைப்பிடித்து நவக்கிரக பதவி அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே தான் செவ்வாய்க்கிழமை வரும் விரதம் விசேஷமாக கருதப்படுகிறது.
    Thirukalyanam, Srivilliputhur Andal Temple, Andal, திருக்கல்யாணம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், ஆண்டாள்,
    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஆண்டாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பங்குனி உத்திரமான நேற்று காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள்-ரெங்கமன்னார் கீழ ரதவீதியில் செப்புத்தேரில் எழுந்தருளினர். பின்னர் செப்புத்தேரோட்டம் நடந்தது. ரத வீதிகள் வழியாக பக்தர்கள் “கோவிந்தா, கோபாலா...” என கோஷமிட்டு செப்பு தேரை இழுத்து வந்தனர்.

    மாலை 4 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. இரவு 7 மணிக்கு மேல் ஆண்டாள்- ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண மண்டபத்தில் தரிசனம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாண திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் மேல்பகுதியில் நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி இருக்க சுற்றிலும் 12 ராசிகளோடு ஒரே கல்லில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும்.

    இங்கு சித்திரை தெப்பத் திருவிழாவுக்கு முன்னதாக 45 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று தொடங்கியது. இது மே மாதம் 1-ந் தேதி வரை (சித்திரை மாதம் பரணி நட்சத்திரம்) 45 நாட்கள் நடைபெறும்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் மேல்பகுதியில் நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி இருக்க சுற்றிலும் 12 ராசிகளோடு ஒரே கல்லில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கே அமைக்கப்பட்டுள்ள மேடையில் உமாமகேஸ்வரர் பங்குனி உத்திரத்தன்று எழுந்தருளி சித்திரை திருவிழா வரை தங்கி பூஜை நடத்துவதாகவும் அதன்மூலம் கிரக நிவர்த்தி பெறுவதாகவும் ஐதிகம்.

    அதன் அடிப்படையில் நவக்கிரக மண்டபத்தில் 45 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். மே 1-ந் தேதி சித்திரை திருவிழா கொடியேற்று விழா நடைபெறும். தொடர்ந்து மே 9-ந் தேதி தேரோட்டமும், 10-ந் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
    ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் முருகன் சன்னதியில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 60-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர விழா நடந்தது. இதையொட்டி ராமேசுவரம் கோவிலின் கருவறையில் உள்ள சாமி, அம்பாள், விஸ்வநாதர், விசாலாட்சி உள்ளிட்ட சன்னதிகளில் அபிஷேகம் செய்ய 1008 சங்குகள் விஸ்வநாதர் சன்னதி எதிரே அடுக்கி வைக்கப்பட்டு அதில் கங்கை தீர்த்தம் ஊற்றப்பட்டு சாமி- அம்பாளுக்கு சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. சங்கா பிஷேக பூஜையில் கோவில் இணை ஆணையர் பழனி குமார், பேஷ் கார்கள் முனியசாமி, செல்லம் கமலநாதன், ராம நாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் முருகன் சன்னதியில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 60-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. மேல வாசல் முருகன் சன்னதியில் நேர்த்திக்கடன் செலுத்த நேற்று காலை முதல் மாலை வரையிலும் பால்குடம், மயில், பறக்கும் காவடிகளில் பக்தர்கள் தொங்கியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் 2 அடி முதல் 20 அடி நீளம் வரையிலான நீண்ட வேல்களை வாயில் குத்தியபடியும் சாலைகளில் ஆடி வந்து மேலவாசல் முருகன் சன்னதியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு 8 மணி அளவில் மேலவாசல் முருகன் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகாதீபாராதனை பூஜை நடைபெற்றது.

    பூஜையில் யாத்திரைப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் ரவி, பத்மநாபன், மலைச்சாமி, வெள்ளைச்சாமி உள்ளிட்ட யாத்திரை பணி யாளர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாஜ் தலைமையில் ஏராளமான போலீசார், ஊர்காவல் படையினர் ராமேசுவரம் கோவில் ரத வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். வெயில் காலத்தையொட்டி ராமேசுவரம் நகராட்சி சார்பில் தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, ஆணையாளர் மூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் பக்தர்கள் வசதிக்காக சாலையில் லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
    பேருண்டா நித்யா தேவிக்குரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி பயபக்தியுடன் வழிபாடு செய்து வந்தால், விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீளலாம்.
    அனைத்து அண்டங்களிலும் நிறைந்து அகில ஆதிகாரணியாக இருப்பதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி பிரமாண்ட ஜனனீ’ என்ற திருநாமம் உண்டு. தங்கம் போன்ற மேனியில் பட்டாடை, குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களை தரித்து, அழகான முக்கண்கள் கொண்டவள். கரங்களில் பக்தர்களின் பாவங்களை அழிக்கும் பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடியை தாமரை மலர் தாங்குகிறது. இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால், விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீளலாம்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை துவாதசி.

    மந்திரம்:

    ஓம் பேருண்டாயை வித்மஹே

    விஷஹராயை தீமஹி

    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    2 ஆண்டுக்கு பிறகு திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி மாத பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திண்டிவனம் அருகே திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக கோவிலில் மகா தீபம் ஏற்றவில்லை. ஆனால் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் மகா தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி மகா தீபம் நேற்று முன்தினம் இரவு ஏற்றப்பட்டது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, வக்ரகாளியம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வக்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் காளி, வக்ர காளி, ஜோதி, ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷமிட்டு, வக்ரகாளியம்மனை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமா சிவாச்சாரியார், குருக்கள் சேகர், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர். மகா தீபத்தையொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதனை கல்வெட்டுகள் விளக்குகின்றன.
    முருக பக்தர்கள் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களில் வேண்டுதலோடு காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் முருகனை வழிபட்டு உண்டியலில் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. காணிக்கைகளை அளிப்பதால் செல்வம் பெருகும், சேவல், புறா போன்ற பறவைகளை காணிக்கையாக செலுத்துவதால் நோய்கள், பில்லி, சூனியம், தரித்திரம் உள்ளிட்ட தீய வினைகள் நீங்கி ஆயுள் பெருகும்.

    விவசாயிகள் தங்கள் உழவு செழிக்க வேண்டும் என்பதற்காக பசு, எருது போன்றவற்றையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இதனால் வேளாண்மை செழிப்பதோடு, குடும்ப கஷ்டங்கள் விலகி தொழிலில் உற்பத்தி பெருகும். அதேபோல் முருகன் கோவிலில் அன்னதானம் என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னதானம் செய்வதால் ஆயுள் பெருகும், குடும்பத்தில் முருகப்பெருமானே ஆண் குழந்தையாக பிறப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதனை கல்வெட்டுகள் விளக்குகின்றன. நிலங்களை காணிக்கையாக தானம் செய்வதால் தலைமுறைகள் சிறக்கும்.

    ஜே.பி.சரவணன், தலைவர் பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷ வாகனம், கற்பகவிருட்ச வாகனங்களில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர இருப்பார்கள். அவர்கள் ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர்.

    பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார்.

    பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திரமண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்த சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளிவிட்டு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர்.

    சேர்த்தி சேவைக்கென தாயார் சன்னதிக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சன்னதிக்குள் வரவும், வெளியில் செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பக்தர்களின் தாகம் தீர்க்க நீர்மோர், பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
    வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி முடிய 3 நாட்கள் இரவு 7 மணிக்கு நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெப்பத்திருவிழா நடப்பது குறிப்பிடத்தக்கது.
    சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் பந்தக்கால் முகூர்த்தம், லட்சார்ச்சனையுடன் பங்குனி உத்திரவிழா தொடங்கியது. இதையொட்டி கடந்த 15-ந்தேதியில் இருந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பங்குனி உத்திர விழாவின் சிறப்பு அம்சமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் தெப்பத்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி முடிய 3 நாட்கள் இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    முதல் நாள் வடபழனி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து புறப்பாடு செய்யப்பட்டு முருகன் கோவில் வளாகத்தைச் சுற்றி வந்து பின் தெப்பத்தில் எழுந்தருளுவார். வேதபாராயணம் நாதஸ்வர கச்சேரியுடன் தெப்பத் திருவிழா நடக்கிறது.

    2-ம் நாள் சண்முகர், வள்ளி-தெய்வானை புறப்பாடும், 3-ம் நாள் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெப்பத்திருவிழா நடப்பது குறிப்பிடத்தக்கது.

    பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடிகள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். தெப்பத்திருவிழாவுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மின்னொளியில் ஜொலிக்கும் தெப்பத்தில் எழுந்தருளும் வடபழனி முருகனை தரிசிப்பார்கள். இதனால் பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்துவிட்டு திரும்புவதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதையும் படிக்கலாம்...திருப்பதி ஏழுமலையானை வழிபட ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் வெளியீடு
    தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருட சேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருடசேவை நேற்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடந்தது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கருடசேவையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, முன்னாள் அதிகாரி அனில்குமார் சிங்கால், கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, பேஷ்கர் ஸ்ரீஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×