search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கள்ளழகர்
    X
    கள்ளழகர்

    சித்திரை திருவிழா: கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

    அழகர்மலையில் இருந்து தல்லாகுளம் வழியாக வைகை ஆறு, வண்டியூர் வரை உள்ள மண்டகப்படிகளை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்க உள்ளது.
    மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சித்திரைப் பெருவிழா நடக்க உள்ளது. இதில் கள்ளழகர் 16-ந் தேதி அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வரும் கள்ளழகர், வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

    இந்த நிலையில் மேற்கண்ட மண்டகப்படிகளின் ஸ்திரத் தன்மை தொடர்பாக ஆய்வு நடத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி அழகர் கோவில் உயரதிகாரி அனிதா தலைமையில் கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், நாராய ணனி, பிரதீபா அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவி லும் தலா 5 பேர் உறுப்பி னர்கள் இடம் பெற்றுள் ளனர்.

    மதுரை அழகர் கோவில் முதல் வண்டியூர் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து உள்ளன. இதற்காக போக்குவரத்து சாலைகள் உயர்த்தப்பட்டு உள்ளதால், மண்டகப்படி பள்ளத்தில் அமைந்து இருக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் தவிர போக்குவரத்து சாலைகளில் எண்ணற்ற இடங்களில் சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    அதுவும் தவிர மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக நடக்க வில்லை. எனவே மண்டகப் படிகளில் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆய்வு நடத்துவது முக்கியமானதாக கருதப்படுகிறது.

    எனவே அந்தந்த மண்டகப் படிகளின் உரிமையாளர்கள் அனுமதி கடிதம், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கைவசம் வைத்து இருக்க வேண்டும் என்று அழகர் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை புறநகரங்களில் அமைந்து உள்ள மண்டகப் படிகளில் மட்டும் அழகர் கோவில் மூவர் குழு ஆய்வு நடத்துகிறது. மதுரை மாநகருக்குள் இருக்கும் மண்டகப்படி நிலையை ஆய்வு செய்வதற்காக, மாநகராட்சி கமி‌ஷனர் தனி குழுவை அமைத்து உள்ளதாக தெரிகிறது.

    அதன்பிறகு 2 குழுக்களும் ஒருங்கிணைந்து மதுரை அழகர்கோவில் முதல் வண்டியூர் வரை உள்ள மண்டகப்படிகளில் ஸ்திரத் தன்மை தொடர்பாக ஆய்வு செய்து, 5 நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    எனவே அழகர்மலையில் இருந்து தல்லாகுளம் வழியாக வைகை ஆறு, வண்டியூர் வரை உள்ள மண்டகப்படிகளை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்க உள்ளது. இது வருகிற 23-ந் தேதி வரை நடக்கும் என்று தெரிகிறது.
    Next Story
    ×